recent posts...

Thursday, April 22, 2010

நித்தியிடம் ஒரு முக்கிய கேள்வி...

பிதாமகன்ல ஒரு ஜெயில் சீன்ல, ஒரு சேட்டு வருவாரு. அவரைப் பாத்து சூர்யா, "அதெப்படிடா, உன் மூஞ்சிய பாத்தா மட்டும் கைல இருக்கரதெல்லாம் எடுத்து குடுத்துடறானுங்க"ன்னு கேப்பாரு.

நித்தி கிட்ட இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கப் போறதில்லை.

அதைவிட முக்கியமான கேள்வி.

நித்தி, கிட்டத்தட்ட நம்ம வயசுக்காரரு.

எனக்கெல்லாம் சில பல வருஷங்களுக்கு முன்னாலேயே, துரு பிடித்த ஆணியை புடுங்கி புடுங்கி, மண்ட காஞ்சு முடி கொட்டத் தொடங்கியாச்சு.
யாரு செஞ்ச புண்ணியமோ, மொத்தமா கபாலம் காலியாகாம, சீப்பெடுத்து சீவ முடியர அளவுக்கு, ஏதோ கொஞ்சம் தக்க வச்சிருக்கேன்.

ஒவ்வொரு தபா ஊருக்கு போகும்போதும், புச்சா ஹேர் ஆயில் என்ன வந்திருக்குன்னு பாத்துட்டு புடிச்சுட்டு வருவேன். அதுவும், இங்க இருக்கர சக வயது சகாக்கள் எல்லாம், திருப்பதி லட்டு எதிர்பாக்கர மாதிரி என் கிட்டயிருந்து எதிர்பாக்கர ஒரு விஷயம், "மச்சி எனக்கொரு பாட்டில்"னு முன்கூட்டியே ரிசர்வெ பண்ணி வச்சுப்பாங்க.
'ஆர்னிக்கா ப்ளஸ்னு' ஒரு பச்சக் கலர் பாட்டிலு. கொஞ்ச வருஷத்துக்கு முன் வரை, என்னையும் என்னை சுத்தியுள்ள நண்பர்களின் மண்டைக்கும் தோதான ஃபார்முலாவாக, அருமையாக வேலை செய்தது. ஆனா, சமீபத்தில், அதிலும் கலப்படம் ஏறி, 'தண்ணியா' வருது இப்பெல்லாம்.

ஸோ, இம்மீடியட்டா, ஏதாவது ஒரு நிவாரணி கெடச்சாவணும்.

நம்ம நித்தியப் பாருங்க, என்னமா சிலு சிலுன்னு, சிலுப்பி விட்டுக்கிட்டு திரியர மாதிரி முடிய வளத்து வச்சிருக்காரு.

இதனால் நான் நித்தியிடம் வேண்டிக் கேட்பது என்னவென்றால், என்ன ஒறம் போடறீங்க மண்டைக்கு?
இப்படி அடர்த்தியா கரு கருன்னு வளறுதே?

சீடர்கள் பதில் கூறினாலும், நன்மை பயக்கும்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு


ஹாப்பி வெள்ளி! :)

17 comments:

ஆயில்யன் said...

கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சு எல்லாம் “முடி”ஞ்சதும் ஊருக்கே சொல்லுங்க உதவியா இருக்கும் :)))))))

Ananya Mahadevan said...

ஆர்னிக்கா ப்ளஸ்ல கலப்படம்ன்னு சொல்லிட்டீங்களே?
சிரிச்சு சிரிச்சு முடியல! சூப்பர் காமெடி.
இதையெல்லாம் வெச்சு போஸ்டு தேத்தறீங்களே சர்வெ.. அடி தூள் போங்க!
15 வருஷம் முன்னாடி எஸ் வீ சேகர் நடிச்சு எடுத்த தத்துப்பிள்ளை ட்ராமா இன்னிக்கும் அப்ளிக்கபிளா இருக்குன்னா அதுக்கு நம்ம நித்தி மாதிரி ஹீரோஸ் தான் காரணம். வாழ்க நித்தி!

பாவக்காய் said...

<>
Super-bbu !! LOL :-)

Unknown said...

மருந்தெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க,
காவி வேட்டி கட்டிக்கிட்டு ரஞ்சிதா கையால் எண்ணை தேய்ச்சு நல்லா நீவி விடனுங்க.
அப்பத்தான்
நல்லா பெரிசா வளரும் (நான் முடியைச் சொன்னேன், வேறு எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டா நான் பொறுப்பில்லை)

யாசவி said...

சர்வேசன் ,

ஆர்னிகா ப்ளஸ் மெய்யாலுமே நல்லா இருக்கா இல்ல சும்மா எழுதறதுக்காக சொன்னீங்களா?

