Monday, March 15, 2010

நித்யா, ஹுசைனு, நானு, நீங்க

நம்மூரில் பரபரபரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. அடிக்கடி ஏதாவது பரபரப்பா நடக்குது. ஒன்னியும் நடக்காத நாட்களில், எதையாச்சும் ஆராஞ்சு பீராஞ்சு பரபரக்க வைக்கவும் நம்ம ஊடகங்கள் தவறுவதில்லை.
அவங்கள சொல்லியும் குத்தமில்லை, இந்த மாதிரி பரபர ஐட்டம் வந்தாத்தானே, ஊர்ல பாதி பேரு, பேப்பரை வாங்கறான், செய்திகளை தெரிஞ்சுக்க பறக்கறான்.
பட்ஜெட் அறிவிச்சதை எம்புட்டு பேரு, வெவரமா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு தெரியாது, ஆனா, ஹுசைனு எவ்ளோ கிறுக்கு கிறுக்கினாரு, நித்தி சம்பந்தப்பட்ட வீடியோ எத்தினி யூட்யூபில் வந்திருக்குன்னு ஃபிங்கர் டிப்புல வச்சிருக்கோம்.

நம்மையெல்லாம் ஒரு 'மயக்க' நிலையிலேயேதான் இந்த பேப்பர் காரனுங்களும், டிவிக்காரனுங்களும் வச்சிருக்காங்க. அவங்க சொல்றதுதான் செய்தி. ஒருத்தன ஒரே நாளுள தூக்கி மேலையும் வெக்க முடியுது, அதே ஆளை அடுத்த நாளே மூஞ்சீல கரியப் பூசி கவுத்து மூடிடவும் முடியுது. ரொம்பவே சக்திவாய்ந்த மீடியம் இது. குறிப்பா, நம்மூரில் அநேகம் பேரின் பொழுதுபொக்கும், இந்த முட்டாள் பொட்டியை சுத்தியே ஓடுது.

சமீபத்திய பரபர, காவி போர்த்திய நித்யாநந்தனும், ஓவியத் தாத்தா ஹுசைனும்.

சீரியஸ் மேட்டருக்கு போவதற்க்கு முன், ஒரு லைட் மேட்டரு. பிரபல பதிவர் அனுப்பிய ஈமெயில் ஃபார்வர்டு, நித்தியைப் பற்றி. நித்தி சொல்றாராம்,
  • "ரஞ்சி, கடவுளக்கூட எங்கயிருக்காருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம் போலருக்கு, ஆனா, இந்த கெரகம் புடிச்ச, கேமராவை எங்க ஒளிச்சு வெக்கறானுங்கன்னு கண்டே புடிக்க முடியலியே? டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்சு".


நித்யானந்தனின் முகம் ரொம்பவே பரிச்சயமானது. பல பத்திரிகைகளில், பல் இளிச்சுக்கிட்டு 'ஆன்மீகத்துக்கு எங்க கிட்ட வாங்க' ரக விளம்பரங்கள் நிறைய பாத்திருக்கேன். மெடிட்டேஷன் சொல்லித் தருவாங்களாம். சில பல டாலர்கள் ஃபீஸாம். இவரின் 'சீடர்கள்' யாரும், எனக்கு நேரிடையா பழக்கம் இல்லை. ஆனா, இதே வகை Art of Living ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின், வகுப்பில் கலந்துகொண்டவர்கள் சிலரைத் தெரியும்.
அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செலவு செய்யும் பணம், ப்ரயோஜனமா இருக்காம். தியானம் செய்யச் சொல்லித் தராங்களாம். தினசரி பழகுனா, ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றாங்களாம். இருந்துட்டுப் போகட்டும். அதை ஆராஞ்சு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, சில பல டாலர்களை செலவு செஞ்சு அந்த கிளாஸுக்குப் போயிட்டு, எப்படி இருக்குன்னு அனுபவிச்சுட்டு, அப்பாலிக்கா நொட்டை நொடிகள் சொல்லலாம்.
அதுக்கு முன்னாடி, அதை பத்தி குறை சொல்வது சரியில்லை.

அதே அளவுகோல், நித்தியின் க்ளாஸுக்கும் கொடுப்பதில் தவறொன்றுமில்லை. எதையோ சொல்லிக் கொடுக்கறாங்க. பணம் இருக்கரவங்க கொடுக்கறாங்க. கத்துக்கறாங்க. எப்படியோ ஒழிஞ்சு போவட்டும். அது ஃப்ராடு சொல்றதுக்கு முன்னாடி, அந்த கிளாஸுக்குப் போயி படிச்சுட்டு வந்திருக்கணும். அந்த கிளாஸ் பைசாக்கு ப்ரயோஜனம் இல்லன்னாகூட, வாத்தியாரை கண்டமேனிக்கு திட்டப்ப்டாது.

