google adsense கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ் பக்கங்களுக்கும், விளம்பர சேவையத் தர ஆரம்பித்திருந்தது.
'call tamilnadu', 'call india', 'travel to india','free tamil mp3' அது இதுன்னு பல விளம்பரங்கள் வரத் தொடங்கியிருந்தன.
சரின்னு, நம்மில் பலரும் (என்னையும் சேர்த்து), விளம்பரத்தை நம் பதிவுகளின் மூலையில் இடைச் சொறுகி, கொஞ்சம் சில்லரையை தேத்தலாம்னு களம் இறங்கியிருந்தோம்.
தினமும், சி.சிங்'னு சில்லரை, உண்டியலில் சேர்ந்து, முதல் செக்கும் வீடு வந்தது ($103).
ஹாஹா நல்லாருக்கே, அடிக்கடி ஒரு போட்டி வைக்க ஸ்பான்ஸர் கெடச்சாச்சேன்னு ஹாயா, சாஞ்சா, திடீர்னு, விளம்பரங்கள் வருவது நின்னு போச்சு.
ஒண்ணு, 'call tamilnadu' கம்பெனியரின் விளம்பர பட்ஜெட் காலியாகியிருக்கணும்.
இல்லண்ணா, கூகிள் ஆசாமிகள், எங்கையாவது சொதப்ப்யிருக்கணும்.
அதுவும் இல்லண்ணா, 'call tamilnadu' ஆசாமிகள், நம் வாசகர்களின் வரவினால் பெரிய லாபம் இல்லண்ணு, விளம்பரம் தருவதை நிறுத்தியிருக்கணும்.
இப்பெல்லாம் 'பொது சேவை விளம்பரங்கள் தான்' வருது.
இந்த மாதிரி
"Help those most in need
Eradicate extreme poverty & hunger Support Concern Worldwide
பொது சேவை விளம்பரம் தருவது Google
"
ஏதோ, நம்மால் ஆன, பொது சேவை இப்படி தொடருவதில் எனக்கொரு ப்ரச்சனையும் இல்லை ;)
உங்க பக்கங்களில் எப்படி? ஸேம் ப்ளட்?
வாக்குங்க.
recent posts...
Showing posts with label சர்வே. Show all posts

Tuesday, May 13, 2008
Thursday, December 13, 2007
தமிழ்நாட்டுக்கெல்லாம் பொற்கோயில் தேவையா?
பதிவ படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க.
அவர் பதிவில், ரொம்ப நியாயமான கேள்விகள் கேட்டிருக்காரு.
அதாவது, "ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல், பல கோடி குடும்பங்கள் தினந்தோறும் அவதிப்படும் நம்மூரில், இப்படி கோடிகளைக் கொட்டி, தங்கத்தில் கோயில் கட்டுவது மிக அவசியமா?"ன்னு கேட்டிருக்காரு.
இப்படிச் செலவு செய்யும் கோடிகளை வேறு மாதிரி செலவு செய்து, ஏழைகளுக்கு உதவலாமே என்பது நியாயமான கேள்வி.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா, நம் ஒவ்வொருவரும் கூட, நம் அன்றாட, மிக அவசியமான, தேவைக்கு மட்டும் செலவு செய்து கொண்டு, மீதம் உள்ள சம்பாத்யத்தை, பொதுவுக்கு செலவு செய்தால், ஊரே சுபிட்சமாதான் இருக்கும்.
ஆனா செய்வோமா? நம்ம வருங்காலத்துக்கு சேத்து வைக்கணும், பேரன் பேத்திக்கு சேத்து வைக்கணும், அவசர ஆத்தரத்துக்கு சேத்து வைக்கணும்ணு, ஒவ்வொருவருக்கும், ஈயாமல் இருக்க, ஒவ்வொரு காரணங்கள் இருக்கும்.
தப்புன்னு சொல்ல வரல. இதுதான் வாழ்க்கை. வேற வழியில்ல இப்படிதான் இருக்க முடியும்.
'Survival of the fittest' - இதுதான இயற்கை நியதி?
நலிந்தவர்களைக் காப்பாத்தத்தான், ஒரு சமூக ஏற்பாடா, அரசாங்கத்த உருவாக்கி வச்சிருக்கோம்.
