recent posts...

Thursday, July 16, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 3

இரண்டாம் பாகம் படிச்சு முடிச்சு நட் ஷெல் எழுதி, ஒரு மாசம் முடிவதற்குள் ஒரு வழியா மூன்றாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு.
இந்த பாகம், முந்தைய இரண்டு பாகங்களை விட விறு விறுன்னு பயணித்தது. பல நேரங்களில், ஒரு சினிமா பாக்கர மாதிரி, காட்சிகள் கண் முன்னே வந்துட்டு போகுது. அருமை!
ஆனா, டி.வி சீரியல்ல ஒரு மேட்டரும் இல்லாம, நடூல மட்டும், டடடா ன்னு மீஜிக் போட்டு பீதிய கெளப்பி, ஆரம்பிச்ச இடத்துலையே முடிப்பாங்க்களே அந்த மாதிரி கிட்டத்தட்ட ஆரம்பிச்ச எடத்துலையே பாகம் 3ஐ முடிச்சிட்டாரு கல்கி.

மூன்றாம் பாக நட் ஷெல்லை பாக்கரதுக்கு முன்னாடி, இதுவரை பாகம்1ம், பாகம்2ம் படிக்காதவங்க படிச்சுடுங்க. படிச்சுட்டு ஒன்னியும் புரியாதவங்க, பொ.செ ஈ.புக் இருக்கு, அதை முழுசா படிங்க. முதல் மூன்று பாகம் சகாய விலைக்கோ, ஈயம் பித்தளைக்கோ வாங்கிக்கலாம்னு இருக்கரவங்க எனக்கு யாஹூங்க. (சும்மா சொன்னேன், [கவுண்டர் ஸ்டைலில்] பதிவு படிக்கரவங்க யாருக்கும், விக்கரதா இல்லை :) )

இனி பாகம்3 நட் ஷெல்லு:

வந்தியத்தேவனை குதித்து காப்பாற்றிய அருள்மொழி வர்மரை பூங்குழலி காப்பாற்றி, படகில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்தாள். கடற்கரையில் பழுவேட்டரையர் பட்டாளம் இருப்பதைப் பார்த்ததும் வேறு வழியில் சென்று ஒரு கால்வாய் வழியே காட்டுக்குள் வந்தடைகிறார்கள். இளவர்சர் அருள்மொழிக்கு ஃப்ளூ வந்துடுது. நினைவே இல்லாமல் படகில் கெடக்கறாரு.
இதற்கிடையில் இலங்கையில் அருள்மொழி வர்மர் வந்த கப்பல் எரிவதைக் கண்ட பார்திபேந்திரன் கோடியக்கரை வந்து பழுவேட்டரையர் நந்தினி பட்டாளத்திடம், அருள்மொழி வர்மர் இறந்திருக்கலாம்னு பீதியக் கெளப்பிடறான்.
இளவரசர் அருள்மொழி இறந்துவிட்டார் என்ற சேதி ஊருக்குள்ள பரவுது.

பூங்குழலியிடம், இளவரசரை பத்திரமாய் சூடாமணி விஹாரத்துக்கு ( புத்த மடம்) கூட்டீட்டு போய் விட்டுடச் சொல்லிட்டு, இளவரசி குந்தவையிடம் சேதி சொல்ல பழையாறைக்குப் புறப்படறான் வந்தியத்தேவன்.

போகும் வழியில் நந்தினியின் ஆட்கள் அவனை பிடித்துக் கொண்டு போய் நந்தினியிடம் சேர்கிறார்கள். நந்தினியும் இளவரசர் அருள்மொழிக்கு என்னாச்சுன்னு வந்தியத்தேவனிடம் கேட்டுத் தெரிஞ்சுக்க பாக்கரா. வந்தியன், எதையும் சொல்லாமல் அங்கிருந்து நழுவுகிறான்.

