recent posts...

Monday, September 28, 2009

திரைப்பட விருதில் என்னை ஏமாற்றிய விஷயம்

கடந்த இரண்டு வருடங்களுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பட்டியலை பார்த்ததும், புருவம் உயர்ந்தது உண்மைதான்.
அப்பரம், அதற்கான, ஞாய தர்மங்களை யோசிச்சதும், ஓரளவுக்கு அதன் தன்மை புரிந்து மனம் சாந்தி அடைந்தது.

சிவாஜிக்கு ஏன் விருது, கமலுக்கு ஏன் விருதுன்னு கேக்கரவங்க கேள்வி ஞாயமானதுதான்.

ஆனா, மத்த எல்லா படங்களையும் விட, பல பேர்களின் பல மடங்கு உழைப்பு இந்த இரண்டு படங்களிலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பா, சிவாஜி படம் ஏற்படுத்திய ஒரு திருவிழா மயக்கம், நினைவுக்குத் தெரிஞ்சு இதுக்கு முன்னாடி எந்த படமும் ஏற்படுத்தியதில்லை. எதிர்பார்ப்பையும் பெரிய அளவில் ஏமாற்றாமல், ரஜினி படம் எப்படி இருக்கணுமோ (பாட்ஷா அளவுக்கு லேது) அப்படி இருந்து ஒரு பொழுது போக்கு அம்சமா இருந்தது சிவாஜி.

ஸோ, சீவாஜிக்கு ஒரு ஜே!

தசாவதாரம், கேக்கவே வேணாம். மைதா மாவு போட்டு மேக்கப் செஞ்ச மாதிரி, ஃபேஸ் உப்பலா தெரிஞ்சாலும், கமலின் பத்து பரிணாமங்களூம் அமக்களம். நம்ம டமில் படங்களுக்கு சொல்லிக்கர மாதிரி ஒரு மைல் கல். புத்திசாலித்தனமான கதையம்சமும், அது பத்து கேரக்டரை ஊடுருவிச் செல்வதும், அசாத்யமாய் செய்திருந்தார் கமலு.
அதுக்காக, தசாவதாரத்துக்கும், ஒரு ஜே!

சிறந்த நடிகர்களா, கமலும், ரஜினியும் ஏன் ஏன் ஏன்னு பெருசா கேள்வி எழாமல் இல்லை.

அஞ்சாதே படத்துல நடிச்ச, நரேனும், வாரணம் ஆயிரம் சூர்யாவெல்லாம், எந்த அளவுக்கு கொறஞ்சு போயிட்டாங்கன்னு தெரியல.

ஆனாலும், உ.த, சொன்ன மாதிரி, தலைவர் கருணாநிதி, வயசான காலத்துல, கமல் ரஜினி ரெண்டு பக்கமும் உக்கார வச்சு, ஈன்னு ஒரு ஃபோட்டோ புடிச்சுக்கலாம்னு ஆசை வந்திருக்கும்.

ஸோ, கமலுக்கு, ரஜினிக்கு ஒரு ஜே!

கடந்த ரெண்டு வருஷமாதான், டமில் படங்களில், புதுக் காத்து வீசுது. வித்யாசமாவும் யதார்த்தமாவும், படம் எடுத்துக்கிட்டு வராங்க. அவங்களையெல்லாம் தூக்கி வச்சு கொண்டாட வேண்டாம், ஆனா ஓரளவுக்காவது அங்கீகாரம் கொடுத்தாதான், அடுத்தடுத்து பட்டைய கெளப்பவாங்க?
இதிலும் பெருசா ஏமாத்தல, எல்லா நல்ல படத்துலையும், ஓரளவுக்கு எத்தையாவது ஒரு விருதை தூக்கிப் போட்டிருக்காங்க.

ஸோ, அவங்களுக்கும் ஒரு ஜே!

ஆனா, என்னால சுத்தமா தாங்கிக்க முடியாத விஷயம் இதுல ரெண்டு இருக்கு!

தலையாய தலைவலி தந்த மொத விருது. படிச்சதுமே கண்ணுல ஜலம் கட்டிண்டு நின்ன விருது.
சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

அடங்கொய்யால. இந்தப் படத்தை, படம் எடுத்தவரே தியேட்டர்ல போயி பாக்கலையாமேய்யா?
ஒரிஜினல் குவாலிட்டின்னு இணையத்தில் கிட்டியும், $10க்கு எங்க ஊரு நாட்டாரு கிட்ட காய்கறி வாங்கினா, ஃப்ரீயா டிவிடி குடுத்தும் கூட, இந்தப் படத்தை பாக்க முடியலையே, இந்தப் படத்துக்கு மாநில அரசின் விருதா? அதுவும் வசனத்துக்கா?
ஐயகோ, நான் கடவுள், தசாவதாரம், பூ, வா.ஆயிரம், சரோஜா இதையெல்லாம் தூக்கி போட்டு சாப்பிட்டுடுசா உளியின் ஓசை?
காத்தவராயன் கூட நல்லா இருந்துதேய்யா.
ஆண்டவா! ஆண்டவா! என்ன சோகம்யா இது?
வெளங்கிரும்!

