recent posts...

Wednesday, January 31, 2007

நேயர் விருப்பம் சர்வே3 - ஐயர், தேவர், நாயக்கர், குயவர், கள்வர், டர், புர், சர்

நேயர் விருப்ப சர்வேக்களின் பாப்புலாரிட்டி, பிச்சிக்கிட்டு போவுது.

இதோ அடுத்த தலை போகும் சந்தேகத்தை தீர்க்க ஒரு சர்வே. ( அனுப்பிய நேயர் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், அவர் பெயர் இரகசியமாக வைக்கப்படும் ).

அதாவது, இணையத்தில் இப்பொழுதைய சூடான டாபிக், சாதீயம்/மதம் சம்பந்தப்பட்டது.
ஒரு கூட்டம் சாதி வேண்டும், இருக்கட்டும் என்று பிளிறுகிறது, இன்னொரு கூட்டம் சாதி பேசரவன உலக்கையால் அடி என்கிறது.

நேயர் என்ன சொல்றார்னா "மக்களுக்குள் ஏற்றத் தாழ்வை எற்படுத்தி விட்ட இந்த சாதீய அடையாளம் வழக்கத்திலிருந்து ஒழியணும்.
கொஞ்சம் கொஞ்சமா, நான் ஐயர், ஐயங்கார், தேவர், நாடார், நாயக்கர், டர், புர், சர் என்றெல்லாம் சொல்லும் வழக்கம் ஒழிந்தால் தான், நம்மில் இருக்கும் இந்த GAP குறைந்து நல்லிணக்கம் உருவாக வழி அமையும்.
அதுக்காக, பூநூல் போடாதே, நாமம் போடாதே, பொட்டு வைக்காதே என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். கலாச்சார அடையாளங்கள் போக வேண்டாமே?"


(என்னது? போகணுமா? நான் பார்ப்பானா? அடப்பாவமே, நான் நல்லா 'பாப்பேன்' ஆனால், பார்ப்பான் இல்ல ப்ரதர்ஸ், என்ன வுட்ருங்க)

நீங்க என்ன நெனைக்கறீங்க? வாக்கைப் பதியுங்க!



விளம்பரம்: சிறந்த புகைப்பட வித்தவர் - போட்டி - விண்ணப்பிக்க கடைசி நாள் Feb 3rd 2007

.

16 comments:

அகில் பூங்குன்றன் said...

நான் தான் முதல் போனியா. மகிழ்ச்சி.

பேருக்கு முன்னாடி போட்டுக்கோங்க.
பின்னாடி போட்டுக்கோங்க.

கலாச்சரத்தை பின்பற்றுங்கோ.

ஆனா மனுசனை மனுசனா மதியுங்க.
மனசுல எதையும் வெச்சுக்காதிங்க.

SurveySan said...

அகில் பூங்குன்றன்,

ரொம்ப சரியா சொன்னீங்க.

என் நிலையும் அதே அதே!

Thamizhan said...

தென் ஆப்பிரிக்காமாதிரி சட்டத்திலே மாற்றம் வேண்டும்.இந்திய அரசியல் சட்டத்திலே "தீண்டாமை குற்றம்" என்பதை "சாதி குற்றம்" என்று மாற்ற வேண்டும்.கலாசாரம் கன்னுக்குட்டி யெல்லாம் கதை. அனைவரும் சமம் என்று தானாகவே உணராதவர்கட்குச் ச்ட்டம் உணர்த்த வேண்டும்.அதுதான் உயர்வு தாழ்வு ஒழிவதற்கு வழி.மீதியெல்லாம் புற்று நோய்க்குப் புணுகு தடவும் வேலை.

ரவி said...

சாதியே தேவையில்லை என்பது தான் என் நிலை...அதனால் முதலில் சாதியை எறிவோம். பிறகு சாதீய அடையாளங்களை...(முடிஞ்சா மதங்களையும்) பிறகு மனிதனை மனிதனாக மதித்து அன்பின் பாதை வழி நடப்போம்...

SurveySan said...

