ரொம்ப பில்டப் ( அதாவது, வர வர ரொம்ப பொறுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. ஊர் மக்களுக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் தீத்து வைக்கலன்னா தூக்கம் வர மாட்ரது. நம்ம சர்வேய நம்பி லைப் சேஞ்சிங்க் டெஸிஷன் எல்லாம் எடுக்கராங்க்ய. டோட்டலா உலகமே மாறுது போங்க... சரி சரி பில்டப் ஸ்டாப் ) எல்லாம் கொடுக்காம நேரா மேட்டருக்கு வரேன் :)
இன்றைய தினங்களில் பதிவுலகில் நாம் காணும் பெரும் சர்ச்சை சாதீயக் குழுக்களும், பகுத்தறிவுப் பட்டரைகளும், ஆன்மீக வாதிகளும், நடுநிலை பித்தர்களும் போட்டுக் கொள்ளும் தீராச் சண்டை.
மேலே உள்ள கோஷ்டிகள் இப்படி அடித்துக் கொள்வதால், நல்ல பல கருத்துக்களும் சுவையான பதிவுகளும் வெளியில் வராமல் தினம் ஒரு தாக்கு ரேஞ்சுக்கு எழுதி டைம் வேஸ்ட் பண்றாங்க என்று நம் நேயர் ஆதங்கப்பட்டு நம்ம கிட்ட வந்தார்.
"சர்வேசா எல்லாரும் இப்படி அடிச்சுக்கராங்களே, இந்த கோஷ்டிகளுக்குள்ள இருக்கர ஒவ்வொரு பதிவரின் உண்மையான மனநிலை என்ன - உண்மையாகவே இவர்கள் கொள்கையில் பிடிப்புள்ளவர்களா, இல்ல சும்மா டைம் பாஸா. படிக்க வர மத்த ஜனங்கள் எல்லாம் எந்த கோஷ்டியை சேர்ந்தவர்கள். இதை கண்டுபிடித்து கூறு" என்று கேட்டுக்கொண்டு ஒற்றைக் காலில் தவமிருக்கிறார் நண்பர்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்கி, என் பிஸி ஸ்கெட்யூலிலும் ஒரு சர்வே. யோசித்து மண்டைய கொடஞ்சு, நிதானமா உங்க வாக்க கீழ குத்துங்க டியர் கோஷ்டீஸ் :)
பி.கு1: அந்த நேயர் யாரா? ரொம்ப பிரபலமான ஆளு.
தல, உங்க பேர சொல்லிடலாமா? வேணாம்னா சஸ்பென்ஸாவே இருக்கும். உங்க இஷ்டம்!
பி.கு2: அப்படியே, அடுத்த சர்வேக்கு ஐடியா சொல்லிட்டு போங்களேன். தேங்க்ஸ்!
பி.கு3: அப்படியே, இதுக்கு ஒரு ஓ.சி வெளம்பரம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்! ஆண்டவன் அருள் கிட்டும்! :)
32 comments:
//நேயர் விருப்பம் சர்வே - கடவுளா? பகுத்தறிவா?.. வந்து குத்துங்க சாமிகளா!! //
தலைப்பில் தவறு இருக்கிறது !!!
கடவுளா ? பகுத்தாறிவா ? என்று கேட்டுவிட்டு அனைவரையும் 'சாமிகளா ?' என்று சொல்லி இருப்பது என்ன ஞாயம் ?
:)))
வாங்க கோவி கண்ணன்.
எல்லாரும் 'ஆ'சாமிகள் தான. அதான் அப்படி :)
என்ன கேள்வி இது? உலகத்தில் இரண்டாவது வகை தானே அதிகமாக இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உண்மையில் இரண்டாவது வகையாகத் தான் இருப்பார்கள். நான் ரெண்டாவது வகை தான் சாமி.
Surveyசன்.
/* சரியா தெரியல. கடவுள் இருக்கர மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு */
இதுதானய்யா என் நிலைபாடு. 50-50.
இதுவரை கடவுளைக் கண்டதும் இல்லை. மனதால் உணர்ந்ததும் இல்லை. அதேநேரம், ஒரு பயபக்தியான சைவக்குடுமத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறுவயதில் கடவுள் பற்றிப் பெற்றோரும், பெரியவர்களும் சொன்ன விடயங்கள் இன்றும் மனதில் கடவுள் பக்தி இருக்கக் காரணமாக இருக்குது.
