Thursday, September 02, 2010

கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கான கேள்விகள்

வணக்கம் மக்கள்ஸ்.
கற்பகம் ஸ்ரீராம் GoodNewsIndiaவின், PointReturnல் இணைந்ததை பத்தி சொல்லியிருந்தேன்.

சுருக்கச் சொல்லணும்னா, ஸ்ரீதரன் என்பவர், இந்தியாவின் பலப் பல மூலைகளுக்குச் சென்று, பிரபல ஊடகங்கள் முன் நிறுத்தாத, 'வெற்றியாளர்கள்' பலரை goodnewsindia.com தளத்தின் வழியாக நமக்கு அறிமுகப்ப்டுத்தினார். வெறும் அறிமுகத்தோடு மட்டுமல்லாமல், அந்த வெற்றியாளர்களின், குட்டிச் சுயசரிதையையும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் முழு விவரங்களுடன் அழகாக பதிந்து வந்தார். தளத்தை படிச்சுப் பாருங்க, உங்களுக்கே மேட்டர் புரியும்.

சில வருஷங்களுக்கு முன், ஒரு புதிய முயற்சியை (PointReturn.Org) தொடங்கியிருந்தார் ஸ்ரீதரன். ஜமீன் எண்டதூர் என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் வரண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.


தனி மனுஷனா சொந்தக் காசை போட்டு 17 ஏக்கரில், குளம் வெட்டி, மரம் நட்டு, தங்க வசதிகள் செய்து, windmillல் தண்ணீர் இரைத்து, புதுப் புது விஷயங்களை பரீட்சை செய்து, செக்க போடு போட்டுக்கிட்டு இருந்தாரு ஸ்ரீதர். தன் பணிக்கு உறுதுணையாய் இருக்க முழு நேர தன்னார்வலர்கள் தேடிக்கிட்டிருந்தாரு.
சொந்த வேலையை விட்டுட்டு, இவரு கூட காஞ்ச காட்டுல வேலை செய்ய யாரு வரப்போறான்னு நெனச்சிருந்தேன்.
பாத்தா, ஸ்ரீராம், கற்பகம்னு ரெண்டு பேரு, நாங்க வரோம்னு ஸ்ரீதரனின் டீமில் சேர்ந்து, இவங்களும், கட்டாந்தறையை, பசுமைத் தளமா மாத்த ரெடி ஆகிட்டாங்க.
இதில் வியக்க வைக்கும் பெரிய விஷயம், இவங்க ரெண்டு பேரும், மெத்தப் படிச்சு நல்ல வேலையில் இருந்தவர்கள். இப்படி சின்ன வயசுலையே அம்புட்டையும் வுட்டுட்டு, இப்படி பொது நலத்துக்காக, வசதி வாழ்க்கையை விட்டுட்டு, வெயில்ல காய எப்படி மனசு வருது இவங்களுக்கெல்லாம்?

எனக்கும் பொதுநலத்தின் மேல் பெரிய அக்கரை உண்டு. அப்பப்ப, மத்தவங்ககிட்ட பொலம்பிட்டு, சைலண்ட்டா, அடுத்த டாலரை சம்பாதிப்பதிலே முனைப்பை காட்டி, என் வாழ்க்கைச் சக்கரத்தை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சூப்பரா சுத்திக்கிட்டு இருக்கேன்.
எனக்கும், என்னைப் போல் பலப் பல சுயநலவாதிகளுக்கும், உள்ளூர குட்டி ஆசை இருக்கு. என்னிக்காவது ஒரு நாள், இப்படி சில பல தியாகங்களை பண்ணிட்டு, உருப்படியா பொதுநலத்துக்காக ஏதாவது சின்ன விஷயமாவது செய்ய முடியாதான்னு?
ஆனா, எங்க ஆரம்பிக்கரது? சும்மா வர சம்பாத்யத்தை வேணாம்னு விடும் மன திடம் எப்படி உருவாக்கரது?
போதும் என்ற மனம் எப்படி தயார் பண்ணுவது?
இப்படி பலக் குழப்பங்கள் இருக்கு மனசுல.
ஃபுல் டைம் பொதுநலவாதி ஆகலன்னாலும், வாரத்துக்கு ரெண்டு மூணு மணி நேரமாவது, சமுதாய/மக்கள் மேம்பாட்டுக்குச் செலவிட வேண்டாமா?
படிச்சு என்ன புண்ணியம்? வசதியாய் நம்மை வாழவைக்கும் சமுதாயத்துக்கு கைமாறு என்ன செய்யப் போறோம்? எப்ப செய்யப் போறோம்?

