இந்த வாரம் எஸ்கேப் வாரம் போல இருக்கு.
இப்பதான் பட்டறை வாரம், புகைப்பட போட்டி வாரம், சைக்கோ 'மூர்த்தி' வாரம், டோண்டு வாரம், செல்லா போகிறார் வாரம், அன்பின் சூழ்ச்சி வாரம் ;), தமிழச்சி ஃபோட்டோ வாரம்னு ஒவ்வொண்ணா முடிஞ்சது.
இப்ப என்னடான்னா, இவன் என்ன திட்றான், அவன் என்ன திட்றான், இனி நான் எழுத மாட்டேன்னு சில பேர் கெளம்பியிருக்காங்க.
அரை ப்ளேடை, முகம் தெரியாத ஒரு சோம்பேரி திட்டிட்டானாம். அதுக்கு, இவரு இனி எழுதப் போறதில்ல, நான் ஜகா வாங்கிக்கறேன்னு கெளம்பிட்டாரு.
மூணாங்கிளாஸ் ஃபெயிலான ஒரு சோம்பேரி, ஏதோ ஒரு ப்ரௌவ்ஸிங் ஸெண்டர்ல, வரவங்க போறவங்க செருப்பெல்லாம் பாத்துக்கர ஒரு ஸ்பெஷலிஸ்ட், செருப்பு இல்லாத நேரத்துல, தனக்கு தெரிஞ்ச தமில்ல திட்டிருக்கான், அதையெல்லாம் பெருசா எடுத்திக்கிட்டு, இப்படி எஸ்கேப் ஆவரது எனக்கு சரின்னு படல.
அரை ப்ளேடின் ரசிகன் நானு. அவர் பதிவின் ஹாஸ்யம், அபாரம். அதெல்லாம் தானா வரதுன்னு நெனைக்கறேன். அவர் லைஸென்ஸ் வாங்காத கதை ஒரு உ.ம்.
தடாலடியா சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டாரு (அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு). அவர் மனதில் பட்ட கேள்விகள பதிவா எறக்கியிருக்காரு. நியாயம் தான். அவரின் பதிவில் இருந்த கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான முறையில் எழுப்பிய கேள்விகளுக்கு, பலர் அழகான பதில்கள் சொல்லியிருந்தாங்க. குறிப்பா, சிலப்பதிகாரம், தமிழ் மொழியெல்லாம் ஒரு காலத்துல பெரியார் பழிச்சாராம்.
அதுக்கு தமிழன் என்ற பதிவர் காரணங்களும் சொல்லி பல விஷயங்கள் வெளி வந்துட்டிருந்தது.
மூணாங்கிளாஸுக்கு வேர்த்துடுச்சு. நடூல பூந்து குட்டைய குழப்பி, அப்பறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்.
அப்பறம் சுகுணா திவாகர் என்ற பதிவர். இவருக்கும் இதே நெலம. இவரின் பதிவுகள் அவ்வளவா நான் படிச்சதில்லை. சில மாதங்களுக்கு முன் இவரின் ஏதோ ஒரு பதிவை (கவிதை) படிச்சுட்டு சுளிஞ்ச என் மூஞ்சி, திரும்ப நார்மல் ஆக, ஒரு ரெண்டு நாள் ஆச்சு. பயங்கரமான கற்பனைவாதி மாதிரி தெரியுது :)
சூடு பறக்கர பல பதிவுகளுக்கு சொந்தக்காரர்.
இவருக்கும் இன்னொரு சக பதிவரான வளர்மதி என்பவருக்கும் ஏதோ லடாய். வளர்மதி ஏதோ சொல்லப் போக, இவரும் கோச்சிக்கினு போறாராம்.
எழுதரதும் எழுதாததும் அவங்கவங்க இஷ்டம். எப்டியோ போங்க.
நீங்க போறதால எவ்ளோ பேருக்கு சந்தோஷம், எவ்ளோ பேருக்கு கஷ்டம், எவ்ளோ பேருக்கு நஷ்டம், இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா?
இதெல்லாம் கண்டு புடிச்சு சொல்லத்தான நான் இருக்கேன்.
