வளந்து பெரியவனானதும் உனக்கு இன்னாவா ஆகணும்னு, பள்ளிக் கல்லூரிக் காலங்களில் கேட்கும்போது, 'ஙே'ன்னு முழிக்கத்தான் தெரியும். எதிர்காலத்தை பற்றிய பெரிய தீர்க தரிசனமோ, திட்டமிடலோ சுத்தமா இருந்ததில்லை எனக்கு, இன்று வரை.
ஆத்துத் தண்ணீல அடிச்சுக்கிட்டு போற காஞ்ச மட்டை கணக்கா, வாழ்க்கை ஓடுது.
என்னதான் நல்ல வேலை, கிம்பளம் இல்லா நல்ல சம்பளம்னு திருப்திகரமா வாழ்க்கை ஓடினாலும், ஒரு ஓரத்தில் லேசா ஒரு அசரீரீ சௌண்டு விட்டுக்கிட்டே இருக்கும். "இன்னாடா வேலை இது? நீ புடுங்க்கர ஆணி உன்னை விட நேக்கா புடுங்க ஆயிரம் பய இருக்கான். நீ என்னாத்த சாதிக்கப் போர புச்சா?"ன்னு.
ஆசை ஒண்ணும் பெருசா இருந்ததில்லை இதுவரைக்கும். ஒரே ஒரு சபலம், பாப்புலர் (நல்ல விதத்தில்) ஆகணுங்கரது.
ஆணி பிடுங்கவதைத் தவிர வேற எந்த வேலையும் செய்யத் தெரியாது.
மத்த விஷயங்களில் எல்லாம் கால் வேக்காடு. ஃபோட்டோகிராஃப்பி, பதிவு எழுதுவது, கிட்டார் மீட்டுதல் என எல்லாத்துலையும் கால் வச்சாலும் எதுவும் ஒழுங்கா வரலை.
ஒரு நாள், "என்னதான் சாதிக்கப் போறோம் வாழ்க்கைல'ன்னு ரொம்பவே டீப்பா திங்க் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, இங்கே அருகாமையில் உள்ள ஒரு கல்லூரியில், ஒரு வகுப்பு நடக்கப் போவது தெரிய வந்தது. "what were you born to do?". இது தான் தலைப்பு. வெறும் $50 தான் ஃபீஸு.
எவ்ளவோ பண்ணிட்டோம், இதையும் போய் பாத்துட்டு வரலாமேன்னு, சுபயோக சுபதினத்தில் அந்த வகுப்புக்குப் போனேன்.
போனா, என்னைய மாதிரியே இன்னும் இருபது பேர் அங்க வந்திருந்தாங்க. எனக்கு இந்த வகுப்பில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. $50க்கு வேற என்னா எதிர்பாக்கரது?
வந்திருந்த எல்லாரும் நல்ல வேலையில் பெரிய பதவியில் இருக்கரவங்க. எல்லாருக்கும் காமனான விஷயம், நல்ல வேலையில் இருக்கோம், ஆனா, மனசுக்கு முழுத் திருப்தி இருக்கரமாதிரி தெரியலையேங்கரதுதான்.
ரொம்ப நீட்டி முழக்காம விஷயத்துக்கு வரேன்.
எல்லார் கிட்டையும் கொஞ்ச நேரம் பேசிட்டு ஆசிரியர் என்ன சொன்னாருன்னா, நம்ம எல்லாருமே இந்த பூமியில் வந்திருக்கரது, ஏதோ ஒரு முக்கிய வேலையை செய்யரதுக்குத்தான். அந்த வேலையை செய்யாம வேற என்ன செஞ்சாலும், முழுத் திருப்தி வராது.
கொஞ்சம் கவனம் செலுத்தி, நமக்கான வேலை எதுன்னு கண்டுக்கிட்டு அதை செஞ்சா, முழுச் சந்தோஷம் மட்டும் கிட்டாமல், மகத்தான் வெற்றியும் சுலபமாய் கிட்டும்னு சொன்னாரு. ஞாயமாத்தான் பட்டுது.
அப்பரம் கொஞ்ச நேரம் முப்பது நாப்பது கேள்விகளுக்கு ப்தில் எல்லாம் எழுதிட்டு, எல்லார் கிட்டையும் பேசிட்டு, ஆளாளுக்கு அவங்க அவங்களுக்கு 'விதிக்கப்ப்பட்ட' வேலை எதுன்னு ஆராஞ்சு சொன்னாரு.
ஒருத்தரை நாவல் எழுதச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை டீச்சர் ஆகச் சொன்னாரு, இன்னொருத்தரை உணவகம் ஆரம்பிக்கச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை இப்ப செய்யர வேலையே கண்டின்யூ பண்ணுங்கன்னு சொன்னாரு.
வகுப்பு முடிஞ்சு வெளீல வரும்போது, எல்லாரும், திருப்தி கரமாவே இருந்தாங்க. பெரிய ராணுவ ரகசியம் இல்லை, எல்லார்கிட்டையும், அவங்க இப்ப செய்யர வேலையைத் தவிர, மத்த என்னென்ன வேலை செய்யும்போது அவர்களின் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குதுன்னு பாத்துட்டு, கூட்டிக் கழிச்சு இவரு, 'this is what you were born to do'ன்னு அடிச்சு சொல்லிட்டாரு.
எல்லாருக்கும் சொன்னது சரி, எனக்கு என்னா சொன்னாருன்னுதான கேக்கறீங்க? சொல்றேன்.
ஆணி புடுங்கரதில் பெரிய நாட்டமில்லைன்னு சொல்லிட்டேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு.
