தூர்தர்ஷனை அறிந்தவர்கள், 'மிலே சுர் மேரா துமாரா' என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாடலை அறிந்திருப்பீர்கள்.
புல்லரிக்க வைக்கும் பாடல் அது. பீம்சேன் ஜோஷி தொடங்கி, பாலமுரளிகிருஷ்ணா, கமலிலிருந்து, டீ கடை நாயர் வரை எல்லாரும் அமக்களமா பாடி ஆடி கலக்கியிருப்பாங்க.
அந்தப் பாடலின் புதிய 'ரீ-மிக்ஸ்' வடிவம், பழைய தலைமுறையையும் புதிய தலைமுறையையும் கலந்தடித்து, வித்யாசமாய் வந்துள்ளது.
வழக்கம் போல், சினிமாக்காரர்களே அதிகமாய் வருகிறார்கள். சினிமா மட்டுமல்லாது, மற்ற துறை சார்ந்த பெருந்தகைகளை சேர்த்திருக்கலாம். ஆனா, நமக்கு யாருக்கும் அவங்கள தெரியாம, ஃபார்வர்டு அடிச்சு வீடியோவ முழுசா பாக்காம விட்டுடுவோம்.
ஸோ, மன்னிச்சிடலாம். :)
சல்மான் கான் வரும் நிமிடம், காது கேளாதவர்க்கான, சைகை மொழியில் அமைந்திருப்பது, குறிப்பிடத்தக்க புதுமை.
ஜெய்ஹிந்த்!
22 comments:
'நல்ல பதிவு',
'சூப்பர்',
'தூள்',
'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! எனனா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',
கலக்கல் பதிவுங்க.. பகிர்வுக்கு நன்றி. சின்ன வயசுலேர்ங்து பார்த்துட்டு வரேன்..:))
பலா பட்டற, நானும். :)
வாவ்...சூப்பர் பகிர்வு தல...
மிலே சுரு மேரா துமாரா...ஒருசமயம் எனக்கு கிட்டத்தட்ட எனக்கு மனப்பாடமா இருந்துச்சு...
கமல் என்ன ஸ்மார்ட்டா இருப்பாரு அதுல...
பாலமுரளியும்,லதாஜீயும் பாடும் இடங்கள் ரொம்ப பிடித்தது. இதுல கேஜே. ஜேசுதாஸையும் கண்டிப்பாக சேர்த்திருக்கலாம்...
//அந்தப் பாடலின் புதிய 'ரீ-மிக்ஸ்' வடிவம், //
எல்லாவற்றிலும் ஃபாஸ்ட்தான் நீங்க:)! இன்று பதிய இருக்கும் என் லால்பாக் மலர்கண்காட்சிப் பதிவில் இப்பாடலைப் பற்றி குறிப்பிட இருந்தேன். இந்த புதிய ரீ-மிக்ஸ் ஜூம் தொலைக்காட்சியும், டைம்ஸ் க்ரூப்பும் சேர்ந்து கைலாஷ் சுரேந்திரநாத் டைரக்ஷனில் தயாரித்திருக்கிறாங்க. பிடித்துப் போய் ரெகார்டும் செய்து வைத்தேன் அடிக்கடி ரசிக்க.
வீடியோ பகிர்வுக்கும் நன்றி!
+1
------------------
பலாபட்டறைக்கு என்னாச்சு
-------------------
பாடல் இன்னும் கேட்க்கலை
பிறகு கேட்டுப்போட்டு வாறிங் ...
video பாத்துக்கினு இருக்கேன்.
ரொம்ப தேங்க்ஸ். அதுவும் கானக்கந்தர்வன் அதுக்கு ஷ்பெஷல் நன்றி.
//சல்மான் கான் வரும் நிமிடம், காது கேளாதவர்க்கான, சைகை மொழியில் அமைந்திருப்பது, குறிப்பிடத்தக்க புதுமை. //
பழைய பாடலில் கிடைத்த ஒரு உணர்வு இந்தப் பாடலில் எனக்கு கிட்டவில்லை ஆனால், நீங்கள் குறிப்பிட்டதுபோல், அந்த சல்மான் கான் வரும் இடம் மிகவும் புதுமை, மனத்திற்குள் ஒரு இனம் புரியாத உணர்வு.
பதிவுக்கு நன்றி!