ரெண்டாவது தலைவலி தந்த மேட்டரு:
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)

நான் ராசாவின் தீவிர விசிரிதான். ஆனா, இந்தப் படம் வந்ததே தெரியாதேய்யா எனக்கு? இப்பதான் தேடிப் பிடிச்சு கேட்டு பாத்தேன்.
விருது கொடுத்தவங்களுக்கு மனசாட்சியே லேதா?

வாரணம் ஆயிரத்துல, ஹாரிஸ், எழையா எழச்சிருக்காரு ஒவ்வொரு பாட்டையும்.
சந்தோஷ் சுப்ரமணியத்தில் உள்ள பாடல்களில், என்னாமா துள்ளல் இருந்தது.
தசாவாதாரம் கூட பாட்டு பரவால்லாம இருந்துச்சே.

ராசாவின், பெயர் தெரியா அஜந்தாவுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன?

என்ன கொடுமைங்க இது?

விருதுகளில், ஓரளவுக்கு சர்ச்சைகள் வரலாம்.

ஆனால், இந்த தடவை இத என்னான்னு சொல்றதுன்னே புரியல்ல.

நல்லாருக்கட்டும்!

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான், கலைமாமணி, பத்மஸ்ரீ விருதுகளில் எல்லாம் கூட இந்த மாதிரி, உப்பு சப்பில்லா ஆட்களுக்கு கொடுத்து, விருதின் பெருமையை எச்சையாக்கினாங்க.

இப்ப, இது.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
விருது பெற தகுதியிருந்தும், விருது பெறாதவர்களுக்கு - பாவங்க நீங்க!

10 comments:

உண்மைத்தமிழன் said...

சிவாஜி சிறந்த பொழுது போக்குப் படம்.. அதுவே சிறந்த படத்துக்கான அளவுகோலில் எப்படி வரும்..? அதேபோல்தான் தசாவதாரமும்..

பூ, சுப்ரமணியபுரம், அஞ்சாதே இந்த மூன்றும்தான் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்க வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

இளையராஜா.. நான் சத்தியமாக நினைக்கவில்லை. இப்படியொரு விஷயம் இருப்பதை..

அஜந்தா திரைப்படத்தின் பாடல்களை இதுவரையில் கேட்டதில்லை. இதுவும் ஐஸ் வைக்கும் பங்கில் ஒன்றாகத்தான் இருக்கும்..!

SurveySan said...

உண்மை சார், திரைப்படமே ஒரு பொழுது பொக்க அம்சம்தான். அதனால, சிறந்த பொழுது போக்கு படத்துக்கு, சிறந்த ப்ட விருது கொடுத்தா தப்பில்லை என்பாது அடியேன் கருத்து.

கண்டிப்பா, அஞ்சாதேவுக்கோ, சுப்ரமணியபுரத்துக்கோ, வா.ஆயிரத்துக்கோஒ கொடுத்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்.

பட், நாட் பேட்!

SurveySan said...

இளையராஜாவுக்கு கொடுத்ததுக்கு ஒரு காரணம் இருக்கலாம்.
உளியின் ஓசைக்கு அவருதான? ஃப்ரீயா பண்ணிக் கொடுத்தாரோ என்னவோ? :)

Prabhu said...

இந்த அப்ரோச் நல்லாருக்கு! ஒரு பாஸிடிவ் எண்டர்டெயினருக்கு விருது குடுப்பதில் தவறில்லை. கருத்து இருந்தாதான் குடுக்கனும் எனக் கட்டாயம் இல்ல! சினிமா எண்டெர்யினர் தான? இல்ல டாகுமெண்ட்ரியா பார்க்க வேண்டியதான்!

உளியின் ஓசை எனக்கு அதிர்ச்சியே! ஆனா சுப்ரமணியபுரத்துக்கு ஒண்ணு தேறலைங்கறது கொஞ்சம் ஆச்சரியம்!

SurveySan said...

pappu,

//இந்த அப்ரோச் நல்லாருக்கு//

danks!

//ஆனா சுப்ரமணியபுரத்துக்கு ஒண்ணு தேறலைங்கறது கொஞ்சம் ஆச்சரியம்!
///

they got one singer award. in other categories like cinematography,etc.. there were better movies which took the prize.

கலையரசன் said...

எனக்கும் இதேதான் தோன்றியது தோழா!
என்ன செய்ய அடுத்த தடவை நம்ம போய் செலக்க்ஷன் கமிட்டியில உக்காந்ததாதான் முடியும்..
:-)

காலப் பறவை said...

நல்ல விமர்சனம். இதையும் கொஞ்சம் பாருங்கோ

http://stalinfelix.blogspot.com/2009/09/blog-post_30.html

பெசொவி said...

//சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

அடங்கொய்யால. இந்தப் படத்தை, படம் எடுத்தவரே தியேட்டர்ல போயி பாக்கலையாமேய்யா?//

ரசித்து....ரசித்து....சிரித்தேன்.

Ananya Mahadevan said...

absolutely valid point. I am not for Sivaji movie on any day. I felt it was a hyped up time waster. Dasa deserved an award. No matter what category. But State award for Uliyin Osai was just hilarious.சிரிக்காம என்ன பண்ணறது? இதுலேந்தே தெரீலியா இவங்க Award குடுக்கற லக்ஷணம்?