"மிலே சுர் மேரா துமாரா" படமாக்கலாம்னு, ஒரு ஈ-மடலை, கொம்பேனியின் சக ஆணி பிடுங்கும் தொழிலாளிகளுக்கு அனுப்பியதும், பலரும் உள்ளேன் ஐயா சொன்னாங்க. வேறு பல கொம்பேனியினர் (yahoo, intel,..) இந்த வீடியோவை ஏற்கனவே எடுத்து இருந்ததால், அதை விட சிறப்பாய் எடுக்கணும்னு பலரும் கருத்ஸை அள்ளி வீசிட்டாங்க.
ஏதோ ஒரு உத்வேகத்தில் இப்படி கிண்டி விட்டது, பலரின் அதீக ஆர்வத்தை பார்த்ததும், வீடியோ நன்றாய் இயக்கி வெளியிடணும் என்ற பயம் தொத்திக் கொண்டது.
அதை விட பெரிய பயம், இப்படி குறும்படமெல்லாம் இயக்கிய அனுபவம் துளி கூட இல்லாமல் இருந்தது. எவ்வளவோ பண்ணிட்டோம், இத்த பண்ண மாட்டோமா என்ற தார்மீக மந்திரம் மட்டுமே மனதளவில் உதவியது.
கோதால எறங்கலாம், யாரெல்லாம் என்னவெல்லாம் வேலை செய்ய ஆசப்படறீங்கன்னு அடுத்து காஸ்ட்டிங் வேலையை முடக்கினேன். குறிப்பாக, நல்ல கேமரா யார் கிட்ட இருக்கு, நடிக்க யாருக்கு ஆசை, அப்படி இப்படின்னு.
டீமில், ஒரு காமிராமேன், உதவி இயக்குனர்கள் சிலர் உருவானதும், திட்டமிடலை துவங்கினோம். மிலே சுர், சீரியஸான பாட்டு, அதை அப்படியே அட்சரம் பிசகாமல் சீரியஸாவே எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சிலர், கொஞ்சம் வித்யாசமா காமெடி கலந்து எடுத்தா நல்லாருக்குமேன்னு சொன்னாங்க. சிலர், ரீமிக்ஸ் மாதிரி நம்மளே பாடி, அதை படமாக்கலாம்னு சொன்னாங்க.
தேச பக்தி பாடல் மாதிரி இருக்கு, அதை வச்சு காமெடி கீமெடி வேணாம்னு, சீரியஸ் சப்ஜெக்ட்டாவே இருக்கட்டும். ஒரிஜினலின் சாயலில், அப்படியே எடுத்து, அதுக்கு ஒரு மரியாதை செலுத்தும்படி இருக்கணும்னு சொல்லிட்டேன்.
ஸ்க்ரீன் ப்ளே எழுத ஆரம்பிச்சேன். ஒவ்வொரு சீனிலும், எம்புட்டு பேரு வேணும், எந்த சீனை எந்த லொகேஷனில் எடுக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். பாடலின் கடைசி நிமிடம் கோரஸை ப்ரமாண்டமா எடுத்தா நல்லா இருக்கும்னு ஒரு தோணல். அதுக்கு நூறு இருநூறு பேராவது வேணும். ஆரம்பத்தில், உள்ளேன் ஐயா சொன்னவங்க பலரும், நடிக்க கூப்பிட்டதும், ஒரு தயக்கத்திலையே இருந்தாங்க. இவன நமபி வந்தா நம்ம பேரக் கெடுத்துடுவானோ என்ற தயக்கமாய் இருக்கலாம். இந்த நிலையில் இருநூறு பேரெல்லாம் தேத்தறது கஷ்டமாச்சேன்னு தோணிச்சு.
ஜூன் மாத மத்தியில் இந்த நிகழ்வு. ஆகஸ்ட் 15 ரிலீஸ் பண்ணனும் என்பது திட்டமாய் இருந்தது.
ஜூன் மாதம் ஷூட்டிங் முடிச்சா, ஜுலையில் எடிட்டிங் எல்லாம் முடிச்சு, ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய சரியா இருக்கும்னு நம்பிக்கை.
கிட்டத்தட்ட எல்லா சீனுக்கும் யார் யார் நடிப்பாங்கன்னு முடிவு பண்ணியாச்சு, அந்த கோரஸ் நூறு பேரைத் தவிர. கொம்பேனியின் பெரிய தலைகளும், இதில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, ஸ்பான்ஸர் பண்றோம், எம்புட்டு ஆகும்னு கேட்டாங்க. எனக்கு இதன் முடிவு எப்படி வரும்னு தெரியாத பட்சத்தில் காசை வாங்க தயக்கமாய் இருந்தது. அப்பாலிக்கா சொல்றேன்னு தட்டிக் கழிச்சுட்டேன்.
