recent posts...

Sunday, August 09, 2009

நம்மை பின்தொடரும் நல்லவர்கள்...

இந்த ட்விட்டர்ல அப்படி என்னதான் மாய மந்திரம் இருக்கோன்னு தெரியல, மொத்த உலகமும், டிவிட்டர் ஜொரம் பிடிச்சுக்கிட்டு அலையுது.
ரெண்டு நாளைக்கு முன்னாடி, டிவிட்டர் வேலை செய்யலையாம், அதை breaking newsன்னு சொல்லி அலப்பரை பண்ணிக்கிட்டு இருந்தாங்க, டிவி காரங்க.

கொடுமை என்னென்னா, எல்லா பெரிய பெருந்தகைகளும், டிவிட்டரில் ஒரு அக்கவுண்டு வச்சுக்கிட்டு ட்விட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், ஏதோ ஒரு நேர்முகத்தில், மல்லிகா ஷெராவத்தும், டிவிட்டுவதைக் கேட்டு பேருவகை அடைந்தேன். பதினோராயிரம் ஃபாலோயர்ஸாம்.

Kevin Spaceyம் தனக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் இருப்பதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இதைத் தவிர, செய்தி வாசிப்பாளர்கள் பலரும், ட்விட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
Larry king, ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்,
Oprah Winfrey, ரெண்டு மில்லியன்.
Ellen Degeneres (finding nemo புகழ்), ரெண்டே முக்கால்,
Britney Spears, ரெண்டே முக்கால்,
Ashton Kutcher(டெமி மூர் புருஷன்), மூணு மில்லியன்,
லிஸ்ட்டு வளந்துக்கிட்டே போகுது.

நம் தமிழ் பதிவுலகிலும், இந்த ஃபாலோயர்ஸ் ட்ரெண்டு ஜாஸ்தி ஆகிட்டே வருது.
எழுதுபவர்கள் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால், தமிழ்மணம், டமிலிஷ், போன்ற திரட்டிகளில், முகப்புப் பக்க ரியல் எஸ்டேட் விலை கூடிக் கொண்டே போகிறது. கொஞ்ச நேரம்தான் இடம் கிடைக்குது.
இந்த மாதிரி, ஃபாலோயர்ஸ் தேத்திக் கொண்டால் தான், ஹிட்/கமெண்ட்டு மகசூல் கிட்டும்.

நம் பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்:

Twitterல் சிக்ஸர் அடிக்கும் பாஸ்டன் பாலா, 900+
சுப்பையா வாத்தியார், 600+ ஃபாலோயர்ஸ்,
இட்லி வடை, 600+
பரிசல், 400+
குசும்பன், 300+
லக்கி, 300+
நர்ஸிம், 300
ஆதிஷா, 200+
கோவி கண்ணன், 100+
வெட்டிப்பயல், 100+

இனி வரும் காலங்களில், ஃபாலோயர்ஸும்/கூகிள் ரீடர் வழி சந்தா பெற்றவர்களின் பிழைப்பு மட்டுமே ஒடும்.

ஸோ, தப்பித்தவறி பதிவு பக்கம் படிக்க வரவங்களை, ஃபாலோயர் ஆகணும்னு தோண வைக்கர அளவுக்கு, சரக்குடன் எழுதவும் ;)

இந்த இனிய வேளையில், என் கிறுக்கலையும் தொடர்ந்து வரும், கீழே உள்ள அன்பர்கள்/நண்பர்களுக்கும், ஃபாலோயாராகாமலே தொடரும் பெருமக்களுக்கும், நன்றி கூறிக் கொண்டு, விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