சிலருக்கு நிம்மதி ஆசிரமங்களில் சொல்லித்தரும் தியானங்களில் வரலாம்;
சிலருக்கு நிம்மதி சரக்கடித்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி இயற்கை எழில் சுழ்ந்த இடத்தில் பயணம் செய்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி வயிறு நிறைய சாப்பிட்டு போடும் குட்டித் தூக்கத்தில் வரலாம்;
அவரவருக்கு அவரவர் வழி.

நித்தியின் திருட்டு வீடியோவுக்கு வருவோம். பொதுவாழ்க்கையில் பாப்புலரான ஒரே காரணத்தால், இவரின் அந்தரங்கத்தை இப்படி வெட்டவெளியில் போட்டு உடைப்பது எந்த வகையில் ஞாயம்? தனக்கு பிடிக்காத ஒவ்வொருத்தரையும் இப்படி திருட்டு வீடியோ எடுத்து யூ.ட்யூபுக்கு கொண்டு வந்தா, யூ.ட்யூபு தாங்குமா?
யோசிச்சுப் பாருங்க. நித்தியை திட்டுபவர்களில் எம்புட்டு பேரு யோக்கியமானவர்கள்? உங்க வாழ்க்கையில் கடந்த ஒரு வருஷத்தின் ஒவ்வொரு நிமிஷத்தையும், யாராவது திருட்டு வீடியோ எடுத்து வச்சிருந்து யூ.ட்யூபில் போட்டா, controversial questionable ஐட்டம் எதுவும் அதில் வராதா?
பிறரைக் கல்லெறியும் முன்....

நித்தியும், இன்ன பிற பொதுநல வித்தகர்களும் கவனத்தில் கொள்ள. எப்படியோ பாப்புலர் ஆகிட்டீங்க. அதை கடைசி வரை தக்க வச்சுக்கணும்னா, நீங்க சொல்லிக் கொடுக்கரதை நீங்களும் பின்பற்றப் பாருங்க. பொதுவாழ்வில் இருக்கரவங்களுக்கு, பொதுவாவே யாரும் மரியாதை கொடுக்கமாட்டாங்க. எம்.ஜி.ஆரையே 'அவன்/இவன்'னு ஏக வசனத்தில் கூப்பிட்டுப் பழக்கப் பட்ட கூட்டம் எங்குளுது.
ஏதோ, எங்க தயவாலதான், நீங்களெல்லாம் பாப்புலர் ஆகியிருக்கீங்கங்கர உளவியல் ரீதியான காரணமாம் அது. நல்லா ஏத்தி விடுவோம். ஆனா, நீங்க சறுக்கினா, நடு மண்டையில நச்சுன்னு குட்டுவோம்.
ஈசியா, மேல கொண்டு போய் விட்டவங்க, ஒரு நிமிஷத்துல, கால வாரி சாக்கடைல முக்கி எடுத்துடுவாய்ங்க.
திருட்டுச் சாமியார் யாராச்சும், கடைசி வரை சக்ஸஸ்ஃபுல்லா இருந்திருக்காங்களான்னு யோசிச்சுப் பாருங்க. கொஞ்சமாவது உத்தமமா இருந்தீங்கன்னா, 'சாமி' ரேஞ்சுக்கு எங்க மக்கள்ஸ் வச்சுக்கராங்களே, அதை கெடுத்துக்காதீங்க. அப்பரம், கும்மி அடிச்சுடுவாய்ங்க.
ஆயில் மசாஜுக்கு முன்னாடி ஒரு தபா நல்லா யோசிச்சுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. அப்பாலிக்கா குத்துதே கொடையுதேன்னா, கொம்பேனியார் பொறுப்பில்லை.

