recent posts...

Friday, January 12, 2007

ViVaதகளம் - ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் உதவிக்கு வரவும்.

வாங்க வாங்க. மனதை வாட்டும் ஒரு பெருத்த சந்தேகம் வந்தது. அதை நிவர்த்தி செய்து வைக்கவே அனைவருக்கும் இந்த அழைப்பு.

இதற்கு முந்தைய பதிவில் ( பாவம்யா பாவம் ) மனிதனால் மிருகங்கள் படும் அவஸ்தை பற்றி சொல்லி இருந்தேன்.

நானும் ஒழுங்கல்ல - அசைவ உணவிர்க்காக உயிரினங்கள் கொல்லப்படுவதர்க்கு காரணமாய் இருப்பவந்தான். அது தவிர leather shoe, leather belt என்றும் சில கொலைகளுக்கு காரணமாய் இருக்கிறேன்.

அசைவம் உண்ணப் படுவதால் விலங்கினங்கள் கொல்லப்பட்டு, அதன் மிச்சம் shoe செய்யப் பயன் படுகிறது என்று ஒருவரின் வாதம் இருந்தது.
( என் கணிப்பு, leather industry மற்றவர் உண்டதின் மிச்சத்தை கொண்டு செயல்படுவது அல்ல. அவர்களின் தேவையால்தான் அதிகப்படியான கொலைகள் நடக்கின்றதோ?)

1) so, if we are not directly driving the killings and only seek indirect benefits from the killing, is it Ok????

இந்துக் கடவுள்களும், சாமியார்களும் மிருகத்தின் தோலை அணிந்தும் அதன் மேல் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.
ஏசு பிரானும், முகமது நபியும் கூட ஆடுகளை உண்டதாக கதைகள் உண்டு.
இது தவிர இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் ஆடு மாடுகளை பலி இடுவது என்ற சம்பிரதாயம் ஆண்டாண்டு காலமாகவும் நடந்து வருகிறது.

2) கடவுளும் கடவுளின் தூதர்களும் இதை செய்யும் போது, சாமானியர்கள் நாம் செய்வதில் பிழை என்ன உள்ளது?


யாராவது மேலே உள்ள இரண்டு கேள்விக்கும் பின்னூடுங்களேன்.

நன்றி!

-சர்வே-சன்

12 comments:

SurveySan said...

அவசரமாக 'குரு' பார்க்க கிளம்புவதால், பின்னூட்டங்கள் நாளை accepடப்படும்.

SurveySan said...

Guru is a good movie. will write details later.

No comments on this post so far. hmm.

Anonymous said...

மிருகவதைக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சமண மதம் மட்டுமே அதனை ஒரு கோட்பாடாக கொண்டுள்ளது. இந்துக்களில் ஒரு சிலர் புலால் மறுப்பதால் அது மதநம்பிக்கையாகிவிடாது.

மிருகங்களின் மேல் அன்புகொண்டவர்கள் தங்கள் கவனத்தைக் கவர்ந்த மிருகவதையை தடுக்கமுடியுமே தவிர அறியாது உண்ட/பாவித்த பொருட்கள் பற்றி என்ன செய்யமுடியும் ? ஒருசெல் உயிரினத்திலிருந்து எதுவரை உங்கள் எல்லை என்பதும் வெவ்வேறு மனிதர்களையும்,மனநிலைகளையும்் பொறுத்தது.

Unknown said...

//இந்துக் கடவுள்களும், சாமியார்களும் மிருகத்தின் தோலை அணிந்தும் அதன் மேல் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.
ஏசு பிரானும், முகமது நபியும் கூட ஆடுகளை உண்டதாக கதைகள் உண்டு.
இது தவிர இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் ஆடு மாடுகளை பலி இடுவது என்ற சம்பிரதாயம் ஆண்டாண்டு காலமாகவும் நடந்து வருகிறது.//

தலைவா

இந்து சாமியார்கள் காட்டில் இயற்கையாக மரணமடைந்த புலி மற்றும் மான் தோலை தான் உரித்தெடுத்து பயன்படுத்துவார்கள்.மான் மற்றும் புலித்தோலில் காயம் பட்டிருந்தாலோ அல்லது துளை இருந்தாலோ வேட்டையாடப்பட்டது என்றெண்ணி அதை பயன்படுத்த மாட்டார்கள்.

