recent posts...

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, February 01, 2011

விழித்திடு தமிழா உறக்கம் ஏன்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
வேட்டையாடி சங்கறுத்து
சுட்டுக்கொல்கிறது
தமிழா! விழித்திடு

வலை வீசி மீன்பிடிக்க
அலை கடல் மீது சென்றவனின்
தலை மீது குண்டுவீசும்
கோழை செயலும் நடக்கிறது
தமிழா! விழித்திடு

நாவாய் படைநடத்தி
காற்றாற்றுதலை அறிந்து
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது
தமிழா! விழித்திடு

ஆடையை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்லும்
கொடும் பாவச்செயலும் நடந்தது
தமிழா! விழித்திடு

குட்டித்தீவினில் ராக்ஷசன் ராஜபக்ஷே
அரக்க இராஜ்ஜியம் செய்து
கைத்தட்டி சிரிக்க
சிங்களத்து வெறிநாய்
அலைகடல் மீதினிலே தோட்டாக்களால்
தமிழனின் உயிர் குடிக்க
மத்திய அரசு அலட்ச்சியமாய் உறங்க
மாநில அரசு கூட்டணி வலைப்பின்னி
தொகுதி மீன் திமிங்கலதையும்,
வாக்காளர்களின் தேர்தல்
வோட்டான வெற்றிமீன் பிடித்து
அரசியல் செய்கிறது
தமிழா! விழித்திடு உறக்கம் ஏன்?

-பிரபாகர் (நண்பேன்)

இவ்ளோ அட்டூழியங்கள் செய்தவர்களை ஒண்ணுமே பண்ணாம விட்டது அட்டூழியம். பேடித்தனம்.

தமிழக மீனவரை காக்கக் கோரி ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று இயற்றப் பெற்றிருக்கிறது. கையெழுத்து இடாதவர்கள் இடவும்.

Friday, January 25, 2008

Home they brought her warrior Dead - Alfred, Lord Tennyson

சேதுக்கரசி CVRன் பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தில், இந்த கவிதையை பார்த்தேன்.

பள்ளியில் படித்த நினைவு திரும்ப வந்தது.
இங்கிலீஷ் மிஸ் நடிச்சே காமிப்பாங்க இந்த கவிதையை (Lalitha மேடம், உங்க தெறம அப்போ அவ்ளவா புரியல. மக்காயிருந்தேன்னு நெனைக்கறேன். இப்ப தெளிஞ்சுருச்சு ;) ).

மிக எளிமையான, பளீர் வார்த்தை அமைப்புடன் கூடிய கவிதை இது.

மிகவும் பிடித்தது அன்று. இன்றும்.

போரில் மரணம் அடைந்த ஒரு வீரனின் வீட்டின் நிகழ்வுகளை சொல்லியிருப்பார் Tennyson.

HOME they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
‘She must weep or she will die.’

Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee—
Like summer tempest came her tears—
‘Sweet my child, I live for thee.’

Saturday, October 06, 2007

எதிர் கவிதை - திருந்தாத ஜென்மமடா நீ!

ஒருத்தர் சூப்பரா ஒரு கவிதை எழுதினா, அதே ஸ்டைலில் நமக்கு தெரிஞ்சத கிறுக்கி எழுதர இன்னோரு கவிதை தான் "எதிர் கவிதை" - (definition உதவி காயத்ரி). ஒரிஜினலில் இருக்கும் சுவை இருக்கக் கூடாது (well, முயற்சி பண்ணாலும் சுவையா எழுத நமக்கு வராதுங்கரது வேற விஷயம்), ஒரு நையாண்டி கலந்த நடை அவசியம்.

சுயமா கவிதை எழுதரது பயங்கர கஷ்டம். ஆனா, இந்த எதிர் கவிதை எழுதரது ரொம்ப ஈஸி.

