recent posts...

Thursday, November 30, 2006

இன்றைய சர்வே - 2006 ன் சிறந்த ஹீரோ நடிகர் யார்?

-------------- -------------- -------------- --------------
2006 ன் சிறந்த நடிகர் சர்வேயில் வெற்றி பெற்றது: நடிகர் சூர்யா

இரண்டாம் இடத்தில்: நடிகர் அஜித்

[தசாவதாரம் வரட்டும், அப்ப தெரியும் கமலின் அருமை என்னன்னு :( ]

.
சர்வே முடிவுற்றது.-------------- -------------- -------------- --------------


ஆளாளுக்கு சர்வே எடுக்க கிளம்பிட்டீங்க. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்.
சட்டரீதியா நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். ஜாக்கிரதை :)

சரி, இன்னைய சர்வே இதுதான்.
2006ல், இதுவரை வந்த படங்களை வைத்து, என் மூளையை கசக்கி பிழிஞ்சு அஞ்சு ஹீரோஸ், பேர போட்டிருக்கேன்.
இதில் உங்களுக்கு பிடித்தவர் யார்னு சொல்லுங்க.
(வடிவேலுவ போட முடியாதது கஷ்டமா தான் இருக்கு. ஆனால், மத்தவங்க அவருக்கு சளைக்காம நடிச்சிருக்காங்க என்பது என் கணிப்பு )

ஜெயிப்பவர்க்கு, சர்வே-சன் சார்பா ஒரு 'பாஸ்கர்' அவார்ட் அனுப்பி வச்சிடலாம் :)

பி.கு: தவறுகள், omissions, இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி!
அடுத்து, சிறந்த நடிகை, படம், comedy நடிகர், இயக்குனர், இசை இதெல்லாம் வரிசையா வரும். :)

Monday, November 27, 2006

இன்றைய சர்வே - தேன்கூடி போட்டி முடிவுகள் கணக்கிடும் முறை சரியா?

ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு, தேன்கூடுக்கே சர்வேயா என்று எண்ண வேண்டாம்.
சும்மா ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கலாம்னு இந்த சர்வே.

சர்வேக்கு செல்வதர்க்கு முன், இந்த வார போட்டியில் வெற்றி பெற்ற சிறில், சுரேஷ், சிபி, ஷைலஜா வுக்கு என் வாழ்த்துக்கள்.
எல்லார் படைப்பும் அருமை. (ஷைலஜாவின் கவிதை மிக இனிமை).

என் சந்தேகம் என்னன்னா, போட்டியின் ஆக்கங்களை தேர்வு செய்து நடுவர் குழுவுக்கு அனுப்பும் முறை சரியா என்பதே?
இப்ப இருக்கும் method ல், வலைப்பதிவர்கள் விரும்பிய கதைகளே நடுவர்களுக்கு செல்லும் வகையில் உள்ளது.
வலைப்பதிவர் அல்லாத 'வெறும்' வாசகர்கள் விருப்பத்துக்கு பெரிய weightage இல்லை?
வலைப்பதிவர்களுக்கு ஜாஸ்தி weightage கொடுத்தா, பிரபலங்களின் படைப்புகள் மட்டுமே top-10 ல் வரும் சாத்தியம் ஜாஸ்தி ஆகாதா?
வலை பதிவருக்கும், மற்றவருக்கும் equal weightage கொடுத்தா என்ன? இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?

(அடுத்த மாதம் ஒரு கதை எழுதினா என்னன்னு நெனைச்சேன், அதான் இப்பவே கொஞ்சம் rules relax பண்ணி ரெடி ஆகலாம்னு. :) - நாராயண, நாராயண)

நீங்க என்ன நெனைக்கறீங்க? கீழே உங்க ஓட்டை பதியுங்கள்.

