recent posts...

Tuesday, December 15, 2009

நச் 2009 போட்டி முடிவுகள்

நச் போட்டிக்கு வந்த எழுபது கதைகளை, நானும் சென்ஷியும் சேர்ந்து அலசி ஆராய்ந்து இருபது கதைகளை தேர்ந்தெடுத்திருந்தோம்.

இருபதில் முதல் இரண்டு பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுக்க,
வெட்டிப்பயல், CVR, சென்ஷி ஆகிய மூவர் குழு களத்தில் இறங்கியது.
இவர்களின் மதிப்பெண்ணுடன், வாசகர்கள், கதைகளுக்கு அளிக்கும் வாக்குகளையும் கலந்து ஆராய்ந்து வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதாக அறிவித்திருந்தேன்.
சர்வே பதிவின், பின்னூட்டத்தில் சொல்லியிருந்தபடி, மூவர் குழுவுக்கும் உறுதுணையாக இருக்க நாலாவதாக இன்னொரு நடுவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஹெவி-வெயிட் வேலையை, செய்து கொடுத்தவர், முத்துச்சரம் கோர்க்கும் ராமலக்ஷ்மி அவர்கள்.

மக்கள்ஸின் சர்வே மூலம் வந்த வாக்குகளை எண்ணியதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அதாவது, மொத்தம் 1363 வாக்குகள் பதிவாயிருந்தது.
ஆனால், சர்வே பதிவுக்கு கூகிளாரின் கணக்குப்படி தொள்ளாயிரத்தி சொச்சம் ஹிட்டுகள் மட்டுமே இருந்தன. ஸோ, தோராயமாய் சில பல நூறு வாக்குகள், செல்லாத கள்ள வாக்குகள் என்பது தெரிய வந்தது.
சர்வே கொம்பேனியை பிடித்து ஐ.பி ரிப்போர்ட் அது இதெல்லாம் கேட்டு, வடிகட்ட முனையலாம். ஆனா, அதெல்லாம் தேவை இல்லாமல், நாட்களை மேலும் நீட்டிக்கொண்டுச் செல்லும். நேர விரையமும் கூட.

ஆகையால், இம்முறை, சர்வே மூலம் வந்த வாக்குகளை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று எமது சர்வே கமிட்டியில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு நடுவர்களின், முடிவுகளை மட்டும் கணக்கில் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடுவர்கள் ஒவ்வொரு கதைக்கும் மதிப்பெண் அளித்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதைக்கு 100ம், அதற்கேற்றார்போல், மற்ற கதைகளுக்கும் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கீழ் வரும் பட்டியலில், நாலு நடுவர்களின் மதிப்பெண்களும், அவற்றின், பொது (average?) கூட்டலும்.

(கீழே, ஸ்க்ரோள் செய்து பார்க்கவும்......)













































கதை
நடுவர்1
நடுவர்2
நடுவர்3
நடுவர்4
Average (%)


1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
96
60
60
100
79


3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
73
100
70
90
83


10. திருப்பம் - சின்ன அம்மிணி
67
80
60
77
71


12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
93
65
95
95
87


19. இக்கணம் இக்கதை - Nundhaa
93
55
80
82
77


30. அவரு..அவரு..ஒரு - வருண்
53
75
65
77
67


34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
56
55
70
69
63


39. காமம் கொல் - Cable Sankar
67
65
60
69
65


44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
91
85
80
85
85


45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
87
70
80
87
81


52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
81
45
70
71
67


53. சட்டை - முரளிகண்ணன்
93
55
90
94
83


55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
73
85
80
95
83


56. அபரஞ்சிதா - அடலேறு
73
50
60
69
63


59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
77
50
60
82
67


63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
67
50
60
77
63


64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
89
60
70
77
74


68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
72
85
90
87
83


69. நிபுணன் - யோசிப்பவர்
69
60
70
71
68


70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar
Narayanan
100
60
100
100
90


அனைவரது மதிப்பெண்ணையும் கூட்டிக் கழித்து பார்த்ததில்,
முதல் இடத்தை பெற்று, அதற்கான $20 பரிசை வெல்பவர், நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி எழுதிய Sridhar Narayanan.

இரண்டாம் இடத்தையும், அதற்கான $10 பரிசும் வெல்பவர், அப்பா சொன்ன நரிக்கதை எழுதிய நிலா ரசிகன் அவர்கள்.

வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களும், கரகோஷங்களும்.

முதல் இருபது வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

ஏற்கனவே அறிவித்தபடி $70ஐ, முதல் பரிசு வென்ற, Sridhar Narayan பெயரில், உதவும் கரங்களுக்கு ஒரு குட்டி டொனேஷனும் செய்யப்படும்.

வெற்றி பெற்றவர்கள், surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு ஒரு ஈ.மடல் அனுப்பவும்.

நன்றீஸ்!

வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம்ஸ் (இதை உங்க பதிவுல போட்டுக்கலன்னா செக் பவுன்ஸ் ஆகிடும்னு சொல்றதெல்லாம் பொரளி, நம்பாதீங்க! :) ):



36 comments:

சங்கர் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

சங்கர் said...

நான் உங்க பாலோயர் லிஸ்ட்ல இருக்கேன், ஆனா இந்த பதிவு பிளாக்கர் அப்டேட்டில் தெரியல, நான் தமிழிஷ் பார்த்து வந்தேன், கொஞ்சம் என்னனு பாருங்க

கோவி.கண்ணன் said...

வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள் !

சென்ஷி said...

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ! பங்கு கொண்டவர்களுக்கும் நடுவர்களுக்கும் சர்வேசனுக்கும் நல்வாழ்த்துக்கள்!! :)

gulf-tamilan said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

வெற்றி பெற்ற இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். போட்டியை நடத்தி இத்தனை பேரை எழுத வைத்த உங்களுக்கும், நடுவர்களுக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

சங்கர் said...
// இந்த பதிவு பிளாக்கர் அப்டேட்டில் தெரியல, //

சங்கர், இப்போ தெரியும் பாருங்க. பல நேரங்களில் ப்ளாக்கரில் தெரிய நேரம் எடுக்கும்.

ஆயில்யன் said...

வெற்றி பெற்ற இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

நடுவர்களுக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

//சென்ஷி said...

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ! பங்கு கொண்டவர்களுக்கும் நடுவர்களுக்கும் சர்வேசனுக்கும் நல்வாழ்த்துக்கள்!! :)//

எப்படிப்பா உனக்கு நீயே வாழ்த்து சொல்லிக்கிற :)

Venkatesh Kumaravel said...

நடுவர்களுக்கு நன்றி. பரிச்சயமுள்ள ஸ்ரீதரும், நிலாரசிகனும் வென்றிருப்பது மகிழ்விக்கிறது! 20ல் வந்த சக்திப்பிரபா அண்ணி, அதிபிரதாபன் பெஸ்கி, அடலேறு, நந்தா, ஆதி அண்ணன், கேபிள் அண்ணன், முரளி அண்ணன் மற்றும் பலருக்கும் வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

ரோகிணி said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Unknown said...

பரிசுப் பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நான் என் மனசுக்குள் தேர்ந்தெடுத்து வைத்தது.என் சாய்ஸ்:

1.பள்ளிக்குப் போகமாட்டேன்-ஷக்திபிரபா
2.ஹோம் வொர்க் -ஸ்ரீதேவி

ரெண்டும் நல்ல நச்.

பிடித்த கதை: நானே நானா -சுப தமிழினியன்

மீண்டும் வாழ்த்துக்கள்!

மணிகண்டன் said...

My Best Wishes to sridhar and nilarasigan. And also i congratulate the courage of the judges for reading all the 70 stories. When is the next competition ?

PPattian said...

வெற்றி பெற்றோருக்கும், நடுவர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்..

Sridhar Narayanan said...

போட்டி நடத்திய சர்வேசனுக்கும், நடுவர்கள் பாலாஜி, CVR, சென்ஷி மற்றும் முத்துச்சரம் ராமலஷ்மி அவர்களுக்கும் மிக்க நன்றி.

வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கும் தேங்க்ஸ்.

வெற்றி பெற்ற நிலா ரசிகனுக்கும் வாழ்த்துகள் சார் :)

MJV said...

முதலில் இவ்வளவு சிரத்தை எடுத்து இந்த போட்டியை நல்ல படியாய் நடத்தி கொடுத்த சர்வேசன், சென்ஷி, வெட்டிப்பயல், CVR மற்றும் ராமலக்ஷ்மி மற்றும் இவரகளுக்கு உதவிய அனைவருக்கும் உளம்கனிந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற ஸ்ரீதர் மற்றும் நிலா ரசிகன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்டு போட்டி நடத்தியவர்களுக்கு உற்சாகம் கொடுத்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

Prathap Kumar S. said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

குசும்பன் said...

போட்டி நடத்திய சர்வேசனுக்கும், நடுவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ராம்குமார் - அமுதன் said...

நம்ம கதை மதிப்பெண்கள மட்டும் வச்சு பார்த்தா 4வது வந்துருக்கு... அதுலயும் ஒரு நடுவர் நம்ம கதைக்கு 100 மார்க் போட்டு ரொம்பவே ஊக்கப்படுத்திருக்காரு...

அனைவருக்கு மிக்க நன்றீறீஸ்ஸ்ஸ்ஸ்....

பின்னூடா டிஸ்கி : இந்த கூட வச்சுருக்கவங்களுக்கு லைட் தருவீங்களா ? 4வது எடத்துக்கு பதக்கமெல்லாம் தருவீங்களா ? :))

thamizhparavai said...