உலவு.காம்
bondavadai
இராகவன் நைஜிரியா
தேவன் மாயம்
ganeshprabhu
பிரேம்ஜி
Pudugaithendral
சுரேஷ் குமார்
herve anita
Ranjit
Senthil - T G Valasu
Subankan
Mohan Kumar Karunakaran
மந்திரன்
ஷோபிகண்ணு
கலை - இராகலை
செல்வா
ஊர்சுற்றி
ஹாலிவுட் பாலா
Suresh
சரவணகுமரன்
dillibabu
சந்தோஷ் = Santhosh
ANNAI- ILLAM2
ஹோஷியா
S.sampath kumar
Mathu Krishna
Truth
வெட்டிப்பயல்
SUBBU
ஆயில்யன்
Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன்
Oviyaツ Poornima
Saravana kumar
மணியன்
MSATHIA
லவ்டேல் மேடி
உண்மைத் தமிழன்(15270788164745573644)
நட்புடன் ஜமால்
தேனீ
Ravee (இரவீ )
ஸ்வாதி
கோவி.கண்ணன்
kogul
ilangan
LOSHAN
தென்றல்
நாதஸ்
Shan Nalliah / GANDHIYIST
shahulpage
ஆ! இதழ்கள்
திரட்டி.காம்
தர்ஷன்
அதிஷா
Maduraikkaran
pappu
A Blog for Edutainment
mayavi
Satheesh
Jayabalan
ப்ரசன்னா
KANINILA
அஆ

16 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

உங்கள் லிஸ்ட்டில் நானும் இருக்கேனே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஃபாலோவர்ஸ் சேரும்படிக்கா எழுதுங்கன்னு சொல்றீங்க நீங்க.. ஆனா நானெல்லாம் எழுதாம இருக்கும்போதாப்பாத்து ஃபாலோவர்ஸ் சேருராங்க குழப்பத்துல நான் எழுதறதா எழுதவேணாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.. டிவிட்டர்ல யும் அதே கதை தான்.. யாருன்னே தெரியாத வெளிநாட்டுப்பேரில் சில பேரு இப்ப ஃபாலோவர்ஸ் ஆகிறாங்க அதும் டிவிட்டாமலே இருக்கறப்ப இப்படின்னா .. என்ன செய்ய சொல்றீங்க டிவிட்ட வா வேணாமா..? ஒரு சர்வே வைக்கலாமா ? :)

ராமலக்ஷ்மி said...

ஃபாலோவராக இல்லாமலே உங்க வலைப்பூவைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணும் என் போன்றவருக்கும் உங்க நன்றிகள் உண்டுதானே:)?

தமிழிஷில் சமீபத்தில்தான் இணைந்தேன். அந்தந்த பிரிவில் படைப்பு பிரபலாமானது நமக்கு மெயில் அனுப்புவதெல்லாம் எனக்கு புதிதாய் இருக்கிறது. ஹி, நல்லாவும் இருக்கிறது.

என்ன நீங்களே டெம்ப்ளேட் பின்னூட்டங்களை தயாரா பொட்டிக்கு மேலே கொடுத்துட்டீங்க:))?

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//என்ன செய்ய சொல்றீங்க டிவிட்ட வா வேணாமா..? ஒரு சர்வே வைக்கலாமா ? :)//

முத்துலெட்சுமிக்கான சர்வே இங்கே ஸ்டார்ட் ஆகிறதா?

நான் அவரது டிவிட்டரின் ரசிகை ஆதலால் டிவிட்டுங்க என்கிறேன்:)!

SurveySan said...

ஜமால்,

///உங்கள் லிஸ்ட்டில் நானும் இருக்கேனே.///

:) இது எந்த வகையைச் சேறும்னு தெரியலையே?
ஃபாலோயரா இருப்பாங்க, ஆனா ஃபாலோ பண்றதையே மறந்துடுரவங்க? :)

SurveySan said...

