recent posts...

Sunday, November 30, 2008

மும்பை - புரியாத புதிர்கள்

first things first, மும்பையில் 60 மணி நேரத்துக்கும் மேல் அலைக்கழித்த, தீவிரவாதிகளை வெற்றி கரமாக, வீழ்த்தி, பணயக் கைதிகளை விடுவித்த எமது கமாண்டோக்களுக்கு ஒரு சபாஷும், ஒரு ராயல் சல்யூட்டும்!
இந்த ஆப்ரேஷனில் இன்னுயிரை ஈர்த்த, பொதுஜனத்துக்கும், வெளிநாட்டவருக்கும், போலீஸ், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதில் ஈடுபட்டு உயிரை இழந்த தீவிரவாத ஆசாமிகளை எண்ணினால், மனதளவில் குழப்பமே மிஞ்சுகிறது. பாக்கிஸ்தான்லேருந்து, கப்பல்ல வந்து, நடுவுல ஒரு மீன் படகை கடத்தி, அதுல இருக்கரவங்க தலைய அறுத்து, மும்பாய்க்குள் புகுந்து, ஹோட்டல், ரயில் நிலையங்களுக்கெல்லாம், குழுவாக சென்று, பலரை கொன்று, 60 மணி நேரங்கள் போராடி தானும் மடிந்து போனானே. எதுக்காக இப்படியெல்லாம் செய்யறான்?

  • மத வெறியா? இப்படியெல்லாம் செஞ்சா கடவுள் தன்னை காப்பாத்துவான்னு நெனைக்கறானா? கண்டிப்பா லேது.
    ரொம்ப சின்ன வயசுப் பசங்க. சொந்த ஊர்ல, வேலையே இல்லாதவங்களாம்.
    பிடிபட்ட, அஜ்மல எடுத்துக்கோங்க. வேலை இல்லாமல், ரொம்ப ரொம்ப ரொம்ப ஏழ்மையில் வாழும் இளைஞன். இவனை 'வசியம்' செய்த தீவிரவாத அமைப்பு என்னா பண்ணாங்க?
    இந்த ஆப்ரேஷனை, 'வெற்றி'கரமா முடிச்சா, இவன் குடும்பத்துக்கு 1 லட்சம் தரேன்னாங்களாம். அது மட்டுமில்லாது, இந்த மிஷன் முடிந்ததும், உயிருடன் திரும்பிவிடலாம்னு, பொய் சொல்லி தான், இந்த மிஷனுக்கே அனுப்பியிருக்காங்களாம்.
    இவனும், குடும்பத்துக்காக, இதை ஏற்றெடுத்து, ரெண்டு மாசம், 'ட்ரெயினிங்' எல்லாம் எடுத்துக்கிட்டு, இந்தியெல்லாம் கத்துக்கிட்டு, இந்த காட்டு மிராண்டித்தனத்துல எறங்கியிருக்கான்.
    ஒரு நிமிஷம், அஜ்மலின் பார்வையிலிருந்து, இவன் செய்ததை யோசித்துப் பாருங்கள்.
    ஏழைகள் இருக்கும்வரை, கேடுகெட்ட தீவிரவாதிகளுக்கு, ஆட்களை வேலைக்கு சேர்ப்பது ஒன்றும் பெரிய மேட்டரே கிடையாது.

  • எல்லாரும், இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததும், உடனே, பாக்கிஸ்தானை குத்தம் சொல்ல ஆரம்பிச்சிடறாங்க. ஆனா, பாக்கிஸ்தானிலும் கூட நேத்து 28 பேர் அவுட்டு. 'ethnic violence'ஆம்.
    இந்தியாக்கும், பாக்கிஸ்தானுக்கும் இருப்பது ஒரு பொதுவான எதிரியோ?
    ரெண்டு அரசும் இணைஞ்சு வேல செஞ்சாதான், இதையெல்லாம் கொஞ்சமாவது ஒடுக்க முடியும்.
    இங்க வெடிச்சா உன் குத்தம், அங்க வெடிச்சா இவன் குத்தம்னு மாத்தி மாத்தி கை காமிச்சிக்கிட்டு இருந்தா, தீவிரவாதி, போட்லயும் வருவான், ரோட்லயும் வருவானோ?