ரெண்டு மூணு நாளாய் தூக்கமே இல்லை. ஒரு திகில். எப்படிடா இதை எடுத்து முடிக்கரதுன்னு. ஜோக்கராயிடுவோம்னு ஒரு திகில்.
ஒரு சுபயோக சுபதினத்தில், திடீர்னு ஒரு ப்ளான் உதிச்சுது. குட்டியா ஒரு ட்ரெயிலரை முதலில் ஏற்பாடு பண்ணி அதை உடனே ரிலீஸ் பண்ணிட்டா, நமக்கும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும், மத்தவங்களுக்கும் ஒரு நம்மேல் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்னு தோணிச்சு. அதைத் தவிர, அதைக் காமிச்சு, அந்த கடைசிக் காட்சிக்கு நூறு இருநூறு பேரை தேற்றவும் உதவும். மிக முக்கியமாய், அகஸ்மாத் நல்லா வந்துச்சுன்னா, இதைக் காட்டி கொஞ்சம் $களை கொம்பேனியிடம் இருந்து பிடுங்கி ஜூப்பர் காமெரா, க்ரேன், லைட்டிங், செட்டப் எல்லாம் வாடகைக்கு வாங்கி ஜமாய்க்க்லாம்னும் தோணிச்சு.
ட்ரெயிலர் எடுக்கணும்னு தோன்றியதும், அடுத்த நொடி மண்டையில் உதித்த விஷயம், காமெடி கலந்து எடுக்கணும்னு. அதுவும், மிலிட்டரி ஸ்டைலில், Full Metal Jacket என்ற படத்தில் வரும் ஒரு காட்சியின் தாக்கத்தில் எடுக்கணும்னும் ஐடியா உதிச்சது. நம்புனா நம்புங்க, ட்ரெயிலர் இப்படித்தான் எடுக்கணும்னு, கிட்டத்தட்ட அஞ்சு நிமிஷத்துல ஸ்க்ரீன்ப்ளே மண்டையில் ரெடியாயிடுச்சு. அடுத்து, யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்கும்போது, உடன் வேலை செய்யும் நெருங்கிய சகாக்களை வச்சுப் பண்ணலாம், அப்பத்தான் வேலை வாங்குவது சுலபமாய் இருக்கும்னு முடிவு பண்ணி, எடுக்கரது எடுக்கறோம், நம்மூராளுகள மட்டும் சேக்காம, ஊருக்கு ஒருத்தரா இருக்கட்டும், ஒரு ஜப்பானியர், ஒரு கொரியர், ஒரு ஆப்ரிக்கர், ஒரு அமெரிக்கர், ஒரு மெக்ஸிக்கனு, ஒரு இந்தியர், ஒரு பாக்கிஸ்தானியர் என ஒரு கலவையாக நடிகர்களை தேர்வு செய்தேன்.
நம்ம GoodNewsIndia.com DVSridhar அடிக்கடி எழுதர விஷயம்,
இது மிக மிக மிக உண்மையான ஒரு வாக்கியம். மிலே சுர் விஷ்யத்தில், எனக்கு ஒவ்வொரு கட்டத்திலும், பலப் பல முறை பலப் பல ரீதியில் உணர்த்திய விஷயம்.
ட்ரெயிலரலில் நடிக்க கேட்டதும் நம்ம international சகாக்கள் உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ராத்திரியே ஸ்க்ரீன் ப்ளே கட கடன்னு எழுதி, அதுக்கு அடுத்த நாள் lunch-breakல் ஒரு மணி நேரத்தில் ட்ரெயிலரை எடுத்து முடிக்க ஆயத்தமானோம். அன்று இரவே சூட்டோடு சூடாக எழுதிய ஸ்க்ரீன் ப்ளே இதுதான்..
அடுத்த நாள் மதிய இடைவேளையில், வீடியோ காமெராவுடன் இருவரும், உதவி இயக்குனர், மற்ற உதவியாளர்கள் என கிட்டத்தட்ட பத்து பேர் குழுவில் இருக்க, நடிகர்கள் எட்டு பேருடன் களத்தில் இறங்கினோம்.
முதல் காட்சியாக, ஒரு கதவை படார்னு தொறந்து நடிகர்கள் எட்டு பேரும் 'பாட்ஷா' கணக்கா நடந்து வரும் காட்சி படமாக்கினோம்.
ட்ராலி எல்லாம் வாங்க நேரம் இல்லாததால், கான்ஃபரன்ஸ் ரூம் சக்கர மேசையின் மேல் ட்ரைபாடை வைத்து, என் 'start camera action''க்கு, மூணு பேர் அதைத் தள்ள நடிக கோஷ்டி கதவை உடைத்து வெளியே வர, அமக்களமாய் பதிவாகியது அந்தக் காட்சி.
