recent posts...

Sunday, September 06, 2009

களவும் கற்று மற...

நான் நேச்சுரலாவே ரொம்ப நல்ல பையன் (நம்புங்க).
சூது வாது தெரியாத அப்ராணி (இதையும் நம்புங்க).
கள்ளம் கபடமில்லா வாயில் விரல் வச்சா கடிக்கத் தெரியா பச்சிளம் பாலகன் (இத நம்பரது உங்க இஷ்டம்).

ரொம்ப கால்குலேஷன் எல்லாம் பண்ணி, வாழ்க்கையை குழப்பிக்கரது இல்லை. ரொம்ப சிம்பிளா சீரா, மேலோட்டமா எல்லாத்தையும் பாத்து பண்ணியே பழக்கப்பட்டுப் போச்சு.
யாரையும் இதுவரை ஏமாத்தினது இல்லை.

கிரிக்கெட் விளையாடும் போது கூட, பந்தை தூக்கி சர்ர்ர்னு அடிச்சு, ஃபீல்டிங் நிக்கரவனுக்கு கைக்கு மேல கேட்ச் கொடுத்துத்தான் பழக்கம். ஆள் இல்லாத எடத்துல பந்தை அடிச்சு எதிராளியை கூட ஏமாத்தினது கிடையாது.
இதே, மேலோட்ட, சீரான வாழ்வியல் முறை தான், வாலிபால் விளையாடும் போதும், பேட்மிண்டன் விளையாடும் போதும், ஃபுட் பால் விளையாடும் போதும்.
ஓ.கே, ஓ.கே நான் அப்பாவின்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.

இப்பேர் பட்ட எனக்கு, ஆரம்ப காலத்தில், கல்லூரி காலங்களில் சகவாசம் சரியா இருந்ததில்லை.
கொஞ்சம், 'பொறுக்கிப் பசங்க' ( மச்சீஸ், சாரி ) சகவாசம் இருக்கும்.
இவனுங்க போர எடத்துலையெல்லாம் அலம்பல் பண்ணாம வெளீல வரமாட்டாங்க. பஸ் டிக்கெட், எந்த காலத்துலையும் எடுத்ததே இல்லை. லாண்ட் மார்க் மாதிரி கடைகளுக்குப் போனா, க்ரீட்டிங் கார்ட்ஸ் மாதிரி ஐட்டங்களை சுடுவானுங்க.
ஸ்பென்ஸர்ஸ் எல்லாம் போனா, ஜீன்ஸ் மேலையே பூது ஜீன்ஸ் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகும் கைங்கரியர்கள்.

இவனுங்க கூட சுத்தும் போதும், நான் இப்படியெல்லாம் பண்ணினதில்லை. இயன்றவரை, குட் சிட்டிசனாவே இருந்திருக்கேன்.

ஆனா, இவங்க சவகாசம் உள்ளூர செய்த மாற்றமோ என்னமோ தெரீல, அப்பப்ப ஒரு வில்லத்தனமா ஐடியா எட்டிப் பாத்துக்கிட்டே இருந்துச்சு.

இங்க (கலிஃபோர்னியா), சினிமா தியேட்டர்கள் எல்லாமே, மல்டி-ப்ளெக்ஸ். அதாவது, குறைஞ்சது, பன்னிரெண்டு குட்டி குட்டி தியேட்டர் இருக்கும். உள்ளே நுழைய மெயின் எண்ட்ரென்ஸில் மட்டும் டிக்கெட் பரிசோதனை இருக்கும். உள்ள போனப்பரம் கண்டுக்க மாட்டாங்க்ய.

ஆனா, பாருங்க, இந்த ஊர்ல இருக்கரவங்க, நேர்மை நாணயம் கட்டுப்பாடு இதெல்லாம் ரத்தத்துலையே ஊரினவங்க. நம்மள மாதிரி நேர்மை கிலோ என்னா விலைன்னு கேக்க மாட்டாங்க.
சில கடைகளில், புதிய செய்தித் தாளெல்லாம் வாங்கணும்னா, நமக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு, சரியான காசை அங்க இருக்கர டப்பால போட்டுட்டா போதும். சரியான தொகையை போடரமான்னு சரிபார்க்க ஆள் கூட இருக்க மாட்டாங்க. அம்புட்டு நெம்பிக்கை இவனுங்களுக்கு.

இப்படி நேர்மை ஓவரா இருக்கரதால, சினிமா தியேட்டர்களில், பொத்தாம் பொதுவா வாசலில் மட்டும் டிக்கெட்டை பாத்துட்டு உள்ள விட்டுடுவாங்க.