( ராமர் பாலத்தப் பத்தி ஒரு சர்வே போட்டு இந்தெ வாரத்த ஓட்டலாம்னு பாத்தா, சற்றுமுன் முந்திட்டாங்க ;) வேற ஒண்ணும் பெருசா தோணாததால இப்படி எறங்கிட்டேன் ).
அதான் இன்றைய சர்வே. கீழே உள்ள ரெண்டு சர்வேக்களுக்கு வாக்குங்க :)
அதிகப் படியான பேர், நீங்க போறதால துக்கப் படராங்கன்னா, உங்க எழுத்தை மீண்டும் தொடர ஒரு விண்ணப்பமா நெனச்சுக்கோங்க.
எது எப்படின்னாலும், போனது போனதுதான்னா, ஓ.கே. சந்தோஷமா இருங்க. எனக்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் போடுங்க ;)
ஆமா, வேற யாராவது சமீபத்துல எஸ்கேப் ஆகியிருக்காங்களா? சொல்லுங்க சர்வே போட்ருவோம். :)
;)
48 comments:
சர்வேசன்,
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியுது. அதாவது தமிழ்மணத்தில் நடக்கும் சகல சங்கதிகளையும் மிகவும் உன்னிப்பாக நீங்கள் கவனித்து வருகிறீர்கள் என்பது புலனாகிறது.
:-))
நான் போன போது ஏன் இந்த மாதிரி கேட்கவில்லை.
உங்க மேல் கோபம். :-))
http://pangaali.blogspot.com/2007/09/blog-post_13.html
காமடியா எழுதரேன்னு நினைச்சிக்கினு இர்ந்த என்ன, உண்மையான காமடின்னா என்னான்னு (அதோட எழுதுறத நான் உட்டுட்டேன்...) புரிய வெச்ச அண்ணன் அரை பிளேடு திரும்ப வந்தால் ரொம்ப சந்தோசப்படுவேன்...
மத்தவங்களுக்கு எப்டீன்னு தெர்ல, மெட்றாஸ்காரன்ற முறையில், அண்ணனின் லேங்குவேஜ நால்லாவே ரசிச்சிருக்கேன்....
~ மாறன்
வலைத்திரட்டிகள் என்பது குழுவாய் உருவாகிவிட்டது. ஏகப்பட்ட குழுக்கள், உப குழுக்கள் என்று அடிதடிகளுக்கும், அக்கப்போர்களுக்கும் வலிக்கோலுகிறது. ஆனால் பிளாக் என்பது சுதந்திரமாய் நம் கருத்தைப் பதிவிடும் இடம் என்பதை பலரும் மறந்துப் போகிறார்கள். உங்கள் கருத்தை சொல்லும் உரிமை உங்களுக்கு
உண்டு. அதற்கான இடம் உங்கள் பிளாக். நீங்கள் சொல்லுவதைக் கேள்வி கேட்கிறார்களா? அவற்றிற்கெல்லாம் பதிலளிக்க நேரமில்லையா, மனமில்லையா? அதற்கு சுலப வழி கமெண்ட் பாக்சையே எடுத்து விடுங்கள் :-)
எனக்கு தெரிந்து திரட்டிகளில் இருந்து விலகியும் பலரால் படிக்கப்படும் பதிவுகளை வைத்திருப்பவர்கள்
இட்லி வடை, மதி கந்தசாமி, ஜெயஸ்ரீ, பத்ரி, உருப்படாதது நாராயண், பத்மா அரவிந்த்....
சொல்லிக் கொண்டே போகலாம்.
poi tholaingada porampokkugala.
வாங்க அனானி,
மூணாங்கிளாஸ் தான?
உங்களுக்குத்தான்ன் எல்ல்லாரும் வெயிட்டிங். ஒக்காருங்க ஒக்காருங்க..
ஃபங்க்ஷன் ஆரம்பிக்கப் போவுது.
வணக்கம் உஷாக்கா
வலைத்திரட்டியில் இருந்து விலகிப் பலர் இன்னும் தொடர்ந்து எழுதினாலும் என்னைப் போல கூகிள் றீடர் இல்லாமல் திரட்டியையே கதியென்று இருப்பவர்க்கு இவர்கள் சிலரின் பதிவுகளைப் படிக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுவதையும் சொல்லிவைக்க வேண்டும். இதனால் இழப்பு வாசகர்களுக்கு தான்.