முத்துலெட்சுமி,

///யாருன்னே தெரியாத வெளிநாட்டுப்பேரில் சில பேரு இப்ப ஃபாலோவர்ஸ் ஆகிறாங்க ///

:) இது ஒரு பெரிய வில்லத்தனம்.
யாரோ கண்டுபிடிச்சாங்களாம், கன்னா பின்னான்னு, நீங்க மத்தவங்கள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சீங்கன்னா, 60% ஆளுங்க, உங்களை திரும்ப ஃபாலோ பண்ணுவாங்களாம்.
அதன் அடிப்படையில், நாடு/மொழி எல்லாம் கடந்து ஃபாலோ செய்றவங்கா நெறைய பேரு இருக்காங்க ;)

SurveySan said...

ராமலஷ்மி,

///ஃபாலோவராக இல்லாமலே உங்க வலைப்பூவைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணும் என் போன்றவருக்கும் உங்க நன்றிகள் உண்டுதானே:)?
///

ஹிஹி. கண்டிப்பா!
:) பதிவுல சேத்துட்டேன்ல.

ஆயில்யன் said...

//ஃபாலோயாராகாமலே தொடரும் பெருமக்களுக்கும், நன்றி கூறிக் கொண்டு, விடை பெறுகிறேன்.///


என்னது விடை பெறுகிறேனா???

ஏன்?
ஏன்?
ஏன்?

எம்புட்டு பாலோவர்ஸ் இருக்கோம் அவுங்களுக்கு முதல்ல பதில் சொல்லிட்டு போங்க :)

SurveySan said...

ஆயில்யன்,

////எம்புட்டு பாலோவர்ஸ் இருக்கோம் அவுங்களுக்கு முதல்ல பதில் சொல்லிட்டு போங்க :)///

விடை பெறுகிறேன், ரொம்ப வில்லங்கமான வார்த்தையா இருக்கே.

நான் எங்கையும் போலீங்க, இங்கதான் இருக்கேன்.


இன்னிக்கு மட்டும், விடை பெறுகிறேன். நாளிக்கு திரும்ப வருவேன் ;)

நட்புடன் ஜமால் said...

SurveySan said...

ஜமால்,

///உங்கள் லிஸ்ட்டில் நானும் இருக்கேனே.///

:) இது எந்த வகையைச் சேறும்னு தெரியலையே?
ஃபாலோயரா இருப்பாங்க, ஆனா ஃபாலோ பண்றதையே மறந்துடுரவங்க? :)
]]

நண்பரே நான் இந்த பக்கம் வந்து கொண்டு தான் இருக்கேன்.

எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லைதான், இருப்பினும் படித்து கொண்டு தான் இருக்கேன்.

:)

SurveySan said...

ஜமால்,

///எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லைதான், இருப்பினும் படித்து கொண்டு தான் இருக்கேன்.///

மிக்க மிக்க நன்னி! :)

ஹாஜர் படங்கள் பார்த்தேன். அருமை ;)

ARV Loshan said...

ஆமாமா.. நாங்கெல்லாம் ரொம்பக் காலமாயே இந்த ட்விட்டரில் இருந்தாலும் இப்போ தான் அந்த சுவையும் சுவாரஸ்யமும் பிடிபட்டிருக்கு..

எங்களுக்கெல்லாம் தொடர்வோர் (ட்விட்டரில்) இன்னும் நூறு கூட வரல அண்ணே..
வாங்க எல்லாரும் ட்விட்டரையும் தமிழில் கும்மி தமிழ் மயமாக்கலாம்.. ;)

SurveySan said...

Loshan,

/////ரொம்பக் காலமாயே இந்த ட்விட்டரில் இருந்தாலும் இப்போ தான் அந்த சுவையும் சுவாரஸ்யமும் பிடிபட்டிருக்கு.. ///

எனக்கென்னும் பிடிபடலை. ஆனா, ஒரே ட்விட்டர் மயமா இருக்கு.

ட்விட்டர் ஆரம்பிச்சவங்கதான் blogspot ஆரம்பிச்சவங்களாம். ஜெகஜாலக் கில்லாடிகதான் ;)

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

சும்மா said...

சாளரம் 300+ miss pannitteengale?!!

சும்மா said...

சாளரம் 300+ miss pannitteengale?!!