பழைய மிலே சூர் அப்போதைய தலைமுறை ஆட்களைக்கொண்டு அமைச்சிருந்தாங்க. இப்பத்திய பசங்களுக்கு தகுந்த மாதிரி அழகா இருக்கு புது பொலிவுடன்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பது புதிய தலைமுறையினருக்கும் மனசுல பதிஞ்சு வேற்றுமை இல்லாமல் இருக்க வேண்டும்.
அருமையான பகிர்வுக்கு நன்றிங்க
பேப்பரில் இது பத்தி படிச்சேன்.., முதன்முதலில் பார்க்க உதவியதற்கு நன்றி
சர்வே,
வழக்கம் போல கலக்கல் பதிவு. நிச்சயம் நல்ல முயற்சி தான் ஆனா அந்த பழைய உணர்வு ஏனோ எனக்கு ஏற்படலை.
பகிர்வுக்கு நன்றி.
பழைய வீடியோவோட லிங்க் வேலை செய்யலைங்க
நாஞ்சில் பிரதாப், கேஜே இருக்காரு. இரண்டாம் பாக வீடியோ பாருங்க. அவரு பையனும் இருக்காரு.
ராமலக்ஷ்மி, மேல் விவரங்களுக்கு நன்றி. எனக்கென்னமோ ரெக்கார்ட் பண்ணி கேக்கவெல்லாம் புடிக்கலை. ஒரு கோர்வையா வராமல், பிட்டு பிட்டா வரும் பாடல்களால் இருக்கலாம். வீடியோ பாக்கலாம், அதுவும் அடிக்கடி பாக்க வைக்குமான்னு காலம்தான் சொல்லணும் :)
ஜமால், பலாபட்டறைக்கு ஒண்ணுமாகலை. காப்பி/பேஸ்ட் பண்ணியிருக்காரு, அம்புடுதேன். ஐ லைக் இட் :)
புதுகைத் தென்றல், வருகைக்கு நன்றி. கானகந்தர்வனுடன் அவரு பையனும் கீறான்.
பெயர் சொல்ல விருப்பமில்லை,
////பழைய பாடலில் கிடைத்த ஒரு உணர்வு இந்தப் பாடலில் எனக்கு கிட்டவில்//////
எனக்கும் அப்படித்தான் தோணுது.
//// நீங்கள் குறிப்பிட்டதுபோல், அந்த சல்மான் கான் வரும் இடம் மிகவும் புதுமை, மனத்திற்குள் ஒரு இனம் புரியாத உணர்வு./////
yes. நல்லா யோசிச்சு சேத்திருக்காங்க.
புதுகைத் தென்றல்,
////இப்பத்திய பசங்களுக்கு தகுந்த மாதிரி அழகா இருக்கு புது பொலிவுடன்./////
அப்ப, நாம அப்பத்திய பயலுவளா? எ.கொ.இ? :)
பாடலாக இல்லைங்க. வீடியோ ரெக்கார்டிங்தான். டாட்டா ஸ்கையில் வேண்டியதை ரெகார்ட் பண்ணிக்கிட்டா, பின்னால் பார்த்து அலுத்து விட்டால் டெலிட் செஞ்சுக்கலாமே:)!
//அதுவும் அடிக்கடி பாக்க வைக்குமான்னு காலம்தான் சொல்லணும்//
இது எந்த வகை என காலமேதான் சொல்லட்டும்:)!
முத்துலெட்சுமி, நன்னி. யூ.ட்யூபில் புண்ணியவானுக்குத்தான் நன்றி சொல்லணும். :)
அநன்யா, எனக்கும் அப்படித்தான் தோணிச்சு. ஆனா, பாக்கப் பாக்க புடிக்க ஆரம்பிக்கலாம்.
பழசுல, பீம்சேனின் குரல் ஒரு பெரிய ப்ளஸ். அது இதில் மிஸ்ஸிங். அழகான கமலும் மிஸ்ஸிங்.
அதிஷா, பழைய வீடியோ இணைப்பு சரிபண்ணிட்டேன். இதற்கு முன் போட்ட வீடியோவை டெலீட் பண்ணிட்டாங்களாம், காப்பிரைட் வயலேஷனாம்.
நேத்து வந்த படமெல்லாம், யூட்யூபில் ஓடுது. இருபது வருட பழைய தூர்தர்ஷன் வீடியோவை காப்பிரைட் வயலேஷனுக்காக தூக்கியிருப்பதை எந்த கொடுமையில் சேர்ப்பது? :)
Post a Comment