ஏழைகள் கஷ்டப் படுவதும், கீழ் மட்டத்தில் அவதிப்படுபவர்களின் நிலை சகிக்க முடியா அளவில் கீழே கீழே போய் கொண்டிருப்பது, ரொம்ப ரொம்ப ரொம்ப வேதனையான விஷயம்.
ஆனா, அவங்க நிலை சரியாக, ஊரில் தனியாரால் செய்யப்படும், மற்ற செலவுகளை கொறச்சா போதுமா? அதெப்படி, கஷ்டப் படறவங்களுக்கு நன்மை செய்யும்?
சிங்கப்பூர்ல பாத்தீங்கன்னா, பொருளாதாரம், சோர்வடையும்போது, புதுசா ரெண்டு ரயில் நிலையம் கட்டுவாங்க, பல புதிய கட்டிடங்கள கட்டுவாங்க, புதுசா ரோடு போடுவாங்க. இப்படி ஏதாவது, ஒரு புதிய வேலைய உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு புத்தியிர் குடுப்பாங்க. (தெரிஞ்சவங்க, விளக்கமா சொல்லுங்கய்யா)
அதே போல், நம்மூரில், பணத்தை முடக்கி வைக்காமல், எதையாவது, கட்டிக்கொண்டே இருத்தல் நலம்னுதான் எனக்குத் தோணுது.
சாமி இருக்கோ இல்லியோ, கணக்கில் வராத கருப்பு பணமெல்லாம், கோயிலா மாறி சில ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்பும், கோயிலை சுற்றியுள்ள சில ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாவும் இருந்தா நல்லதுதானே?
திருப்பதி மலைக்கு மேல அந்த கோயில் இல்லாம இருந்திருந்தா அந்த ஊரில் இவ்ளோ வளர்ச்சி வந்திருக்குமா?
எனக்கு தெரிஞ்சு வேலூர் இன்னும் கொஞ்ச வருஷத்துல, தமிழக வரை படத்தில் முக்கிய ஊராகப் போகுது, இந்த பொற்கோயிலினால்.
நீங்க என்ன நெனைக்கறீங்க.
பின்னூட்ட கருத்தும், விளக்கமா சொல்லுங்க.
அப்பதான், மத்தவங்களும், விவாதிக்க வசதியா இருக்கும்.
நன்றி!
பி.கு1: 'நச்'னு ஒரு கதைப் போட்டியில், 32 பேர் ஆட்டையில் இதுவரை. நீங்களும் கதை எழுதலாமே? முயற்சி பண்ணுங்க (நல்ல வேள, $25னு ஒரு உயர்-எல்லைய சொல்லியிருந்தேன், இல்லன்னா :) ) கதைகள் படிக்கவும், கலந்துக்கவும், இங்க
பி.கு2: ஒன்றுக்கு மேற்பட்ட கதையை இதுவரை எழுதியுள்ளவர்கள், எந்தக் கதை போட்டிக் கதை என்பதை, போட்டி கடைசி நாளான, டிசம்பர் 23க்குள் சொல்லிவிடவும். ஒரு பின்னூட்டமாக சொல்லலாம் அல்லது, கதைக்கு 'சர்வேசன் நச் போட்டிக் கதை'ன்னு 'tag' வச்சிடுங்க.
Monday, October 22, 2007
இதுவரை எடுத்த சர்வேஸின் தொகுப்பு - II
சர்வே எடுக்கும் தலையாய பணியை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது.
அடேங்கப்பா, காலச் சக்கரம்தான் எவ்வளவு ஸ்பீடா சுழலுது.
சர்வேக்கள் மூலம், பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு, பலரின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தோம் என்று சொன்னால் மிகையாகாது. ஹி ஹி ஹி ;)
சரி சரி, இதுவரை எடுக்கப்பட்ட சர்வேக்களின் தொகுப்பையும், தீர்ப்புகளையும் பாருங்கள். கலர் கலராய் கீழே...
58. சச்சின் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வெடுக்கணுமா?
57. பந்த்து செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு
56. கை கட்டும்போது எந்த கை மேல வச்சு கட்டறீங்க?
55. மற்ற பதிவர்களை பற்றி விமர்சனம்/சர்வே செய்வது
54. சுகுணா திவாகர் எஸ்கேப் ஆவரது
53. அரை ப்ளேடு எஸ்கேப் ஆவரது
52. டோண்டு ராகவனின் பதிவுகள்
50. கும்மியர் 007!