ரொமப நாளாவே, உள்ளிருக்கும் மிருகம், தியேட்டருக்குள்ள நுழைஞ்சு ஒரு படம் பார்த்ததும், அப்படியே அடுத்த படம், அதற்கடுத்தப் படம்னு, முடிஞ்சவரை ஓசியில நிறைய படம் பார்க்கணும்னு, சொல்லிக்கிட்டே இருந்துச்சு.

ஒவ்வொரு தடவை இப்படி படம் பாக்க போகும்போதும், அடுத்த தியேட்டருக்குள்ள நைஸா போகலாமான்னு தோணும். ஆனா, அந்த நேரம் பாத்து, செக்யூரிட்டி நம்மளையே பாக்கர மாதிரி ஒரு மனப்பிராந்தி இருக்கும். அதனால, சமத்தா வெளீல வந்துடுவேன்.

ஆனா, சமீபத்தில், நாள் கெழமையெல்லாம் சரியா அமஞ்சிடுச்சு. ஹாரி பாட்டர் பாக்க போயிருந்தேன். கூட கஸினும் வந்திருந்தான்.
ஹாரி பாட்டர் எனக்கு சுத்தமா புடிக்கலை. குடுத்த காசுக்கு, திருப்திகரமா இல்லை.
உள்ளிருக்கும் மிருகம், "சர்வேசா, பக்கத்து தியேட்டர்ல UP ஓடுது. குடுத்த காசுக்கு அத்த ஓசில பாத்தாதான் கணக்கு சரியா வரும், தயங்காமல் நைசா உள்ள போ"ன்னு சொல்லிச்சு.
அடாடா, UP நல்ல படமாச்சே, பிக்ஸார் எடுத்ததாச்சேன்னு ஒரு சபலம் வந்துச்சு.

கூட வந்த கசின் கிட்ட, பிட்டப் போட்டேன். அவனோ, "இந்த திருட்டு வேலைக்கு நான் கூட்டு சேர முடியாது"ன்னு எஸ்கேப் ஆயிட்டான்.

இந்த தடவையும் ஒரு செக்யூரிட்டி என்னையே பாக்கரமாதிரி இருந்துச்சு. ஆனா, விட்டுட்டு போகவும் மனசு வரலை. ஒரு தடவையாவது, இந்தத் திருட்டுத்தனத்தை பண்ணிப் பாக்கலன்னா, ஆய கலைகள் அறுபத்தி நாலுல ஒண்ணு பண்ண முடியாத பாவி ஆயிட்டேன்னா இன்னா பண்றதுன்னு ஒரே கவலையாயிடுச்சு.

செக்யூரிட்டி டபாய்கலாம்னு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடக்க ஆரம்பிச்சேன். ரிஸ்க் எடுத்து பாக்கரதுதான் பாக்கரோம், UPஐ விட நல்ல படம் வேர இருக்கான்னு தேடிப் பாத்தேன். மத்தது எதுவும், ப்ரகாசமா தெரீல. திரும்ப UP வாசலுக்கே வந்து, செக்கூரிட்டி அந்தப் பக்கம் திரும்பியதும், நான் இந்தப் பக்கமாய் கதவுக்குள்ள பூந்துட்டேன்.
படம் இன்னும் ஆரம்பிக்கலை. ஆனா, இருட்டு. ரெண்டாவது வரிசைல போய் ஒக்காந்துட்டேன்.
இங்க சீட் நம்பர் எல்லாம் கிடையாது. ஸோ, யாரும் வந்து எழுப்ப மாட்டாங்கன்னு தெகிரியம். ஆனா, UP புது படம். ஹவுஸ் ஃபுல்லாயிடுச்சுன்னா, ப்ரச்சனையாயிடுமேன்னு தோணிச்சு. பின்னாடி திரும்பி பாத்தேன். காலியாதான் இருந்துச்சு. ஸோ, அந்தப் ப்ரச்சனை இருக்காதுன்னு மனசுக்குள்ள முடிவு பண்ணிக்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சுது.

ஒவ்வொருத்தர் உள்ள வரும்போதும், உள்ளுக்குள்ள ஒரு பகீர் சின்னதா அடிக்கத்தான் செஞ்சுது. பிசாத்து, $10க்கு இவ்ளோ டென்ஷன் எல்லாம் படரது அனாவஸ்யம்னு அப்ப தோணிச்சு.
வெல், ஆனது ஆச்சு, ஒரு கை பாத்துடுவோம்னு முடிவு பண்ணி, கொஞ்சம் ரிலாக்ஸானேன்.