முகமூடி,
இப்படியெல்லாம் சொன்னீங்கன்னா, வரலாம்னு நெனைக்கறவரும் வராம போயிடுவாருங்க. :)
வெற்றி, நம்ம வேலையே அதுதானங்க. இப்படி எல்லாரும் போயிட்டா, யார வச்சு அப்பறம் சர்வே போடறதுங்கறதுதான் என் கவல.
வடுவூர், போனீங்களா? அடடா, அன்பின் சூழ்ச்சியா, இல்ல நீங்களாவே திரும்ப வந்துட்டீங்களா? :)
கொத்ஸ், வேற பேர்ல வருவாங்கங்கறீங்களா?
மாறன், எழுதரத வுட்டுட்டீங்களா? உங்களுக்கு ஒரு சர்வே போடணுமா? ஆரம்பிங்க ஆரம்பிங்க.
உஷா, திரட்டிகளிலும் குழுத்தன்மையும், சாதி அடையாளங்களும் மேலோங்கி காணப் படுவது, நம்ம தலையெழுத்து. ஊர்ல தான் அப்படீன்னா, இங்கயும் அப்படித்தான். நாம் நாமாகத்தான் இருப்போம். லேசுல மாற மாட்டோம் :)
கானா பிரபா, சரியாச் சொன்னீங்க.
நமக்கும் சமூகத்துக்கும் நட்டம்.
suguna thirumbi vandhaapladhaan.
nallaa shadhi panreeru
எவன் செத்தா எனக்கென்னா.....எனக்கு குழி வெட்டா ஓலை வந்திருச்சின்னு சொன்ன மாதிரி இருக்கு ...சர்வேசன்...:((((
அலோ கவிதை போட்டு எம்புட்டு நேரம் ஆச்சு ஆறிட போவுதுங்க
ஆட்டத்தில் பங்காளியைச் சேர்க்காதது ஏன்?
"வாங்க அனானி,
மூணாங்கிளாஸ் தான?"
ஏண்டாப்பா ஸர்வேஸாஸாஆ, மூணாங்கிளாஸ்னு சொல்றதுல உனக்கு அம்புட்டு சந்தோசமா?
உன்னய மாதிரி மெத்தபடிச்சிட்டு பன்னாட்டு விபச்சாரிக்கு மாமா வேலை
பாக்குறத விட அது மேல்.
நாங் கூட போலிய தப்பா நினைச்சேன்.
ஆனா போலி மாதிரி ஆட்கள் இல்லைன்னா உங்களையும் பிடிக்கமுடியாதுறாப்பா.
போலியின் சேவை வலைப்பூஉலகின் குள்ளநரிக்கூட்டத்தை கருவறுக்க தேவை.
சர்வேசன்...
தப்பு செய்யறீங்களோன்னு தோனுது...அவர்களின் மன அழுத்தங்களுக்கு மத்தியில் எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவுகளை கேள்விகேட்க - ஒன்று நீங்கள் அவர்களது நன்பர்களாக இருக்கவேண்டும்...அல்லது எதிரியாக இருக்கவேண்டும்...
எதுவும் இல்லாமல், அவர்கள் அனுமதியும் இல்லாமல் பதிவு செய்வதும் கருத்துக்கேட்பதும் தவறு...
முகமூடி வேறு இங்கே வந்து தன்னுடைய மன அரிப்பை தீர்த்துக்கொள்ள முயல்வது கேவலத்திலும் கேவலம்...
http://imsai.blogspot.com/2007/09/blog-post_14.html
இப்படி இம்சித்துள்ளேன்...பாருங்கள்...முடிவெடுங்கள்...
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்.
சர்வேசன் நல்ல விஷயம் பொதுவான விஷயத்துக்கு சர்வே எடுத்து உங்க தரத்தைக் காப்பாத்திக்கங்க.தமிழ்மண திரட்டியில இருப்பதாலேயே பொதுன்னு எப்படி நெனச்சீங்க.