48. அடுத்த பட்டறை எங்கே வெக்கலாம்?
47. பட்டறை பத்தி உங்க கருத்து?
46. தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய டாப் இடங்கள்
45. ப்ரதீபா பாட்டீல் ~ ரைட்டா ராங்கா?
44. சிவாஜியா பாட்ஷாவா?
43. PSHYCHO Analysis - சர்வேசனின் எட்டு சாதனைகள் படித்ததும்,
42. குட்டீஸ் பாட்டுப் போட்டி 2007 - டக்கர் பாட்டு எது?
41. 'Hindus only' in Guruvayoor, Rameshwaram,.... Is it fair?
40. Sivaji - When will you see it?
39. சர்வேசனின் சர்வே முடிவுகளின் Quality
38. வீட்டில் டென்ஷன் ஏற்படுத்துவது யார்
37. மாறன் - பதவி விலக்கல் சரியா?
1லிருந்து 36வரையிலான சர்வேக்கள் இங்கே

Monday, October 01, 2007
உச்சநீதி மன்றத்த மிதிக்கலாமா, அமெரிக்காவுக்கு வழி பண்ணலாமா?
ஒருபக்கம், ஆட்சிப் பொறுப்புல இருக்கரவங்க என்னாத்துக்காக பந்த்து பண்ணனும்னே புரியல.
இன்னொரு பக்கம் 'ராமர் (கட்டாத) பாலம்' உடைக்கப்பட்டு கப்பலு போக வழி பண்ணனுமா வேணுமான்னு புரியல.
என்னதான் தெய்வ நம்பிக்கை இருந்தாலும், ராமர கொத்தனார் ஆக்கர கதையெல்லாம், பீலா மட்டுமேங்கரது நல்லாவே புரியுது.
கடலுக்குள்ள இருக்கர பாரைய இடிச்சா, தெய்வ குத்தமெல்லாம் ஆகாதுன்னும் நல்லாவே புரியுது.
பாரைய ஒடச்சு ஆழம் பண்ணி கப்பலு போக வழி விட்டா, அந்த ஆழம் அப்படியே எவ்வளவு நாளுக்கு இருக்கும்னு புரிய மாட்டேங்குது.
துபாய்ல கடலுக்குள்ள ஒரு ஏழு-ஸ்டார் ஹோட்டலு கட்டினாங்க. டிஸ்கவரில காமிச்சான். சும்மா ஒரு கட்டடம் கடலுக்குள்ள கட்டவே, எம்மாம் செலவு. அவனுங்க தோண்டல, கடல்ல மண்ணு போட்டு மேடு பண்ணி, கட்டடம் கட்டுனாங்க. மணல் அரிக்க அரிக்க, அது மேல போட்டுக்கினே இருக்கணுமாம், ஆயுள் முழுக்க.
நம்மளால அந்தளவுக்கு, மெயிண்டெயின் பண்ண முடியுமா? செலவு பிடிக்காது? லாபகரமா இருக்குமா? ஒன்னியும் புரியல.
ஒரு ஹார்பர் உருவாக்கி, நெறைய கப்பலு வந்து நிக்கர மாதிரி அமஞ்சா, அதனால ஊருக்கு பயங்கரமான லாபம் இருக்கும்னு நல்லாவே புரியுது.
துபாய் ஷேக்கு பணம் போட்டு கட்டரது, கடலுக்குள்ள போச்சுன்னா, மேஸ்த்ரி, கொத்தனாரு எல்லாரோட கையையும் எடுத்துடுவான். அந்த பயத்துலயாவது, ஷ்ரத்தையா, மூழ்காத ஹோட்டல கட்டுவான் அங்க.
இங்க அப்படி முடியுமா? நோண்டர பாரைய, ஸைட்ல விக்கரது முதல் கொண்டு, இவ்ளோ ஆழத்துக்கு இம்புட்டு கமிஷன்னு, பிரிச்சு மேயர கூட்டமில்ல இருக்கு (அடிக்க வராதீங்கப்பா, அம்மா சொன்னதத்தான் சொல்றேன் ;) ). ஒவ்வொரு இன்ச் ஆழத்துக்கு ஒரு கமிஷன்னு போட்டா, தோண்டி தோண்டி, அமெரிக்காவுக்குப் போகவே வழி வந்துடுமே :)
டைட்டிலுக்கே திரும்ப வாரேன்.