நம்மோட இந்த கூட்டு சதியில் எத்தனை பேர் ஓட்டு போட்டாங்கன்னு தெரியுமா ?
வெறும் பதிவர்தான்...நானு...
அடுத்த சர்வேக்கான ஐடியாக்களை அள்ளிடலாம் :))))))))
ரொம்ப பொதுமைப் படுத்தப் பட்டிருக்கு. கடவுள் இருக்கிறார் ஆனா மதம்ங்கற பேருல நிறைய பேர் மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க ஒரு ஆப்ஷன் இருந்தா என் வோட்டு அதுக்கு.
கடவுள் இருக்கிறாரா இல்லையாங்கறதாங்கறதை விட, கடவுள் பேரைச் சொல்லி ஏமாத்தும் கயவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய சர்வேயாக இருந்தால் நல்லா இருந்திருக்கும்.
எத்தனைபேரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு சொல்ல முடியுமா ?
ராஜசன்,
//என்ன கேள்வி இது? உலகத்தில் இரண்டாவது வகை தானே அதிகமாக இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உண்மையில் இரண்டாவது வகையாகத் தான் இருப்பார்கள். நான் ரெண்டாவது வகை தான் சாமி.//
இந்தியாவில் கண்டிப்பா இரண்டாவது வகைதான் அதிகம்னு தான் எனக்கும் தோணுது. நம் circleல் இருக்கும் விகிதாசாரம் கண்டுபிடிக்கவே இது.
ஓட்டு போட்டாச்சுல்ல?
வெற்றி,
//இதுதானய்யா என் நிலைபாடு. 50-50.
இதுவரை கடவுளைக் கண்டதும் இல்லை. மனதால் உணர்ந்ததும் இல்லை.//
ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தா இரண்டாவது இல்ல சூஸ் பண்ணிருக்கணும்? இந்த பக்கத்துலேர்ந்து அந்த பக்கத்துக்கு தாவலாம்னு யோசிச்சா 50-50 சரியா இருக்கும் :)
செந்தழல் ரவி,
//நம்மோட இந்த கூட்டு சதியில் எத்தனை பேர் ஓட்டு போட்டாங்கன்னு தெரியுமா ? //
இதுவரை 96 விழுந்திருக்கு. கள்ள ஓட்டு கணக்கெல்லாம் பாக்கல. இதுல கள்ள ஓட்டு போட மாட்டங்கன்னு ஒரு நம்பிக்கை. பார்ப்போம் :)
செந்தில் குமரன்,
//கடவுள் இருக்கிறார் ஆனா மதம்ங்கற பேருல நிறைய பேர் மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க ஒரு ஆப்ஷன் இருந்தா என் வோட்டு அதுக்கு.//
அதுக்கு தனியா இன்னொரு சர்வே தான் போடணும். இதுல வெறும் நம்பிக்கையை பத்தி மட்டும்தான் இருக்கு. நம்பிக்கையை mis-use பண்றத பத்தி யோசித்து ஒன்று போடலாம். :) ஐடியாக்கு நன்றி!
ஓட்டுப் போட்டாச்சு சாமி(க்கு)!
முகில், ஓட்டுக்கு நன்றி!
சர்வேசன் சார், அடுத்த சர்வேவுக்கான ஐடியா.
காதல் திருமணம்/arranged திருமணம்
1) காதல் திருமணம் தான் சூப்பர்
2) arranged சூப்பர்
3) காதல் ஒருத்தரை arranged இன்னொருத்தரை இது தான் சூப்ப்ப்ப்பர்.
4) ஜல பல ஜம்ஸ் மட்டும் போதும். கல்யாணம் வேஸ்ட்
5) ரெண்டும் இல்லாம தவிக்கறேன். டூ மச் இந்த சர்வே எல்லாம்.
கொஞ்சம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அப்பப்ப போடுங்க. இன்வெஸ்ட்மெண்ட் ஐடியா, இந்த மாதிரி ஏதாவது போட்டும் சர்வே போடலாம்.
இதுவரை 108 பேர் குத்திருக்காங்க.
அனானி,
காதல் திருமணம் மேட்டர் ஜூப்பர். போட்டுடலாம்.