அடுத்தவங்கள பத்தி அவாங்களைக் கேட்காம இப்படிச் செய்ய உங்களுக்கு மட்டுமல்ல நம்ம யாருக்கும் உரிமையில்லை.செந்தழல் ரவி பதிவப் படிங்க
சர்வேசன்,
நீங்க பதிவினை தூக்க வேண்டிய அவசியம் இல்லை. பொது இடத்தில் எல்லோருக்கும் தெரியும்படியாக இவர்கள் அடித்துக் கொள்வார்கள், பின்னூட்டங்கள் இடுவார்கள், திரட்டியிலும் இணைப்பார்கள்....இதனை நாம் கேள்வி கேட்க கூடாதா?....நடுத்தெருவில் கக்கூஸ் போரவனை ஏன்னு கேட்க கூடாது என்று சொல்வதற்கும் செ.ரவியின் இதற்கான எதிர்-பதிவிற்கும் ரொம்ப ஒண்ணும் வித்தியாசம் இல்லை.
லூசுலவிடுங்க...என்ன பார்ப்பான், அல்லக்கை, தாங்கி அப்படி-இப்படின்னு அனானி கமண்ட் வரும், பரவாயில்லைன்னு விட்டுடுங்க...
முகமூடி, மன்னிக்க.
உங்க பின்னூட்டத்தின் நையாண்டி பலருக்கு ரசிக்கும்படியாக இல்லையாதலால். தூக்கிட்டன்.
:)
செந்தழல் ரவி,
பதிவுலகுல, எல்லாரும் எல்லாருக்கும் நண்பர்கள் தானே? இல்லியா?
அது தவிர, பதிவு எழுத ஆரம்பிச்சு பொதுமக்கள் படிக்க ஆரம்பிச்சுட்டாலே, பதிவர் பொது வாழ்க்கைக்கு வந்துட்டாருன்னு அர்த்தமுங்க.
அப்பறம் அவங்கள பத்தியும், அவங்க பதிவப் பத்தியும், விமர்சனம் செய்வது ஞாயம்தானுங்களே?
எப்படி ரஜினி படத்தையும், ரஜினியையும் விமர்சிக்கறோமோ அப்படி - இல்லியா?
;)
dont try to get cheap popularity by this kind of surveys.
if you are really an educate do remove this post.
சைக்கோ 'மூர்த்தி' ஸ்டைல்ல வந்த
ஓ*** ஒ**** பா**** சு**** ஒ*** பின்னூட்டுங்கள் வழக்கம் போல் கடாசப்பட்டது :)
பொழப்பப் பாருடா மூணாங்கிளாஸு :)
ஜமால்,
//ஏண்டாப்பா ஸர்வேஸாஸாஆ, மூணாங்கிளாஸ்னு சொல்றதுல உனக்கு அம்புட்டு சந்தோசமா?//
கயிரு திரிக்கும் வேலை வேணாம். நான் என்ன சொல்ல வரேன்னு, புரியரவங்களுக்கு புரியர மாதிரி புரிஞ்சிருக்கும்.
நன்னி! :)
சர்வேசனை கேள்வி கேட்பது இருக்கட்டும்
இங்கே சர்வேவில் கிட்டத்கட்ட 100 பேர் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்காங்களே
அந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் தளமா இது இருந்துட்டு போகட்டுமே
சர்வேசன் தப்புன்னா, சர்வேயில் கல்ந்துகிட்டவங்க அனைவரும் தவறே
சர்வேசா, ஏம்பா, உமக்கு உண்மையிலேயே வேறு சர்வே எதுவும் கிடைக்கலையா? சூடுடான இடுக்கை தேடி ஏன் இப்படி?
செந்தழல் ரவி, (உங்க பதிவுல post comments erroர் வருது - அப்பாலிக்கா ட்ரை பண்ணிப் போடறேன்).
முகமூடியின் நையாண்டிப் பின்னூட்டம் நீக்கியாச்சு. கொஞ்சம் குத்தல் தூக்கலாதான் இருந்தது.;)
பதிவுலகுல, எல்லாரும் எல்லாருக்கும் நண்பர்கள் தானே? இல்லியா?
அது தவிர, பதிவு எழுத ஆரம்பிச்சு பொதுமக்கள் படிக்க ஆரம்பிச்சுட்டாலே, பதிவர் பொது வாழ்க்கைக்கு வந்துட்டாருன்னு அர்த்தமுங்க.