பந்த் எதுக்காகங்க பண்றாங்க? ஆட்சீல இருக்கரவங்க, திட்டத்த கரீட்டா போட்டு, "டேய் இதப் பண்ணா நல்லதுடா"ன்னு திட்ட வட்டமா சொல்லிட்டா, நோண்டிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே. அத்வானி என்ன சொன்னா என்னா? ராமர் பேர சொல்லி ஓட்டுப் பிச்சை வாங்கரவருதான் அந்தாள்னு நல்லாவே தெரியுமே. அப்பரம் எதுக்கு மேட்டர இன்னும் ஊதிப் பெருசாக்கி, அத்வானிக்கு இத்த ஆதாயமா மாத்தோணும்?
எவ்வளவோ விஷயம் தெரிஞ்ச மொதலமைச்சுருக்கு இந்த சூட்சமம் கூடவா தெரியாது?
அது சரி, பந்த் பண்ணி பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யக் கூடாதுன்னு ஆணித்தரமா ஒரு தீர்ப்பு சொல்லியிருக்காங்க உச்சநீதி மன்ற நாட்டாமைகள்.
லேட்டா சொன்னாலும், நச்சுனு ஒரு தீர்ப்பு இல்லியா இது? கொண்டாட வேண்டிய விஷயமில்லயா அது?
ஆனா வூனான்னா பஸ்ஸ நிறுத்தி, சாதாரண முனுசாமி,குப்புசாமி, கந்தசாமிக்கு டார்ச்சர் கொடுக்கர இந்த பந்த்து இனி எந்தப் பயலும் பண்ண முடியாதுங்கரது சூப்பர் மேட்டராச்சே கண்ணுகளா.
அத்த ஏன் நம்ம ஆளுங்க சில பேர் எதிர்க்கறீங்க? ஒன்னியும் பிரிய மாட்டரதே.
கட்சி ஆளா பாக்காம, சாதாரண ப்ரஜையா யோசிச்சு சொல்லுங்களேன்.
நானு எஸ்கேப்! நீங்க யோசிச்சு வாக்குங்க! :)
நல்லாருங்க!
பி.கு: ராமாயணம் நடந்துருக்குமோன்னு ஒரு டவுட்டு தருமியின் இந்த பதிவப் பாத்தப்பரம் வருது. அதப் பத்தி அப்பாலிக்கா ஒரு பதிவு போடறேன் ;)

Thursday, September 13, 2007
போறாங்களாம் வழியனுப்ப வாங்க
இந்த வாரம் எஸ்கேப் வாரம் போல இருக்கு.
இப்பதான் பட்டறை வாரம், புகைப்பட போட்டி வாரம், சைக்கோ 'மூர்த்தி' வாரம், டோண்டு வாரம், செல்லா போகிறார் வாரம், அன்பின் சூழ்ச்சி வாரம் ;), தமிழச்சி ஃபோட்டோ வாரம்னு ஒவ்வொண்ணா முடிஞ்சது.
இப்ப என்னடான்னா, இவன் என்ன திட்றான், அவன் என்ன திட்றான், இனி நான் எழுத மாட்டேன்னு சில பேர் கெளம்பியிருக்காங்க.
அரை ப்ளேடை, முகம் தெரியாத ஒரு சோம்பேரி திட்டிட்டானாம். அதுக்கு, இவரு இனி எழுதப் போறதில்ல, நான் ஜகா வாங்கிக்கறேன்னு கெளம்பிட்டாரு.
மூணாங்கிளாஸ் ஃபெயிலான ஒரு சோம்பேரி, ஏதோ ஒரு ப்ரௌவ்ஸிங் ஸெண்டர்ல, வரவங்க போறவங்க செருப்பெல்லாம் பாத்துக்கர ஒரு ஸ்பெஷலிஸ்ட், செருப்பு இல்லாத நேரத்துல, தனக்கு தெரிஞ்ச தமில்ல திட்டிருக்கான், அதையெல்லாம் பெருசா எடுத்திக்கிட்டு, இப்படி எஸ்கேப் ஆவரது எனக்கு சரின்னு படல.
