recent posts...

Thursday, July 29, 2010

பல்லாவரம் படம் - Hall of Fameல்

புகழ் ஒரு போதைதான். என்னதான் நல்லா படிச்சு, அறிவு ஷார்ப்பா இருந்தாலும், அதை பரீட்சை தாளில் எழுதி, அதிக மார்க் வாங்கி டாப் ராங்க் வந்தால்தான் ஒரு கெத்து இருக்கும்.
பதிவுலகிலும் அதே கதைதான். டீப்பா திங்க் பண்ணி மாங்கு மாங்கு எழுதினாலும், வாசிப்பவர்களின், பின்னூட்டங்கள் வரலைன்னா சப்னு ஆயிடும். (என் அநேகம் பதிவுகள் இந்த ரகம்).

புகைப்படம் எடுக்கும்போதும், படம் திருப்திகரமா வந்தாலும், Flickr மாதிரி தளங்களில் அதை போட்டு, அங்க இங்கன்னு பல குழுக்களில் படத்தை அனுப்பி, 'நல்லாருக்கு'ன்னு பின்னூட்டங்கள் வாங்குவதில்தான் ஒரு திருப்தி.

'Heart Awards'னு ஒரு குழுமம் இருக்கு. படத்தை அங்க அனுப்பினா, குறைந்தது எட்டு பேர் வந்து, படம் சூப்பர்னு ஒரு பாராட்டு பாராட்டினா, படத்தை அடுத்த லெவலுக்கு அனுப்பலாம். அடுத்த லெவலிலிருந்து, மீண்டும் இன்னொரு பத்து பேராவது வந்து, படம் சூப்பர்னு சொல்லணும். அப்படிச் சொன்னா, படம் 'Hall of Fame'ல் இடம்பெற வைக்கலாம்.

இம்புட்டு வருஷம் கஷ்டப்பட்டு, முக்கி மொனகணதுல, சில படங்கள் அடுத்த கட்டத்துக்கு போயி, ஜஸ்ட் மிஸ் ஆகிட்டிருந்தது. இப்போ, ஒண்ணு தேறியிருக்கு.
புகைப்பட வித்தகர்கள் அநேகம் பேருக்கு இது ஒரு சப்ப மேட்டரு. ஆனா, எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிருச்சு :)
மேலும், வேற பதிவெழுத மேட்டர் இல்லாததால், இந்த தம்பட்டம். ஐ ஆம் த சாரி :)

Hall of Fame சென்ற படம், கடந்த ஆண்டு, பல்லாவரம்-வேளச்சேரியை இணைக்கும் 200 அடி சாலை ஓரத்தில் எடுத்தது.

கீழே இருப்பது, கேமராவிலிருந்து ஒரிஜினல்:



அதே படம் DPH என்ற செயலியில் டச்-அப் செய்து pseudo HDR ஆக்கிய பின்,
(இது தான் hall of fameல்)


இதுவரை Flickrல் அரங்கேற்றிய படங்களில், அதிக க்ளிக்குகள் வாங்கிய படம் இதுதான்.
என் Flickr படங்களின் 'interesting' பட்டியலில் முதலில் இருப்பதும் இதுதான்
Big Temple, Tanjore

அதிகம் பேரின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான்.
Sistine Chapel stairs, vatican

மூன்று படங்களும் கடந்த வருடம் எடுக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

சாரி ஃபார் த தம்பட்டம்ஸ்.

happy friday!

11 comments:

pudugaithendral said...

மீ த பர்ஸ்டா வாழ்த்தைச் சொல்லிக்கறேன்.

pudugaithendral said...

படங்கள் அருமை.

SurveySan said...

நன்றீஸ்.

உங்க தொடர் பதிவு அழைப்பு இன்னும் பெண்டிங்கில் இருக்கு. கூடிய விரைவில் கவனிக்கப்படும் :)

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள்.. படம் அருமையா இருக்கு.

Subankan said...

அட! வாழ்த்துகள். உங்களை Flickr இலும் பிடித்துவிட்டேன். அந்த 'DPH என்ற செயலி' மேட்ட‍ரைப்ப‍ற்றி கொஞ்சம் விளக்க‍மா சொல்லுங்களேன்

Karuthu Kandasamy said...

வாழ்த்துக்கள், அனைத்தும் அருமை!

ராசராசசோழன் said...

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை...நகைச்சுவையாய் சொல்லி இருந்தாலும் அதுதாங்க நிஜம்....

படங்கள் மிக மிக அருமை....

SurveySan said...

அமைதிச்சார, subankan, karuthu kandhasamy, ராசராசசோழன்,

நன்றீஸ்.

இப்பத்தான் திருப்தியா இருக்கு ;)

subankan, DPH பத்தி சொல்ல பெருசா ஒண்ணுமில்லை. செயலி, இங்க கிடைக்குது:
http://www.mediachance.com/hdri/index.html

free trial தரவிறக்கம் பண்ணி முயன்று பாருங்க. பிடிச்சா காசு கொடுத்து வாங்கிக்கலாம். நான் இன்னும் வாங்கலை. நான் கொஞ்சம் அல்ப ரகம் :)

free trialன் போது, படத்துக்குக் கீழ ஒரு வாட்டர் மார்க் போட்டுடுவாங்க. அதை எப்படி எடுக்கணும்னு நான் சொல்லித் தரணுமா என்ன? ;)

ஆ! இதழ்கள் said...

Beautiful. superba irukku pallaavaram pic.

Rathna said...

முதல் இரண்டும் மிகவும் அழகான புகைப்படம் ....வாழ்த்துக்கள்

Vijay said...

DPH செயலி பற்றிய தகவலுக்கு நன்றிங்கண்ணா.