ஏசு ஆடுகளை உண்டது இல்லை. அவர் மாமிசம் சாப்பிட்டதாக பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. மீனை மட்டும் அதை உண்ணும் மக்களுக்கு மலைப்பிரசங்கத்தில் கொடுத்ததாக இருக்கிறது. யூதர்களின் பாஸோவர் விருந்தை ஏசு உண்டதாக தெரிகிறது. பாஸோவர் உணவு என்பதில் செம்மறிஆடும் அடங்கும். ஆனால் அவர் ஆட்டை சாப்பிடாமல் தவிர்த்தும் இருக்கலாம்,சாப்பிட்டும் இருக்கலாம். நேரடியாக ஆட்டை சாப்பிட்டார் என எங்கும் குறிப்பு இல்லை என நினைக்கிறேன்.

ஆனால் அசைவ உணவை வலியுறுத்தும் பல வரிகள்,வசனங்கள் பைபிளில் உள்ளன. சைவத்தை வலியுறுத்தும் சில வசனங்களும் உண்டு. ஆனால் கிறிஸ்தவ மதத்தில் அசைவ உணவு தடுக்கப்பட்டதில்லை, சைவ உணவு தான் மேல் என சொல்லப்பட்டதுமில்லை. கேன்,ஆபெல் கதையில் நல்லவனான கேன் வேட்டையாடுபவனாகவும், வில்லனான ஆபெல் விவசாயியாகவும் காட்டப்படுவதாலும், கடவுள் ஆதாமை நீ நிலத்தில் வீழ்ந்து அதில் கிடைப்பதை உண்டு வாழு என சபிப்பதாலும் சைவ உணவை விட அசைவ உனவே மேல் என பைபிளில் சொல்லப்படுவதாக வாதிடுவோர் உண்டு.

அமெரிக்காவில் கத்தோலிக்கர்கள் வெள்ளியன்று மாமிசம் தவிர்ப்பார்கள்.கேரளாவில் 40 நாட்களுக்கு மாமிசம் தவிர்க்கும் கிறிஸ்தவர்கள் உண்டு.

SurveySan said...

அனானி,

//மிருகவதைக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சமண மதம் மட்டுமே அதனை ஒரு கோட்பாடாக கொண்டுள்ளது. இந்துக்களில் ஒரு சிலர் புலால் மறுப்பதால் அது மதநம்பிக்கையாகிவிடாது//

ஆன்மீகத்திற்கு சம்பந்தம் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும் நம் கோட்பாடுகளில் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
நான் சொன்ன மாதிரி ஆன்மீகத்தின் மூலமான கடவுள்களும் அவர்களின் தூதர்களும் விலங்கினங்களை கொல்வதும்/உண்பதும் தவறு என்று வெளிப்படையாக சொன்ன மாதிரி தெரியவில்லை. (ஜெயின் மதத்தை சார்ந்த சிலர் கூறியிருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையில் இல்லை)

so, விலங்குகளை கொல்வதும் உண்பதும், பயன்படுத்துவதும் nature என்று பெரிய குற்ற உணர்வு இல்லாமல் இருந்துவிடலாமா?

circle of life விதிகள் படி, ஒன்றை ஒன்று கழுத்தை பிடித்து கடித்து கொன்று உண்டு வாழ்வது by design தான் என்று நம்மை சமாதானப் படுத்திக் கொள்ளலாமா?

SurveySan said...

செல்வன், வாங்க வாங்க.

