recent posts...

Sunday, September 27, 2009

உ.போ.ஒ - கமலின் குசும்பும், பொது புத்தியும், நம் ரசனையும்!

'மும்பை மேரி ஜான்'னு ஒரு படத்தை பாத்து ரொம்பவே புளகாங்கிதம் அடஞ்சு விமர்சனம் எல்லாம் எழுதியிருந்தேன். தொடர்ந்து தாக்கும் தீவிரவாதம், தங்கள் இயல்பு வாழ்க்கையை கெடுத்து விடாமல், மும்பை வாசிகள் எப்படி அதை எதிர்கொண்டு வெற்றி அடைகிறார்கள்னு ஒரு பாசிட்டிவ் அப்ரோச் கொண்ட அற்புதமான படம் அது.
அந்தப் பதிவில், 'A Wednesday' பாத்தியான்னு, சில பலர் கேட்டதால், அதை தேடிப் பிடிச்சு பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆனா, மு.மே.ஜா அளவுக்கு, A Wednesday ஆஹா ஓஹோன்னு சொல்லும் படியா இல்லை.
லோ பட்ஜெட்டில், ஓரளவுக்கு, ஒக்காந்து பார்க்கும் படியான கதை அம்சம் பொருந்திய படமா இருந்தது. படத்தின் ப்ளஸ் பாயிண்ட், நஸ்ருதீன் ஷாவின், அலட்டாத நடிப்பும், கடைசி திருப்புமுனையும், படம் தந்த மெசேஜும்.

சில விஷயங்கள், சில மொழியில எடுத்தா மட்டும் தான் எடுபடும்.
ஓரு ஏழை விவசாயி கதை நம்மூர்ல எடுத்தா பாக்கலாம். ஆனா, அதே கதை, அமெரிக்க சூழலில், ஆங்கிலத்தில் எடுத்து விட்டா, அவங்களால அதை 'relate' பண்ணி பாக்க முடியாது. ஒட்டாது.

A wednesday, அல்கொய்தா/தோய்பா ரக தீவிரவாதிகள் பற்றிய படம். அதை அப்படியே டமிலில் ரீ-மேக்கியதால், எனக்கு அந்தளவுக்கு எடுபடலை.
என்னதான், டமில்நாட்டில் எப்பயாவது ஒரு தரம் தீவிரவாதிகளின் அல்லக்கைகள் அங்கங்க தாக்கினாலும், நம்ம மக்களுக்கு, அதன் தாக்கமெல்லாம் பெருசா தெரியாதுங்கரது என் கருத்து.

இந்த ஒரு விஷயமே, உ.போ.ஒ'க்கு பெரிய அடி.

அடுத்த அடி, கமல்ஹாசன். இந்த மாதிரி படமெல்லாம், ரீமேக்கினா, ஸ்லைட்டா உல்டா பண்ணி எடுக்கணும்னு, கமலுக்கு ஏன் தோணாம போச்சு? தீவிரவாதிகளுக்குப் பதிலா, கல்லூரிப் பெண்களை பஸ்ல கொளுத்தின களவாணிப் பசங்கள மையமா வச்சு எடுத்திருந்தா, என் பார்வையில் படம் எங்கேயோ போயிருக்கும். கமலுக்கு தில்லில்லாமப் போச்சா?
அதுவுமில்லாமல், நஸ்ருதீன்ஷா, அலட்டாம அழகா பண்ணின ரோலை, கமல் நல்லா பண்ணலை. இவரு நல்லவரு வல்லவரு, இவரு குண்டு வச்சா வெடிக்காதுன்னு, நேத்து பொறந்த கொழந்தைக்கு கூட தெரியும். படத்தில் இருந்த 'த்ரில்' எஃபெக்ட் புஸ்வாணமா போச்சு. கமலுக்கு பதிலா, பசுபதியோ, நாசரையோ நடிக்க வச்சிருக்கலாம். கமல், ஒரு கௌரவ வேஷத்துல வந்துட்டுப் போயிருந்திருக்கலாம், வியாபாரத்துக்காக.

எல்லாரும், தோட்டா தரணியின், ஆர்ட் டைரக்ஷனுக்கு ரொம்ப ஓவரா புகழாரம் சூட்டியிருந்தாங்க. தோட்டா பெரிய ஆளு. சந்தேகமே இல்லை. ஆனா, இந்த வெரி லோ பட்ஜெட் படத்துல, அவருக்கு துட்டே தரல போலருக்கு. போலீஸ் ஸ்டேஷன் கண்ட்ரோல் ரூமு நல்லாவே இல்லை. அதை விட கேவலம், போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூம் செட். எந்த பாத்ரூம்ல, முச்சா போர எடம் கண்ணாடிக்கு அவ்ளோ கிட்ட கொண்டு போயி வச்சிருக்கான்? வெள்ள பெயிண்ட் காயக் கூட இல்லையே அந்த பாத்ரூம்ல? என்ன கொடுமைங்க இது?
தீவிரவாதிகளை கூட்டிக் கொண்டு செல்லும் ட்ரக்கும் எடுபடலை. ஹ்ம்!