  • 'பாக்'னு சொன்னதும் ஞாபகத்துக்கு வர்ரது, நம் பதிவர்கள் மத்தியில் இருக்கும் பிரிவுகள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் இத்த செஞ்சதுன்னு, செய்திகளுக்கு மேல் செய்திகள், ஆதாரங்களுடன் ஊடகங்களில் அலசப்பட்டாலும், சந்துல சிந்து பாடும் சில பதிவுகள் அங்கங்க எட்டிப் பாக்குது. அதிலும், 'சீரா'ன்னு ஒரு பதிவர், அச்சு அசல், பாக் அனுதாபி மாதிரி ரொம்பவே வெளிப்படையா தன் கருத்ஸை சொல்லிக்கிட்டு வராரு. பேச்சுரிமை, பதிவுரிமை எல்லாம் தேவைதான், ஆனா, சீரா அவர்களே, இது கொஞ்சம் ஓவரா தெரீல? நீங்க மெய்யாலுமே, 'பாக்' தமிழரா, இல்ல 'இந்தியத்' தமிழரா? நல்லாருங்க! :(

  • இங்க அமெரிக்க CNNல், இந்தியாவில் இதற்கு முன் வெடித்த, குண்டுக்கெல்லாம், பெரிய நேரம் ஒதுக்கினதுல்ல. ஆனா, இம்முறை, தாஜ் ஹோட்டல், ஒபேராய்னு நல்ல எரியும் கட்டிடங்கள், 'விஷுவல்' கெடச்சதாலயோ, இல்ல, பிணைக் கைதிகள்னு ட்ராமா எல்லாம் இருந்ததால் வந்த ஈர்ப்பான்னு தெரீல, ரொம்ப நேரம் மும்பைக்கு நேரத்த செலவு பண்ணாங்க.
    CNN தொகுப்பாளினியின், கொமட்லயே குத்தலாம்னு பல தடவை தோணிச்சு. ஒரு விஷூவலில், ஒரு கமாண்டோ, ஜன்னலை பார்த்து குறி எல்லாம் பாக்காம, சும்மாக்காட்டி சுட்டுக்கினே இருந்தாரு. அவரு அப்படி சுடரதுக்கு, பல காரணம் இருந்திருக்கலாம். அதாவது, தீவிரவாதிகளின் கவனத்தை திருப்பவோ, இல்லை வேர ஏதாவது, pre-planned காரணம் கண்டிப்பா இருக்கும்.
    ஆனா, இந்த தொகுப்பாளினி, நம் கமாண்டோக்கு மேட்டரே தெரியாதுன்ர மாதிரியும், இந்த மாதிரி irresponsibleஆ சுட்டதாலதான், உள்ள இருந்த, jew பாதிரியார் செத்துட்டாரோன்ர ரீதியில் வுளரிக் கொட்டிக்கொண்டு இருந்தாள்.
    இந்த அமெரிக்க துரைகளுக்கு, இந்தியர்கள் என்றால் இன்னும் கிள்ளுகீரை, snake charmersங்கர எண்ணம்தான் அதிகமா இருக்கோ?
    இதற்கு பெரும்பான்மையான காரணம், நம்ம ஊரு 'ஆங்கில' சினிமாக்கார்களாகக் கூட இருக்கும். ஷ்யாம் பெனிகல் போன்ற ஆளுங்க, இந்தியாவ காட்டினாலே, புழுதி பறக்கும் கொல்காத்தாவும், சாக்கடையையும், பிச்சைக்காரனையும் மட்டுமே ப்ரதானப் படுத்திக் காட்டறாங்களே, அதனால் தான் இப்படியோ?