காயத்ரி எழுதிய முதன் முதலாக என்ற கவிதைக்கான எனது எதிர் கவிதை "திருந்தாத ஜென்மம் நீ!", கீழே.
படிச்சுட்டு கருத்ஸ் சொல்லுங்க.

---------- ---------- ---------- ----------
சுள்ளென்ற கத்திரி வெயில் போலவும்,
வெந்த புண்ணில் மிளகாய் பொடி போலவும்,
நறுக்கென்ற கிள்ளு போலவும்,
சூப்பர் இருட்டடி போலவும்,

உன்னை நையப் புடைக்க வேண்டி
நான் தீட்டிய திட்டங்களெல்லாம் வீணாய்ப் போயின

மழையில் நனையும் எருமை நீ,
கத்திரியில் சன் பாத் எடுக்கும் காக்கை நீ,

சரி தான்,

திருந்தாத ஜென்மம் நீயெனத்தெரிந்த பின்
வேறென்ன செய்ய,

சீ என்று விட்டுத்தள்ளுவதைத் தவிர.
---------- ---------- ---------- ----------

உங்கள் கனத்த கரவொலிக்கு நன்றி நன்றி.
ஹி ஹி, அடிக்க வராதீங்க, அப்படியே, எனது முந்தைய படைப்புகளையும் படிக்க தவறாதீர்கள்

1) காயத்ரியின் இழந்த மழைக்கான எதிர் கவிதை, இழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு

2) நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடிக்கான எதிர் கவிதை, சீ... நீ எனக்கு வேண்டாமடா.

படித்து பரவசமடையுங்கள். அப்படியே, நீங்களும், உங்களுத்துத் தெரிஞ்சத எதிர்-கவிதையாக்கி, கவிஞராயிடுங்க.

புதுசா கவிதை எழுதரவங்க, என் கிட்ட சொன்னீங்கன்னா, அதுக்கு எதிர் கவிதை எழுதி மேலும் புகழ் சேர்க்க முயல்வேன் ;)


மீ த எஸ்கேப்! ;)

Monday, September 17, 2007

இழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு (கவுஜை's)

---------------- -----------
கவுஜ1: இழந்த தென்னங்கண்ணு
---------------- -----------
ராவோடு ராவாக உள்ளே
வந்து போயிருக்கிறது ஏதோ ஒண்ணு

ஆசையாய் நட்ட செடியெல்லாம்
வானம் பாத்து மல்லாந்து கிடக்கு
பச்சைப் புல்வெளியெல்லாம்
திட்டு திட்டாய் பெயர்ந்து கிடக்கு

எட்டிச் சென்று தேடியபோது
'பச்சாக்' என்று காலில் ஒட்டிய சாணி

நினைவூட்டியது, இத்தனை நாளாய் டிமிக்கி கொடுக்கும்
பக்கத்துத் தெரு டில்லி எருமையை!
---------------- -----------

---------------- -----------
கவுஜ2: இழந்த மதிப்பெண் (உண்மைக் கதை, கிட்டத்தட்ட :) )
---------------- -----------
+2 கணக்கு பரீட்ச்சை
கடைசி மணி அடிக்க இன்னும் ஐந்து நிமிடம்

எழுதியது எல்லாம் சரியான்னு சரி பார்க்கணுமே
கடைசி நிமிடம் வரை பக்கத்து பெஞ்சு
ரமேஷிடம் என் பேப்பர்...
'மச்சி' குட்ரா என்று காப்பி அடிக்க
பிடுங்கியவன் இன்னும் திருப்பித் தரவில்லை

அதோ வாத்தி வந்துவிட்டார், 'டேய்ய்ய்ய்ய் குட்ரா' என்ற என் கதரல்
தூக்கி வீசினான் என் பேப்பரை ரமேஷ்.
அவசரக் கட்டு கட்டி, இந்தாங்க சார் என்றேன்

நூறு வந்துடும்டா என்றேன் ரமேஷிடம்
நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ரமேஷ்

அந்த வருட பள்ளி ஆண்டு புத்தகத்தில்
100 வாங்கிய ரமேஷின் படம்

ஆண்டு புத்தகம் கண்ணில் படும்போதெல்லாம்
நான் 1 மார்க் ஸில்லி-மிஸ்ட்டேக்கில் விட்டதை
நினைவுட்டியபடி நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான் ரமேஷு!
---------------- -----------

இந்த வார நட்சத்திரம் காயத்ரியின் இழந்த மழையைப் பாத்த எஃபெக்ட்டு.