குந்தவையை சந்தித்து மேட்டரை சொல்லி, மீண்டும் காஞ்சிக்கு, குந்தவையின் ஓலையுடன் பயணம் மேற்கொள்கிறான். வரும் வழியில், மீண்டும் நந்தினியின் ஆட்கள் அமுக்கிடறாங்க. இம்முறை, நந்தினியின் குட்டிப் பையனை 'வருங்கால அரசரே'ன்னு, சில 'பாண்டிய' ஆட்கள் கூட்டிக்கிட்டு வராங்க. ராத்திரியில் எல்லாரும் ஏதோ சதித்திட்டம் போட்டு ஆதித்த கரிகாலரை தஞ்சைக்கு வரவழைச்சு கொல்லணும். யாரு, அந்தக் காரியத்தை செய்யப் போறாங்கன்னு குட்டிப் பையன் முடிவு பண்ணட்டும்னு பேசிக்கறாங்க. பையனும், 'அம்மாதான் எல்லாமே'ன்னு சொல்லி கத்தியை நந்தினிகிட்ட கொடுத்துடறான்.

இதற்கிடையில், அருள்மொழி இறந்துட்டார்னு சேதி கேட்டு, வானதி பேஜாராயிடரா. தான் நாகப்பட்டினத்துக்கு போரதா சொல்லி எஸ்கேப் ஆயிடரா. குந்தவையும், மந்திரியார் அநிருத்தரும் சேந்து ஏதோ ப்ளான் பண்ணி வானதியை வழியில் மடக்கி டெஸ்ட் எல்லாம் வெக்கராங்க. குந்தவையும் நந்தினியும் சூடாமணி விஹாரத்துக்குப் பக்கத்துல போய் அருள்மொழியைப் பாக்க வெயிட்டராங்க. ஃப்ளூ சரியானதும் அருள்மொழியும் இவங்களைப் பாக்க அங்க வராரு.
குந்தவை, தம்பி கிட்ட,, திரும்பி இலங்கை போகச் சொல்றாங்க. இங்க நெலவரம் சரியானதும் திரும்பி வான்னு சொல்றாங்க. ஆனா, அருள்மொழி, அப்பா வை பாத்து சில பல விஷயங்கள் சொல்லிட்டுத்தான் போவேன்னு நிக்கறாரு.
இவரின் மனதில் அரசாளும் எண்ணம் இல்லைன்னும், இலங்கையில் உள்ளதைப் போல பெரிய பெரிய கோயில்கள், சிவனுக்குக் கட்டணும்னும் சொல்றாரு. (interesting. பின்னாளில் இவருதான் இராஜ இராஜ சோழர் என்பது நினைவில் கொள்க).

சில இடங்களில், குந்தவை 'பெண் வில்லி' மாதிரி தெரியராங்க. தன் தந்தைக்கு அடுத்து சோழ ராஜ்யத்தை விரிவாக்க அருள்மொழி உதவுவான் என்பதால் தான் அவன் மேல் பாசம் கொள்வதாகவும், தன் பேச்சைக் கேக்கலன்னா நாஸ்தி என்கிற ரீதியில் ஒரு சீன் வருது.

சஸ்பென்ஸ், செமையா மிக்ஸ் பண்ணிக்குட்டு போராரு கல்கி.

நந்தினி யாருங்கரது இன்னும் புலப்படலை.

சுந்தர சோழரின் முன்னாள் காதலி, ஊமை லேடிக்கு இரட்டைக் குழந்தைன்னு போன பாகத்தில் பாத்தோம். ஒரு பெண்ணும், ஓரு ஆணும் என்று. ஆழ்வார்க்கடியானும், நந்தினியை தன் தங்கைன்னு சொல்லுவான் முதல் பாகத்தில். சுந்தரரும், நந்தினியைப் பாத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பாக்கரதா நெனச்சுக்கிட்டு பயத்துல டென்ஷன் ஆயிடுவாரு போன பாகத்தில்.
ஆனா, இந்த பாகத்தில் இன்னொரு கதை சொல்றாங்க - அதாவது, சுந்தரரின் அண்ணன் மகன் மதுராந்தகனை, பிறந்தவுடன் கொல்ல மந்திரி அநிருத்தர் சதி பண்ணினாராம். முதல் குழந்தை பிறந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய் கொல்லச் சொன்னாராம். ஆனா, பெண் குழந்தை என்றதும் பூசாரி கிட்ட கொடுத்து வளக்கச் சொல்லிடறாராம். நந்தினி பூசாரியின் மகள்னு முதல் பாகத்தில் வரும். இரட்டைக் குழந்தையாய், மதுராந்தகர் பிறந்தது அநிருத்தருக்கு தெரியாததால், மதுராந்தகர் தப்பித்தாராம்.
அப்ப, நந்தினியும் மதுராந்தகனும் ப்ரதர் சிஸ்டரா?
குந்தவைக்கும் அருள்மொழிக்கும், நந்தினி தன் அக்காள் என்று எண்ணம். அதை அவளிடம் சொல்லணும்னும் பேசிக்கறாங்க. அது தெரிஞ்சாலே, அவள் செய்யும் வில்லத்தனம் கொறையும்னு இவர்களுக்கு எண்ணம்..

