recent posts...

Thursday, February 26, 2009

நான் தோல்வி அடைந்தேன்! I Failed!

உங்கள்ள சில பேருக்கு தெரிஞ்சிருக்கும். ToasMastersனு ஒரு குழு அமைப்பு இருக்கு. அநேகமா எல்லா பெரிய கொம்பேனியிலும், சில பேர் இதில் உறுப்பினரா இருப்பாங்க.
வாரத்தில ஒரு நாள் குழுமி, ஒவ்வொருவரது, 'மேடைப் பேச்சு' திறமையையும் மேம்படுத்திக் கொள்ள, எதையாவது டாப்பிக் பேசி, குறை நிறைகளை ஆராய்ந்து, மெருகேறிப்பாங்க.

எனக்கெல்லாம் மேடையில் ஏறினாலே தொடை நடுங்க ஆரம்பிச்சிடும்.
நாலாங்கிளாஸ் படிக்கும்போது, சாக்ரடீஸ் நாடகத்துல, சாக்ரட்டீஸுக்கு விஷம் கொடுக்கர காவலாளியா நடிச்சதோட, என் மேடை அனுபவம் முடிஞ்சு போச்சு.
யோசிச்சு பாத்தா, அப்ப துளி கூட பயம் இருந்ததா ஞாபகம் இல்லை. சாக்ரட்டீசுக்கு கொடுத்த அந்த விஷத்தின் தன்மையையும், அத எப்படி குடிக்கணும், குடிச்சா என்னாகும்னு செயல்விளக்கம் எல்லாம் கொடுக்கர மாதிரி, ஒரு பெரிய டயலாக் சொன்னது ஞாபகம் இருக்கு. (s.karthikeyan was socrates. where are you dude?)

அதைத் தொடர்ந்த பள்ளி வாழ்க்கையிலும், கல்லூரி வாழ்க்கையிலும், யாரும் என் தெறமைய வளக்காம, மொக்கையாக்கிட்டாங்கன்னு நெனைக்கறேன்.
இப்பெல்லாம், கூட்டத்துல பேசரதே பெரிய பாடா இருக்கு.

ஓ, கம்மிங் டு த பாயிண்ட், உங்கள்ள யாருக்காவது, பேச்சுத் திறனை வளக்கணும்னா, உங்க ஊர்ல இருக்கர டோஸ்ட்மாஸ்டர்ஸை தேடிக்கிட்டு போய் பாருங்க. துட்டு பெருசா செல்வாகாது. ரொம்ப ரொம்ப கம்மியான செலவுதான். ஆனா, நீங்க சேரும் குழுவின், உறுப்பினர்களின் உறுப்படியை பொறுத்து, உங்களுக்கு மெருகு ஏறுமா ஏறாதாங்கரது அமையும்.
ஸோ, குட் லக்.

இப்ப தலைப்பு மேட்டருக்கு வரேன்.

என் வாழ்க்கையில் என்ன ஸ்டேஜ்ல இருக்கேன்னு தெரீல. ஒரே 'பர பர'ன்னு இருக்கு.
எல்லாத்தலையும் கால வைக்கணும்னு இருக்கு.
ஆனா, எத்தையுமே முழுசா செஞ்சு முடிக்கணும்னு தோணாமையும் இருக்கு.
கிட்டார், பியாணோ, ஃபோட்டோகிராஃபி, சினிமாட்டோகிராஃபி, பெயிண்ட்டிங், கப்யூட்டர் சம்பந்தப்பட்ட சில பாடங்கள், பங்கு சந்தை மேட்டரு, மேற்படிப்பு சமாச்சாரங்கள் எல்லாம், அணில் கொய்யாப்பழம் சாப்புடர கதையா, கடிச்சு கடிச்சு தாவிக்கிட்டிருக்கேன்.
எதையும், முழுசா முடிக்கல.

அப்படிதான், டோஸ்ட்மாஸ்டரும்.
சும்மா, ஒரு ஓ.சி செஷனுக்கு கூப்பிட்டாங்களேன்னு ஒரு நாள் வேடிக்க பாக்க போயிருந்தேன்.

