recent posts...

Sunday, January 06, 2008

சிறந்த 'நச்' கதை - முடிவுகள்

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

சிறந்த 'நச்' கதையின் இறுதிகட்ட வாக்கெடுப்பு இனிதே முடிவடைந்தது.
8 கதைகள் பங்கு பெற்ற இறுதி கட்ட வாக்கெடுப்பின் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, புதிய முறையில், ஈ.மெயில் மூலமாக, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் 239 வாக்குகள் பதிவாகியிருந்தன. (இதில் 40 வாக்குகள் செல்லாதவை, அதாவது, ஈ.மெயில் படித்து அப்ரூவ் செய்யப்படாதவை).

மொத்தம் போட்டிக்கு வந்த 57 கதைகளும் அருமையான ரகம். ஒவ்வொன்றிலும், 'நச்'சின் வீரியம் ஒவ்வொருமாதிரி அமைந்திருந்தது சிறப்பு. பங்களித்த ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே :)
டாப்-8ல் இருந்த ஒவ்வொரு நச்சும் நெத்தியடி ரகம்.

டாப்-8ல், மிகச் சிறந்த 'நச்' வெற்றி பெறட்டும் என்ற எண்ணத்தில், ஒரு 'ஐவர்' குழு அமைக்கப் பட்டு ஒவ்வொரு கதைக்கும் அவர்களின் மதிப்பீடை அளிக்கச் சொல்லியிருந்தேன்.
ஐவர் குழுவின் மதிப்பீடும், மக்களின் வாக்கெடுப்பும், 50:50 அடிப்படையில் கலந்து, அதிக மதிப்பெண் பெற்ற கதையை சிறந்த 'நச்' கதையாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஐவர் குழு யார்னு தான கேக்கறீங்க? இதோ இவிகதான் அவிக:
1) CVR
2) தருமி
3) வெட்டிப்பயல்
4) பாஸ்டன் பாலா
5) ஆசீஃப் மீரான்

மதிப்பெண்களை பார்க்கும் முன், டாப்-8 கதைக்கான ஆசீஃபின் விமர்சனம் கீழே (லேஸான மாற்றங்களுடன் -வேற ஒண்ணுமில்ல அவர் போட்ட மார்க்க விமர்சனத்துல இருந்து எடுத்துட்டேன்):

1. கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்.. (மோகன் தாஸ்)
கதாபாத்திரத்தின் தன்மையை எங்கும் கலைத்து விடாத நம்பகத் தன்மை 'நச்' கதைக்கேற்ற விறுவிறுப்பு குறையாத உரையாடல்கள் மற்றும் சம்பவங்கள் சொதப்பலான நச் இல்லாமல் நடக்கக் கூடிய அதீத தன்னம்பிக்கை கொண்டவன் அசடு வழிவதை யதார்த்தமான திருப்பமாகக் கொண்டு வந்தது....

2. அரசியல்வாதி (வீ.எம்)
தமிழ் திரைப்படம் மாதிரியே இருக்கு. பெரிய திருப்பமென்று சொல்லி விடும் அளவுக்கு 'நச்'சாக இல்லை. கதையில் கருத்துச் சொல்லும் ஆதிகாலப் பழக்கம் கொஞ்சம் அயர்ச்சி தருகிறது.

3. தப்பா நெனைக்க மாட்டியே! (ஜெகதீசன்)
பூச்சுற்றும் கதை :-) எதிர்பார்த்தபடியேதான் இருக்கிறது முடிவு - யூகிக்க முடிவதாக. (படமெடுக்க அனுமதி கேட்பது போல உப்புச்சப்பில்லாத விசயத்தைத்தான் கேட்கப் போகிறான் நாயகன் என்று நான் யூகித்தபடியேதான் இருந்ததால் 'நச்'சென்று இல்லாமல் 'சப்'பென்று இருந்தது கதை. நல்லவேளையாக 'சட்'டென்று முடித்திருப்பதால்...

4. ஜன்னல் வச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு)
சுவாரஸ்யமான எழுத்து நடை. எதிர்பார்த்திருக்கக் கூடிய முடிவுதானென்று யாரும் சொல்லி விடக்கூடாதென்பதற்காக 'நச்' 'நச்'சென்று நிறைய முடிவுகளைச் சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது. கலாசாரக் காவலர்கள் இவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினாலும் அலுக்காத அந்த எழுத்திற்காக நான் வழங்குவது...

