நந்தலாலா பாத்து அளக்கவும் அளந்தாச்சு. விமர்சனம் செய்த ஏனைய பலரும் படத்தை வெகுவாகவே புகழ்ந்திருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு புகழ்ந்திருக்கிறார்களோ, அதே அளவுக்கு, இந்தப் படம் ஜப்பானிய மொழிப்ப்படமான கிக்குஜீரோ'வின் காப்பி என்றும் அளந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிஸ்கின், இது எதைப் பார்த்தும் காப்பி அடித்ததில்லை என்று அளந்திருந்ததால், படத்தை பார்த்து குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டத்துக்கு, இது மென்னு துப்ப நல்ல விஷயமாக மாட்டியிருந்தது.
எல்லாரும் சொல்றாங்களே, அப்படி என்னதான் அந்த கிக்குஜீரோவில் இருக்குன்னு பாக்க, அதன் டிவிடியை வாங்கி நேத்து பாத்தேன். இதிலிருந்து, மிஸ்கின் என்னவெல்லாம் லவுட்டி இருக்காருன்னு தெரிஞ்சிருக்கரதுக்காகவும், எந்த அளவுக்கு படத்தில் சொந்தச் சரக்கு இருக்குன்னும் தெரிஞ்சுக்கவும்.
என்ன இருந்தாலும், என்னை நம்பி இருக்கர உங்களுக்காக இதைக் கூடச் செய்யலன்னா, என் தார்மீகக் கடமையிலிருந்து தவறியது போலாகிடும் இல்லையா? அதனால் தான் இந்த மெனக்கெடல் ;)
முதலில் கதைக் கரு. இது 99% ஒத்து வருது. தத்துனூண்டு மாறுதல்களும், பாத்திரப் படைப்புகளும், தமிழில் கண்டிப்பா இருக்கு. கிக்குஜிரோவில், குட்டிப்பயலும், ஒரு கோமாளி ரௌடியும் தாயைத் தேடிச் செய்யும் பயணம். நந்தலாலாவில், குட்டிப் பயலும், ஒரு ம்ன நல நோயாளியும் தாயைத் தேடிச் செல்லும் பயணம்.
ஸோ, கதை கண்டிப்பா லவுட்டப் பட்டிருக்கு. மிஸ்கினுக்கு ஃபெயில் மார்க் இதுக்கு.
ஆனா, பயணத்தில் இருவரும் சந்திக்கும் பலப் பல மக்களின் குணாதிசியங்களும், அவர்களால் படத்திற்கு கிட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளும், தமிழில் பளிச். மிஸ்கினின் கற்பனையும், படைப்புத்திறனும், இதில் நிச்சயமாய் முந்துகிறது. இதுக்கு கண்டிப்பா 100% கொடுக்கலாம் இவருக்கு.
குட்டிப்பையனின் மேனரிஸம், அப்படியே கிக்குஜிரோவின் தாக்கத்தில் இருக்கு. காட்ச்சிக்கு காட்சி, அவன் தரையைப் பார்த்து நிற்பதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார் தமிழில். இதுக்கு ஃபெயில் மர்க்கு.
அங்கே கிக்குஜீரோவாக வரும் கோமாளி ரௌடி, இங்கே பாஸ்கரனாக மிஸ்கின். மிஸ்கின் பல மடங்கு மிளிர்கிறார். எல்லாரிடமும் அதட்டலாய் பேசும் மேனரிஸம், அங்கேருந்து லவுட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், அருமையான நடிப்பின் மூலம், மிஸ்கினே மனதில் தங்குகிறார். மிஸ்கினுக்கு 80% கொடுக்கலாம்.
