recent posts...

Tuesday, January 01, 2008

சிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்

'நச்'©னு ஒரு கதை'ப் போட்டியின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் 8 கதைகள் இடம்பெறுகின்றன.

முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணியில் வந்த டாப்-7 கதைகள் பாத்திருப்பீங்க.

இறுதிக் கட்ட போட்டியில், மக்கள் வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் வைக்காமல், ஒரு "ஐவர் குழு"வின் மதிப்பீடுகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐவர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பது, முடிவுகள் அறிவிக்கும்பொழுது தெரிவிக்கப்படும். அதுவரை, சஸ்பென்ஸ் :)

மக்கள் வாக்கெடுப்பும், ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களும் 50:50 விகிதாசாரத்தில் கலந்து போட்டியில் வெற்றி பெற்றவர் யாரென்று அறிவிக்கப்படுவார்.

57 கதைகளில், டாப்-7ல் வராமல் இருந்த கதையை நடுவர் குழுவிடம் படிக்கச் சொல்லி, அதில் எந்த ஒரு கதை "அடடா, இந்த கதை நல்ல நச் கதையாச்சே, இறுதிக் கட்டத்துக்கு போகாம போயிடுச்சே"ன்னு தோண வைக்குதோ, அதை அவர்களின் wild-card செலக்ஷனா அனுப்பச் சொன்னேன்.
அப்படி வரும் கதைகளில், ஒரே கதையை ஒன்றுக்கு மேலான நடுவர்கள் சொல்லியிருந்தா, அந்தக் கதையையும் இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் இருந்தது.

ஐவர் குழுவிடமிருந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சிபாரிசு பெற்ற ஒரே கதை
மோகன்தாஸின் - "கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதில்" என்ற நச் கதை.
ஆகையால், இந்தக் கதையும், இறுதிக் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

wild-card சிபாரிசுகள் பெற்ற மற்ற கதைகள் இ.கா.வள்ளியின் "யாரோ அவள் என்னவள்?" மற்றும் பெனாத்தல் சுரேஷின் "கடன் அட்டை". ஒரு நடுவர் மட்டுமே இதனை சிபாரிசு செய்ததால், இதனை இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்க்க முடியவில்லை.

ஸோ, இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் கீழுள்ள டாப்-8 கதைகள் உள்ளன.
1) கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் (மோகன்தாஸ்)
2. அரசியல்வாதி (வீ.எம்)
3. தப்பா நினைக்க மாட்டயே? (ஜெகதீசன்)
4. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு)
5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (நாடோடி இலக்கியன்)
6. என்னால் அவள் இரண்டு மாதம் (குசும்பன்)
7. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (அருட்பெருங்கோ)
8. எதுனா வேல இருந்தா குடு சார் (நந்து f/o நிலா)

அடுத்தது என்ன? வாக்கெடுப்புதேன்!

தயவு கூர்ந்து, மேலே உள்ள கதைகளில், உங்களை மிகவும் கவர்ந்த 'நச்' கதைக்கு, உங்கள் வாக்கை அளியுங்கள்.
நல்ல 'நச்' கதை வெல்லட்டும்.

வாக்குப் பெட்டியில், ஈ.மெயில் முகவரியை தரவேண்டும்.
வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் முகவரிக்கு வரும் மடலை வாசித்து, உங்கள் வாக்கை approve செய்ய வேண்டும். தவறாமல் Junk/Spam folderகளை செக் செய்யவும். Approve செய்யும் வரை உங்கள் வாக்கு செல்லாது.

உங்களின் சில நிமிடங்களை ஒதுக்கி, வாக்கெடுப்பில் பங்கு பெற்று, நம் 'நச்' கதாசிரியர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பங்கு பெற்ற அனைவருக்கும், வாக்களித்தும், பின்னூட்டியும் ஊக்குவித்த அனைவருக்கும், இதுவரை வெற்றி பெற்ற டாப்-8 நச்-ஆசிரியர்களுக்கும், விமர்சனம் எழுதிய பாஸ்டன்.பாலா, Srikanth மற்றும் நடுவர்களுக்கும் நன்றிகள் பல.

Happy Voting & Happy New Year to you all!
வாங்க, சேந்து கலக்குவோம். ;)

fyi, கள்ள ஓட்டு வீட்டுக்கும், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், 'நச்'சுக்கும் கேடு! :)

****வாக்கெடுப்பு முடிவடைந்தது. ****

ஜனவரி 7 2008 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்!

இந்த பக்கத்திர்க்கு விளம்பரம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த 'நச்' கதைக்கும் விளம்பரம் தரலாம்.

டாப்-8 கதாசிரியர்களும், தங்கள் கதைக்கு, விருப்பப்பட்டால் போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுக்கலாம்.
உங்கள் கதை ஏன் வெற்றி பெற தகுதிவாய்ந்தது என்று ஒரு 'அலசல்' பதிவையும் போட்டால் சுவாரஸ்யம் கூடும்.

