அந்த ஃபோடோ பாத்தவுடன் அத அப்படியே குத்தி குத்தி திண்ணனும்னு பேரவா எழுந்தது.
அவரும் கணக்கா வீக்-எண்ட்ல பதிவப் போட்டு ஜூடான இடுகைகள்ல இடம்புடிச்சு, எப்பவும் கண்ணுல பட்டுக்கிட்டே இருந்தாரு.
ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாம, உடனே போய், இறாலும் (shrimp), குடைமிளகாயும் தேடிப் புடிச்சு வாங்கி வந்தாச்சு. சிவப்பு குடைமிளகாய் அவசரத்துக்கு கெடைக்கல, பச்சைதான் கிட்டியது.
அவரு சொன்ன மாதிரியே, ரொம்ப ஸ்ரத்தையா ஸ்டெப்-பை-ஸ்டெப் ஃபாலோ பண்ணி, இறால் ரெடி பண்ணியாச்சு.
மற்ற மசாலாக்கள் சேர்க்காத வறுவல் என்பதால், இறாலின் சுவை கூடியிருப்பதாகவே தோன்றுகிறது. இல்லன்னா, ஜி.ராவின் எழுத்துத் திறமையால் எனக்கு அப்படி தோணுதான்னு தெரியல.
குத்தித் குத்தித் திண்ண தெவிட்டாத இன்பம்.
இதோ, எங்க வீட்டு இறால் ஃப்ரை!


நீங்களும் ஃப்ரை பண்ணுங்க!
இறால் வாங்கப் போன எடத்துல ஃப்ரெஷ்ஷான அமெரிக்கன் மேக்கரல் (நம்மூரு அயிலை மீன்) கிடைத்தது.
விடுவோமா, அதயும் கொண்டாந்து, ஒரு சூப்பர் மீன் குழம்பு செஞ்சாச்சு.
மீன் குழம்பும், இறால் வறுவலும், ரொம்ப நல்ல காம்பினேஷன். அமோகமா இருந்ததுங்கோ!
மீன் குழம்பின் படங்கள் கீழே :)
(செய்முறை வேணுமா?)


பி.கு1: யாராவது மட்டைன் லிவர் ஃப்ரைக்கு நல்ல ரெஸிபே சொல்லுங்களேன்.
பி.கு2: டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்
பி.கு3: கும்மியர் 007 வாக்கியாச்சா?