  • இவ்வளவு நடந்ததுக்கப்பரமும், மும்பை மக்கள் அமைதியா, ஒரு ஊர்வலம் போய், தங்களின், solidarityயை நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது.
    மீண்டும் வென்றது, மும்பை!
    Barely a mile away, the Leopold cafe, which was sprayed with gunfire by the terrorists, reopened briefly yesterday for a few minutes, with cheers greeting its owners serving beer.
    "I want them [the attackers] to feel we have won, they have lost," its manager, Farzad Jehani, said of the symbolic opening. "We're back in action."


  • NDTV, CNN IBN எல்லாம் பொறுப்பா நடக்க வேண்டிய நேரம் இது. எந்த 'ரத்தக் கொதிப்பு' அரைவேக்காடுகளையும் பேட்டி எல்லாம் எடுத்து போடக் கூடாது. ஏதோ ஒரு நடிகை, தன் வீட்டருகே இருக்கும், இஸ்லாமியர்களை குற்றம் சுமத்தினாராம். அவங்க வீட்ல எல்லாம், பாக்கிஸ்தான் கொடி பறக்க விட்டிருக்காங்களாம்.
    அடக் கொடுமையே, இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளிலும், மசூதியிலும், ஏற்றி வைத்துள்ள பச்சைக் கொடியை, பாக்கி கொடின்னு நெனச்சுக்கிட்டு, அந்த நடிகை லூஸ் மாதிரி பெனாத்துவதெல்லாம், டெலிகாஸ்ட் செய்யக் கூடாதோ?

  • அத்வானி வகையராக்கள், ஒரு மேட்டர் கிடைத்ததே என்று, வாயில் வருவதையெல்லாம் பினாத்துவதும், சகிக்கலை. பேச்சுவார்த்தை எல்லாம் பத்தாதாம். அதையும் தாண்டி ஏதாவது செய்யணுமாம். எல்லாம் ரைட்டுதான். நீங்களும் ஆட்சியில் இருந்தீங்களே சாரே, அப்பவே எல்லாத்தையும் முறி அடிச்சிருந்தீங்கன்னா இப்ப ப்ரச்சனையே இருந்திருக்காதே. தேவையில்லாம ஒரு மசூதியை இடிச்சு, ஒரு சில அல்ப ஆதாயங்களுக்காக, பல லட்சம் ப்ரச்சனைகளை, நிமிண்டி விட்ட கட்சிதான உங்களது?
    இன்னொரு பக்கம், சங் பரிவாரும், இந்துத்வா தீவிரவாதமும் வளர்ந்து வருகிறது. இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியலன்னா, வருங்கால இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக முடியும் அபாயம் இருக்கு.
    அரசியல் தலைகளே, எங்க பணத்தை கொள்ளை அடிங்க. நாட்டுக்கு ஒரு மண்ணாங்கட்டி நல்லதும் பெருசா செஞ்சு தியாகிகள் எல்லாம் ஆக வேணாம். ஆனா, இந்த விஷங்களை எல்லாம், இரு தரப்பிலும் வளர விடாமல், நசுக்கி மிதித்து பொசுக்கி விடுங்கள்.
    'எதிர்கால' இந்தியா பத்தி, 'பகீர்'னு, நெஞ்சடைக்கும் பயம், அப்பப்ப வருதா உங்களுக்கும்?

    India salutes its heroes.


    பி.கு: இந்த குழப்பங்களுக்கு நடுவில், சென்னையின் அடைமழை, அதைத் தொடர்ந்த ப்ரச்சனைகள் எல்லாம் இருட்டித்து விட்டது. ஆனா, மும்பையினரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது, தண்ணிப் ப்ரச்சனை ஒரு மேட்டரே இல்லன்னும் தோணுது. சென்னை தெருக்களும் வீடுகளும், நீரில் மூழ்கி, கொஞ்ச நாள்ள காஞ்சுடும். நாமளும், அடுத்த மழை வரைக்கும், ப்ரச்சனையின் 'வேரை' ஆராயாமல், அடுத்த பொழப்ப பாக்க போயிடுவோம்.
  • 19 comments:

    VANJOOR said...

    குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..

    ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் .. செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..இவை தவிர்க்கப்பட வேண்டும்..

