Sunday, December 27, 2009

3 Idiots - புடிச்சிருக்கு

அவ்தார் பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 3 Idiotsக்காக காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு போலாம்னு போனது வீண் போகலை.
Qayamat காலங்களில் இருந்தே அமீரை ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த அமீர் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, 3 Idiotsல். கூடவே, நம்ம ஊரு மாதவனும், ஷர்மன் ஜோஷியும்.

இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (அமீர், மாதவன், ஷர்மான்), அவர்களின் கல்லூரி முதல்வரும், முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (ஓம் வைத்யா) சேர்ந்து கலக்கும் படம் 3 Idiots.

இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, 3 Idiots பார்க்கும்போதும்.
3 Idiots நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.

கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், அமீர் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, மாதவனும், ஷர்மானும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, அமீரைப் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.

முன்னாபாய் புகழ் ராஜ்குமார் இரானியின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.

அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?

மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?

படத்துக்கு வருவோம்.

திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.

படத்தில், அமீரைத் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், அமீர் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் Boman Irani கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.

கரீனா கபூர், பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க.
மாதவன், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, ஓம் வைத்யா. சதூர் ராமலிங்கம் என்ற மாணவனாக வராரு இவரு. ஹிந்தி படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். அமீரை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை அமீர் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.

அமீர் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, கரீனாவின் அக்காவுக்கு, அமீர் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், அமீர் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. அமீரின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.

சிம்லாவை படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.

படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.

ஹிந்தி தெரிஞ்சிருந்தா, இன்னும் நிறைவா இருந்திருக்கும். ஹ்ம்!

பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.

பி.கு1: ஆங்கிலத்தில், எனது 3 Idiots திரைப் பார்வை, இங்கே.

பி.கு2: சமீபத்தில் பார்த்த ரேனிகுண்டா, பேராண்மை கூட, வழக்கம் போலில்லாமல், நன்றாக இருந்தது. காணவும்.

16 comments:

SurveySan said...

தமிழில் இதை எடுத்தா எடுபடுமான்னு தெரியல்ல.
கமல் மாணவனா நடிக்க முடியாது.

மாஸ் அப்பீல் இருக்கர யூத்து ஹீரோ யாராவது ட்ரை பண்ணலாம்.
விஜய், வேட்டையை முடிச்சுட்டு இன்னா பண்ணப் போறாரு?

Ananya Mahadevan said...

தமிழ்ல எல்லாம் எடுக்க வேண்டாம் சர்வேசன். இது வரைக்கும் தமிழ் ல ரீமேக் பண்ணின எந்த மொழிப்படமும் உருப்பட்டா மாதிரி தெரியலை, வசூல்ராஜா MBBS தவிர. இந்த அக்கினிபரீக்ஷை எல்லாம் வேண்டாம். அது ஒரிஜிநல்லா ஹிந்தியிலேயே இருக்கட்டும். 3 Idiots சீக்கிரம் பாக்கணும். லகான்,தில் சாஹதா ஹை, தாரே ஜாமீன் பர்க்கு அப்புறம்
நான் ஆவலா எதிர்ப்பார்க்கற படம் இது. Lets see..

SurveySan said...

அநன்யா, பாத்துட்டு சொல்லுங்க.

வினிதாவுக்கு பிடிக்கலையாம்-
http://vinthawords.blogspot.com/2009/12/3-idiots.html

SurveySan said...

அநன்யா,

////இது வரைக்கும் தமிழ் ல ரீமேக் பண்ணின எந்த மொழிப்படமும் உருப்பட்டா மாதிரி தெரியலை///

உருப்படியா எடுத்தா உருப்படும். குருதிப்புணல் மாதிரி. :)

SurveySan said...

நல்ல ரெவ்யூ - http://www.indianauteur.com/?p=893

Anonymous said...

விமர்சனமும் சொல்நடையும் அருமை..சுச்பென்சை கடைசி வரை செச்பென்சவகே வைத்துவிடீர்களே.. என் பதிவுக்கு வருமாறு அலைகிறேன்.. புதுசா எழுத ஆரம்பித்தவன் நான்.. கட்டாயம் கமெண்ட் போடுங்க

SurveySan said...

கார்த்திKN,

//கட்டாயம் கமெண்ட் போடுங்க///

pottaachu. :)

danks.

S said...

Its based on an English novel 'Five point someone' by Chetan Bhagat. Novel is more interesting than this masala filled movie.

Read it. No need 3 idiots.

கபீஷ் said...

படம் ஓகே ரகம்.

SurveySan said...

கபீஷ்,

:)

Aamir likeability, makes a big difference, i guess.

SurveySan said...

S,

//Novel is more interesting than this masala filled movie.

Read it. No need 3 idiots.///

i am not an avid reader. movie medium is easier for me. i loved 3i. i admit masala is a bit overdose, but was enjoyable.

ராமலக்ஷ்மி said...

2009-ன் புடிச்சிருக்கு பட்டியலா? TOI-க்கும் அடுத்தது என்ன:)?

இந்தப் படம் நானும் பார்க்க நினைத்திருக்கிறேன்! பார்த்து விட்டு சொல்கிறேன்.

SurveySan said...

இதுவே 2009ன் கடைசி 'புடிச்சிருக்கு' :)

stalin ப‌த்தி எழுத‌லாம்னு ஒரு ஐடியா இருந்துது. எதுக்கு வேண்டாத‌ ப்ர‌ச்ச‌னைன்னு விட்டுட்டேன் ;)

வருஷம் முடியும்போதாவது சில புடிச்ச விஷயங்கள் கண்ணில் பட்டதேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

SurveySan said...

btw, அவ்தார் 'புடிச்சிருக்கு' :)

ராமலக்ஷ்மி said...

நன்றி. அவ்தாரும் பார்க்க வேண்டிய லிஸ்டில் வைத்திருக்கிறேன்:)!

SurveySan said...

Avatar is #1 movie worldwide in collections.
in India its #2, thanks to 3Idiots :)