மக்கள்ஸ் கவனித்தில் கொள்ள. பிறரைப் பார்த்து கல்லெரியும் முன்....
யோசிச்சுப் பாருங்க, நம்மில் பலர் 9 டு 5 வேலை செய்யும் சராசரியாத்தான் இருப்போம். நித்தி வகையராக்களுக்கு இருக்கும் 'நல்ல' திறமைகளில் 1%வது நம்ம கிட்ட இருக்குமா? நித்தியை எடுத்துக்கிட்டா, 200 புத்தகங்களும், பல ஆயிரம் கட்டுரைகளும், பல நூறு சொற்பொழிவுகளும் நடத்தியிருக்காராம். எப்பேர்பட்ட தப்புகள் செய்திருந்தாலும், அவங்க கொஞ்சமாவது நல்லது செய்யாமலும் இல்லை. பல கோடிகளை 'திரட்டி', சில கோடிகளை அன்னதானங்களுக்கும், கல்விக்கும், இயற்கை சீற்றங்களின் போதுமெல்லாம், எடுத்து விடாமலில்லை. அதையும் மனசுல வச்சுக்கணும். அரசாங்கங்கள் செய்யாத பல விஷயங்களை, இந்த மாதிரி சிலர் செஞ்சுக்கிட்டு வராங்க என்பதை மறுக்க முடியாது. ஸோ, மாத்தி யோசிங்க.
இந்த மாதிரி ப்ரச்சனை வந்தா, குண்டு கட்டையை தூக்கிக்கிட்டு போய், ஸ்பாட்ல ஆஜராகி, கண்ணாடியை ஒடைக்கரவங்கெல்லாம் யாருங்க? கண்ணாடி ஒடைக்கரது அவ்ளோ குஷியான மேட்டரா? ஸ்ஸ்ஸ்.

ஹுசைனு. இந்த தாத்தா தொல்லை தாங்க முடியல்ல. ஓவியங்கள் பிடிக்கும் எனக்கு. பாரீஸில் லூவ்ரு ம்யூசியத்தில் இருப்பவை ஓவியங்கள். திருவனந்தபுரத்தில் ரவிவர்மாவின் அரண்மனையில் இருப்பவை ஓவியங்கள். தெரு ஓரங்களில், சாக்பீஸில் அழகாய் வரையப்படுவதும் ஓவியங்கள். ஆனா, இந்த தாத்தா வரையரது, மாடர்ன் ஆர்ட்டாவும் இல்லாம, அழகாவும் இல்லாம ஏதோ ஒரு கிறுக்கல் வகை. வருஷத்துக்கு ஒரு தபா யாரையாவது அம்மணமா வரஞ்சு, பரபரப்பை ஏற்படுத்துவாரு. அட்லீஸ்ட், அந்த ஓவியங்களாவது, அழகா இருந்திருந்தா மன்னிச்சு விட்டுரலாம். ஏதோ பென்சிலில் குழந்தை கிறுக்கர மாதிரி கிறுக்கிட்டு, இம்மாம்பெரிய ஆளாயிட்டாரு. மெடிட்டேஷன் கிளாஸ் மாதிரிதான் இதுவும். முழு விஷயமும் தெரியாம, ரொம்ப நொட்டை சொல்ல முடியாது இவரை.
இவர் சரஸ்வதியை அம்மணமா கிறுக்கிட்டாருன்னு எல்லாரும் குய்யோ முய்யோன்னு கத்தராங்க.

கத்தரவங்களே, நீங்க இப்படி கத்தி ஆர்பாட்டம் பண்ணனும்னு நெனச்சுத்தான் தாத்தா இப்படி controversialஆ கிறுக்கறாரு. வயசான காலத்துல, ஊரே அவர் பேரைச் சொல்லும்போது குஷி ஆவராரு. ஏன் இப்படி ஏத்தி விடறீங்க? ரெண்டு ரூவா A4 பேப்பர்ல, அஞ்சு நிமிஷம் செலவு பண்ணி பென்சில்ல எத்தையோ கிறுக்கினா, அவருக்கு ஏன் இம்புட்டு வெளம்பரம் கொடுக்கறீங்க?
ஹுசைனுக்கு பதிலா ஒரு ராமானுஜம் இதை கிறுக்கியிருந்தா இவ்ளோ பெருசாகியிருக்காது. நம்ம கோயில்களில் இல்லாத அம்மண சிலைகளா?
ஹுசைன் ஒரு விளம்பரப் பிரியர். கடைசி காலத்தில், இயன்ற அளவு கவனம் பெர, இப்படி எத்தையாவது கிறுக்கிக்கிட்டேதான் இருப்பாரு.
துர்கா, லட்சுமி, சரஸ்வதின்னு வரிசையா கிறுக்கிட்டாரு. அடுத்த வருஷம் கண்டிப்பா யாரையாவது ஸ்கெட்சு போடுவாரு. அது, கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் இருக்கும், ஸோ, உங்க நேரத்தை விரையம் பண்ணாதீங்க.



கருத்ஸ் சொல்லிட்டுப் போங்க. வீடியோ பாத்தீங்களா? உங்க கண்ணுக்கு தப்பா தெரீதா? சரஸ் பாத்தீங்களா? கோவம் வருதா?