இப்படிப் பலப் பல கேள்விகள் அடிக்கடி முளைக்குது. சிம்பிளா, அதன் மேல் தண்ணி ஊத்திட்டு, அடுத்த வேலையை பாக்க போயிடறோம்.


இன்னும் நீட்டி முழக்காமல், கற்பகம், ஸ்ரீராம் எப்படி இந்த மாதிரி, ஒரு தடாலடி முடிவில் இறங்கினார்கள். போதும் என்ற மனப் பக்குவம் எப்படி வந்தது, எதிர்காலத் திட்டம், etc.. etc.. மாதிரி கேள்விகளை கேட்டுப் பாக்கலாம்னு இந்தப் பதிவு.

எனக்கு மனதில் பட்ட கேள்விகள் கீழே. நீங்களும் ஏதாவது கேக்கணும்னா பின்னூட்டங்கள். எல்லாத்தையும் தொகுத்து அவிகளுக்கு அனுப்பி வச்சு பதில் கேக்கறேன். ஏடா கூடமா ஏதாவது கேட்டு, அறைவிட்டாங்கன்னா, பாதி அடி உங்களிடமும் பகிருகிறேன்.
யோசிச்சுக் கேளுங்க.



என் மனதில் பட்டவை.

1)ஸ்ரீதருக்கு:
பிரதிபலன் எதுவும் பெருசா எதிர்பாக்காம சொந்தச் செலவுல GoodNewsIndia வழியாக சேவைகள், இப்ப PointReturn.orgனு பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
GoodNewsIndia தளம் இப்போது இயங்காத நிலையில் உள்ளது. இயங்கிய நாட்களில், மகத்தான சேவை செய்து வந்தது. ஒரு நல்ல முயற்சியை முடங்க விட்டதில் சங்கடங்கள் இல்லையா? அதை மீண்டும் இயக்க, தன்னார்வலர்கள் மூலமாக முயன்று பார்க்க ஏதேனும் எண்னம் உண்டா?

2) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
நல்லா டீப்பா திங்க் பண்ணிதான், வசதி வாழ்வை ஓரம் கட்டிட்டு, இப்படி பொட்டல் காட்டுல சில பல வருஷங்களை கழிக்கலாம்னு முடிவு பண்ணிருப்பீங்க. "தேவையான" சொத்து சேத்துட்டோம்னு வந்த தைரியத்தில் ஏற்பட்ட முடிவா இது?

3) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
அஞ்சு ஆறு தன்னார்வலர்கள் சேந்து, உங்க சொந்த வாழ்வில் சில வருஷங்களை தியாகம் செய்து, 17 ஏக்கரில் மரம் வச்சு, குளம் வெட்டி, விவசாயம் பண்ணிச் சாப்பிட்டா, சமுதாயத்துக்கு என்ன பெரிய தாக்கம் வரும்னு எதிர்பாக்கறீங்க? அதை விட பெரிய தாக்கம், உங்க நேரத்தை, under privileged பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, மத்த சேவைகள் செஞ்சோ ஏற்படுத்த முடியாதா?

4) ஸ்ரீராமுக்கு:
ஒரு பதிவில், நம் நாட்டின் முக்கியத் தேவை, பலப் பல புதியவர்கள் விவசாயிகளாக மாறணும்னு சொலியிருந்தீங்க. வெறும் மாடு வச்சு உழுது organic முறை விவசாயம் எல்லாம் பண்ணினா மட்டும், நம்ம உணவுத் தேவைகள் பூர்த்தியாகுமா? இயற்கை உறம் புரியுது. ஆனா, இயந்திரங்கள் இல்லாமல் விவசாயம் பண்ணா, நம்ம உற்பத்தித் திறன் எப்படிப் பெருகும்?

5) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
பொதுநலவாதியாக என்ன பண்னனும்? "எவ்வளவு சம்பாதிச்சா நமக்கும் நம் சுற்றத்துக்கும் போதும்?" :)

6) ஸ்ரீதருக்கு:
PointReturnக்குப் பிறகு, ஏதாவது திட்டம் மனதளவில் இருக்கா? எதையாவது செய்யணும்னு நெனச்சு, நேரப் பற்றாக்குறையால், பண்ண முடியாம போச்சேன்னு நெனச்சதுண்டா?

7) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
எனக்கெல்லாம் job satisfaction 365நாள் வேலைக்குப் போனா, அஞ்சு பத்து நாள், எப்பவாவது வரும். போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு தூக்கிப் போட்டுட்டு போயிடலாம்னு நிறைய நாள் தோணிருக்கு.
நீங்க வேலை செய்த நாட்களில் எப்படி? அங்க ஏற்பட்ட விரக்தியால், இப்படி வந்துட்டீங்களா? வேறு காரணங்கள்? :)

8) கற்பகத்துக்கு:
ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தின்னு, ஸ்ரீராம் பின்னாடி, வேற வழியில்லாம, பல்லக் கடிச்சுக்கிட்டு வந்தீங்களா? In a scale of 1-to-100%, how committed are you for this cause? PointReturnக்கு அப்பால் வேறு என்ன செய்ய எண்ணம் உள்ளது? :)

9) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
நம்ம ஊர் (தமிழ்நாடு, சென்னை,..) சமீப வருஷங்களில் நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. ஆனா, தனி மனுஷ ஒழுக்கம் சுத்தமா முன்னேறலை. தெருக்களில் குப்பை; சாலை விதி மீறல்; போராட்ட மனநிலை இல்லா சோதா வாழ்க்கை வாழ்தல் etc.. எங்க தட்டினா மாற்றம் வரும்? மனுஷங்க மத்தியில் மாற்றம் வர ஏதாவது செய்யும் திட்டமிருக்கா?

10) ஸ்ரீராமுக்கு:
உங்க கல்லூரி சீனியர் சித்தார்த்தும், கோதால எறங்கியிருக்கரதா சொன்னீங்க. மேலே உள்ள கேள்விகளுக்கு அவரையும் பதில் சொல்லச் சொல்லலாம்னு ஒரு சாய்ஸை கொடுத்திடுங்க.

11) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
மரம், செடி, கொடி, இணையம், புத்தகங்கள், இதை விட்டா வேறென்ன பொழுதுபோக்கு விஷயங்கள் பிடிக்கும்?

ஈ.மடலில் வந்த மூன்று கேள்விகள்

12) Was there a moment where they regretted / or questioned their decision after joining PointReturn?

13) What was the incident or event which made them took this decision? Many of us have these thoughts but there must be some strong driving reason for it.

14) Is there anything that they learned which can benefit a poor farmer. If so, are there any plans to educate them.

15) ???

..
...
.....

பி.கு: செல்லாவும், சமீப காலமாய், பார்ட் டைம் விவசாயம் செய்வதாக அவரின் முகநூலில் படித்து வருகிறேன். interesting.

மக்கள்ஸ், கேள்வியை நீங்களும் அவுத்து விடுங்க. டீப்பா திங்க் பண்ண வைங்க, மிக முக்கியமா.

8 comments:

SurveySan said...

கேள்வி கேக்க வெக்க பட்டீங்கன்னா, மேலே உள்ள கேள்வியில், ஏதாவது மொக்கையான கேள்வியான்னு சொல்லிட்டுப் போங்க. எடுத்துடலாம். குறைவான அடி வாங்க இந்த ரிக்வெஸ்ட்! :)

SurveySan said...

ஈ.மடலில் வந்த மூன்று கேள்விகள்

13) Was there a moment where they regretted / or questioned their decision after joining PointReturn?

14) What was the incident or event which made them took this decision? Many of us have these thoughts but there must be some strong driving reason for it.

15) Is there anything that they learned which can benefit a poor farmer. If so, are there any plans to educate them.

இனிய தமிழ் said...

நல்ல பதிவுகள் ஏன் எப்போதும் எல்லோரையும் போய் சேர்வதில்லை...

SurveySan said...

இனிய தமிழ், வருகைக்கு நன்னி.

நல்ல கேள்வி :|

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா பேட்டிகண்டு பகிருங்க..ஆர்வமாய் இருக்கம் படிக்க..

Thamiz Priyan said...

நமக்கும் ஆசை தான்.. ஆனா பொருளாதார ரீதியில் சமாளிக்க இயலாமப் போகுமோ அப்படின்ற பயத்திலேயே இதை எல்லாம் ஏக்கத்துடன் கடக்க வேண்டி இருக்கு.

ராமலக்ஷ்மி said...

உங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது பலருக்கும் பொருந்தும். ஆசைகள் எல்லாம் எண்ண அளவிலேயே:(! எங்களைப் பாருங்கள் என அதை உடைத்து விட்டு வாழ்ந்து காட்டும் ஸ்ரீதரன், ஸ்ரீராம் முக்கியமாக கற்பகம் போன்றோரைக் காண்பது அரிது. அவர்கள் சொல்லப் போகும் பதில்களைக் கேட்க நானும் ஆவலாய்...

SurveySan said...

நன்றி ராமலக்ஷ்மி.