அப்பறம் அவங்கள பத்தியும், அவங்க பதிவப் பத்தியும், விமர்சனம் செய்வது ஞாயம்தானுங்களே?
எப்படி ரஜினி படத்தையும், ரஜினியையும் விமர்சிக்கறோமோ அப்படி - இல்லியா?
அதுவும் தவிர, நான் அவங்கள போனது தப்புன்னெல்லாம் சொல்லலியே. அவங்க போறத பத்தி மத்தவங்க என்ன நெனைக்கறாங்கங்கறது தான கேள்வி. யார் மனமும் புண்படாது இதனால் என்பதே என் தனிப்பட்ட கருத்து. (இதுக்கே இன்னொரு சர்வே போட்டு கேக்கலாம் போலருக்கே.. அடுத்த வாரம் ஜமாய்ச்சிடறேன் ;) )
சுகுணாவோ, அரை ப்ளேடோ வந்து கேட்க்கும் பட்சத்தில், அவர்களின் சர்வே அதுவரை வந்த வாக்குகளைச் சொல்லிவிட்டு நீக்கிக் கொள்ளப்படும்.
இந்த சர்வேயினால் கிடைத்த இன்னொரு பலன் - சைக்கோ 'மூர்த்தியின்' பி.பி. ஏற்றியது. :)
நீங்க சொல்லும் பொதுவாழ்க்கை மேட்டர் 50% ஓக்கே...ஆனால் அதுக்கு இன்னோரு பக்கம் இருக்கே ? கொஞ்சம் ரோசிச்சா மாட்டிக்கும்னு நினைக்கிறேன்...
ரஜினியை பற்றி வலையில் விமர்சனம் செய்தால் ரஜினியேவா படிக்கிறார் ? ரஜினி ரசிகர்கள் தானே (டப் டப் ச்சே கொரியாவுல கொசு ரொம்ப அதிகமா இருக்கு..) சாரி...ரஜினி ரசிகர்கள் தானே படிக்குறாங்க...
அதனால அதையும் இதையும் ஒரே தட்டுல வைப்பது தவறோன்னு தோனுது... (ரெண்டு கொசுவை ஒரே அடியில கொண்ணுட்டேன்)
(இங்க பார்ரா...லேப்டாப் மேலேயே ரெண்டு உக்காந்திருக்கு..இதை எப்படி அடிக்கறது...ஒரு நிமிட், வெயிட்...ரெண்டுமே மிஸ்...)
முகமூடியோட பின்னூட்டத்துல புள்ளியில கூட உள்குத்து இருக்கு..
நீங்க விரும்பினா ஒவ்வொன்னா சொல்றேன்...
சொல்லட்டா...சரி ஓக்கே சொல்றேன்...
1. சுகுணா திரும்பி வருவதை அவர் விரும்பவில்லை...
2.ஓசை செல்லாவை கிண்டல் செய்யவேண்டும்.
3.தமிழச்சியை கிண்டல் செய்யவேண்டும்.
4.லிவிங் ஸ்மைலை கிண்டல் செய்யவேண்டும்.
5.வரவணையானை கிண்டல் செய்யவேண்டும்...
6.இவர்களுக்கு நன்பர்களாக இருக்கும் அனைவரையும் குடிகாரர்கள் / உளறுபவர்கள் என்று சொல்லவேண்டும்...
இவ்வளவு மேட்டரையும் ஒரே பின்னூட்டத்துல வெச்ச திறமையை பாருங்க...
சும்மா சொல்லக்கூடாது...ஸ்டார் பின்னூட்டதாரின்னு பட்டம் கூட கொடுக்கலாம் நீங்க...
அனானி ஆப்ஷன் எடுத்துட்டீங்கன்னா பத்து பதினைஞ்சு அனானி பின்னூட்டங்கள் போடும் மூர்த்தியின் டென்ஷன் குறையும்....
இப்போ நீங்க அனுமதிக்கலைன்னாலும் எல்லா இடத்துலயும் அவன் போடும் ரெடிமேட் பின்னூட்டங்கள், மற்றும் எனக்கு டெய்லி வரும் பின்னூட்டங்களை வெச்சு மூர்த்தி என்ன எழுதியிருப்பான்னு கெஸ் செய்ய முடியுது...ஆனா இ-மெயில் பில்டர் இருக்கும்னு நினைக்கிறேன் உங்ககிட்ட...சோ...ஒட்டுமொத்த டெலீஷனா ?