16 comments:

SurveySan said...

எது மெய் எது பொய்னு தெரியல்ல. சமீபத்திய பேட்டியில், ரஞ்சியுடன் இருந்த வீடியோவை எடுக்கும்போது, தான் 'சமாதி நிலையில்' ஒன்னியும் தெரியாத பாப்பாவாக இருந்தேன்னு சொல்லியிருக்காராம் நித்தி. என்ன கொடுமை நித்தி இது? ஆம்பளையா அழகா மேட்டர ஒத்துக்கிட்டு அடுத்த கட்டத்துக்கு போர வழியப் பாருங்க.
ரஞ்சி பாவம்.

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமா யோசிக்கிறீங்க..

வித்யாசமான கோணத்தில் யோசிக்கிறீங்க...

ஓவியர் ஹூசைன் - ஜஸ்ட் இக்னோர் இட்.

archchana said...

மாத்தி யோசித்தால் தாங்கள் கூறிய கருத்துக்களும் சரிதான்.
ஆனால் நித்தியை இதுவரை கும்பிட்டோம் எனது வருத்தம் மாற்றினார் எனது கணவன் நோய் குணமாக்கினார். இப்படி இருந்துகொண்டு எண்கள் வருத்தம் மாற்றினார் இவரை தூக்கில் தான் போடவேணும் என்று சொல்லுபவர்களை தான் நம்பவே கூடாது.

ரவி said...

நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',

SurveySan said...

Danks Raghavan, Archchana, sen.Ravi :)

SurveySan said...

noone liked my 'art'? :(

ஆ! இதழ்கள் said...

மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட்டீங்க. மீடியாவை விடுவோம், இந்த போலியை மீடியாவில் துவைத்து தொங்கவிட்டதால் இவர்கள் மேல் அனுதாபம் வந்துவிடக்கூடாது. எத்தனையோ பேரத் தொட்டாராம் சரியாயிடுச்சாம். பின்ன ஏம்பா மாத்திரை சாப்பிடுற? நான் தான் கடவுள்னு கோடிக்கணக்கான மக்களை தாம் திருடப்படுகிறோம்னு தெரியாமலையே வச்சு கொள்ளையடிச்சா அவனுக்கு மன்னிப்பு குடுக்கணுமா?

நித்தி வகையராக்களுக்கு இருக்கும் 'நல்ல' திறமைகளில் 1%வது நம்ம கிட்ட இருக்குமா? நித்தியை எடுத்துக்கிட்டா, 200 புத்தகங்களும், பல ஆயிரம் கட்டுரைகளும், பல நூறு சொற்பொழிவுகளும் நடத்தியிருக்காராம்//

என்ன கேள்வி இது? அவர்களோட தொழில் அது, இப்பவே லட்சம் பேரு உங்கள சாமி சாமின்னா நீங்க இன்னேரம் 500 புத்தகம் எழுதியிருப்பீங்க. கமெண்ட்ல டிஸ்கஸ் பண்ணா கரெக்டா செய்யமுடியாத கடல் இந்த மேட்டர். மக்களை ஏமாற்றினவங்களுக்கு மன்னிப்பே கிடையாது. நாம் இப்படி இருக்கிறனால தான தினமும் ஒரு சாமி உருவாகிறான் நான் கடவுள்னு.

ஆ! இதழ்கள் said...

http://nithyananda-cult.blogspot.com/

இந்த ப்ளாகுக்கு போய் வாசிங்க பாதிக்கப்பட்ட ஒருவரின் ப்ளாக். (ஏற்கனவே தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்) உங்களுக்கு அவர்கள் மேல் அனுதாபம் வருவதை குறைக்கும்.

blissindia said...

உங்க ஆர்ட் ரொம்போ நல்ல இருக்கு, ஆனா ஹுசைன் மாதிரி உங்களுக்கு வேற நாட்ல ஆடைக்கலம் கடைக்கும்னு நம்ப வேண்டாம்.

SurveySan said...

@ஆ! இதழ்கள்

///மாத்தியோசிக்கிறேனு தப்பா யோசிச்சிட்டீங்க.///

i will give my explanation later tonight. good point though. :)

SurveySan said...

very interesting read about MF Hussain
http://sify.com/news/Grow-up-M-F-Husain-news--kdfp6fgaaig.html

SurveySan said...

@ஆ! இதழ்கள்

லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான் பிரமாதமா லுக்கு வேணா தருவேன். ஆனா, 200 புக்கெல்லாம் எழுதி விடமுடியுமான்னு தெரியலை. அதே போல், சொற்பொழிவும் ஆற்ற முடியாது. அதெல்லாம், இயற்கையா வரும் திறமைகள்.

