PiTன் ஜூலை மாத போட்டியில் நடுவரா நின்னதால நம்ம திறமைய காட்ட முடியாம போயிடுச்சு.
தெறமைய காட்ட வாய்ப்பு கெடைக்காததும் நல்லதாப் போச்சு. வந்திருந்த அட்டகாசமான 100+ புகைப்படங்களுக்கு மத்தியில் சோப்ளாங்கி மாதிரி இருந்திருக்கும் என்னுது.
ஜூலைல வந்த புகைப்படங்களின் வெயிட் தெரிந்ததால், ஆகஸ்ட்டில் ஸைலண்டா, வேடிக்கை பாத்தேன். கோதாவுல எறங்கியிருந்தா, 100% மண்ணு கவ்வியிருப்பேன்.
புகைப்பட 'expert' என்ற பிம்பம் நொறுங்கியிருக்கும் :) அதுவும் தவிர, போர்ட்ரெயிட்டுக்கு மாடலும் கெடைக்கல (அது சரி, அடங்கு அடங்கு).
ஸெப்டம்பர் மாசத்துக்கு, கொஞ்சம் ஈஸியா, கலர் காட்டுங்கன்னு சொல்லிட்டாங்க. இப்பவும் கோதால எறங்கலன்னா, அப்பறம் அடுத்த வாய்ப்பு எப்ப வரும்னு தெரியாது.
(அது தவிர, An&m, Jeevesம் நடுவர் குழுவுல வேற இருக்காங்க. கொஞ்சம் பாத்து மார்க்கு போடுவாங்க என்ற நம்பிக்கை தான் ;) )
அதான் குதிச்சுட்டேன்.
சென்ற வாரம் இங்கு 4 நாள் தொடர் விடுமுறை, உழைப்பவர் தினமாம். உழைச்சு களைச்சிட்டோம்ல. 4 நாளு சூப்பரா, தெற்கு.கலிபோர்னியாவின் கடற்கரையோரம் ரவுண்டு கட்டி அடிச்சாச்சு.
குறிப்பா, பசிஃபிக் சமுத்திரத்தின் ஓரத்தில் அமைந்துள்ள 1-South freewayல் காரை ஓட்டிக் கொண்டு இரண்டு மணி நேரப் பயணம் அருமையிலும் அருமை. பலமுறை சென்றிருந்தாலும், ஒவ்வொருமுறையும், இனம் புரியா இன்பத்தை அளிக்கும் அந்தப் பயணம்.
வெள்ளக்காரன், ரோடு போட்டிருக்கான் பாருங்க, அடேங்கப்பா.
அதுவும், வழி முழுவதும் இருக்கும் பல ப்ரிட்ஜுகளும் அட்டகாசம்.
வாழ்க்கை வாழ்வதற்கேன்னு இவன் கிட்டதான் கத்துக்கணும்.
சரி, இனி கலர் காட்டுதலுக்கு வருவோம்.
கடற்கரை ஓரத்தில் பல கேளிக்கை சமாச்சாரங்கள் நிறைந்திருந்த இடத்தில், ஒருவர் பல கிளி வகைகளை வைத்து வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்.
கிளி அழகா எல்லார்கிட்டயும் ஹலோ சொல்லிட்டிருந்தது. அதன் கலர பாத்தவுடன், நம்ம PiTன் ஸெப்டம்பர் மாதப் போட்டித் தலைப்பான 'வண்ணங்கள்' ஞாபகத்துக்கு வந்துது.
க்ளிக்கிட்டேன். இன்னும் நல்ல கேமரா வாங்கல. தள்ளிகிட்டே போகுது. இப்போதைக்கு கையில் உள்ள Canon SD550 point&shoot வைத்து க்ளிக்கினது கீழே.
ஆசை ஆசையா வாங்கின, Nikon 35mm SLR கேமரா துரு புடிச்சு வீட்ல எந்த மூலைலயோ கெடக்கு. டிஜிடல் வந்தப்பரம் அத சீண்டரதே இல்ல.
கீழே உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு, மற்றவை பார்வைக்கு.
ஏற்கனவே போட்டிக்கு வந்த படங்களைப் பார்க்கும்போது, கொஞ்சம் கலக்கமாதான் இருக்குது.
Participation is key, so here I am :)
நீங்களும் கோதால தயங்காம எறங்குங்க.
கையில் இருப்பதை, டக்குனு அனுப்பாமல், முடிந்தவரை, புதிதாக, இதுவரை கற்ற உத்திகளை பயன் படுத்தி, சுட்டுத் தள்ளுங்க.
விவரங்கள் இங்கே!
நன்றி!
ஃப்ரெண்ட்ஸ்
ஸ்வெட்டர் கிளி
கொசுரூஸ் (படத்து மேல க்ளிக்கி பெருசா பாக்கலாம்)
கோலங்கள்
கோவக்கார கிளியார்
கோவக்கார கிளியார்
வெட்டியா நிக்கும் போட்ஸ்
வெள்ளக்காரரு
பறந்தாலும் விடமாட்டேன்
ப்ரிட்ஜு
பசிஃபிக்
எங்க ஊரு கோவிலு
சூரிய காந்தி க்ளோஸ்-அப்
ஏதோ சில செடீஸ்
பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
as I said earlier, Participation is Key, so Jump in, everyone!
;)
பி.கு: Mrs & Mr. VSK பாடிய ஜன கன மன கேட்டீங்களா?
14 comments:
பசிபிக் படமும் கிளிபடம் முதலும் சூப்பர்...
இந்த போட்டி அறிவிப்பு வரும்முன் நான் போட்ட ஒரு பதிவு பாத்தீங்களா?
http://click1click.blogspot.com/2007/08/blog-post_25.html
அடடா, பசிஃபிக் போட்டியில் சேக்கலியே :)
ஸ்வெட்டர் சரியில்லையா?
உங்க பதிவும் பாத்து பின்னூட்டியிருக்கேன். :)
படமெல்லாம் சூப்பர் ! :)
நல்லா கலர் காட்றீக
Nanri Anony!
படம் எல்லாம் சூப்பர்.
இந்த போட்டியை பார்த்தீங்களா: http://appaavi.hikanyakumari.com/?p=77
1st picture was really very nice. (2 parrots)
Aaha... neengallaam gothavula irangunaa naangallaam eppo thaan prize vaangurathu!! :-)
சுப்பரோ சுப்பரு கலரு. வாழ்த்துக்கள் சர்வேசன்!
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்னி!
மடிப்பாக்கம்,
நன்றி. என்னிக்குன்னு சொல்லுங்க, உங்க வீட்டுக்கே வந்து எடுக்கறேன். லைட்டிங் உங்க வேலை ;)
நல்ல கலர் காட்டுனீங்க.அழகா இருந்தது.போட்டி எல்லாம் பலமா இருக்கும் போல் இருக்கு.எல்லாரும் உங்களை மாதிரியே கலர் கலரா போட்டு ஒரு கலக்கு கலக்குறாங்க.வாழ்த்துக்கள் :)
மடிப்பாக்கம்,
//நன்றி. என்னிக்குன்னு சொல்லுங்க, உங்க வீட்டுக்கே வந்து எடுக்கறேன். லைட்டிங் உங்க வேலை ;) //
repeathhhuuuuu ;););););););)
Durga,
Thanks. mathavangaladhu munnaadiye paathirundhaa, naan godhavula erangiyirukka maatten :)
Post a Comment