மாபெரும் போட்டியைத் திறம்பட நடத்தி, முடிவைச் சரியான நேரத்தில் அறிவித்த சர்வேசன் மற்றும் நடுவர்குழுவிற்கு வாழ்த்துக்கள்...
பரிசு பெற்ற ஸ்ரீதர் மற்றும் நிலா ரசிகனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...

‘ஹோம் வொர்க்’ கதைக்கு பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்...

Unknown said...

முதல் பாராட்டு - இப்படி ஒரு போட்டியை மிகுந்த சிரத்தை எடுத்து நடத்தியதற்காக சர்வேசனுக்கு.

அடுத்த பாராட்டு - போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற 69 போட்டியாளர்களுக்கு

அடுத்த பாராட்டு - முதல் கட்டமாக 20 கதைகளை வடிகட்ட உதவிய சென்ஷிக்கு

அடுத்த பாராட்டு - கடைசிக்கட்டத்தில் மதிப்பெண் போட்டு உதவிய நான்கு நடுவர்களுக்கும்

வாழ்த்துக்கள் : வெற்றி பெற்ற இரண்டு பதிவர்களுக்கும்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

போட்டிக்கு வித்திட்டு அனைவரையும் ஊக்குவித்த சர்வேசன் அவர்களுக்கும் நடுவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு கதையும் தனித்தனியாக படித்தால் வெற்றி தான்.

எனினும் சதங்காவின் "நெல்லிமரம்" எனக்கு மிகவும் பிடித்திருந்தது :)

ஸ்ரீதேவியின் ஹோம்வர்க் அடுத்தபடியாக பிடித்தது.

வெற்றி பெற்ற ஸ்ரீதருக்கும் நிலாரசிகனுக்கு வாழ்த்துக்கள்

வெங்கிராஜா,

மிக்க நன்றி.

ரவிஷங்கர்,

மிக்க நன்றி

:)

அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள் :)

Thamiz Priyan said...

வெற்றி பெற்ற இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். போட்டியை நடத்தி இத்தனை பேரை எழுத வைத்த உங்களுக்கும், நடுவர்களுக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thamira said...

பி.1 : ஸ்ரீதர் நாராயணன், நிலாரசிகன் இருவருக்கும் வாழ்த்துகள்.

பி.2 : சர்வேசன் மற்றும் நடுவர்களுக்கு நன்றிகள்.

பி.3 : அடுத்ததாவும் ஒரு 'வட போச்சே..'

பி.4 : நான் பள்ளிக்குடத்துல கூட இவ்ளோ மார்க் வாங்குனதில்ல.. அத நினைச்சாதான் அளுவாச்சியா வருது. அவ்வ்வ்...

Anonymous said...

வெற்றி பெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Prasanna said...

போட்டி இட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், அதை நடத்துவதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்!
உங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்!

SurveySan said...

அனைவருக்கும் நன்றீஸ்!

இனி, நச் 2010ல் மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

வெற்றிபெற்ற ஸ்ரீதர் மற்றும் நிலா ரசிகனுக்கும இந்த வார ஷொட்டு
போட்டியை முன்னின்று நடத்திய சர்வேசனுக்கு இந்த வார பூச்செண்டு :)))))
நான் ஒன்னும் எழுதாததால் எனக்கு இந்த வார குட்டு :)))))))))))))))))

Swami said...

என் கணிப்புபடியே கடைசியா போட்டியில் எண்ட்ரியாகி ப்ர்ஸ்டா ஜெயித்த ஒருபக்கம் ஸ்ரீதர்க்கு வாழ்த்துகள்!!!

போட்டி நடத்திய சர்வேசனுக்கும் நடுவர்களுக்கும் நன்றிகள் பல..

நாங்க இப்ப போறோம்..அடுத்த வருஷம் திரும்ப வரோம் :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

வருண் said...

இப்போத்தான் பார்த்தேன் :)

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாய்ப்புக்கு நன்றி சர்வேசன் :)

SurveySan said...

நிலா ரசிகனுக்கு பரிசுப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, அவரும் சரி பார்த்து விட்டார்.

Sridhar Narayananன் $20ஐ, உதவும் கரங்களுக்கு வழங்கச் சொல்லிவிட்டார். $70ம், $20ம் சேர்த்த்ஹு, $90, உ.க்வுக்கு இந்த வாரம் அனுப்பப்படும். fyi.

SurveySan said...

prize money and udavum karangal sponsor money dispatched.

பின்னோக்கி said...

இரண்டு அருமையான கதைகள். வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியை நடத்திய சர்வேசனுக்கும், மற்ற நடுவர்களுக்கும் ஒரு ஹுர்ர்ர்ர்ர்ர்ரே

Vidhoosh said...

வெற்றிபெற்றவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அடுத்த வருஷம் பின்னிடலாம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சர்வேசன்.


--வித்யா

SurveySan said...

ரவிஷங்கரின் டாப்20 கதைகளுக்கான விமர்சனங்கள்.

http://raviaditya.blogspot.com/2009/12/20.html

நன்றி ரவிஷங்கர்.