//கொஞ்சம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அப்பப்ப போடுங்க. இன்வெஸ்ட்மெண்ட் ஐடியா, இந்த மாதிரி ஏதாவது போட்டும் சர்வே போடலாம். //
இது புரியல? இதெப்படி சர்வேல போடறது. டீடெய்ல்ஸ், ப்ளீஸ்.
சர்வேசா,
/* ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தா இரண்டாவது இல்ல சூஸ் பண்ணிருக்கணும்? */
நீங்கள் சொல்லிறதும் சரியாத்தான் தெரியுது... OK, இன்னொருமுறை குத்தினாப் போச்சு... இம்முறை நீங்கள் சொன்ன 2வது தெரிவுக்கு குத்துறேன்...:))
விடைகாண:
http://iniyavaikal.blogspot.com/2007/01/123.html
next survey can you do about pei,pissasu all?hehe just an idea!
பக்தர்களே
நான் இருக்கிறேன் என்று ஓட்டு போடும் அனைவருக்கும் நிறைய பின்னூட்டம் கிடைக்கும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இனிமேல் பின்னூட்டமே வராது.
இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந்திருக்கு...
இங்கே
வெற்றி,
//நீங்கள் சொல்லிறதும் சரியாத்தான் தெரியுது... OK, இன்னொருமுறை குத்தினாப் போச்சு... இம்முறை நீங்கள் சொன்ன 2வது தெரிவுக்கு குத்துறேன்...:))//
கள்ள ஓட்டெல்லாம் கடைசியில் கழிக்கப்படும். ஆனா, ஆண்டவனுக்கு நீங்க கள்ள ஓட்டு போடறதால கண்டுக்காம விட்டுடறேன். சாமி கண்ண குத்திடும் :)
ஞானவெட்டியான் ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
துர்கா,
//next survey can you do about pei,pissasu all?hehe just an idea!//
good idea! I am positive, atleast 90% will say NO to pei/pisaasu. we will see.
கடவுள்,
//பக்தர்களே
நான் இருக்கிறேன் என்று ஓட்டு போடும் அனைவருக்கும் நிறைய பின்னூட்டம் கிடைக்கும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இனிமேல் பின்னூட்டமே வராது.
//
தன்யனானேன். தங்கள் பாதம் பட என்ன புண்ணியம் செய்தேனோ. ஏதாவது சூடா சாப்பிடறீங்களா?
வெட்டிப்பயல்,
//இத படிச்சி நமக்கு சில சந்தேகம் வந்திருக்கு...
//
பகுத்தறிவு என்றால் என்ன என்ற சந்தேகம் தீர்ந்ததா? உங்க பதிவில் நான் போட்டம் பின்னூட்டம் இங்கேயும் பதிகிறேன்: (காசா பணமா)
-------------
என்ன இங்க கூட்டம், என்ன இங்க கூட்டம்ம்ம்ம்? (கோவை சரளா ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)
நானே என் கேள்விக்கு விடைகாண அப்பப்ப ஒரு சர்வே போடறேன். கேள்விக்குள்ளயே இன்னொரு கேள்வியா?. :)
ஹ்ம்.
//பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு//
மிகச்சரி. அதுதான் விலங்கிலிருந்து நம்மை வேறு படுத்துது என்று சிறு வயது பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள்.
வெறும் இறை மறுப்பு என்பது நாத்திகம் தான்.
ஆனால் தான் ஒரு நாத்திகன் என்று தெளிவு படத்திக் கொள்ள உதவுவது பகுத்தறிவு.
so, all atheists are பகுத்தறிவாளன்s.
அப்ப, கடவுள நம்பரவனுக்கு பகுத்தறிவு இல்லியா? கண்டிப்பா இருக்கு, மத்த விஷயத்துக்கு.
இறைவழிபாட்டை பொறுத்த வரைக்கும், you and me have chosen the 'default' path which our ancestors have chosen.
but, நம்ம 'பகுத்தறிவு பாசரை' ப்ரதர்ஸ், have thought through the process and took the இறை மறுப்பு route, using their பகுத்தறிவு.
so, பகுத்தறிவாளன் belongs to atheist, when the subject is இறை மறுப்பு.
வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா.. me the escape!!!!! :) ( இத, வடிவேலு ஸ்டைல்ல படிங்க )
:)
(on a serious note, you are right. பகுத்தறிவு is nothing but your capability to 'THINK, ANALYZE & DECIDE'. புலி சிங்கம் கூட discovery channel பாத்தா பகுத்தறிஞ்சு தான் மான கொல்ற மாதிரி தெரியுது. என்னமோ போங்க வெட்டி. இதுக்கு தனியா ஒரு சர்வே வேணா போடலாம்.)
--------------
வெட்டிப்பயலின் பதிவில் என் பின்னூட்டம் (ஆத்தீகர்களில் பெரும்பாலானோர், வீட்டின் வளர்ப்பு படி, 'default'ஆ choose செய்தது 'ஆத்தீகம்' என்ற என் commentக்கு அவரின் பதிலும் எனது பதிலும்)
-----------------
//அப்படியெல்லாம் இல்லைங்க...
சும்மா வீட்ல சொன்னாங்கனு கேக்கற டைப் இல்லை நான். என்னை கோவிலுக்கு கூப்பிட்டு போகறதுக்குள்ள எங்க வீட்ல படற கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.
//
என்ன சொல்ல வரீங்க? நீங்களே ஆராய்ந்து/அனுபவித்து கடவுள் இருக்கார்னு கண்டுபிடிச்சு, பின் அந்த அடிப்படையில் ஆத்தீகர் ஆனீங்களா?
Your childhood brought up, has made you, what you are today.
தெருக்கு தெரு கோயில், ஒவ்வொருவர் நெத்தியிலும் விபூதி, குங்குமம் என்று ஆத்தீகம் ரொம்பி வழியும் நம் ஊரில், கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு தைரியமாக அந்த நம்பிக்கையை பின்பற்றி வாழும் நாத்தீகவாதியை, 'பகுத்தறிவாளன்' என்று சொல்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.
கடவுள் நம்பிக்கையை பொறுத்த வரையில், ஆத்தீகர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள், ஒரு நாள் கூட
"அட, ஏன் இன்னும் எனக்கு வேலை கெடைக்கல. ஏன் இன்னும் திருமணம் ஆகல. ஏன் இன்னும் XYZ... கடவுள் இருக்காரா இல்லியா? ஏன் நான் நாத்தீகன் ஆகி, கடவுள் போடோ எல்லாம் தூக்கி வெளியில் போடக் கூடாது. கடவுள் எல்லாம் ஏமாத்து வேலை" என்று 'rational thinking' செய்திருப்போமா?
கண்டிப்பாக இல்லை.
நாம் வளர்ந்த விதப்படி, பிள்ளையார் இஷ்ட தெய்வமா? வழில பிள்ளையார் கோயில் வந்தா, ஒரு silent கும்பிடு போடு. போயிட்டே இரு.. பிள்ளையார்கு ஏன் யானை தலை. எப்படி இதெல்லாம் possible என்ற ஆராய்ச்சி ஆத்தீகர்களில் பெரும்பாலானவர்கள் செய்ததில்லை. (செய்யத் தேவை இல்லை என்பதே என் கருத்தும்).
so, கடவுள் நம்பிக்கையை பொறுத்த மட்டில், 'பகுத்தறிவாளன்' என்பது நாத்தீகனுக்கே பொறுந்தும்.
இதுவே சர்வே-சனின் தீர்ப்பு.
வர்டா,
:)
--------------
முடிச்சுரவமா?
அறிவிப்ப குடுத்துரவமா?
141 and counting...
Sai devotee,
I got your suggestion for the next-survey. will publish one on Monday.
வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் / காதல் திருமணம் மேட்டர் சூப்பர்...அடுத்த சர்வே தீப்பிடிக்கும்...போடுங்க...கலக்குங்க...!!!! ( வழக்கம்போல)
செந்தழல் ரவி,
//வணக்கம்....இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் / காதல் திருமணம் மேட்டர் சூப்பர்...அடுத்த சர்வே தீப்பிடிக்கும்...போடுங்க...கலக்குங்க...!!!! ( வழக்கம்போல)//
நல்ல ஐடியா. ரெண்டு ஆப்ஷன் மட்டும் குடுத்தா சூடு பிடிக்காது. இன்னும் கொஞ்சம் வில்லங்கமா யோசிச்சு ஆப்ஷன் சேத்து போடலாம். :)
Post a Comment