5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் (நாடோடி இலக்கியன்)
எதிர்பார்த்த முடிவு. வழக்கம்போல கதையில் செய்தி.ஆனால் யதார்த்தம். எழுத்து நடையில் இன்னமும் கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.

6. என்னால் அவள் இரண்டு மாசம் (குசும்பன்)
நிறையத் தணிக்கை செய்திருந்தால் 'நச்'சென்று சொல்ல முடிந்திருக்கக் கூடிய கதை. ஆனால் கதைக்கான எந்த ஆயத்தமும் இல்லாமல் நண்பனோடு அரட்டையில் பேசுவது போல எழுதப்பட்டிருக்கிறது கதை. சொல்வதை அழகாகச் சொல்ல முடியாத காரணத்தினாலேயே இந்தக் கதை அதன் சிறப்பை இழந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது..

7. சென்னைக் காதலும் திருச்சி காதலும் (அருட்பெருங்கோ)
அசத்தலான காதல் கதை. நீளமான கதையென்றாலும் அவன் அவள் என்பது சற்றே குழப்பினாலும் கதையின்முடிவு உண்மையிலேயே 'நச்' சென்றுதான் இருக்கிறது. நீளமான கதையைப் படிக்க வைத்திருப்பதொன்றே இந்தக் கதாசிரியரின் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றியென்று கூடச் சொல்லலாம்தான் .

8. எதுனா வேலை இருந்தா குடு சார் (நிலா)
விறுவிறுப்பான கதை. சம்பவங்களை நகர்த்திக்கொண்டே செல்லும் அழகும் சுறுசுறுப்பும் நேர்த்தியாக இருக்கிறது போட்டிக்கு தேவையான 'நச்' திருப்பமும் யூகிக்க முடியாததாகவே இருக்கிறது. முதல் கதை என்பது இன்னமும் உற்சாகம் தருவதாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

விமர்சனமெல்லாம் சூப்பர் இல்ல? எது வெற்றிக் கதைன்னு யூகிச்சிட்டீங்களா?

சரி, இனி, இறுதி கட்ட வாக்கெடுப்பில் மக்கள்ஸின் வாக்கெடுப்பு முடிவுகளை பாப்பமா? (snapshot taken on Jan 6th 6PM PST )

விவரங்கள் இங்கே


199 வாக்குகளில் 66 வாக்குகள் (33.17%) பெற்று முன்னணியில் இருக்கும் 'நச்' கதை அருட்பெருங்கோவின் 'சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்'.

இப்ப, 'ஐவர்' குழுவின் மதிப்பீடுகளைப் பாப்பமா? (in no particular order)

கதைநச்%
1. கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் (மோகன்தாஸ்)785875757572.2
2. அரசியல்வாதி (வீ.எம்) 556550806963.8
3. தப்பா நினைக்க மாட்டயே? (ஜெகதீசன்) 557350605658.8
4. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு) 755570803963.8
5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (நாடோடி இலக்கியன்) 605350705056.6
6. என்னால் அவள் இரண்டு மாதம் (குசும்பன்) 658365655065.6
7. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (அருட்பெருங்கோ) 709575909985.8
8. எதுனா வேல இருந்தா குடு சார் (நந்து f/o நிலா)807875855073.6மார்க் எல்லாம் சும்மா 'நச்'னு போட்டிருக்காங்க இல்ல?
ஆச்சரியம் என்னன்னா, மக்களின் தீர்ப்பும், ஐவர் குழுவின் தீர்ப்பும் ஒரு விஷயத்துல ஒரே மாதிரி அமைஞ்சிருக்கு. எனக்கும், கூட்டிக் கழிச்சு ரொம்ப மண்ட கொடச்சல் இல்லாமப் போச்சு அதனால. :)

மக்களாலும், ஐவர் குழுவாலும், சிறந்த 'நச்' கதை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதை:

அருட்பெருங்கோ'வின்


சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ! அருமையான கதை. இரண்டு நிகழ்வுகளை மாற்றி மாற்றி அமைத்து, இறுதியில் இரண்டையும் கோர்த்தது, 'நச்!'. அமக்களப்படுத்திட்டீங்க.

உங்களுக்கான பரிசு $25!

surveysan2005 at yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பெயரில் $75 உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களும் உங்களுக்கு அனுப்புகிறேன்.