வெற்றி பெறும் கதைக்கு பரிசு: $25
அதைத் தவிர, $75 உதவும் கரங்களுக்கு கதாசிரியரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவருக்கும்!

ஸ்டார்ட் த மீஜிக்!

பி.கு: புத்தாண்டு ரெஸல்யூஷன் -- நச் கதை முடிந்த பிறகு, எழுதப் போகும் புதிய பதிவுகளில், தங்கிலீஷ் இல்லாமல் எழுத முயற்சி செய்வது - "டார்கெட் 100% தமிழ்!" என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி பதிவுகள் இட முயற்சித்தல் ;)

பி.கு: இந்த codeஐ உங்கள் பக்கங்களில் போட்டும் வாக்கெடுப்புக்கு விளம்பரம் தரலாம்:


பி.கு: 57 கதாசிரியர்களும் தவறாது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் ;)

32 comments:

நாடோடி இலக்கியன் said...

மிகவும் சரியானத் தேர்வு "கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதில்" சிறுகதை.இது இறுதிப் போட்டிக்கு வராமல் போனபோதுதான் ஆச்சர்யமாய் இருந்தது.
வாழ்த்துக்கள் மோகன் தாஸ்!.

SurveySan said...

நாடோடி இலக்கியன்,

absolutely right :)

இன்னும் சில கதைகள் இறுதியில் வராதது சிறு வருத்தம்தான். அந்தக் கதைகளைப் பற்றி தனிப் பதிவு போடுகிறேன் :)

Anonymous said...

VERY WELL CONDUCTED AND VERY INTERESTNG CONTEST .LIKE TO SEE MORE CONTESTS IN THE FUTURE. THANK YOU SURVEYSAN

சேதுக்கரசி said...

நச்-க்கு என்னங்க காப்பிரைட்டெல்லாம் போட்டிருக்கீங்க? :-)

வீ. எம் said...

யூகிக்க முடியாத முடிவு, நச் திருப்பம், முடிவில் ஒரு கருத்து - அனைத்தும் கொண்ட அரசியல்வாதிக்கு (கதை என் 2) க்கு ஒரு ஓட்டு போடுங்கோ... மறவாதீர் :)

SurveySan said...

சேதுக்கரசி, வாங்க வாங்க. என்னங்க ரொம்ப நாளா காணோம்? நீங்க வந்து கொர சொல்லாம, சர்வேஸ் எல்லாம் பிசுபிசுத்து போகுதுங்க ;)
காப்பிரைட் போடலன்னா, கன்னா பின்னான்னு நச் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க;
தற்சமயம், ஆசீப், செல்லா, சர்வேசன் கைவசம் நச் காப்பிரைட் இருக்குதாம் ;)

வீ.எம், ரசித்தேன் உங்க விளம்பரத்தை ;)
ஆனா, வாக்கு போட்டப்பரம் தான் பின்னூட்டம் படிப்பாங்க எல்லாரும் :)

Anonymous said...

சர்வேசன்,
என் அலுவலக நண்பர்கள் யாராலும் ஓட்டுப் போடமுடியவில்லை.... :)
"already voted" என்று சொல்கிறது.... முதல் முறை முயற்சி செய்யும் போதே..
:((

SurveySan said...

anony,

//சர்வேசன்,
என் அலுவலக நண்பர்கள் யாராலும் ஓட்டுப் போடமுடியவில்லை.... :)
"already voted" என்று சொல்கிறது.... முதல் முறை முயற்சி செய்யும் போதே..
:((//

hmm. get in touch at surveysan2005 at yahoo.com, and I will help you with this issue :)

I am guessing, you are using a proxy to connect to outside world, so all of you guys may have the same IP. so, once it received 1 vote, it thinks everyone in your firm has voted.

we had a similar issue during a previous survey. answer is have your friend try after sometime (after an hour or so).

Unknown said...

சர்வேசன்,

வாக்கெடுப்பு எப்பொழுது முடிவடைகிறது?

என்னுடைய கதைக்கு நான் அளித்த வாக்குக்கு மின் மடல் வந்து அப்ரூவும் செய்து விட்டேன்…
ஆனால் எனக்குப் பிடித்த இன்னொரு கதைக்கும் வாக்களித்தேன், அதற்கு இன்னும் மடல் வரவேயில்லை…

Anonymous said...

//
we had a similar issue during a previous survey. answer is have your friend try after sometime (after an hour or so).
//

can he use the same email id?
(for example...
he used some x.gmail.com first time and it said "already voted.."
should he use some other id to vote when tryin after 1 hr?
)

வீ. எம் said...

ஜனநாயகத்தில் அரசியல்வாதிக்கு தானே ஓட்டு போடனும்?? அது தானே நியாயம்?? ஆகவே வாக்காளப்பெருமக்களே.. மறவாமல் கதை எண் 2 - அரசியல்வாதிக்கு ஓட்டு போடுங்க...
வீ எம்

SurveySan said...