நித்திக்கு மன்னிப்பு கொடுக்க வேணாம். ஆனா, இப்படி அவனின் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் போட்டு உடைப்பானேன்?

இராமலிங்க ராஜூ கூடத்தான் எல்லாரையும் ஏமாத்தினான். அதுக்காக, அவனை திருட்டு வீடியோ புடிச்சா அசிங்கப் படுத்தினோம்? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை செய்யலாம். இப்படி, அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியில் விட்ட, சன் டிவியையும், நக்கீரனையும், சட்டம் போட்டு, ஃபைனை போடணும். அப்பத்தான், இனி செய்ய யோசிப்பாங்க.
மீடியாக்காரன் கைலதான் இருக்கு, யாரு நல்லவன், யாரு கெட்டவன்னு நமக்குச் சொல்றது. அதுதான், திகிலான உண்மை.

SurveySan said...

@blissindia

டாங்க்ஸ். யாரும் அடைக்கலம் தரமாட்டானுவன்னு தெரியும். அதுதான், யாரோட நிர்வாணப் படம்னு சொல்லலை ;)

SurveySan said...

@ஆ! இதழ்கள்

:) மேலோட்டமா மேஞ்சிருக்கேன், நித்யா தளத்தை. இந்த கேள்விகள், அருமை.http://nithyananda-cult.blogspot.com/2010/01/paramahamsa-nithyananda-wanders-in.html

SurveySan said...

@ஆ! இதழ்கள்

இந்த ஆராய்ச்சியும் அருமை :)
http://1.bp.blogspot.com/_vyEnd_D4Joc/S5GbVnAPtmI/AAAAAAAAAJI/lJ43l6v0xM4/s1600-h/Nithyananda-timeline-fraud.jpg

ஆ! இதழ்கள் said...

@SurveySan

லட்சம் பேரு, என்னை சாமி சாமின்னு, நான் பிரமாதமா லுக்கு வேணா தருவேன். ஆனா, 200 புக்கெல்லாம் எழுதி விடமுடியுமான்னு தெரியலை. அதே போல், சொற்பொழிவும் ஆற்ற முடியாது. அதெல்லாம், இயற்கையா வரும் திறமைகள்.//

உங்களால முடியவே முடியாத பட்சத்தில் (கண்ணாபின்னானுகூட) உங்களைப்பற்றி காரணமே இல்லாத உங்கள் மொளனத்தைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து காரணத்தை எழுத உங்கள் அருகில் கைத்தடிகள் இருப்பார்கள். அப்படியும் இல்லையா பெரிய பெரிய பிராடு பண்ணுபவர்களுக்கு அவர்கள் பெயரைப் போட்டு புத்தகம் எழுதித்தர ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள். சொற்பொழிவு ஆற்றுவதும் புத்தகம் எழுதுவதும் வேறு திறமைகள், இதனை ஆன்மிகத்தோடு ஒன்றவைத்து தாங்கள் கடவுள் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இவனை விட மிக அருமையான ஆன்மிக பிரசங்கிகள் நம்மிடம் இருந்தார்கள் இருக்கிறார்கள்.

நித்திக்கு மன்னிப்பு கொடுக்க வேணாம். ஆனா, இப்படி அவனின் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் போட்டு உடைப்பானேன்?//

கண்டிப்பாய் திரும்பத்திரும்ப காட்டியதை நான் வெறுக்கிறேன். ஆனால் ஒரு முறையாவது கண்டிப்பாய் காண்பித்துருக்கவேண்டிய செயல் அது. இப்படி திரும்பத்திரும்ப காண்பித்த பிறகும் கூட மார்ஃபிங்ன்றான், ஆராய்ச்சி செய்தேன்றான், சமாதில இருந்தேன்றான், காண்பிக்காம விட்ருந்தா இன்னேரம் மாஸ்டர் காப்பி நித்தி பைல இருக்கும், எடுத்தவன் சமாதில இருந்திருப்பான்.

ராஜூ ஏமாத்துனது நம்ம பணத்தை, இவன் ஏமாத்துனது அசிங்கப்படுத்துனது நம்ம நம்பிக்கைய, ராஜூ கேசுக்கு பணத்தை திருடற மாதிரி சிடி இருந்தா எடுபடும், இதுக்கு இந்த சிடிதான்.

மீடியாக்காரனைப் பற்றி நீங்கள் சொல்வதை வேறு வார்த்தையின்றி ஏத்துக்கிறேன்.