அருட்பெருங்கோ, உங்களுக்கான பதக்கம் இதோ:)


இறுதிச் சுற்றில் இடம் பிடித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கான பதக்கம் இதோ :)

(பதக்கம், அப்லோட் செய்தால் கொஞ்சம் அழுக்கா இருக்கா. அழகான பதக்கம், ஈ.மெயிலில் தொடர்பு கொண்டால் attachmentஆக அனுப்பி வைக்கிறேன் ;) )

ஒட்டுமொத்த வாக்கில் 2nd and 3rdஆக வந்த ஜெகதீசன், நந்து
மற்றும், மக்கள் வாக்கில் 2nd and 3rdஆக வந்த ஜெகதீசன், நாடோடி இலக்கியன்,
மற்றும், நடுவர் வாக்கில் 2nd and 3rdஆக வந்த நந்து, மோகந்தாஸ்
உங்களுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!

சிறந்த 'நச்' போட்டியை ஒரு ஆரோக்யமான, சுவாரஸ்யமான போட்டியாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி!

பங்கு பெற்றவர்கள், விளம்பரம் அளித்தவர்கள், விமர்சனம் எழுதியவர்கள், வாசித்து வாக்களித்தவர்கள்,வாசிக்காமல் வாக்களித்தவர்கள், அப்ரூவ் செய்தவர்கள், அப்ரூவ் செய்யாதவர்கள் (grrrr), கொலை வெறிப் படை ரசிகர்கள், ஐவர் குழுவைச் சேர்ந்தவர்கள், நச்சோ நச் என்று தினம் ஒரு நச் எழுதியவர்கள், தேர்தல் அதிகார்கள், பூத் ஏஜண்டுகள், etc.. etc... அனைவருக்கும் நன்றி!

போதும்யா 'நச்'சு!
இனி, வேற ஏதாவது யோசிப்போம் ;)

சிறந்த 'ஜிவ்'©வு கதை எப்படி இருக்கு? (© ஆசீஃப்) :)

22 comments:

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் அருட்பெருங்கோ...சர்வேசனுக்கும் பாராட்டுகள்..

MyFriend said...

அருட்பெருங்கோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :-)

குசும்பன் said...

வாழ்த்துகள் அருட்பெருங்கோ!

ஆர்வத்தை தூண்டிய சர்வேசன் உங்களுக்கும் நன்றி!

Boston Bala said...

வாய்ப்பளித்தமைக்கு நன்றி சர்வேசன்.

பங்குபெற்று வாசகர்களை மகிழ்வித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் ஆக்கங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள் :D

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துகள் அருட்பெருங்கோ! நன்றி சர்வேசன்!

நந்து f/o நிலா said...

ஓட்டுபோட்டவர்கள், நடுவர்கள், பின்னூட்டம் போட்டவர்கள் மற்றும் சர்வேசன் அனைவருக்கும் நன்றி

நந்து f/o நிலா said...

சர்வேசன் போட்டியை நடத்தி முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் :P

ஜெகதீசன் said...

நன்றி!

கோவி.கண்ணன் said...

முதல் பரிசு பெற்ற கவிக்கோ அருட்பெருங்கோவிற்கும், இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட இளம்புயல் ஜெகதீசனுக்கும், மற்றும் ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்! :)

SurveySan said...

அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்ஸ்.

கோவி, நச்சில் உள்ள அத்தனை வகையிலும் ஒரு கதை எழுதி, 'இதுதாண்டா நச்'னு எல்லாருக்கும் புரியவைத்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டாங்க்ஸ்! :)

Unknown said...

சர்வேசன்,

முதலில் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
போட்டி, வெற்றி என்பவற்றைத் தாண்டி புதிதாய் சில வலைப்பதிவுகளை படிக்க ஆவல் தூண்டியதே இதன் முதல் பலன்.
இப்படியொரு போட்டி இல்லாமல் போயிருந்தால் நானும் இந்தக் கதையை இவ்வளவு சீக்கிரம் எழுதியிருக்க மாட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
(இதே கருத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு மடலும் அனுப்பினேன்)

ஒரு கதையை விளையாட்டாய் எழுதி பின்னர் கொஞ்சம் காலமெடுத்துக் கொண்டு இந்தக் கதையை எழுதியது நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.
கதையின் நீளம் பார்த்ததும் பயந்து ஓடாமல் முழுவதுமாக வாசித்த, பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய, ஊக்குவித்த, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நச் கதையெழுதிய அனைத்துப் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும். இறுதி கட்டத்திற்கு வந்த எட்டு நச் களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

கதைகளை வாசித்து, விமர்சித்து, மதிப்பெண் வழங்கிய நடுவர்கள் - CVR, தருமி ஐயா, வெட்டிப்பயல், பாஸ்டன் பாலா, ஆசீஃப் அண்ணாச்சி அனைவருக்கும் நன்றிகள்.