நாங்களும் டிரை பண்ணுவோம்ல ....

:)

Ananya Mahadevan said...

ஆங் சொல்ல விட்டுப்போச்சு,
MS Paint படம் தூள். நீள கருங்கூந்தல், பொட்டு, விபூதிப்பட்டை, இதையெல்லாம் விட மிக முக்கியமா கத்திரி கஜா, சைதை கபாலி கணக்கா கன்னத்துல ஒரு ரெளடி மச்சம் வேற.. காப்பிரைட் பிரச்சினைக்காக சர்ன்னு ஒரு சிக்னேச்சர்! சூப்பர் போங்க..

Nat Sriram said...

ஆஹா..நமக்கும் நித்தி ஏஜ் தான். ஒரே year or birth . முடி விஷயத்துல உங்க கேஸ் தான். நமக்கெல்லாம் 12th ல night out போட்டு படிக்கிறப்பவே பாடி ஹீட்டோ என்ன கருமமோ ஆரம்பிச்சிடுச்சு.. அத ஒரு 15 வருஷம் அப்படி இப்படி maintain பண்ணி ஓட்டிட்டு வந்ததே ஒரு பெருமை தான். பேச்சுலரா இருக்கிறப்போ ரூம் மேட் எல்லாம் அலைவோம், எதைடா தலைக்கு தடவரதுன்னு..என் ரூம் மேட் என் ரிஷப்ஷன்ல நச்சுன்னு சொன்னான் "மச்சி, எப்பிடியோ ரிஷப்ஷன் வரைக்கும் முடிய maintain பண்ணிட்ட..இனி அது இருந்தா என்ன , கொட்டினா என்ன" ன்னு..

இப்போ எனக்கு இருக்கிற மெயின் ப்ரெஷர் எங்க அப்பா தான். 60 வயசுலயும் அவர்க்கு முடி கொட்டல, நரைக்கல..அவர்க்கு முன்னாடி நமக்கு போயிடும் போலருக்கு :(

பாலகுமார் said...

Super :):)

SurveySan said...

ஆயில்யன், கண்டிப்பா சொல்லிடுவோம்.:) நன்றீஸ் :)

SurveySan said...

அநன்யா,

///இதையெல்லாம் விட மிக முக்கியமா கத்திரி கஜா, சைதை கபாலி கணக்கா கன்னத்துல ஒரு ரெளடி மச்சம் வேற.. காப்பிரைட் பிரச்சினைக்காக சர்ன்னு ஒரு சிக்னேச்சர்! சூப்பர் போங்க.///

தன்யனானேன் :) எங்க யாரும் அதை கவனிக்காம போயிடுவாங்களோன்னு நெனச்சேன் ;) டாங்க்ஸ்.

SurveySan said...

பாவக்காய், டாங்க்ஸ்.

SurveySan said...

பரிதி நிலவன்,

////காவி வேட்டி கட்டிக்கிட்டு ரஞ்சிதா கையால் எண்ணை தேய்ச்சு நல்லா நீவி விடனுங்க.///

கேக்க நல்லாதான் இருக்கு. வீடியோ எடுத்து யூட்யூபுல போட்டுருவானுங்களே கெரகம் புடிச்சவனுங்க ;)

SurveySan said...

யாசவி,

///ஆர்னிகா ப்ளஸ் மெய்யாலுமே நல்லா இருக்கா இல்ல சும்மா எழுதறதுக்காக சொன்னீங்களா?///

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி வரை நல்லாவே இருந்தது. போன வருஷம் சரக்கு, தண்ணியா இருக்கு. வேலைக்காகலை :)

SurveySan said...

Nataraj,

///இப்போ எனக்கு இருக்கிற மெயின் ப்ரெஷர் எங்க அப்பா தான். 60 வயசுலயும் அவர்க்கு முடி கொட்டல, நரைக்கல.////

:) எனக்கு அந்தப் ப்ரச்சனை இல்லை. எங்க நைனாக்கு முடி காலியாகி ரொம்ப வருஷமாச்சு. என் கவலையெல்லாம், காலங்காத்தால எழுந்தா கண்ணாடிய பாக்கரதுதான் ;)

SurveySan said...

பாலகுமார், நன்றீஸ் :)

விக்கி said...

சர்வேசன் உங்க "தலை"ப்பு நல்லா இருக்கு .. நமக்கும் முடி பாதி கொட்டிடுச்சு எதாவுது நல்ல ஆயில் இருந்த சொல்லுங்களேன் ???

SurveySan said...

விக்கி, எந்த ஆயிலும் வேலை செய்யலைங்க. எல்லாத்திலையும் தரக் குறைவு :(

ஒரே வழி, சாப்பாட்டை பாத்து சாப்பிடரதுதான். குளுமையா எத்தையாவது சாப்பிடுங்க. :)