அதில் பாடம் எடுத்த ஒருத்தர் சொல்லிக்குடுத்த விஷயம்.
வாழ்க்கையில் வெற்றிக்கு பெரிய வழி, ஒவ்வொரு முறை தோற்கும் போதும், அதை முழு மனசுடன் ஒத்துக்கிட்டு, இரண்டு கரம் நீட்டி, அதை அரைவணைக்கணும் என்பது.

I failed! நான் தோல்வி அடைந்தேன்னு ஆத்மார்தமா சொல்லும்போது, அந்த செய்கையில், வெற்றி பெற நம்மை ஒரு படி நாமே முன்னேற்றிக் கொள்கிறோம்.

ஸோ, ரெடியா?

தமிழ்மணம் விருதுகள் 2008 பாத்திருப்பீங்க.
அறிவிப்பு வந்து ஒரு வருஷம் ஆன மாதிரி ஒரு மனப் பிரமை இருந்தாலும், இப்ப முடிவுகள் அறிவிச்சுட்டாங்க.
என் புருஷனும் சந்தைக்குப் போறாங்கர கதையா, நானும், எனது மூன்று பதிவுகளை அனுப்பியிருந்தேன்.
அதில் ஒண்ணு மட்டும் டாப்10ல் முன்னேறியிருந்தது.
ஆனா, இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் அதுவும் தேறலையாம்.

So, I Failed!

அதாவது, நான் தோல்வி அடைந்தேன்! ;)

முதல் கட்டத்தில் முன்னேறிய அனைத்து பதிவுகளும் இங்கே!

இறுதிக் கட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து பதிவுகளும் இங்கே!

இறுதி கட்டத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

btw, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும், ராசாதான் பெரியவர், போன்ற சர்ச்சைகளை நாம் கண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில், எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அதை விட மிக முக்கியமாக, யாரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வீக்-எண்ட் ஆணி பிடுங்க வேண்டி இருப்பதால், என்னால் சரியான நேரத்துக்கு லைம்-ஸூஸ் கொண்டு வந்து உ.விரதத்தை நிறுத்த முடியாமல் போகலாம்.

இனி வரும் போட்டிகளில் ஞாயமாக நாம் வெற்றிக் கனியை பறிக்க முயல்வோம். டோஸ்ட்மாஸ்டர்ஸ் போல், பதிவர்களுக்கு, மொக்-மாஸ்டர்ஸ், துபாயில் குசும்பனும், சிங்கையில் கோவியாரும், சுவீடனில் செந்தழலும் நடத்தராங்க. ஏதாவது ஒரு ப்ரான்ச்ல சேந்து ஜமாய்ச்சிடலாம்.

;)

பி.கு: நான் அனுப்பியிருந்த என் மூன்று பதிவுகள்!
1) (அரசியல், சமூக விமர்சனங்கள்) FMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?

2) (நகைச்சுவை) சாரு வும் என் CEO வும்

3) (காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) குட்டிப் புகைப் படங்கள் சில

20 comments:

SurveySan said...

வாக்களித்த அனைவருக்கும் நன்னி!:)

பதிவு, சும்மா டமாசுங்க, யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க ;)

SurveySan said...

//பதிவு, சும்மா டமாசுங்க, யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க ;)//

ஏன், திரும்ப திரும்ப சொல்றேன்னா, இப்பெல்லாம் யாருக்கும், உள்குத்து, வெளிக்குத்து, இதுக்கெல்லாம் வேறுபாடு புரியமாட்டேங்குது ;)
(பார்க்க, என் முந்தைய பதிவு)

கோவி.கண்ணன் said...

//So, I Failed!

அதாவது, நான் தோல்வி அடைந்தேன்! ;)//

வேலியே பயிரை மேய்ந்த கதையாக விருது கொடுப்பவர்களும் போட்ட்டியில் கலந்து கொண்டால் !!!
:)

Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.
:)))))

நாமக்கல் சிபி said...

btw, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும், ராசாதான் பெரியவர், போன்ற சர்ச்சைகளை நாம் கண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில், எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அதை விட மிக முக்கியமாக, யாரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வீக்-எண்ட் ஆணி பிடுங்க வேண்டி இருப்பதால், என்னால் சரியான நேரத்துக்கு லைம்-ஸூஸ் கொண்டு வந்து உ.விரதத்தை நிறுத்த முடியாமல் போகலாம்.//

அப்படியே ஆகட்டும் தலைவரே!

