recent posts...

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, August 13, 2007

இவ்ளோஓஓஓஓ மொக்க போட்டும் பத்தலியே...

என்னங்க அநியாயமா இருக்கு? ஒரு மேட்டர வெளிச்சத்துக்கு கொண்டுவர, ஒரு மொக்க போடலாம், ரெண்டு மொக்க போடலாம்.
வரிசையா இவ்ளோ மொக்க போட்டு, படிச்சீங்களா, செஞ்சீங்களா, பாத்தீங்களா, செய்வீங்களா, ளா ளா ன்னு கேட்டும் நெனச்சது நடக்கலியே?



அப்படி என்னத்த பெருசா கேட்டுட்டேன்? 60ஆம் வருஷ சொதந்திர தெனம் கொண்டாடறோமே, இந்த வருஷமாவது ஜன கன மன முழுசா பாடக் கத்துக்கிட்டு, அத அட்சரம் பெசகாம பாடி அனுப்புங்கன்னு கேட்டேன்.
அதுவும், 60 பேர்ல ஒருத்தர சர்வே போட்டு செலக்ட் பண்ணி, 1001 ரூவா தரென்னு வேற சொன்னேன்.

இதுக்கு மேல என்னத்த செய்ய முடியும்?

பேர் கொடுத்த எல்லாரும், சட்டுனு பாடி உங்க பாட்ட, ஒரு பதிவா போடுங்க, எனக்கும் மடல் அனுப்புங்க.

பேர் கொடுக்காதவங்க, ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. இப்ப கத்துக்கலன்னா எப்ப கத்துக்கரது ஜன கன மன?

இதுவரை பாட்ட அனுப்புனவங்களுக்கு நன்னி! கீழ சொடுக்கி இதுவரை வந்த பாட்ட கேளுங்க.

மத்தவங்க உடனே மைக்க புடிச்சு பாட்ட பதிஞ்சு அனுப்புங்க மக்களே!

இந்த மேட்டர் ஆரம்பிச்சதுல ஒரே நல்ல விஷயம் இந்த ஜன கன மன கேட்டதுதான் :)

1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
14) k4karthik
15) Marutham
16) மாதிரி, முத்துலெட்சுமி & நண்பர்கள்
17) ஷைலஜா
18) சிறில் அலெக்ஸ் (instrumental)
..
60) ????


என்னமோ போங்க :(