மேலும் என்னோட பதிவுல பின்னூட்டப்பிரச்சினையா ? மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கலாமே ?
பாட்டுப்போட்டி அது இதுன்னு சொன்னீங்களே...இப்ப குடுங்க வாய்ப்பு...பாடித்தள்ளிடுறேன்...மைக் - ஹெட்செட் எல்லாம் இருக்கு இப்போ...
சர்வே,
ஒரு குழந்தை கால்தடுக்கி கீழ விழுந்துவிட்டதுனா சத்தமா அழும் ,யாராவது பார்க்கிறாங்களா தூக்கி விடுறாங்களானு , யாரும் பார்க்கலை,தூக்கி விடலைனா, தானா எழுந்து அதுப்பாட்டுக்கு போய்டும், இதை குழந்தைகள் மனோ பாவம் என்பார்கள்!
இதுக்கும் உங்க சர்வேக்கும், சமிபத்திய வலைப்பதிவுலக அரசியலுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை, சும்மா சொல்லி வைத்தேன்! :-))
ரவி, உள்குத்து, வெளிக்குத்தெல்லாம் புரியாத பச்சுப்புள்ள நானு :)
//சும்மா சொல்லக்கூடாது...ஸ்டார் பின்னூட்டதாரின்னு பட்டம் கூட கொடுக்கலாம் நீங்க..//
அட, அதுக்கொரு போட்டி வைக்கலாமே. ஐடியாக்கு நன்னீ!
///ஆனா இ-மெயில் பில்டர் இருக்கும்னு நினைக்கிறேன் உங்ககிட்ட...சோ...ஒட்டுமொத்த டெலீஷனா ?///
டெலீச்ஷனே தான். அப்படியே 'சேகரிச்சும்' வச்சுக்கறேன். அப்பாலிக்கா பத்த வைக்க உதவும்.
பொறுமையா வந்து பின்னூட்டறேன். இப்ப லிங்க் வேல செய்து.
மைக் வேல செஞ்சா, ஜன கன மன பாடி உடனே அனுப்பவும். பாட்டுக்கு பாட்டுல அடுத்த எழுத்துக்கு ஓண்ணும் தாளத்தோட போட்டு அனுப்புங்க.
tbcd, என்னா சொல்றீங்க?
கொத்ஸ், பங்காளி என்ன பண்ணாரு? போறாரா?
அனானி,
//அடுத்தவங்கள பத்தி அவாங்களைக் கேட்காம இப்படிச் செய்ய உங்களுக்கு மட்டுமல்ல நம்ம யாருக்கும் உரிமையில்லை//
அப்படியா? என்னங்க இப்படி கொழப்பறீங்க. சிம்பிள் மேட்டரு இது. நான் சொன்ன மாதிரி, ப்ளேடோ, சுகுணாவோ வந்து கேட்க்கும் பட்சத்தில், சர்வே விலக்கப்படும் ;)
அனானி2,
//சர்வேசா, ஏம்பா, உமக்கு உண்மையிலேயே வேறு சர்வே எதுவும் கிடைக்கலையா? சூடுடான இடுக்கை தேடி ஏன் இப்படி?//
எந்த உள்நோக்கத்துடனும் போடப் பட்டதல்ல இந்த சர்வே. ஜூடான இடுக்கையில் இடம்பிடிக்க, வேற பல சீப் டேக்டிக்ஸ் இருக்கு. அதுல ஒண்ணுல்ல இது ;)
anony,
//dont try to get cheap popularity by this kind of surveys.
if you are really an educate do remove this post.
///
dont get over over-excited sir. what is so 'cheap' about this? getting other peoples opinions on some fellow bloggers is cheap? I dont buy that.
வவ்வால், உள்குத்தா? நடத்துங்க.
IIIrd std
IIIrd std
IIIrd std
;)
//IIIrd std//
Putting st, nd, rd or th after the Roman numerals to denote ordinal numbers is not correct.
III itself means 3rd and so on.