அடுத்தது, பொது புத்தி, சுய புத்தி, மட்ட புத்தி, சாதா புத்தி வகையராக்களின் விமர்சனங்கள். ஒரு விஷயத்தை பத்தி தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொன்னவங்க சொன்னதை படிச்சவங்க, அவங்களுக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்லவும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொல்லி, அதை படிச்சு, தனக்குப் பட்டத்தை பட்டது மாதிரி சொன்னதை, முதலில் சொன்னவங்க, அதைப் படிச்சு, திரும்ப தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்றதும், அதை ரெண்டாவதா எழுதினவங்க, திரும்ப படிச்சு, தன் மனதில் பட்டதை பட்டது மாதிரி சொல்றதும் தப்பில்லைதான். ஆனா, ஒரு கட்டத்துல இதையெல்லாம் முடிச்சுக்கணும். படிக்கரவங்கெல்லாம் பாவம் இல்லை?

இப்போ, உ.பொ.ஒ பத்தி என் பொது புத்திக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்றேன்.
அமெரிக்கா மீடியாக்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, இங்க இருக்கர மைனாரிட்டிகள் (கருப்பர், மெக்ஸிக்கன்ஸ், வகையரா) ரொம்ப கொடூரமானவங்கன்னு டெய்லி ப்ரெயின் வாஷ் பண்ணிக்கிட்டே இருப்பானுங்க. திருடரது, கொல்றது, கொள்ளை அடிக்கரதுன்னு எல்லாத்தையும் செய்திகளில் காட்ரப்ப, கருப்பனோ மெக்சிக்கனோ தான், விலங்கு பூட்டி இஸ்துக்கினு போவாங்க. இது என்ன பளான்னு தெரியல.

அதே மாதிரி நம்ம ஊடகங்கள், நம் மைனாரிட்டிக்களை, வில்லனாக்கும் செயலைச் செய்யுது.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா, வேற்று மதத்தவர்களை, நாம 'சமமா' பாவிக்கரதுக்கான ஏற்பாடு நம் சமுதாயத்தில் செய்யப்படலை. ஏதோ ஒரு ப்ரெயின் வாஷ், நம் மண்டையிலும் கூட திணிக்கப்பட்டிருக்கு. ஓ, அவனா, அவன் கிட்ட உஷாரா இரு. இவன் கிட்ட கராரா இரு. அவன் ஏமாளி, இவன் அழுக்கு. அவன் க்ரிமினல், இவன் டுபாங்கூர், இப்படி ப்ரெயின்வாஷின கூலிங்கிளாஸுடன் தான் நாம் மற்ற மதத்த வரை பார்த்து வருகிறோம்.

A Wednesdayயில், தீரிவாதிகள், இஸ்லாமியர்கள். இந்தியில் பாக்கும்போது, பெரிய நெருடலா ஒண்ணும் தெரியல. ஏன்னா, நஸ்ருதின் ஷாவுக்கும் நமக்கும் எந்த 'பந்தமும்' இல்லை. அவரு என்னா சொன்னாலும் செஞ்சாலும், 'சினிமாதான'ன்னு பாத்துட்டு கெளம்பிடுவோம்.

ஆனால், டமிலில், கமலின் ஓரக் குசும்பு பல இடங்களில் அசிங்கமா எட்டிப் பாத்துது. தேவையில்லாத இடைச் செறுகல்கள சில.

இந்தியில், கடைசி வரை, நஸ்ருதீன் ஷா, தான் எந்த மதத்தவர்னு தெரியாத மாதிரி காட்சி அமைப்பு.

டமிலில், முதல் சில காட்சிகளிலேயே, 'இன்ஷா அல்லாஹ்'வை கிண்டலடிக்கும் டயலாக்கில், நான் 'அவனில்லை'ன்னு கத்தி சொல்லிடறாரு.

அத்தோட நிறுத்தியிருந்திருக்கலாம் குசும்பை. மேலும், பல காட்சிகளில், ஒரு கிண்டலான தொணியில் இந்த 'ப்ரெயின் வாஷை', திருவாளர் கமலும் தொடர்ந்து செய்திருக்கிறார். ஏன் இப்படி செய்யறாருன்னு எனக்குப் புரியல்ல. இவருக்கு ஒரு மோட்டிவேஷனும் இருக்காதுன்னே தோணுது. டைரக்டர்/வசனகர்த்தா கேட்டுக் கொண்டதால், தன்னையே அறியாமல், இதை எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதா இவருக்கு?

ஐம்பது வருஷம், நடிச்சு கொடி நாட்டினவரு, இவ்ளோ அப்பட்டமா ஒரு, 'இந்துத்வா' மோட்டிவ் காட்சிகளில், சைலண்டா நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கு?

மோகன்லால் - இவரும் கூட, ஆஹா ஓஹோன்னு சொல்ற அளவுக்கு ஒண்ணும் நடிச்சுடல. இவர் 'நடிச்ச' பல படங்கள் பாத்திருக்கேன். அதிலெல்லாம் உண்மையிலேயே பின்னியிருப்பாரு. இதில் பெருசா ஒண்ணுமே இல்லை. 'வெயிட்' இல்லாத பாத்திரம் இது.