தமிழன். நல்லா சொன்னீங்க.
//கலாசாரம் கன்னுக்குட்டி யெல்லாம் கதை//

அப்படியா சொல்றீங்க? பொங்கலுக்கு பானைல பொங்கல் செய்வதெல்லாம் கூட நம் கலாசார அடையாளம் தாங்க. அடுத்தவருக்கு கஷ்டம் கொடுக்காம என்னா வேணா பண்ணிக்கட்டும்.

SurveySan said...

செந்தழல் ரவி,

//பிறகு மனிதனை மனிதனாக மதித்து அன்பின் பாதை வழி நடப்போம்//

உங்க வழில நானும் வரேன். ஆனால், வழி அமைய எவ்வளவு நாள் ஆகும்?

Hariharan # 03985177737685368452 said...

1.பேருக்கு முன்னாடி போட்டுக்கோங்க.
பின்னாடி போட்டுக்கோங்க.

2.கலாச்சரத்தை பின்பற்றுங்கோ.

3. மனுசனை மனுசனா மதியுங்க.
மனசுல எதையும் வெச்சுக்காதிங்க.

1,2 ஐச் செய்வதால் 3பாதிக்காம இருப்பதாக இருக்கட்டும்.

SurveySan said...

ஹரிஹரன்,

3 பாதிக்குதுன்னுதான் 1,2 தூங்கணும்ங்கறாங்க்ய.

SurveySan said...

52% "பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடக்கூடாது, மற்ற கலாச்சார பழக்கம்ஸ் ஒ.கே!"

அப்படீன்னு சொல்லியிருக்காங்க.

சோ, நண்பர்களே மாறிடுங்க!

Anonymous said...

//சாதி பேரும் போடப்டாது, பூநூல், நாமம்,விபூதி,கடுக்கண் இதுவும் கூடாது.//
அப்ப, மத்த சாதிக்காரனுங்களுக்கெல்லாம் அடையாளமே இல்லைங்கிறீங்களா?

//என்ன போட்டாலும், எடுத்தாலும் 'பார்ப்பான்' த்வேஷம் தொடர்ந்து செய்வேன்.(அவன் ஊரை காலி செய்யும் வரை) //
அதென்னய்யா பார்ப்பான் துவேஷம்? அப்டீன்னா மத்த சாதிக்காரய்ங்களை யாரும் துவேசிக்கலையா?

எத்தனை பார்ப்பானுங்க, சக்கிலியனையும், பறையனையும் வீட்டுக்குள்ள சேர்க்குறாங்க? அது துவேசம் இல்லையா?
எத்தனை பாப்பானுங்க குலக் கல்விய இன்னுங்கூட தூக்கிப் பிடிச்சிகிட்டு தொங்குறானுங்க.. அது துவேசம் இல்லையா?

வேத்து சாதிக்காரன் கோயிலுக்குள்ள போனான்னு சொல்லு, ஒடனே கள்ளப்பயலுவ அருவா கம்புன்னு தூக்கியாரானுவளே, அது என்னங்கிறே?

எந்த சாதிக்காரனா இருக்கட்டுமே, வேத்து சாதிக்காரன கண்ணாலம் கட்டினா சும்மா வுட்ருவாங்களா?

எப்படியோ, ஒரு க்ரூப்புக்காக மட்டும் ஒரு சர்வே, அதுக்கு 52 பேரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு ஜல்லி!

SurveySan said...

அனானி,

//அப்ப, மத்த சாதிக்காரனுங்களுக்கெல்லாம் அடையாளமே இல்லைங்கிறீங்களா?
//

உதாரணத்துக்கு கொஞ்சம் போட்டிருக்கேன் தல. வில்லங்கமா கேக்கறீங்களே :)

//அதென்னய்யா பார்ப்பான் துவேஷம்? அப்டீன்னா மத்த சாதிக்காரய்ங்களை யாரும் துவேசிக்கலையா//

உங்களுக்கு பார்ப்பான் definition தெரியாதா? மத்த சாதிக்காரன த்வேஷம் பண்றவனெல்லாம் பார்ப்பான் தான் சார்.
உங்கள ட்யூஷனுக்கு சேத்துக்க சொல்றேன்.