இதை சமீபத்தில் 1960-ல் நான் பத்தாம் வகுப்பில் இருந்தபோது எங்கள் வகுப்பாசிரியர் சங்கரராமன் சொல்லிக் கொடுத்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சர்வேசன் என் பின்னூட்டத்தை டெலீட் செய்வதெல்லாம் உங்கள் பதிவு உங்கள் இஷ்டம். ஆனால் ரவி உளறுவதையெல்லாம் உண்மை என்று நம்பி அதை ஒரு காரணமாக கூறாதீர்கள். என் பதிவை போய் எட்டி பாருங்கள்.
மேலும் என் கமெண்டில் சம்பந்தமேயில்லாமல் தமிழச்சி, லிவ்ங் ஸ்மைல், வரவணையான் எல்லாம் எப்படி வந்தார்கள் என்பது புரியவில்லை...
நண்பர்கள் எல்லாம் குடிகாரர்கள், சுகுணா வருவதில் எனக்கு விருப்பமில்லை (அவர் வந்தால் எனக்கென்ன வராவிட்டால் எனக்கென்ன) என்பதெல்லாம் ரவியின் பைத்தியக்காரத்தனமான உளறல். கும்மிக்கு ஆள் சேர்க்கிறான்.
"பலருக்கு" ரசிக்கவில்லை என்று நீங்கள் நீக்கிய பின்னூட்டத்தை வைத்துதான் ரவி ஒரு மொக்கை பதிவு போட்டிருக்கிறான்.
எச்சூஸ் மி, ஒரு பதிவுக்கு லிங்க் குடுத்தா என்னான்னு ஒரு எட்டு போய் பார்க்க மாட்டீரா? அப்புறம் ஏன் இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு. கேட்டதுக்காக சொல்றேன்.
பங்காளி போறாராம்.
போதுமா?
//1. சுகுணா திரும்பி வருவதை அவர் விரும்பவில்லை...
2.ஓசை செல்லாவை கிண்டல் செய்யவேண்டும்.
3.தமிழச்சியை கிண்டல் செய்யவேண்டும்.
4.லிவிங் ஸ்மைலை கிண்டல் செய்யவேண்டும்.
5.வரவணையானை கிண்டல் செய்யவேண்டும்...
6.இவர்களுக்கு நன்பர்களாக இருக்கும் அனைவரையும் குடிகாரர்கள் / உளறுபவர்கள் என்று சொல்லவேண்டும்...//
1. முகமூடியே பதில் கூறி விட்டார். நான் இன்னும் மேலே போய் கூறுகிறேன். டோண்டு தமிழ்மணத்தை விட்டு போக வேண்டும் என ஆளாளுக்கு தத்தம் ஆசையை குறிப்பிடவில்லையா? இத்தனைக்கும் டோண்டு ராகவன் தான் போகப்போவதாக பாவ்லா கூட செய்யவில்லை. போகவும் மாட்டான் என்பது வேறு விஷயம். இந்த விஷயத்தில் சுகுணா was just asking for it.
2. ஓசை செல்லா செய்த கோமாளி வேலைக்கு கிண்டல் செய்யாமல் என்ன செய்வது? வேறு யார் அவ்வாறு செய்திருந்தாலும் தான் அதற்கு மேல் கிண்டல் செய்திருப்பதாகா ஓசை செல்லாவே கூறியாகி விட்டது. பந்து போட்டு கொடுத்தால் சிக்ஸர் அடிக்காமல் இருக்க முடியுமா?
3. 4., 5. லிவிங் ஸ்மைல், தமிழச்சி, வரவனையான் இங்கு எங்கிருந்து வந்தனர்?
6. குடிப்பதை பெருமையாகக் கூறிக் கொண்டவர்கள்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முகமூடி,
ரவி பதிவு பார்த்தேன். கொஞ்சம் நீங்க சொன்னதுக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் கொடுத்திருக்காரு..
கன்ஃப்யூஷன் தீர்க்க, உங்களின் பின்னூட்டத்தை மீண்டும் மதிகிறேன்.
நீங்கள் சொன்னது இதுதான்.
//////////
அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.
1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::
அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்
2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி
அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது.