சர்வே முடிவுகள் - பெண்களே வெட்கமும் படுங்கள்

சில நாட்களுக்கு முன் 'பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது?' என்ற தலைப்பில் நாட்டுக்கு மிகத் தேவையான கேள்விகளுடன் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

- அழகு
- அறிவு
- வெட்கத்துடன் கூடிய அறிவும் அழகும்
- திமிருடன் கூடிய அறிவும் அழகும்
- மேலே உள்ளது ஒன்றும் அல்ல

என்று இந்த கேள்விக்கு சில பதிலும் கொடுத்ததில், 56% நண்பர்கள் "வெட்கத்துடன் கூடிய அறிவும் அழகும்" தான் ரொம்பப் பிடித்தது என்று வாக்களித்துள்ளார்கள்.
எனவே, பெண்களே, அறிவு மட்டும் பத்தாது, கொஞ்சம் வெட்கமும் சேத்தீங்கன்னா கட்டிப் போட்டுடலாம் ஆண்களை, என்பதே எமது தீர்ப்பு.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

"பெண்களுக்கு ஆண்களிடம் அதிகம் பிடித்தது?" - இதுக்கும் ஒரு சர்வே எடுக்கணும். என்னென்ன choice கொடுக்கலாம் என்பதை பின்னூட்டங்களேன் (மீசை, தாடி,....).
நீங்க சொல்லலன்னா, நானே குண்டக்க மண்டக்க எதயாவது யோசிச்சு போட்டுடுவேன்.

Results:


--------------------------------------
இதன் ஆங்கிலப் பதிப்பை இன்று வெளியிட்டேன். அதன் முடிவுகள் காண்:
Best thing a guy likes in a (Indian) girl?

பதிவை காண: Best thing a guy likes in a (Indian) girl?
--------------------------------------

Sunday, November 26, 2006

இன்றைய சர்வே - அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகலாமா?

இன்று பல இடங்களில் நடக்கும் விவாதம், அப்துல் கலாம் அடுத்த ஜனாதிபதி ஆகலாமா, கூடாதா என்பது. அவர் தனக்கு extension'ல் விருப்பமில்லை என்பதும், அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு கருத்தை வெளியிடுவதும் தினமும் நடந்து கொண்டிருக்கிறது.

நம் கூட்டத்தின் கருத்து என்ன? அதை கண்டுபிடிக்க ஒரு சர்வே இதோ இங்கே:
(கலாம் வேண்டாம் என்று வாக்களிப்பவர்கள், பின்னூட்டமாக, வேறு யார் இந்த பணிக்கு சரியானவர் என்று கூறுங்களேன், அவங்க லிஸ்ட் எல்லாம் சேத்து, அடுத்த சர்வே ரெடி பண்ணிடலாம்)

Tuesday, November 21, 2006

இன்றைய சர்வே - பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது...? (re-poll 2)

நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை (hee hee) பற்றி எல்லாரும் என்னா நெனைக்கராங்கன்னு கணக்கெடுத்து கண்டு பிடிச்சு, அத பதிவா போடலாம்னு ஒரு ஐடியா!!

இன்றைய சர்வே கீழே கொடுக்கப்பட்டுள்ளது! உங்கள் கருத்தை அளிக்க 'அனுப்பு' கிளிக்குங்க. நன்றி!!
Current Results:

ps: re-polling ordered and being executed, because of issues in previous voting system ;)

Sunday, November 19, 2006

சதாம் உசேனை என்ன செய்யலாம்...?

நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை பற்றி எல்லாரும் என்னா நெனைக்கராங்கன்னு கணக்கெடுத்து கண்டு பிடிச்சு, அத பதிவா போடலாம்னு ஒரு ஐடியா!!

இன்றைய சர்வே கீழே கொடுக்கப்பட்டுள்ளது! உங்கள் கருத்தை கிளிக்குங்க. நன்றி!!!


இன்றைய சர்வே - பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது...?

நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை பற்றி எல்லாரும் என்னா நெனைக்கராங்கன்னு கணக்கெடுத்து கண்டு பிடிச்சு, அத பதிவா போடலாம்னு ஒரு ஐடியா!!

இன்றைய சர்வே கீழே கொடுக்கப்பட்டுள்ளது! உங்கள் கருத்தை அளிக்க 'அனுப்பு' கிளிக்குங்க. நன்றி!!

Thursday, November 02, 2006

முதல் பதிவு

நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை பற்றி எல்லாரும் என்னா நெனைக்கராங்கன்னு கணக்கெடுத்து கண்டு பிடிச்சு, அத பதிவா போடலாம்னு ஒரு ஐடியா!!