இவ்ளோ ரிஸ்க் எடுத்து பாத்திருந்தாலும், படம் பல்புதான். நல்லாவே இல்லை.
இதப் பாத்ததுக்கு, பக்கத்துல இருந்த இந்திப் படம் பாத்திருக்கலாமோன்னு தோணிச்சு.

ஆனது ஆச்சு, அதையும் பாத்துட்டுப் போயிடலாமான்னு ஒரு தோணல் வந்துது.

ஆனா, திரும்ப செக்யூரிட்டியை டபாய்ச்சு, இவ்ளோ தில்லாலங்கடியெல்லாம் பண்ணி, கவரிமான் முடியை அடமானம் வச்சுப் பாக்கரதெல்லாம் தேவையில்லா வேலைன்னு தோணிச்சு.
மிருகம், "சர்வேசா, பக்கத்துல தான் Star Trek ஓடுது, கமான் யூ கேன் டூ இட்"னு திரும்ப கத்திச்சு. ஓங்கி தலைல ஒரு சுய குட்டு குட்டிக்கிட்டு, எஸ்ஸாயிட்டேன்.

விரு விரு விருன்னு வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்கும்போது, "எக்ஸ்க்யூஸ் மீ"ன்னு ஒருத்தரு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. கபாளம் கலங்கிருச்சு.

திரும்பிப் பாத்தேன்.

யாரும் கண்ணுல ஆப்புடலை. திரும்ப "எக்ஸ்க்யூஸ் மீ"ன்னு கொரல் கேட்டுச்சு. திரும்ப கபாளம் கலன்க்சிருச்சு. திரும்பி பாத்தா, ஒரு வெள்ளக்காரரு, ஒரு வெள்ளக்காரம்மாவை பாத்து ஏதோ கேட்டுக்கிட்டிருந்தாரு. ஸ்ஸ்ஸ்ஸ்!

களவும் கற்று மற... ஆனா, கல்லாத மத்த விஷயமெல்லாம் கத்துக்கிட்டு, கடைசியா இதுக்கு வாங்க. அதிப் ப்ரசிங்கத்தனமா இதெல்லாம் பண்ணாதீங்க.
என் தெறமை உங்களுக்கு இருக்கணும்னு அவசியம் இல்லை, மாட்னீங்கன்னா, மானம் போயிந்தி. உஷாரு ;)


பி.கு: PiTன் இம்மாத தலைப்பு silhoutte சில்லுவெட்டு (கீழே, என் சில்லுவெட்டு. நான் எடுக்கலை. ஆனா, நான் இருக்கர சில்லுவெட்டு. இதன் விவரங்கள் கூடிய விரைவில் ;) )

16 comments:

ஆயில்யன் said...

//நான் நேச்சுரலாவே ரொம்ப நல்ல பையன் (நம்புங்க).
சூது வாது தெரியாத அப்ராணி (இதையும் நம்புங்க).
கள்ளம் கபடமில்லா வாயில் விரல் வச்சா கடிக்கத் தெரியா பச்சிளம் பாலகன் (இத நம்பரது உங்க இஷ்டம்).///

நாங்களே ரொம்ப கஷ்டப்பட்டு நம்பிடற அளவுக்கு வந்தா அதுல உங்களுக்கு நம்பிக்கையே இல்லாம போச்சு நீங்களே டேமேஜ் பண்ணிக்கிட்டீங்க பாஸ் :)))))))

ஆயில்யன் said...

//கிரிக்கெட் விளையாடும் போது கூட, பந்தை தூக்கி சர்ர்ர்னு அடிச்சு, ஃபீல்டிங் நிக்கரவனுக்கு கைக்கு மேல கேட்ச் கொடுத்துத்தான் பழக்கம்///

நானெல்லாம் குளோஷ்ல நிக்கிறவன் கைக்கு அழகா கொடுத்துட்டு போவேன் இல்லாங்காட்டி குச்சியை நீயே எடுத்துக்கோடான்னு பால் போடறவன்கிட்ட சொல்லிக்கிட்டு நவுந்து நிப்பேன்!:)))

ஆயில்யன் said...

//ரொமப நாளாவே, உள்ளிருக்கும் மிருகம், தியேட்டருக்குள்ள நுழைஞ்சு ஒரு படம் பார்த்ததும், அப்படியே அடுத்த படம், அதற்கடுத்தப் படம்னு, முடிஞ்சவரை ஓசியில நிறைய படம் பார்க்கணும்னு, சொல்லிக்கிட்டே இருந்துச்சு.//

அதானே ! கண்டிப்பா சொல்லியிருக்கணுமே!