///////////////////////
கொத்ஸ்,
"பங்காளி பிரிய இருக்கிறான்"
பிரியட்டும், அப்பாலிக்கா தான் சர்வே ;)
If anyone has objections to the above image links, i will remove it.
Dondu,
I have to say i agree on all your points :)
//SurveySan said...
If anyone has objections to the above image links, i will remove it.//
those links were posted by poli dondu pshycho moorthi.. hey delete it man
anony பின்னூட்டம் நீக்கப்பட்டது. 'personal' email idக்கள் இருப்பதால்.
ஆனாலும், எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும்.ஏன் ஏன் ஏன் ?
செந்தழல் ரவியின் நம்பிக்கைத் தன்மையை குலைப்பதே மூர்த்தியின் நோக்கம். இப்போதைய முக்கிய நோக்கம் மூர்த்தியைத் தப்பவிடக்கூடாது என்பதே.
செந்தழல் ரவி மூர்த்தியுடன் உறவாடி ரகசியங்களை தெரிந்து கொண்டு இப்போது கூறுவதால்தான் மூர்த்தியின் வண்டவாளமே வெளியில் வந்தது என்பதை மறக்கலாகாது.
ஆகவே மூர்த்தியின் முயற்சிகளுக்கு துணை போகாதீர்கள். மின்னஞ்சல் ஐடி உள்ள அனானியின் பின்னூட்டத்தை எடுத்தது சரியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கும்மிக்கு ஆள் சேர்க்கிறான்.
"பலருக்கு" ரசிக்கவில்லை என்று நீங்கள் நீக்கிய பின்னூட்டத்தை வைத்துதான் ரவி ஒரு மொக்கை பதிவு போட்டிருக்கிறான்.//
ரவியின் நண்பர்களே அவரை அவன், இவன் என்றெல்லாம் சொல்வதில்லை... முகமூடி சொல்கிறார்... நீங்களும் அனுமதிக்கிறீர்கள்... குறைந்தபட்ச மரியாதையாவது வேண்டாமா?...
//செந்தழல் ரவியின் நம்பிக்கைத் தன்மையை குலைப்பதே மூர்த்தியின் நோக்கம். இப்போதைய முக்கிய நோக்கம் மூர்த்தியைத் தப்பவிடக்கூடாது என்பதே. //
அதனால் தான் ரவியை இப்போதைக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது... இல்லையேல் காரியம் கெட்டுவிடும்...
survey success, atleast 1/2 of it :)
இது புரியவில்லை என்றால் நந்தவனத்தில் ஓர் ஆண்டி..பாட்டு தெரியும்மா...
இதுவும் புரியவில்லை என்றால்..சர்வேசன் (இருந்தா..!!??) தான் காப்பாத்தனும்..
//*SurveySan said...
tbcd, என்னா சொல்றீங்க?*//
பொது வாழ்க்கைக்கு வந்ததாலே நீங்க நினைத்ததை எல்லாம் செய்ய முடியும்கிற வாதம் தப்பானது..
போலி டோண்டு, எழுதியது எப்படி உரிமை மீறலாக கருதுகிறீர்களோ, அதே போல் தான் இதுவும்..நீங்க, கூட்டம் சேர்க்க அடுத்தவர் மணதை பிறாண்டுவது தவறு...இதுக்கும் உங்களால, வியாக்கியாணம் சொல்ல முடியும்..
tbcd,
பொது வாழ்க்கைக்கு வந்தவர்களை விமர்சனம் செய்வது தவறு என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத வாதம்.
அரசியல்வாதி, சினிமாகாரன் இவனையெல்லாம் விமர்சனம் செய்யாமையா இருக்கோம்? செய்யரத படிக்காமதான் இருக்கோமா?
நேர்மையான முறையில், கன்னியமான வார்த்தையால் வர்ணிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
இதுக்கே இன்னொரு சர்வே போடலாம் போலருக்கே?
//கூட்டம் சேர்க்க அடுத்தவர் மணதை பிறாண்டுவது தவறு///
கூட்டம் சேக்கத்தான எல்லாரும் எழுதரோம்? நம்ம எழுதி நம்மளே படிச்சுக்கவா?
;)
நன்றி.
http://araiblade.blogspot.com/2007/09/blog-post_21.html
Araiblade, welcome back.
glad the survey worked :)
Post a Comment