அரை ப்ளேடின் ரசிகன் நானு. அவர் பதிவின் ஹாஸ்யம், அபாரம். அதெல்லாம் தானா வரதுன்னு நெனைக்கறேன். அவர் லைஸென்ஸ் வாங்காத கதை ஒரு உ.ம்.
தடாலடியா சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டாரு (அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு). அவர் மனதில் பட்ட கேள்விகள பதிவா எறக்கியிருக்காரு. நியாயம் தான். அவரின் பதிவில் இருந்த கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான முறையில் எழுப்பிய கேள்விகளுக்கு, பலர் அழகான பதில்கள் சொல்லியிருந்தாங்க. குறிப்பா, சிலப்பதிகாரம், தமிழ் மொழியெல்லாம் ஒரு காலத்துல பெரியார் பழிச்சாராம்.
அதுக்கு தமிழன் என்ற பதிவர் காரணங்களும் சொல்லி பல விஷயங்கள் வெளி வந்துட்டிருந்தது.
மூணாங்கிளாஸுக்கு வேர்த்துடுச்சு. நடூல பூந்து குட்டைய குழப்பி, அப்பறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.
அப்பறம் சுகுணா திவாகர் என்ற பதிவர். இவருக்கும் இதே நெலம. இவரின் பதிவுகள் அவ்வளவா நான் படிச்சதில்லை. சில மாதங்களுக்கு முன் இவரின் ஏதோ ஒரு பதிவை (கவிதை) படிச்சுட்டு சுளிஞ்ச என் மூஞ்சி, திரும்ப நார்மல் ஆக, ஒரு ரெண்டு நாள் ஆச்சு. பயங்கரமான கற்பனைவாதி மாதிரி தெரியுது :)
சூடு பறக்கர பல பதிவுகளுக்கு சொந்தக்காரர்.
இவருக்கும் இன்னொரு சக பதிவரான வளர்மதி என்பவருக்கும் ஏதோ லடாய். வளர்மதி ஏதோ சொல்லப் போக, இவரும் கோச்சிக்கினு போறாராம்.
எழுதரதும் எழுதாததும் அவங்கவங்க இஷ்டம். எப்டியோ போங்க.
நீங்க போறதால எவ்ளோ பேருக்கு சந்தோஷம், எவ்ளோ பேருக்கு கஷ்டம், எவ்ளோ பேருக்கு நஷ்டம், இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா?
இதெல்லாம் கண்டு புடிச்சு சொல்லத்தான நான் இருக்கேன்.
( ராமர் பாலத்தப் பத்தி ஒரு சர்வே போட்டு இந்தெ வாரத்த ஓட்டலாம்னு பாத்தா, சற்றுமுன் முந்திட்டாங்க ;) வேற ஒண்ணும் பெருசா தோணாததால இப்படி எறங்கிட்டேன் ).
அதான் இன்றைய சர்வே. கீழே உள்ள ரெண்டு சர்வேக்களுக்கு வாக்குங்க :)
அதிகப் படியான பேர், நீங்க போறதால துக்கப் படராங்கன்னா, உங்க எழுத்தை மீண்டும் தொடர ஒரு விண்ணப்பமா நெனச்சுக்கோங்க.
எது எப்படின்னாலும், போனது போனதுதான்னா, ஓ.கே. சந்தோஷமா இருங்க. எனக்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் போடுங்க ;)
ஆமா, வேற யாராவது சமீபத்துல எஸ்கேப் ஆகியிருக்காங்களா? சொல்லுங்க சர்வே போட்ருவோம். :)
;)
இப்பதான் பட்டறை வாரம், புகைப்பட போட்டி வாரம், சைக்கோ 'மூர்த்தி' வாரம், டோண்டு வாரம், செல்லா போகிறார் வாரம், அன்பின் சூழ்ச்சி வாரம் ;), தமிழச்சி ஃபோட்டோ வாரம்னு ஒவ்வொண்ணா முடிஞ்சது.
இப்ப என்னடான்னா, இவன் என்ன திட்றான், அவன் என்ன திட்றான், இனி நான் எழுத மாட்டேன்னு சில பேர் கெளம்பியிருக்காங்க.