படம் புடிக்கரதெல்லாம் புடிக்கும்னேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு. எதைப் பண்ணா, ஒரு 'பெருமிதம்' உள்ளுக்குள்ள வருதுன்னாரு. டீப்பா கண்ணை மூடிக்கிட்டு திங்க் பண்ணிச் சொல்லுன்னாரு.
ரொம்ப ஆர அமர யோசிசசா, சமீப காலத்தில், 'பெட்டிஷன் பெரியநாயகி' கணக்கா, நம்மால முடிஞ்ச 'லஞ்ச லாவண்யக்' கேடுகளை நம்மால் முடிந்த அளவில் எதிர்த்து நின்று "ஏன்"னு கேள்வி கேட்டு, அதற்காக நாயாய் அலைந்து திரிந்து சின்ன சின்ன வெற்றிகள் கிடைப்பது, ரொம்பவே பிடித்திருந்ததுன்னு சொன்னேன்.
ரொம்பவே பிரகாசமாயிட்டாரு அவரு. there you go. நீ உன்னோட புகைப்படம் புடிக்கர ஆர்வத்தையும், சமூக முன்னேற்றத்துக்கான உழைப்பயும் இணைத்து ஏதாவது செய்யணும். You should become a documentary film makerனு அடிச்சு வுட்டாரு.
பத்த வச்சுட்டியே பரட்டைன்னு, உள்ளூர தோன்றினாலும், எனக்கும் அப்படி ஒரு வேலை செஞ்சா திருப்திகரமாவே இருக்கும் தோணிச்சு. ஆனா, அதெல்லாம் ப்ராக்டிக்கலாம் வேலைக்கு ஆகுமான்னு, யோசிச்சு அப்படியே ஆறப் போட்டுட்டேன்.
DSLR இருக்கு, எதையாவது க்ளிக்கி, Gimpப்ல் தூக்கிப் போட்டா அதுவே படத்தை தேத்திக் கொடுத்துடுது. டாக்குமெண்ட்டரி எல்லாம் எடுப்பதை பத்தி ஐடியாவே இல்லை. அது அவ்ளோ சுலபமான்னு தெரியாம, ஒரு சில வாரங்களில் routine வேலைகளில் மூழகி, 'what was I born to do''வை சுத்தமா மறந்துட்டேன். ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்பாலிக்கா, ஒரு சுபயோக சுபதினத்தில், ஆணிகள் இல்லாத அந்த நன்னாளில், எங்க அலுவலகத்தின் சகபாடிகளுக்கு ஒரு மடல் அனுப்பினேன். (கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம், மூணாயிரம் பேராவது இருப்பாங்க).
"guys, lets make a lip-sync video song of the Mile Sur Mera Tumhara""ன்னு.
மிலே சுர் மேரா துமாரா, தூர்தர்ஷனில் போட்டு போட்டு நம் மண்டியில் ஏற்றிய பாடல். தேச ஒருமைப் பாட்டுக்கு, இதை விட சிறந்த பாட்டு இவ்ளோ சிம்பிளான வடிவில் இன்று வரை வந்ததில்லை.
இந்தப் பாடலை எடுப்பதால், 'கொம்பேனி ஒருமைப்பாட்டுக்கும்' நல்லது, நமக்கும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு ஐடியா பண்ணி இந்த மடல்.
மடல் அனுப்பும்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எந்தப் பயலும் பதில் அனுப்ப மாட்டான்னு நெனச்சேன். ஆனா, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடல்கள் வந்து குவிந்தன. 'yes, great idea. lets do it'', அது இதுன்னு எல்லாரும் ஜோதியில் ஐக்கியமாக ரெடியா இருந்தாங்க.
சிலர், நான் காமிரா வேலைய பாத்துக்கறேன், நான் எடிட்டிங்க் பாத்துக்கறேன், அது இதுன்னு ஆர்வமா களம் இறங்கிட்டாங்க. இன்னும் சிலர், "என்ன வேலை இருந்தாலும் சொல்லு, நான் ஹெல்ப் பண்றேன்'னு கோதால குதிச்சுட்டாங்க.
அன்னைக்கு முழுசா, கொஞ்சம் திகிலாவே இருந்துச்சு. இந்த மாதிரி விஷயம் நமக்கு துளி கூட தெரியாதே, பயலுவ நாம ஏதோ பெரிய தில்லாலங்கடின்னு நெனச்சுட்டாங்களோன்னு பயம். புலிவாலை புடிச்ச கதை மாதிரி.
ஆனா, 'பிறந்ததே இதுக்குத்தான்'னு தெரிஞ்சப்ப்பரம், ஏன் காலை பின்வைக்கணும்? எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ணிட மாட்டோமான்னு, "great! lets do it. i will initiate next steps"னு தெகிரியமா அடிச்சு விட்டு, திட்டமிடலைத் தொடங்கினேன்.
கிட்டத்தட்ட 300 பேர் , california, bangalore,beijing என எங்கள் அலுவலகத்தின் எல்ல்லா கிளைகளிலும், நடிகர்கள்/டெக்னீஷியன்களை ஒருஙகிணைத்து வேலையை முடுக்கி விட்டேன்.
-தொடரும் (ரொம்பவே இழுத்துட்டேனோ?) :)
வீடியோ பாக்காதவங்க, பாத்து, நேர்மையான கருத்ஸை யூ-ட்யூபில் பதியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு வீடியோ லிங்கை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கறேன். யாராவது, வீடியோவுக்கு விமர்சனம் எழுதினாலும் மெத்த மகிழ்ச்சி உண்டாகும் எமக்கு :)
நன்றீஸ். please spread the word.
http://www.youtube.com/watch?v=_cRtySd65u8