அந்த மிருகம் தானே நம்ம சோறு போட்டு வளர்த்து ஆளாக்கி வைச்சிருக்கோம் பத்திரமா :))))

SurveySan said...

ஆயில்யன்,

//நம்பிக்கையே இல்லாம போச்சு நீங்களே டேமேஜ் பண்ணிக்கிட்டீங்க பாஸ் /////

ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னா நம்பிக்கை வரும்னு ஒரு ஐடியால பண்ணது அது. நம்புங்க! :)

///அந்த மிருகம் தானே நம்ம சோறு போட்டு வளர்த்து ஆளாக்கி வைச்சிருக்கோம் பத்திரமா ///

நான் சோறு போட்டெல்லாம் வளரலை. எனக்கு தெரியாமையே உள்ளுக்குள்ள வளந்துடுச்சு. வெட்டிட்டேன், இனி வராது ;)

சீமான்கனி said...

//கவரிமான் முடியை அடமானம் வச்சுப் பாக்கரதெல்லாம் தேவையில்லா வேலைன்னு தோணிச்சு. //

சுப்பெரோ...சுப்பர்...அண்ணே நீங்க ரெம்ப நல்லவருனே...

SurveySan said...

seemangani,

//சுப்பெரோ...சுப்பர்...அண்ணே நீங்க ரெம்ப நல்லவருனே...//

ஹி ஹி. அதையேத்தான் நானும் சொல்றேன் ;)
நன்னி.

SurveySan said...

64ல திருட்டு சேத்தியா? நான் கொடுத்துள்ள ல்ங்க்ல இல்லை. அதான் கேட்டேன். :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Truth said...

முழுக்க முழுக்க எதுக்கு யெல்லோ கலர்? கண் கூசுது.
UP 3D படம் தானே? :) இல்லையா?

SurveySan said...

Truth, UP naan paathadhu 2D. i think they also had a 3D screening.
OC'la paathadhe adhigam. idhula 3D glasses ellaam sudanumnaa, nembave kashtam ;)

yellow poyi brown aakkiyaachu. ippa koosudhaa?

SurveySan said...

வானத்துலேருந்து குதிக்கர ஃபோட்டோ பத்தி யாரும் அக்கரையா விசாரிக்கலையே? :)

ராமலக்ஷ்மி said...

//"களவும் கற்று மற..."//

நல்லாயிருக்குதே உங்கள் நியாயங்கள்:)! ஏதோ சுவாரஸ்யமா சொல்லியிருப்பதால் பிழைத்துப் போங்கள் என்றும் விட்டு விட முடியவில்லை. ஒரு கவிதை போட்டு சுட்டியைக் கொடுத்து டார்ச்சர் பண்றதா ஒரு சின்ன ஐடியா இருக்கு:))!

ராமலக்ஷ்மி said...

// வானத்துலேருந்து குதிக்கர ஃபோட்டோ பத்தி யாரும் அக்கரையா விசாரிக்கலையே? :)//

நான் அப்பவே வந்திருந்தால் கேட்டிருந்திருப்பேன். சில்வெட்டு மேட்டர் கல்வெட்டில் பொறிக்கப் பட வேண்டியதுதான். அங்கே பார்த்து விட்டு வந்ததால் சொல்றேன்:)!

SurveySan said...

////ஒரு கவிதை போட்டு சுட்டியைக் கொடுத்து டார்ச்சர் பண்றதா ஒரு சின்ன ஐடியா இருக்கு:))!//

உங்களுக்கு கவிதைப் பொறியை கெளப்பி விடரதே என் வேலையாப் போச்சே. ஏதோ, நல்லது நடந்தா சரி ;)

ராமலக்ஷ்மி said...

//உங்களுக்கு கவிதைப் பொறியை கெளப்பி விடரதே //

இந்தமுறை அது ரிவர்சில்! ஏற்கனவே எழுதிய கவிதை இந்தப் பதிவுக்கு பொருத்தமாய் இருக்கிறது. இணைய இதழ் ஒன்றிற்கு அனுப்பியிருப்பதால் அங்கு வெளியானதும்தான் பதியணும். அப்போ வரும் இங்கே சுட்டி:)!

ராமலக்ஷ்மி said...

ஹி. இதோ அந்தச் சுட்டி. பொதுவாக நாம எல்லோருமே தொலைத்து விட்டு நிற்கும் நல்ல அடையாளங்களைப் பற்றியது. மற்றபடி,
//நான் நேச்சுரலாவே ரொம்ப நல்ல பையன் (நம்புங்க).
சூது வாது தெரியாத அப்ராணி (இதையும் நம்புங்க).//

நம்பிட்டோம் நம்பிட்டோம்:))!