மற்ற காட்சியமைப்பில், ஒரு பக்க நடிகர்களின் டயலாக்கை முதலிலும், எதிர் பக்கத்தில் நின்ற மேஜரின் டயலாக்கை அன்று மாலையும் படமாக்கி, கடைசியில் வெட்டி ஒட்டி ட்ரெயிலரை ஒருவழியாக முடித்தோம். மொத்தமாய் இரண்டு மணி நேர ஷூட்டிங்கும், கிட்டத்தட்ட இருபது மணிநேரம் எடிட்டிங் நேரமும் செலவானது.
ட்ரெயிலர் செய்து முடித்ததும், இந்த முயற்சியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை தாறுமாறாய் உயர்ந்தது. மற்றவர்களுக்கும் பேர் டாமேஜ் ஆகாம ஃபைனல் வீடியோவை எடுத்து முடிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. மிக முக்கியமாய் நடிக்கலாமா வேணாமான்னு யோசிச்சவங்களெல்லாம், எனக்கு ஒரு சீன் வேணும்னு போட்டா போட்டி போட ஆரம்பிச்சுட்டாங்க.
கொம்பேனி பெரியதலைகளும், ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. ஸ்பான்ஸர் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஃபைனல் வீடியோவில், இப்படி கருத்ஸை சொல்லலாமே அப்படிச் சொல்லலாமேன்னு பலப் பல ஐடியாஸும் விட்டு வீசினாங்க எல்லாரும்.
ட்ரெயிலர் எடுத்தப்பரம், அந்த காமெடி தந்த ஈர்ப்பில், ஃபைனலிலும் ஒரு காமெடி இழைய விடணும்னு முடிவு செய்தோம்.
அதைத் தவிர, இந்தியத் தன்மை மட்டுமில்லாது, international கலவை வேண்டும் என்றும் முடிவு செய்து, Chinese, English, Spanishலும், மிலே சுர் மேரா துமாரா வரிகளுக்கு பாடல் பாடி இடையில் செறுக வேண்டும் என்றும் ஐடியா இருந்தது.
ஓவரா இழுத்துட்டேன், முடிவுரையை அடுத்த பதிவில் காண்போம்.
ட்ரெயிலர் இதுதான். கடைசி சில நொடிகளில், ட்ரெயிலர், 'making' இருக்கு பாருங்க. ஆரம்ப கட்ட ஷூட்டிங்கின் சில படங்களும் இதில் செறுகி, க்ளைமாக்ஸுக்கு வேண்டிய நூறு பேரை இஸ்க்க ட்ரெயிலரை பறப்பினோம்.
இதுவரை பொறுமையுடன் படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றீஸ்.
இதை கவனத்தில் வையுங்கள்.
Thanks for all the support over the past years.
I discovered some of my extra-curricular 'talent' through blog writing. so, thanks to you, you and you :)
final video:

Scene#
|
Script
|
Scene1
|
Door sign reads 'Mile
Sur - Audition'. (shoot for 10
seconds)
|
Scene2
|
Camera positioned 10 ft away
from lake mead door, mounted on the trolley.
|
Scene3
|
Actors open the door and come
out and walk like mafia dudes. Param S is in the middle of the gang. Trolly
pulled back. Actors walk until the foozball table.
|
Scene4
|
Actors stand in front of the
'juniper theme' wall in a military posture. (BK on the far left, Neil in the
far right, Han & Scott next to each other) Param S stands facing
the troup.
|
Scene5
|
Camera in front of param. Param
says "are you ready boys?"
|
Scene6
|
Camera positioned in front of the troup. Everyone
says "Sir, Yes Sir"
|
Scene7
|
camera focuses on Param. Says,
"Rob, what are we here for?"
|
Scene8
|
close up on Rob. "To make a
music video Sir"
|
Scene9
|
camera on Param. "What type
of music?"
|
Scene10
|
close up on Qasim. "it’s a
bollywood song Mile Sur" Sir.
|
Scene11 | ... |
அடுத்த நாள் மதிய இடைவேளையில், வீடியோ காமெராவுடன் இருவரும், உதவி இயக்குனர், மற்ற உதவியாளர்கள் என கிட்டத்தட்ட பத்து பேர் குழுவில் இருக்க, நடிகர்கள் எட்டு பேருடன் களத்தில் இறங்கினோம்.
முதல் காட்சியாக, ஒரு கதவை படார்னு தொறந்து நடிகர்கள் எட்டு பேரும் 'பாட்ஷா' கணக்கா நடந்து வரும் காட்சி படமாக்கினோம்.
ட்ராலி எல்லாம் வாங்க நேரம் இல்லாததால், கான்ஃபரன்ஸ் ரூம் சக்கர மேசையின் மேல் ட்ரைபாடை வைத்து, என் 'start camera action''க்கு, மூணு பேர் அதைத் தள்ள நடிக கோஷ்டி கதவை உடைத்து வெளியே வர, அமக்களமாய் பதிவாகியது அந்தக் காட்சி.