ஸோ, நந்தினி பூசாரி மகளா? சக்ரவர்த்தியின் மூத்த சம்சாரத்தின் மகளா? சக்ரவர்த்தியின் அண்ணன் மகளா?

யப்பா! எங்கே செல்லும் இந்தப் பாதை? இப்படி டெரர் பண்றாங்களே? :)


-தொடரும்!

இது குந்தவையா? நந்தினியா?

14 comments:

Thamiz Priyan said...

ரொம்ப அழகா இருக்காங்க,... கண்டிப்பா நந்தினி தான்...:))

Thamiz Priyan said...

இன்னும் போங்க சஸ்பென்ஸ் விரியும்.. கரிகாலனை இன்னும் பார்க்கலைல.. ;-)))

SurveySan said...

தமிழ் பிரியன்.

//நந்தினி//

நீங்க சொன்னா சரிதான். ஆனா, ஒரு வில்லத்தனம் இல்லையே பார்வைல? :)

Naughty Devil said...

This is nandy...

வந்தியத்தேவன் said...

இவங்க குந்தவைதான் அரச குல வாளிப்பு முகத்தில் தெரிகின்றது. எனக்கு குந்தவையை நன்றாகத் தெரியும் ஹிஹிஹி

SurveySan said...

/////இவங்க குந்தவைதான் அரச குல வாளிப்பு முகத்தில் தெரிகின்றது. எனக்கு குந்தவையை நன்றாகத் தெரியும் ஹிஹிஹி/////

Vandy, ofcourse:)

Prabhu said...

இம்முறை, நந்தினியின் குட்டிப் பையனை 'வருங்கால அரசரே'ன்னு, சில 'பாண்டிய' ஆட்கள் கூட்டிக்கிட்டு வராங்க.////

technical error. இதுக்குதான நாங்க இருக்கோம். அந்த குட்டி பையன் நந்தினியோடது இல்ல. பாண்டியனோடது.


///நந்தினி யாருங்கரது இன்னும் புலப்படலை/////
ம்ஹூ... கடைசி வரைக்கும் தேட விடுவாரு,

SurveySan said...

/////technical error. இதுக்குதான நாங்க இருக்கோம். அந்த குட்டி பையன் நந்தினியோடது இல்ல. பாண்டியனோடது.
////

pandiyanukkum nandinikkum pirandhadhonnu nenachutten. hm. i stand corrected :)

SurveySan said...

///This is nandy...//

nandy, i first thought you are a 'spam bot', but having seen your profile page, i stand corrected :)

welcome to my blog.

ஜாம்பஜார் ஜக்கு said...

// நந்தினி பூசாரி மகளா? சக்ரவர்த்தியின் மூத்த சம்சாரத்தின் மகளா? சக்ரவர்த்தியின் அண்ணன் மகளா?//

அடுத்த பார்ட் படீ தலீவா! கரிகாலன் வந்தப்புறம் மேட்டரு இன்னா சஸ்பென்சா போவும் பாரு!

இன்னும் நூறு வர்ஷம் போனாலும் அலுக்காத புக்கு வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Unknown said...

this may be kundavai because there is a softness on that face instead of villi look. It s so nice but u r missing the intersting romance (between vt and nandi , vt and kundavai)and comedies in this nut shell.

SurveySan said...

Jambajaar jaggu,

////இன்னும் நூறு வர்ஷம் போனாலும் அலுக்காத புக்கு வாத்யார்!///

very true vaathiyaar :)

SurveySan said...

zamrooth,

////It s so nice but u r missing the intersting romance (between vt and nandi , vt and kundavai)and comedies in this nut shell.///

Danks! :)

yes, i am missing all the nice details from the novel. a separate post is needed just to describe Vandi's romantic maneuvers with all the female casts.