    எல்லாமதத்தினர்..ஜாதியினர்..இடையே.. புல்லுருவிகள் உண்டு..

    அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..

    நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..

    ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம்.

    இந்தியாவை ஒருத்தராலும் அசைக்க முடியாது... அசைக்க முடியாது!! வாஞ்ஜுர்

    - வாஞ்ஜுர்

    SurveySan said...

    வாஞ்சூர்,

    ///ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம். ////

    கண்டிப்பா தவிர்ப்போம்.

    ராமலக்ஷ்மி said...

    //மத வெறியா? இப்படியெல்லாம் செஞ்சா கடவுள் தன்னை காப்பாத்துவான்னு நெனைக்கறானா?..................ஆட்களை வேலைக்கு சேர்ப்பது ஒன்றும் பெரிய மேட்டரே கிடையாது.//

    இதேதான்...நானும் சொன்னது. என் பதிவிலேருந்து அப்படியே கடத்திட்டு வந்திருக்கேன்.

    //மனிதம் மறப்பதே புனிதம் என
    போதிக்கிறது உமக்கு தீவிரவாதம்
    உங்கள் உயிரைப் பணயம் வைத்து
    பணம் பார்க்கிறது பயங்கரவாதம்.

    மூளைச் சலவையில் முகவரி தொலைத்து
    மூளை மயங்கி முகங்காட்டுவது வீரமென்று
    கையில் தரப்பட்ட 'ஏகே'க்களை ஏந்தி
    கண்ணில் பட்டவரை சுடுவதுதானா உம்வெற்றி?

    உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
    உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
    பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
    பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?//

    என் கவிதைக்கு பதில் கவிதை புனைந்த கபீர் அன்பனுக்கு நான் அளித்த பதிலும் உங்கள் பார்வைக்கு:

    //KABEER ANBAN said...
    //ஆதங்கத்தின் அழகான வெளிப்பாடு.//

    நன்றி கபீர் அன்பன்.

    // உங்கள் கவிதை இன்னுமொரு கவிதைக்கு வித்திட்டது. அதற்கும் நன்றி//

    உங்களுக்கு எப்படி என் கவிதை வித்திட்டதோ, அதே போல என் கவிதைக்கு வித்திட்டது சர்வேசனின் பதிவாகிய "Mumbai will survive" http://surveysan.blogspot.com/2008/11/mumbai-will-survive.html. குறிப்பாக அப்பதிவின் முதல் வரி.
    அவரது பதிவும் ஏறத்தாள உங்கள் கவிதையின் கருத்தைக் கொண்டதே.

    உங்கள் கவிதை தற்போதையே நிலைமைக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தரக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அதனை அப்படியே நடைமுறைப் படுத்த நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழும் போதெல்லாம், இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும்.. என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர்.

    அன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.

    உங்கள் கவிதை மெய்ப்பட வேண்டும்.//

    கபீர் அன்பனின் கவிதை இங்கே கிடைக்கும்:
    http://nirmal-kabir.blogspot.com/2008/11/blog-post_27.html

    SurveySan said...

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    பரவால்ல, நான் எழுதியதும், கவிதைக்கு வித்திட்டது மகிழ்ச்சி.

    கபீர் அன்பன் கவிதைய படிச்சுடறேன்.

    SurveySan said...

    CNNல் நிறைய வீடியோ செய்தி துணுக்குகள் இருக்கு

    http://www.cnn.com/video/#/video/world/2008/11/29/dcl.reva.bhalla.mumbai.terrorism.cnn

    anujanya said...

    நல்ல பதிவு சர்வேசன். மும்பை பயங்கரத்தை சற்று கிட்டச் சென்று பார்க்கும், கொடிய, வாழ்வில் பல பாடங்கள் கற்பித்த, அனுபவம் எனக்குக் கிடைத்தது. இணையம் என்னும் ஊடகம், இன்னும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

    அனுஜன்யா

    ராஜ நடராஜன் said...