அருட்பெருங்கோ,

//என்னுடைய கதைக்கு நான் அளித்த வாக்குக்கு மின் மடல் வந்து அப்ரூவும் செய்து விட்டேன்…
ஆனால் எனக்குப் பிடித்த இன்னொரு கதைக்கும் வாக்களித்தேன், அதற்கு இன்னும் மடல் வரவேயில்லை…
//

ஒருவருக்கு ஒரு வாக்குதான்.

அனானி,
try with the same id.

வீ.எம், கலக்குங்க! :)

SurveySan said...

good turnout so far.

123 votes polled.

SurveySan said...

129 votes இதுவரை.

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் முன்னணியில்.

Unknown said...

/ஒருவருக்கு ஒரு வாக்குதான்./

இரண்டு கதைகள் பிடித்திருந்தால் இரண்டுக்கும் வாக்களிக்க முடியாதா? :(

சரி விடுங்கள்… அதற்கு இன்னும் மடல் வரவில்லை.

SurveySan said...

அருட்பெருங்கோ,

//இரண்டு கதைகள் பிடித்திருந்தால் இரண்டுக்கும் வாக்களிக்க முடியாதா? :(

சரி விடுங்கள்… அதற்கு இன்னும் மடல் வரவில்லை.//

ஸ்ஸ்ஸ்ஸ். என்னங்க, நீங்களே போட்டியில் இருக்கும்போது, இன்னொரு கதைக்கு வாக்கு போட இப்படி துடிக்கறீங்க;)
உங்க ஸ்போர்ட்டிவ்னெஸ், மெய் சிலிர்க்க வைக்குது ;)

எனக்கு தெரிஞ்சு, இன்னொரு மடல் வராது. :)

SurveySan said...

வேதா,

அப்ரூவ் க்ளிக்க பண்ணியாச்சுன்னு, சேந்துடும், கவலைய விடுங்க ;)

Anonymous said...

Mr.surveysan,

kudos to the judges team who neglected the wrong propositions and brought in the deserving story only into the ring.

now you would have understood the plot i mentioned.

neverthless, i have still questions about the judges. I will wait to see the panel. unlike PIT, i think, expertise has not been taken into account to be a judge in this contest.

பினாத்தல் சுரேஷ் said...

49ல ஒண்ணு,..

ஓட்டு போட்டாச்சு சர்வேசன்!

Anonymous said...

kolaiveripadai thaakuthal konjam athikamaavee irukkuthu :(

SurveySan said...

நன்றி சுரேஷ் சார்!

SurveySan said...

198 votes so far :)

//kolaiveripadai thaakuthal konjam athikamaavee irukkuthu :(//

anony, why so?
தேர்தல் அதிகாரியா கேட்டுப் பாக்கறேன் என்ன சொல்றாருன்னு ;)

பாச மலர் / Paasa Malar said...

வாக்கு அளித்துவிட்டேன்...
சர்வேசனுக்குப் பாராட்டுகள்...
போட்டியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள்

Sathiya said...

ஏழு கதைகளும் சூப்பர். 57 கதைகளையும் படிக்க முடியவில்லை என்றாலும் இந்த ஏழு கதைகளை படித்ததுக்கப்புறம் இவை கண்டிப்பாக சரியான தேர்வாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த போட்டியை நடத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தொப்பி பறக்கட்டும் (Hats off;) என்னை போல் பலருக்கும் இதான் முதல் முயற்சியாம்...பருத்தி வீரன் கார்த்தி மாதிரி கலக்கி இருக்காங்க!

பாச மலர் / Paasa Malar said...

என் மெயிலுக்கு அப்ரூவல் செய்தி எதுவும் வரவில்லையே...

Senthil said...

Surveysan,
My fav is Mohandoss, How do you block multiple votes. I too tried 2nd time with my yahoo id, but stopped, may by IP?, i will try another one on monday from my office.

SurveySan said...

pasa malar,

sometimes, email may take anywhere between 1 minute to 1 hour or more, depending on various factors, I think :)


Senthil,
good question :)
I am just a booth-agent. You should ask that to Election commissioner.
One vote per person only. I think its tracked both by email ID + IP + Javascript etc...
anyway, Monday will be late :)

I will tell you about my favourite after the contest ends.

SurveySan said...

pasa malar,

sometimes, email may take anywhere between 1 minute to 1 hour or more, depending on various factors, I think :)


Senthil,
good question :)
I am just a booth-agent. You should ask that to Election commissioner.
One vote per person only. I think its tracked both by email ID + IP + Javascript etc...
anyway, Monday will be late :)

I will tell you about my favourite after the contest ends.

செல்வம் said...

ஓட்டுப் போட்டாச்சு...
கையில யாருமே மை வைக்கலியே..

:-)))

சர்வேச‌னுக்கு வாழ்த்துக்க‌ள்...
ந‌ல்ல‌ முய‌ற்சி..

மணியன் said...

நானும் வோட்டு போட்டாகிவிட்டது. கணக்கில் வந்ததா ?

ஜெகதீசன் said...

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!!!

வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற அருட்பெருங்கோ விற்கு வாழ்த்துக்கள்!
:))

ஜெகதீசன் said...

//
Post a Comment (not moderated)
//

????? not moderated??????

:))