புத்தாண்டை ஒரு நல்ல செயலுடன் துவக்க வாய்ப்பளித்த சர்வேசனுக்கு மீண்டுமொரு நன்றி.

விளக்கமான கருத்துகளுடன் ஒரு தனி பதிவு இடுகிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

வேதா said...

வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள் :) கதை எழுத(!) ஒரு சந்தர்ப்பம் அளித்த சர்வேசனுக்கும் நன்றிகள் :)

SurveySan said...

நன்றி!நன்றி!நன்றி!

அருட்பெருங்கோ! வாழ்த்துக்கள். தொடர்ந்து கதைகள் எழுதி கலக்குங்க!


ஐ ஆம் த ஸ்லீப்பிங் நவ்!
பை! ஸீ யூ லேட்டர் :)

வீ. எம் said...

இந்த போட்டியை நடத்தி, என்னை எழுத தூண்டிய, மற்றும் பல நல்ல நச் கதைகளை படிக்க வாய்ப்பளித்த திரு சர்வேசனுக்கு நன்றி

விமர்சனம் மற்றும் மதிப்பெண் தந்த நடுவர்கள் ஐவருக்கும் நன்றிகள் பல

வெற்றிபெற்ற அருட்பெருங்கோ - பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

என்னையும் , அருட்டையும் தவிர்த்து, மற்ற 6 இறுதி சுற்று கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

மற்ற 49 கத்காசிரியர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

கதைகளை படித்த, கருத்து சொன்ன, வாக்களித்த, வாக்களிக்காத, வாக்களித்து, ஈ மெயில் அப்ரூவல் செய்யாத, படிக்க நேரமில்லாத காரணத்தால் படிக்காத, போட்டி முடிந்த பிறகு படித்துவிட்டு வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த, முடிவுகளை பார்த்துவிட்டு பின்பு வந்து படிக்க போகும் .. (வேற யாரையாச்சும் விட்டுடேனா?? ) அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

வீ எம்

TBCD said...

வெற்றிப் பெற்ற அருட்பெருங்கோவிற்கு என் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடம் பிடித்த, எங்கள் குழுப்பதிவில் சிறப்பு ஆசிரியராக இருக்கும் இளம் புயல் ஜெகதீசனுக்கும் என் வாழ்த்துக்கள்.

பொறுமையாக வாக்களித்த வாசகர்களுக்கு நன்றிகள்.

Dubukku said...

வாழ்த்துக்கள் சர்வேசன். இவ்வளவு பெரிய போட்டி நடத்துறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. ரொம்ப நல்லா நடத்தியிருக்கீங்க.

கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!

cheena (சீனா) said...

நச் கதை எழுதி முதல் பரிசு பெற்ற அன்பர் அருட்பெருங்கோ மற்றும் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமே நல் வாழ்த்துகள்.
கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட 57 பேருக்குமே அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி வாழ்த்துக் கூற வேண்டும்.

முடிவாக நடுவர்கள் உள்ளிட்ட, இப்போட்டியை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

சர்வேசனுக்கு சிறப்பு நன்றி

அரை பிளேடு said...

வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ.

நல்ல கதையென்பது வாசகனை மறுவாசிப்புக்கு உட்படுத்துவது. அந்த அனுபவத்தை தந்த ஒரு கதை அனைவரின் மனதையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. பாராட்டுக்கள்.

சர்வேசனுக்கும் நடுவர்குழுவுக்கும் நல்ல கதைகளை வாசிப்புக்குத் தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

SurveySan said...

VM, TBCD, Dubukku, Cheena, arai blade,

Thanks a lot and thanks for all the support.

thodarndhu kalakkuvom.

SurveySan said...

$25 Arutperungokku, pattuvaadaa senjaachu.

$75 Udavum Karangalukku, pattuvaadaa panniyachu.

:)

SurveySan said...

-- த எண்ட்! --