நீ எனக்கு வேண்டாமடி எஃபெக்ட்டுல நான் எழுதிய, நீ எனக்கு வேண்டாமடாவும் படிங்க. அதுக்கு மற்ற கவிஞர்களின் பின்னூட்டக் கவிதையையும் படிங்க.

இதுக்கும், உங்க பாணீல, பின்னூட்டக் கவுஜயோ, தனிப் பதிவோ போடுங்கோ!

;)

இந்த மாதிரி எல்லாரும் ஒரு inspiration தரா மாதிரி எழுதுங்க! கவித கவித!!

Sunday, August 26, 2007

சீ.. நீ எனக்கு வேண்டாமடா...



... ... ...
சாந்து பொட்டு தீர்ந்ததென்று
ஸ்டிக்கர் பொட்டு கேட்ட எனக்கு
சாந்தில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
'ஏங்க, வெளில போய் சாப்பிடலாங்க' என்ற என்னை
சரவணா பவன் இட்டுச் சென்று,
சூப்பர் ஸ்பெஷல் மீல்ஸ் உனக்கும் காஞ்சு போன ரெண்டு இட்லி எனக்கும்
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
அடுப்படியில் ஆயிரம் வேலையில் நானிருக்க
'கொஞ்சம் வெங்காயம் வெட்டிக் கொடுங்க' என்றதர்க்கு
'பதிவெழுதறேன் டிஸ்டர்ப் பண்ணாத', என்று ஜெயகாந்தன் போல் பில்ட்-அப் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
நெய் ஊற்றி ருசியுடன் நான் செய்த தம்-பிரியாணி
மூக்குப் பிடிக்க தின்றுவிட்டு நீ சாய
'எப்படி இருக்குங்க' என்றதர்க்கு, 'ஓ.கே, ஆனா பக்கத்து வீட்டு பிரியாணி அளவுக்கு இல்லை'யென்றாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
வேலையெல்லாம் முன்னரே முடித்துவிட்டு
'சித்தி' கடைசி எப்பிஸோட் பார்க்க அமர்ந்தால்
'ஹேய், இதை எவன் பாப்பான்' என்று, கூலா சேனலை மாத்தி WWF பார்த்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
காலை முதல் மாலை வரை
தினகரனும், குமுதமும், விகடனும், ஹிண்டுவும் ஆன்லைனில் ஓஸியில் படித்துவிட்டு
வீட்டுக்கு வந்ததும்.. 'ஊ, ஒரே டயர்டுப்பா', என்று நீ பண்ணும் அலம்பிருக்கே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
என்னடா இது வாழ்க்கை, கேடு கெட்ட பயலை நம்பி
இன்னும் எத்தனை கால கஷ்டங்களோ என்று கலங்கிய நாளில்
பக்கத்து வீட்டு லக்ஷ்மியும், இதே புலம்பலை புலம்பியது கேட்டேன்
ஹ்ம். நீ கொஞ்சம் ஓ.கே தாண்டா
... ... ...

-சர்வேசன்

(Inspired by நிலவு நண்பன்'s அருமையான கவிதை - நீ எனக்கு வேண்டாமடி)

என் ஃபஸ்டு கவிதை (கவுஜ?) இது. எப்படிகீது?

பின்னூட்டத்தில் உங்க கவிதை திறமையும் காட்டுங்க, இதே ஸ்டைலில் வரணும். :)

;)