நாமக்கல் சிபி said...

//ஏன், திரும்ப திரும்ப சொல்றேன்னா, இப்பெல்லாம் யாருக்கும், உள்குத்து, வெளிக்குத்து, இதுக்கெல்லாம் வேறுபாடு புரியமாட்டேங்குது ;)
(பார்க்க, என் முந்தைய பதிவு)//

இதுலயும் உள் குத்தா?
அடங்க மாட்டீரா நீரு?

SurveySan said...

//இதுலயும் உள் குத்தா?
அடங்க மாட்டீரா நீரு?//

ஐயோ சாரே, இதுல ஒரு உள்குத்தும் இல்லீங்க. இது ப்ளெயினா சொன்ன விஷயம் ;)
இதற்கு முந்தைய பதிவுதான் உ.குத்து ;)

SurveySan said...

//Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.///

;)

கோவி, வாழ்த்துக்கள் அகெயின்!

குடுகுடுப்பை said...

நானும் இப்பதான் பாத்தேன் என்னோட இரண்டு பதிவு முதல் ரவுண்டுல வந்திருக்கு.எனக்கே ஆச்சர்யம்தான் ஏன்னா நானே ஓட்டுப்போடலை.

SurveySan said...

குடுகுடுப்பை, வாழ்த்துக்கள் :)

கமான் சொல்லிடுங்க, 'நான் தோல்வி அடைந்தேன்' :)

சரவணகுமரன் said...

ஹையா... நானும் தோத்துட்டேன்...

கிஷோர் said...

நீங்கள் எங்கள் மனங்களை வென்றுவிட்டீர்கள்.


கொஞ்சம் பார்த்து போட்டுக்குடு சார். :)

SurveySan said...

சரவணகுமரன்,

//ஹையா... நானும் தோத்துட்டேன்...//

:) thats the spirit ;)

SurveySan said...

கிஷோர்,

///கொஞ்சம் பார்த்து போட்டுக்குடு சார். :)///

நீங்க ஆட்டத்துல சேரலையா?
'ந.தோ.அ' சொல்லல? கெலிச்சிட்டீங்களோ? ;)

Anonymous said...

//எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

aaaaaaaavvvvvvvvvvvvvvvv

SurveySan said...

வாங்க தூயா!

//aaaaaaaavvvvvvvvvvvvvvvv//

சிபியை சமாதானப்படுத்தரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் :)

வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

நான் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளில் ஒன்றில் 3-ஆவது,ஒன்றில் 4-ஆவது, இன்னொன்றில் 15-ஆவதாக வந்துள்ளேன்:)! வாக்களித்தவர்களுக்கு நன்றியும் சொல்லி விட்டேன் தமிழ் மண அறிவிப்புப் பதிவில். அதே சமயம் இந்தப் பதிவில் சொன்ன படி விருதினை நம் வலைப் பக்கத்தில் பதித்திடும் வாய்ப்பாகிய முதலிரண்டு வராததை I Failed என முழு மனதாக ஏற்றுக் கொண்டும் விட்டேன். வாங்க சர்வேசன் முயற்சிக்கலாம் நாம எல்லோரும் மறுபடியும்:)!

//Surveyசன் -பெறுபவன் அல்ல கொடுப்பவன்.//

கோவி.கண்ணனின் இவ்வரிகளை ரசித்தேன்:)!

கிஷோர் said...

//'ந.தோ.அ' சொல்லல? கெலிச்சிட்டீங்களோ? ;) //

நமக்கெல்லாம் நெம்ப தூரமுங்கோ :)

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!

SurveySan said...

//வாங்க சர்வேசன் முயற்சிக்கலாம் நாம எல்லோரும் மறுபடியும்:)!//


//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!! ;)

வெட்டிப்பயல் said...

Even me.. but in a diff competition :)

http://www.vettipayal.com/2009/02/blog-post_27.html