அரை ப்ளேடை, முகம் தெரியாத ஒரு சோம்பேரி திட்டிட்டானாம். அதுக்கு, இவரு இனி எழுதப் போறதில்ல, நான் ஜகா வாங்கிக்கறேன்னு கெளம்பிட்டாரு.மூணாங்கிளாஸ் ஃபெயிலான ஒரு சோம்பேரி, ஏதோ ஒரு ப்ரௌவ்ஸிங் ஸெண்டர்ல, வரவங்க போறவங்க செருப்பெல்லாம் பாத்துக்கர ஒரு ஸ்பெஷலிஸ்ட், செருப்பு இல்லாத நேரத்துல, தனக்கு தெரிஞ்ச தமில்ல திட்டிருக்கான், அதையெல்லாம் பெருசா எடுத்திக்கிட்டு, இப்படி எஸ்கேப் ஆவரது எனக்கு சரின்னு படல.
அரை ப்ளேடின் ரசிகன் நானு. அவர் பதிவின் ஹாஸ்யம், அபாரம். அதெல்லாம் தானா வரதுன்னு நெனைக்கறேன். அவர் லைஸென்ஸ் வாங்காத கதை ஒரு உ.ம்.
தடாலடியா சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டாரு (அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு). அவர் மனதில் பட்ட கேள்விகள பதிவா எறக்கியிருக்காரு. நியாயம் தான். அவரின் பதிவில் இருந்த கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான முறையில் எழுப்பிய கேள்விகளுக்கு, பலர் அழகான பதில்கள் சொல்லியிருந்தாங்க. குறிப்பா, சிலப்பதிகாரம், தமிழ் மொழியெல்லாம் ஒரு காலத்துல பெரியார் பழிச்சாராம்.
அதுக்கு தமிழன் என்ற பதிவர் காரணங்களும் சொல்லி பல விஷயங்கள் வெளி வந்துட்டிருந்தது.
மூணாங்கிளாஸுக்கு வேர்த்துடுச்சு. நடூல பூந்து குட்டைய குழப்பி, அப்பறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.
அப்பறம் சுகுணா திவாகர் என்ற பதிவர். இவருக்கும் இதே நெலம. இவரின் பதிவுகள் அவ்வளவா நான் படிச்சதில்லை. சில மாதங்களுக்கு முன் இவரின் ஏதோ ஒரு பதிவை (கவிதை) படிச்சுட்டு சுளிஞ்ச என் மூஞ்சி, திரும்ப நார்மல் ஆக, ஒரு ரெண்டு நாள் ஆச்சு. பயங்கரமான கற்பனைவாதி மாதிரி தெரியுது :)
சூடு பறக்கர பல பதிவுகளுக்கு சொந்தக்காரர்.
இவருக்கும் இன்னொரு சக பதிவரான வளர்மதி என்பவருக்கும் ஏதோ லடாய். வளர்மதி ஏதோ சொல்லப் போக, இவரும் கோச்சிக்கினு போறாராம்.
எழுதரதும் எழுதாததும் அவங்கவங்க இஷ்டம். எப்டியோ போங்க.
நீங்க போறதால எவ்ளோ பேருக்கு சந்தோஷம், எவ்ளோ பேருக்கு கஷ்டம், எவ்ளோ பேருக்கு நஷ்டம், இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா?
இதெல்லாம் கண்டு புடிச்சு சொல்லத்தான நான் இருக்கேன்.
( ராமர் பாலத்தப் பத்தி ஒரு சர்வே போட்டு இந்தெ வாரத்த ஓட்டலாம்னு பாத்தா, சற்றுமுன் முந்திட்டாங்க ;) வேற ஒண்ணும் பெருசா தோணாததால இப்படி எறங்கிட்டேன் ).
அதான் இன்றைய சர்வே. கீழே உள்ள ரெண்டு சர்வேக்களுக்கு வாக்குங்க :)
அதிகப் படியான பேர், நீங்க போறதால துக்கப் படராங்கன்னா, உங்க எழுத்தை மீண்டும் தொடர ஒரு விண்ணப்பமா நெனச்சுக்கோங்க.
எது எப்படின்னாலும், போனது போனதுதான்னா, ஓ.கே. சந்தோஷமா இருங்க. எனக்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் போடுங்க ;)
ஆமா, வேற யாராவது சமீபத்துல எஸ்கேப் ஆகியிருக்காங்களா? சொல்லுங்க சர்வே போட்ருவோம். :)
;)
Subscribe to:
Posts (Atom)