மற்ற காட்சியமைப்பில், ஒரு பக்க நடிகர்களின் டயலாக்கை முதலிலும், எதிர் பக்கத்தில் நின்ற மேஜரின் டயலாக்கை அன்று மாலையும் படமாக்கி, கடைசியில் வெட்டி ஒட்டி ட்ரெயிலரை ஒருவழியாக முடித்தோம். மொத்தமாய் இரண்டு மணி நேர ஷூட்டிங்கும், கிட்டத்தட்ட இருபது மணிநேரம் எடிட்டிங் நேரமும் செலவானது.
ட்ரெயிலர் செய்து முடித்ததும், இந்த முயற்சியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை தாறுமாறாய் உயர்ந்தது. மற்றவர்களுக்கும் பேர் டாமேஜ் ஆகாம ஃபைனல் வீடியோவை எடுத்து முடிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. மிக முக்கியமாய் நடிக்கலாமா வேணாமான்னு யோசிச்சவங்களெல்லாம், எனக்கு ஒரு சீன் வேணும்னு போட்டா போட்டி போட ஆரம்பிச்சுட்டாங்க.
கொம்பேனி பெரியதலைகளும், ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. ஸ்பான்ஸர் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஃபைனல் வீடியோவில், இப்படி கருத்ஸை சொல்லலாமே அப்படிச் சொல்லலாமேன்னு பலப் பல ஐடியாஸும் விட்டு வீசினாங்க எல்லாரும்.
ட்ரெயிலர் எடுத்தப்பரம், அந்த காமெடி தந்த ஈர்ப்பில், ஃபைனலிலும் ஒரு காமெடி இழைய விடணும்னு முடிவு செய்தோம்.
அதைத் தவிர, இந்தியத் தன்மை மட்டுமில்லாது, international கலவை வேண்டும் என்றும் முடிவு செய்து, Chinese, English, Spanishலும், மிலே சுர் மேரா துமாரா வரிகளுக்கு பாடல் பாடி இடையில் செறுக வேண்டும் என்றும் ஐடியா இருந்தது.
ஓவரா இழுத்துட்டேன், முடிவுரையை அடுத்த பதிவில் காண்போம்.
ட்ரெயிலர் இதுதான். கடைசி சில நொடிகளில், ட்ரெயிலர், 'making' இருக்கு பாருங்க. ஆரம்ப கட்ட ஷூட்டிங்கின் சில படங்களும் இதில் செறுகி, க்ளைமாக்ஸுக்கு வேண்டிய நூறு பேரை இஸ்க்க ட்ரெயிலரை பறப்பினோம்.
இதுவரை பொறுமையுடன் படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றீஸ்.
இதை கவனத்தில் வையுங்கள்.
Thanks for all the support over the past years.
I discovered some of my extra-curricular 'talent' through blog writing. so, thanks to you, you and you :)
final video:
11 comments:
அடுத்த பாகம் முடிவுரை, கூடிய விரைவில்.
யூ.ட்யூபில் 10,000 ஹிட்டு வந்தால்தான் அடுத்த கதையை யோசிப்பது என்ற முடிவுல் உள்ளேன். 4200+ல் இருக்கிறது. பரப்பவும் ;)
சுவாரஸ்யம்!
சீக்கிரமே பத்தாயிரம் ஹிட்டு வந்து அடுத்தபடம் எடுக்க வாழ்த்துக்கள். எடுப்பீர்கள்!!!
well done, SUNIL JEYARAM
வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி :)
அடுத்த படத்துக்கு நடிகர்களும், குழுவும் ரெடி. கதை, திரைக்கதைதான் ரெடி பண்ணனும். 10000 தொட்டதும், உத்வேகம் வரலாம். :)
தருமி சார், டாங்க்ஸு.
thanks for pushing me to write this making. வரலாற்று அவசியம் இது. எனக்கு பின்னாளில் படிக்க சுவாரஸ்யமாய் அமையும் ;)
தனபாலன், ரொம்ப நன்றி சாரே.
test
நீங்க கதை, திரைக்கதை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என எனக்கு முன்னமே தெரியும். நச் சிறுகதைப் போட்டியில் வென்ற நிமித்தக்காரன் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை கூகுளார் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்த பிறகு தோன்றியதே எனது இன்றைய பதிவுகள்:)!
நன்றி ராமலக்ஷ்மி.
அடுத்த ப்ராஜக்ட் விரைவில் எடுக்கணும். சூட்டோடு சூடாக :)
more text:
http://surveysan.blogspot.com/2011/12/blog-post.html
Post a Comment