லஷ்மி, படத்தின் காமெடி.

கலைஞர் வாய்ஸ் - ஒரே ஆறுதல். கமல், தன் பெயர் வாக்காளர் பட்டியலில் வராத மெய் சம்பவத்தை இதில் சொறுகி, தன் எதிர்ப்பை பதிவு செஞ்சிருக்காரு. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் ஒரு குட்டி சபாஷ்.

இசை - ஓ.கே. ஆனா, ஒரு காட்சியில், கமலின் ஆலாபனை, ஏப்பம் விடும் ராகத்தில் அமைந்திருப்பது கொடுமை.

காமெரா - ஓ.கே.

மொத்தத்தில், வித்யாசமான கதை அம்சங்களை டமிலில் கொண்டு வருவது, நல்ல விஷயம்தான். ஆனால், வீண் குசும்பை குறைத்து, தரத்தை மட்டும் கூட்டி, இனி வரும் படங்களை அளிப்பதே அனைவருக்கும் நல்லது.

நம்ம பசங்க, 'சப்பு'ன்னு படம் பாத்து பாத்து, சுமாரா குத்தாட்டம்/தலைவலி இல்லாமல் ஒரு படம் வந்ததும், படத்தை ரொம்ப தூக்கி வச்சுட்டாங்க.

உன்னை போல் ஒருவன், நம் மத்தியில் வேண்டாம்!

12 comments:

SurveySan said...

'ஹாரிஃப்' என்ற பாத்திரத்தில் நடித்த போலீஸ்காரர், சூப்பரு. ஒளிமயமான எதிர்காலம்.

Anonymous said...

//தீவிரவாதிகளுக்குப் பதிலா, கல்லூரிப் பெண்களை பஸ்ல கொளுத்தின களவாணிப் பசங்கள மையமா வச்சு எடுத்திருந்தா,//

அட ஆமாம். அவனுங்க எல்லாம் இப்ப தண்டனை அனுபவிக்கறாங்களா இல்லியா. மறந்துட்டோம் பாருங்க.

//ஹாரிஃப்' என்ற பாத்திரத்தில் நடித்த போலீஸ்காரர், சூப்பரு. ஒளிமயமான எதிர்காலம்//

கணேஷ் வெங்கட்ராமன்ன்னு யூ டுயூப்ல தேடுங்க. உ.போ.ஒ தெலுங்கு வெர்ஷனுக்கு பேட்டி குடுத்தது இருக்கு.

சென்ஷி said...

//தீவிரவாதிகளுக்குப் பதிலா, கல்லூரிப் பெண்களை பஸ்ல கொளுத்தின களவாணிப் பசங்கள மையமா வச்சு எடுத்திருந்தா, என் பார்வையில் படம் எங்கேயோ போயிருக்கும்.//

கல்லூரி! :-)))))

SurveySan said...

சின்ன அம்மிணி, தண்டனை அனுபவிக்கறாங்கன்னுதான் நெனைக்கறேன்.

கணேஷ் வெங்கட்ராமனைப் பத்திய விவரங்களுக்கு நன்னி.

SurveySan said...

சென்ஷி,

//கல்லூரி! :-)))))//


அதுல யாரும் பழிவாங்கலையே? அதுவும், அது ஆந்திரால எங்கையோ எரிஞ்ச பஸ்ஸைப் பத்தி இல்ல எடுத்தாங்க? ;)

சென்ஷி said...

//ஒரு விஷயத்தை பத்தி தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொன்னவங்க சொன்னதை படிச்சவங்க, அவங்களுக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்லவும் உரிமை இருக்கு. இப்படி பட்டதை பட்டது மாதிரி சொல்லி, அதை படிச்சு, தனக்குப் பட்டத்தை பட்டது மாதிரி சொன்னதை, முதலில் சொன்னவங்க, அதைப் படிச்சு, திரும்ப தனக்கு பட்டதை பட்டது மாதிரி சொல்றதும், அதை ரெண்டாவதா எழுதினவங்க, திரும்ப படிச்சு, தன் மனதில் பட்டதை பட்டது மாதிரி சொல்றதும் தப்பில்லைதான். ஆனா, ஒரு கட்டத்துல இதையெல்லாம் முடிச்சுக்கணும். படிக்கரவங்கெல்லாம் பாவம் இல்லை?//

:-)

LOL

sasitharan said...

One of the worst criticism Mr.Know ALl..

SurveySan said...

sasitharan, thanks for the honest critique :)

SurveySan said...

no other honest opinions like Sasitharans? :)

CSB said...

One of the worst review i have ever seen. I believe you belong to mental fan category.
For you Sivaji and Kusulan are the greatest movie ever i think.

SurveySan said...

CSB,

//One of the worst review i have ever seen///

thx for the honest feedback :)

// I believe you belong to mental fan category.//

Never heard of this before. i will loo into it ;)

///sivaji and kuselan ///

if it will make you feel better, i hated those movies as well :)

Thekkikattan|தெகா said...

உன்னை போல் ஒருவன், நம் மத்தியில் வேண்டாம்!//

:-)) good one!