Memento, Dark Knight எல்லாம் தந்த christopher nolanன் படம் என்பதால், Inception பார்க்கவா வேண்டாமா என்ற கேள்வியே எழவில்லை.
ரூம் போட்டு யோசிக்கரதுக்கு பெயர் போனவர் இந்த நோலன். Memento படத்தின் reverse sequenceங், பல நாள் உச்சு கொட்டி படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.
இதிலும், புத்திசாலித்தனமா எத்தையாவது சொல்லியிருப்பாரு, நம்ம குட்டி மூளையுடன், படத்தை பாத்துட்டு புரியாம போயிடுச்சுன்னா பல்பு ஆயிடுமே என்ற எண்ணங்களினால், ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன்தான் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.
எதிர்பார்த்தது போல, முதல் அஞ்சாறு நிமிஷம், பரீட்சை ஹாலில், க்வொஸ்டியன் பேப்பர் வந்ததும், பேங்க பேங்க முழிக்கும் பத்தாங்கிளாஸ் ஞாபகம் வந்தது. பணத்தை குடுத்துட்டு இந்த பீதியக் கெளப்புர ஃபீலிங் எதுக்கு வாங்கிக்கணும்னு தோணிச்சு. ஆனா, அதுக்கப்பரம், படத்தின் கரு புரிந்ததும், படம் அருமையா நகர ஆரம்பிக்குது.
Leonardo dicarpio, ஒரு களவாணி. சாதாரண பொருளை ஆட்டையை போடும் களவாணி அல்ல. ஒரு மனுஷனின், கனவுக்குள் புகுந்து, அவருடன் பேசி கலந்துரையாடி அவர் மனதில் இருக்கும் ஏதாவது ரகசியத்தை களவாண்டு வருவதில், Leonardo வல்லவர். இதற்காக ஒரு குழுவும் அமைத்து வைத்திருக்கிறார்.
கனவுலகுக்குள் புக சிம்பிளான ஏற்பாடுதான். (
Matrix படத்தில் வருவது போல், ஹெல்மெட்டெல்லாம் மாட்டிக்கிட்டு பின் மண்டையில் ஊசியெல்லாம் போடவேண்டாம் ). யார் ரகசியங்களை திருடவேண்டுமோ, அவரை மயங்க வைக்கிறார்கள். ஒரு சூட்கேஸிலிருந்து, குளுகோஸ் ஏற்றுவதுபோல், அவருக்கு மயக்க மருந்து ஏற்றுகிறார்கள். அதே சூட்கேஸிலிருந்து, இன்னொரு மருந்துக் குழாய் Leonardo உடம்பிலும் அவரின் மற்ற குழுவினரின் உடம்பிலும் ஏற்றுகிறார்கள். உடனே, அனைவரும் கனவுலகில் சந்தித்துக் கொள்வார்கள்.
குழுவில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலை. ஒருத்தர், கனவுக்குள் புகுந்ததும், அந்த கனவுலகை வடிவமைக்கும் வேலை, இன்னொருத்தர் மயக்கத்தில் இருக்கும் குழுவை பார்த்துக் கொள்ளும் வேலை.
கனவு கலையணும்னா, மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பவதும் இவரின் வேலை.
கனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்.
நிஜ உலகில், மயக்கத்தில் இருக்கும்போது நிகழும் விஷயங்கள் கனவுலகில் வேறு விதமாய் ப்ரதிபலிக்குமாம். இங்க தண்ணியில முங்கினா, அங்க நாலா பக்கமும் நீர் பீச்சுக்கிட்டு அடிக்கும். இங்க உருண்டு பெரண்டு ஓடினா, அங்கையும் இதன் தாக்கம் தெரியும்.
நிஜ வாழ்வின் அஞ்சு நிமிஷம், கனவுலகில் சில மணி நேரங்கள்.
நிஜத்தையும் கனவுலகையும் பிரித்தரிய, லியானார்டோ கோஷ்டி, ஆளுக்கு ஒரு அடையாளச் சின்னம் வச்சிருப்பாங்களாம்.
சில சமயம், கனவுக்குள் இருப்பவர்களுக்கு, இன்னோரு கனவு வந்து, அதுக்குள்ளே இன்னொரு கனவு வந்து, உள்ள உள்ள டீப்பா போயிக்கிட்டே இருப்பாங்க. சில விஷயங்களை களவாட, இப்படி டீப்ப்பா போனாதான் முடியுமாம்.
லியானார்டோவின் மனைவியும் இப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்.