//இந்து சாமியார்கள் காட்டில் இயற்கையாக மரணமடைந்த புலி மற்றும் மான் தோலை தான் உரித்தெடுத்து பயன்படுத்துவார்கள்.மான் மற்றும் புலித்தோலில் காயம் பட்டிருந்தாலோ அல்லது துளை இருந்தாலோ வேட்டையாடப்பட்டது என்றெண்ணி அதை பயன்படுத்த மாட்டார்கள்.
//

சாமியார்கள் கண்டிப்பா மிருகங்களை தேடிச் சென்று கொன்று தின்றிருப்பார்கள் என்று சொல்லவில்லை.
ஆனால், அதனை அவர்கள் உபயோகிப்பது இப்படி வெளிப்படையாக காட்டுவதால், மற்ற உயிரினங்களை ஆடையாக பயன் படுத்துவது சரி என்ற எண்ணம் விதைக்கப் படுகிறது. அது சரியா?

ஏசு நீங்கள் சொன்னது போல் மீன் உண்டிருக்கிறார்.
said unto them, Have ye here any meat? And they gave him a piece of broiled fish. ... And he took it, and did eat before them" (Luke 24:41-43).

ஆடும் உட்கொண்டதாக netல் சுட்டது:
"JESUS and his disciples ate the Paschal Lamb in the supper-room. They divided into three groups. Jesus ate the Paschal Lamb with the twelve Apostles in the supper-room, properly so called; Nathaniel with twelve other disciples in one of the lateral rooms, and Eliacim"


//ஆனால் அசைவ உணவை வலியுறுத்தும் பல வரிகள்,வசனங்கள் பைபிளில் உள்ளன.//

சரிதான். அதனால் தான் கேட்டேன். மதங்களே 'தவறு' என்று சொல்லாத பட்சத்தில், மனிதன் மிருகவதை செய்வதும் உபயோகிப்பதும் தொடரலாமா?

செல்வன் said...

//சாமியார்கள் கண்டிப்பா மிருகங்களை தேடிச் சென்று கொன்று தின்றிருப்பார்கள் என்று சொல்லவில்லை.
ஆனால், அதனை அவர்கள் உபயோகிப்பது இப்படி வெளிப்படையாக காட்டுவதால், மற்ற உயிரினங்களை ஆடையாக பயன் படுத்துவது சரி என்ற எண்ணம் விதைக்கப் படுகிறது. அது சரியா?//

இது ஒரு வகையான ஆர்கானிக் தோல் பொருள் என்றுதான் சொல்லவேண்டும்.காட்டில் இருக்கும் சாமியார்கள் குளிர்காலத்தில் தங்களை போர்த்துக்கொள்ள இது தேவைப்பட்டது.அவர்களுக்கு மிக எளிதில் கிடைக்கும் ஆடையாகவும் இது இருந்தது.

மேல்பார்வைக்கு இதை பார்த்தால் "சாமியார்களே மான் தோல் பயன்படுத்துகின்றனர்" என்ற எண்ணம் வருவது உண்மைதான்.


ஏசு நீங்கள் சொன்னது போல் மீன் உண்டிருக்கிறார்.
said unto them, Have ye here any meat? And they gave him a piece of broiled fish. ... And he took it, and did eat before them" (Luke 24:41-43).//

தலைவா

அது ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தபின் சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது.

பாஸோவரில் அவர் ஆட்டை சாப்பிடார் என்பது தவறு என்று சொல்கிறார்கள்.மொழிபெயர்ப்பில் உணவு என இருக்கும் கிரேக்க வார்த்தையை மாமிசம் என மொழிபெயர்த்துவிட்டார்கள் என்று சர்ச்சை இருக்கிறது.

இப்படி வாதங்கள் இருக்கிறது என்பதற்காகவே இவற்றை குறிப்பிட்டேன்.ஆனால் அவர் அசைவ உனவை உட்கொள்ளுபவராக இருந்திருக்க கூடிய வாய்ப்புகளே அதிகம்.