//எப்படியோ, ஒரு க்ரூப்புக்காக மட்டும் ஒரு சர்வே, அதுக்கு 52 பேரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு ஜல்லி! //

இதுல என்ன க்ரூப்புக்கு சர்வே வருது?. எல்லா optionம் இருக்கேய்யா.
எல்லாத்தலயும் ஒரு நொட்டம் சொல்லி ஜல்லி அடிக்கறதே வேலயாப் போச்சு சார் இங்க.

சிறில் அலெக்ஸ் said...

//இப்பொழுதைய சூடான டாபிக்//

எப்பவுமே இதுதான் சூடான டாபிக்.

நல்ல சர்வேSon.

:)

SurveySan said...

வாங்க சிறில்,

//எப்பவுமே இதுதான் சூடான டாபிக்.//

ஆமாம் சரிதான்.
சூட ஆறவும் விட மாட்ராங்க. மேலே அனானி பின்னூட்டத்த பாருங்க, பொதுவா சர்வே போட்டாலும், சாயம் பூசி ஜல்லி அடிக்கராங்க :)

Anonymous said...

சர்வேசன் சார்,
//மத்த சாதிக்காரன த்வேஷம் பண்றவனெல்லாம் பார்ப்பான் தான் சார். //
உங்களின் இந்தத் தெளிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி ஒரு சர்வே போடுங்களேன்..

யார் உண்மையான பார்ப்பனன்?
1. மற்ற எல்லா சாதிக்காரர்களும் யாரை வெறுக்கிறார்களோ, அவர் தான் உண்மையான பார்பனன்
2. மற்ற எல்லா சாதிக்காரர்களையும் யார் வெறுக்கிறார்களோ, அவர்தான் உண்மையான பார்ப்பனன்
3. எல்லா மனிதரையும் சமமாக மதித்து நடக்கும் எல்லாரும் பார்ப்பனன் தான்
4. வேதங்கள், மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்து பூணூல் அணிந்து மூன்றுவேளை சந்தியாவந்தனம் செய்பவர் தான் உண்மையான பார்ப்பனன்
5. மேலுள்ள வேத மந்திரங்கள் படிப்பதோடல்லாமல், கோயிலில் பகவத் சேவையில் ஈடுபட்டு, திருமணம், நீத்தார் கருமம் போன்றவற்றைச் செய்து கொடுப்பவர்.

SurveySan said...

அடடா, 'நேயர் விருப்பம்' தலைவா, நம்மள வம்புல மாட்டி விட முயற்சியா.

நீங்க 'பார்ப்பானையும்' 'பிராமணனையும்' போட்டு confuse பண்றீங்க.

பார்ப்பான் என்பவன் யாரெனில் மற்றவரையெல்லாம்
துச்சமாய் மதித்து துப்புபவன்!

பார்ப்பான் எல்லா 'ஆதிக்க' சாதியலயும் இருக்கான்.
அந்த பார்ப்பானயும்/அவன் அடயாளங்களயும் வெரட்ட ஒரு பெரிய team இருக்கே - தெரியாதா?


உங்க லிஸ்ட்ல, மூன்றாவது பாயிண்டோட opposite தான் பார்ப்பனன்!

Anonymous said...

//அந்த பார்ப்பானயும்/அவன் அடயாளங்களயும் வெரட்ட ஒரு பெரிய team இருக்கே - தெரியாதா?//
தெரியாதே! அவங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க சார். அவனுங்க கிட்ட சாக்கிரதையா இருக்கணும்!
உங்களுக்குக் குத்து மதிப்பாத் தான் தெரியும்னா, ஒரு சர்வே போட்டுவிடுங்க, அதிக ஓட்டு யாருக்கு விழுதுன்னு பார்த்து நானே சாக்கிரதையா இருந்திக்கிறேன்..