    //ரெண்டு அரசும் இணைஞ்சு வேல செஞ்சாதான், இதையெல்லாம் கொஞ்சமாவது ஒடுக்க முடியும். //

    பிரச்சினையின் மையம் இங்கே ஒட்டிக்கொண்டுள்ளது.இந்தியாவின் முகம் - அரசு - அதன் கட்டளையில் உளவுத்துறை,ராணுவம் இயங்குகிறது.பாகிஸ்தான் தரப்பில் தற்போதைக்கு மட்டுமே ஜனநாயக முகமாக அரசும் ,சுதந்திர முடிவு எடுக்கும் அங்கங்களாய் ராணுவம்,உளவுத்துறை செயல்படுகிறது.

    இதனூடே மதவாத அடிப்படையில் இயங்கும் இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் சக்தி பாகிஸ்தான் அரசுக்கு கிடையாது."கூ" என்ற ராணுவ நிலை எந்த நிலையிலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அங்கே நிறையவே உள்ளது.சர்தாரி அரசின் அங்கமென்ற நிலையில் இரு நாட்டு உளவுத்துறை தலைமைகளும் சந்தித்துப் பேச ஒப்புவித்த போதிலும்,ராணுவ,உளவுத்துறையின் பிரிவுகள் இதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்து பெயருக்காக ஒரு உளவுத்துறை அதிகாரியை இந்தியா அனுப்புவதாகச் சொல்வதிலிருந்து பாகிஸ்தான் அரசு விரும்பினாலும் எந்த அளவுக்கு இந்தப் பேசித் தீர்த்துக்கலாம் வேலை சரிப்படும் எனத்தெரியவில்லை.

    இந்தியாவுடனான அணு ஆய்வுப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இதர கல்வி, பொருளாதார,வான் ஆய்வுக் களங்களில் தோற்றுப் போய்விட்ட நிலையில் பாகிஸ்தானின் அண்டை நாட்டுறவு கேள்விக்குரியதாகவே இருக்கும்.

    இதற்கு தூபம் போடுவது போல் இந்து மதவாத சக்திகளும் பிரச்சினையினை திசை திருப்புகிறார்கள்.நமது தேச நலனுக்கே ஊறுவிளைவித்து விட்டு பழியை அன்னிய தேசத்தவனிடம் போடுவது என்ன ராஜதந்திரம் எனப் புரியவில்லை.

    Truth said...

    சீரா-வ எங்குட்டு புடிச்சீரு? அவர நேருல பாக்கனும் போலயிருக்குது :)

    ரெண்டு நாடும் சேந்து தீக்க வேண்டிய விஷயம்னா சொல்றீங்க? அப்போ ரெண்டு நாடும் அதுக்கு ஒத்துழைக்கனும்ல? பாக் ஒத்துழைக்ற மாதிரி தெரியலயே. இது உக்காந்து பேசுற விஷயம் மாதிரியா தெரியுது.

    SurveySan said...

    ராஜ நடராஜன்,

    /////இதற்கு தூபம் போடுவது போல் இந்து மதவாத சக்திகளும் பிரச்சினையினை திசை திருப்புகிறார்கள்.நமது தேச நலனுக்கே ஊறுவிளைவித்து விட்டு பழியை அன்னிய தேசத்தவனிடம் போடுவது என்ன ராஜதந்திரம் எனப் புரியவில்லை.
    ////

    யெஸ்! எவனுக்கும் நாட்டின் மேல் அக்கரை இருப்பதாய் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, சீனா/க்யூபா போல், ஒரு 'அடக்குமுறை' நல்ல-சிந்தனை தலைவன் இருந்தால் தேவலை போலத் தெரிகிறது. :(

    SurveySan said...

    அனுஜன்யா, நன்றி!

    //இணையம் என்னும் ஊடகம், இன்னும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும்//

    இங்கேயு, சில தீய சக்திகள், சுற்றிக் கொண்டிருக்கின்றன.
    நல்ல செய்தி பரப்பி, அவர்களை, over power செய்தால் தான் உண்டு. :(

    SurveySan said...

    truth,

    ///சீரா-வ எங்குட்டு புடிச்சீரு? அவர நேருல பாக்கனும் போலயிருக்குது :)//

    என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. அவருதான், இன்னிக்கு, தமிழ்மணம் முகப்பில் எப்பவும், காட்சி தராரு ;)

    பாபு said...

    பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்றாலும்,
    உங்களின் பதிவின் பின்னூட்டத்தில் நான் தெரிவித்திருந்த சுரேகா அவர்களின்
    மும்பை மேரி ஜான் ,விமர்சனம் படிக்க அவரின் வலைப்பக்கம் இதோ
    surekaa.blogspot.com
    மூன்று பகுதிகளாக, மும்பை என் உயிர் என்று எழுதியிருப்பார்

    கோவி.கண்ணன் said...

    உங்கள் பதிவு பொறுப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. அதுக்காக நீங்க டிபிசிடி பதிவில் கேட்ட பழைய கேள்வியை இன்னும் மறந்துவிட்டேன் என்று பொருள் அல்ல :)

    Sridhar V said...

    சர்வேசன்,

    இரண்டு நாடுகளும் சேர்ந்து தீர்க்கிற பிரச்சினை என்பது புதிய கண்ணோட்டம். அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு கம்மி.

    பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாதத்துக்கும், இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலுக்கும் வேறுபாடு உண்டு.

    அபரிதமான மனித வளம் தகுந்த தலைமை இல்லாமல் இப்படி தற்கொலைப் படையாக சீரழிந்து போகிறது. நாம் ஆண்டாண்டு காலமாக வரலாற்றில் படித்து வரும் பெருமான்மையான வீர சரித்திரங்கள் இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களே.

    தேவை ஒரு தொலைநோக்குப் பார்வையுள்ள, மதத்தை கடந்த பார்வையுள்ள, நம்பிக்கையான, வலிமையான தலைமை.

    SurveySan said...

    நன்றி பாபு.

    SurveySan said...

    கோவி,

    /////உங்கள் பதிவு பொறுப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. ///

    நன்றி சாரே ;)

    ////அதுக்காக நீங்க டிபிசிடி பதிவில் கேட்ட பழைய கேள்வியை இன்னும் மறந்துவிட்டேன் என்று பொருள் அல்ல :)////

    அன்னிக்கும் இன்னிக்கும் என்ன தெரியுமா வித்யாசம்?
    அன்னிக்கு நீங்க கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு பதிவ படிச்சீங்க, இன்னீக்கு, கழட்டி வச்சுட்டு படிக்கறீங்க ;)

    SurveySan said...

    sridhar,

    ////தேவை ஒரு தொலைநோக்குப் பார்வையுள்ள, மதத்தை கடந்த பார்வையுள்ள, நம்பிக்கையான, வலிமையான தலைமை.////

    அந்த மாதிரி யாருங்க இருக்கா? சிங்கப்பூர்ல இருந்து, யாரையாச்சும், ரெக்ரூட் தான் பண்ணணும் :(

    கோவி.கண்ணன் said...

    //அன்னிக்கும் இன்னிக்கும் என்ன தெரியுமா வித்யாசம்?
    அன்னிக்கு நீங்க கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு பதிவ படிச்சீங்க, இன்னீக்கு, கழட்டி வச்சுட்டு படிக்கறீங்க ;)//

    அன்னிக்கும் இன்னிக்கும் என்ன தெரியுமா வித்யாசம்?
    அன்னிக்கு நீங்க கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு பின்னூட்டத்தை எழுதினிங்க, இன்னீக்கு, கழட்டி வச்சுட்டு பதிவை எழுதிட்டிங்க ;)

    anujanya said...

    சர்வேசன், கோவி அண்ணாச்சி,

    இருவருமே எதோ கூலிங் கிளாஸ் போடுவது தவறான கண்ணோட்டத்தைத் தருவது போலவும், அதைக் கழற்றினால் மேதா விலாசம் வருவது போலும் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ் நாட்டின் சமீபத்திய பெரும் அரசியல் ஆற்றல்கள் கூலிங் போட்டுக்கொண்டே சாதித்தது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை? :))

    அனுஜன்யா