SurveySan said...

செல்வன்,

//தலைவா
அது ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தபின் சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
//

எப்ப சாப்பிட்டா என்னங்க. சாப்டது சாப்டதுதான் :)

( ஒருவேளை உயிர்த்தெழுந்தது சும்மா 'மாயை', அதனால கணக்குல வராதா?)

//இது ஒரு வகையான ஆர்கானிக் தோல் பொருள் என்றுதான் சொல்லவேண்டும்.காட்டில் இருக்கும் சாமியார்கள் குளிர்காலத்தில் தங்களை போர்த்துக்கொள்ள இது தேவைப்பட்டது.அவர்களுக்கு மிக எளிதில் கிடைக்கும் ஆடையாகவும் இது இருந்தது.
//

செத்த மிருகங்களின் தோலை உரித்து எடுத்து அணிபவர்கள் நம் சாமியார்கள் என்பது நம்பகமாயில்லை.

தோலை உரித்து எடுப்பது ரொம்ப கோரமான செயல்.
அதை அவர்கள் செய்யாமல், சந்தையில் வாங்கி அணிபதாகவே எனக்குத் தோன்றுகிறது.
so, indirectly they are also creating a demand for animal skins and also spreading a bad impression that it's OK to use animal products and by-products.

Hope you agree!

SurveySan said...

வேற வாதங்கள் ஒண்ணும் இல்லியா? vivaதத்தை முடிச்சு ஒரு தீர்ப்ப சொல்லிடவா?

வல்லிசிம்ஹன் said...

மான் தோல், புலித்தோல் ஏன் பயன்படுத்தினார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அறியாமல் பேசிப் பயன் இல்லை.
நல்லதொரு விவாதக்களம்.கண்டுக்காமல் போவது தப்பு என்பதால் எல்லோரும் பார்த்து கலந்துகொள்ளவேண்டும்.

SurveySan said...

ஹரிஹரன் விளக்கமா இதைப்பத்தி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அவருக்கு நன்றீஸ்.

அங்கே கடைசியாக நான் போட்ட ஒரு பின்னூட்டம் இது:

//காட்டில் தவமியற்றியபடியே வாழும் முனிவர்கள் அதே காட்டில் மூப்படைந்து இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலை தவமியற்றும் போது உடுத்தப் பயன்படுத்தப்படுவது
தவறில்லை//

இன்னும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
இது பற்றி இணையத்தில் குறிப்பு ஏதேனும் இருக்குமானால் அதன் சுட்டியை தாருங்கள். உபயோகமாய் இருக்கும்.
இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலை பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனால் இயற்கையாய் மடியும் விலங்குகளின் தோலெல்லாம் அவ்ளோ சுலபமா கிடைக்குமா? self-decay or scanvengers கிட்ட மாட்டி அழிஞ்சுடுமே.
அந்த காலத்து சாமியார்னா கூட ஓகே தான். இந்த காலத்தில ஆசிரம சாமியார்கள் பலரும் கூட இதே போல் அல்லவா செய்கிறார்கள்.
உதாரணம் இங்க பாருங்க. இந்த புலிய பாத்தா வயசு வந்து செத்த புலி மாதிரி தெரியலியே -
Clik here to view image of Sri Sai Baba

சரி சரி சரி - ஓவரா கேக்கறேனோ? மத்தவங்க கருத்து ஏதாவது வருதான்னு பாப்போம் ஹரிஹரன்.

நன்றி!

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

//அறியாமல் பேசிப் பயன் இல்லை.
நல்லதொரு விவாதக்களம்.கண்டுக்காமல் போவது தப்பு என்பதால் எல்லோரும் பார்த்து கலந்துகொள்ளவேண்டும்.//

correct - கண்டுக்காமதான் இருக்காங்க. அவங்களுக்கு இதற்கான அர்த்தம் புரியாததனால் கூட இருக்கலாம்.