கனவில் சென்று களவு செய்வது போல், கனவுக்குள் சென்று, ஒரு மனிதனின் மூளையில் புதியதாய் ஏதாவது ஒரு ஐடியாவை விதைக்க வைக்க முடியுமான்னு லியானார்டோவுக்கு தோணும். அதை தன் மனைவியிடமே பரீட்சை செய்வார். கனவுலகில் இருவரும் இருக்கும்போது, இதுதான் நிஜ உலகம், நிஜ உலகம்தான் கனவுன்னு சொல்லிடுவாராம். ரெண்டு பேரும், பல வருஷங்கள் கனவுலகில் செலவிட்டு, கடைசியாய் தற்கொலை பண்ணிக்கிட்டு நிஜ உலகுக்கு வந்துடுவாங்க. (கனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்). இங்க வந்ததும், மனைவிக்கு, திரும்ப கனவுலகுக்கே போகணும்னு ஆசை (ஏன்னா, அதுதான் நிஜம்னு இவங்க நம்பிக்கிட்டு இருக்காங்களாம்). கொழப்பத்தில் தற்கொலை பண்ணி செத்துடுவாங்க. இவரை கொண்ணது லியானார்டோதான்னு ஒரு புகாரும்.
தன் குழந்தைகளை விட்டு ஊரை விட்டு வந்த லியானார்டோ, ஒரு பெரும்புள்ளியிடம் ஒரு புதிய வேலையை முடிக்க ஒப்புக்கொள்கிறார். வேலையை கச்சிதமா முடிச்சா, இவரின் பெயரில் இருக்கும் கொலைக் குற்றத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்றும், தன் குழந்தைகளிடம் மீண்டும் சேரலாம் என்றும் காண்ட்ராக்ட். வேலை என்னன்னா, பெரும்புள்ளியின், பிசினஸ் எதிரி ஒருத்தரின் மகனின் கனவுக்குள் புகுந்து, அவரின் மண்டையில், தன் பிசினஸை புதிய விதமாய் மாற்றி அமைக்கணும்னு ஐடியாவை ஏற்படுத்தணுமாம். அப்பத்தான், இவருக்கு போட்டியாக அவர்களால் இருக்கமுடியாதாம்.
விடுவாரா ஹீரோ? தன் குழுவுடன், அட்டகாசமாய் கனவுக்குள் புகுந்து, கனவின் கனவுக்குள் புகுந்து, அதன் கனவுக்குள் மீண்டும் புகுந்து, அந்த ஐடியாவை விதைக்கிறாரா, மீண்டும் குழைந்தைகளுடன் இணைகிறாரா என்பதையே வெள்ளித்திரை காட்டும்.
ஸ்ஸ்ஸ். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தக்கறேன்.
புரிஞ்சுருக்குமே? எம்புட்டு வில்லங்கமான வளைவுகளுடன் கூடிய கதைன்னு? மேலே சொன்னது போல், முதல் ஐந்து நிமிஷம் பேங்க பேங்க முழிக்க வைக்குது. ஆனா, அதுக்கப்பரம் இத்யாதி இத்யாதின்னு கதைக் களம் புரிஞ்சதும், நம்மை அலுங்காமல் குலுங்காமல் அட்டகாசமாய் 2 1/2 மணி நேரம் இன்வால்வ் பண்ணிடறார் டைரக்டர் நோலன்.
ஒரே குறை, சண்டைக் காட்சியெல்லாம் சலிப்பாய் இருந்தன. குறிப்பா கடைசி பதினைந்து நிமிடங்கள். ஆனா, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் இழுவையாக இல்லாமல் இருக்க உதவின.
கடைசியில், தொழில் முடித்து தன் குழந்தைகளை பார்க்க வருவார் Leonardo. தன் கொலைக் குற்றம் நீக்கப்பட்டிருக்கும். இமிக்ரேஷனெல்லாம் முடிச்சு, வீட்டுக்குள் வந்ததும், தன் மகளும் மகனும் அப்பான்னு வருவாங்க. இது நிஜமா, கனவான்னு நமக்கும் அவருக்கும் குழப்பம் வரும். தன் கையில் இருக்கும் அடையாளச் சின்னத்தை எடுத்து பாப்பாரு. அதன் முடிவு தெரியரத்துக்குள்ளையே படம் முடிஞ்சுரும். சுபமா இல்லையாங்கர குழப்பத்துல நம்மள வெளீல வரச் சொல்லிடறாங்க.
எனக்குத் தெரிஞ்சு, கனவுலதான் அலையறாருங்கர மாதிரி இருக்கு. குழந்தைகளை பிரிஞ்சு சில வருஷமாச்சுங்கர மாதிரி கதையமைப்பு. ஆனா, கடைசியில் சேரும்போது, குழந்தைகள் அதே வயதில் அப்படியே இருப்பது இடிக்குது. ஹ்ம்.
இருக்கும் பல கதைகளையே திரும்ப திரும்ப உல்டா பண்ணும் டைரக்டர்கள் மத்தியில், நோலன் பெரும் பாராட்டுக்குறியவர்.
அந்த ஒரிஜினாலிட்டிக்காகவே , இந்த படத்தை பாக்கலாம்.
ஆனா, அவதார் கடந்து வந்த பாதையில், விஷுவலாக ஆகா ஓஹோன்னெல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை இந்த படத்தில்.
DVD/Blu-rayக்கு வெயிட்டிப் பார்க்கலாம். ஏனனா, ரெண்டு மூணு தபா பாத்தாதான், படத்தை முழுசாய் என்சாய் பண்ண முடியும், Memento போல.