அசத்தலா முடிஞ்சிருக்கு பட்டறை.
நேரடி ரிப்போர்ட் ஒவ்வொண்ணும் பாக்க பாக்க, அடடா மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணிச்சு.
ரொம்ப அழகா ஆர்கனைஸ் பண்ணி, நடத்தியிருக்காங்க.
இதன் மூலம் புதிய பதிவர்களின் வருகை அதிகரிக்கும்னே தோணுது.
நல்லது.
கொஞ்ச நாளைக்கு மொக்கை பதிவுகள் போடரது கம்மி பண்ணிக்கணும். புதுசா வரவங்க அத பாத்து, "இதுக்கா இந்த பில்டப்புன்னு" திரும்ப ஓடிடக் கூடாது :) ( நீ மொதல்ல நிறுத்துன்னு சொல்றது, நல்லாவே கேக்குது :) ).
பாஸ்டன் பாலா பட்டறை பற்றி வரும் எல்லா பதிவையும் தொகுக்கறாரு இங்கே.
நான் புதுசா சொல்ல ஒண்ணும் இல்ல, அங்க போய் எல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.
அருமையா நடத்தி முடிச்ச நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றீஸும்.
லேசுபட்ட காரியம் இல்ல நீங்க எல்லாரும் செஞ்சது. Hats off!
நீங்கள் பட்டறை பத்தி என்ன நெனைக்கறீங்க? அடுத்த பட்டறை எங்கே வெக்கலாம்?
என் பங்குக்கு ஒரு சர்வே, கீழே :)
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.