காட்சியமைப்பு/ஒளிப்பதிவு - இரண்டு படங்களிலும், ஒரே மாதிரியான டெக்னிக்கு கையாடல். அவார்டு படங்களுக்கே உரித்தான பாங்கு. ஒரு காட்சி முடிந்த பின்னும், சில விநாடிகள் அதையே காட்டிக் கொண்டிருக்கும் டெக்னிக்கு இரு படத்திலும் உண்டு. கேமரா ஏங்கிள்களிலும் ஒற்றுமை இருந்தது. ஆனா, மகேஷின் கேமராவில் ஏதோ ஒரு பயங்கரமான வசீகரம் இருந்தது. ஜப்பானின் பச்சை நம்ம ஊர் பச்சையுடன் எடுபடவில்லை. மகேஷின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிற்கிறது. இதில் மகேஷுக்கே அதிகம் மதிப்பெண். 100% கொடுக்கலாம். கிக்குஜீரோவை மகேஷும் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது (மிஸ்கின் சொன்னதை நல்லா உள்வாங்கியும் இப்படி உருவாக்கியிருக்கலாம்).
இசை. கிக்குஜீரோ பார்க்கும்போது, அந்தப் படத்துக்கும், ராஜாவே இசை அமைச்சாராங்கர அளவுக்கு இனிமையா இருந்தது. மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் இசைதான் கிக்குஜீரோவிலும். ஆனா, ஒரே வேற்றுமை, நந்தலாலாவில் 2 1/2 மணி நேரத்தில், 2:20 மணி நேரங்கள், இசை இருந்து கொண்டே இருந்தது. 10 நிமிஷம் மௌனமா இருந்திருக்கும். ஆனா, கிக்குஜீரோவில், முக்கால்வாசி, லைவ் ரெக்கார்டிங் தான். ரொம்பப் பிரதான காட்சிகளில் மட்டுமே இனிமையான இசை இசைத்தது. குறிப்பா, ஒரு தீம் இசை மாதிரி பியானோவில், படம் முழுக்க வந்து கொண்டே இருந்தது. படம் முடியும்போது, நமக்கு அந்த இசைத் துணுக்கு மனப்பாடம். ரம்யமான இசை. ராசாவும் மௌன ராகத்தில் இந்த மாதிரியெல்லாம் அநாயசமா பண்ணியிருக்காரு. ஒரு தரமான படத்துக்கு, மௌனம் பல இடங்களிலி அவசியம் என்பது என் எண்ணம். கிக்குஜீரோவில் ஒரு காட்சியில், ஒரு சைக்கிள் ஓட்டரவரு கீழ விழுந்துடுவாரு. அவரை இன்னும் ரெண்டு பேரு இழுப்பாங்க. அவங்க இழுக்கும் சத்தமும், சைக்கிளும் ஆளும் ரோட்டில் சிறாய்க்கும் சத்தமும் 'லைவ்'வாக கேட்பது போல், இசை இல்லாமல் கேட்கும். அப்பத்தான் அந்த மாதிரி காட்சிகளை நல்லா உள்வாங்க முடியும்னு நெனைக்கறேன். தமிழில், அநேகமாய் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு இசை வந்துக்கிட்டே இருக்கு. குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.
குட்டிப்பயலின் நடிப்பு, தமிழில் ஜோர். அங்கே சுமார்.
படத்தில் வரும் மற்ற பயண நட்புகளும் சகபாடிகளும், தமிழில் ஜோர். அங்கே சுமார்.
மனசுக்கு ஒத்தடம் கொடுக்கும் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் தமிழில் டபுள் ஜோர். அங்கே சுமார்.
ஸோ, கதைக் கரு, காட்சியமைப்பு மட்டுமே லவுட்டப் பட்டுள்ளது.
மற்றதெல்லாம் அக்மார்க் மிஸ்கின்/ராஜா/மகேஷ் இணைந்து செய்த மாஸ்ட்டர் பீஸ்!
ஆனா, எது எப்படி இருந்தாலும், அடுத்தவர் உழைப்பை சரியான ஊதியம்/அங்கீகாரம் கொடுக்காமல், லவுட்டியது பெரும் குற்றமே.
எல்லாம் ஒரு க்ளிக் தூரத்தில் இருக்கும், இந்த இணைய உலகில், இனி யாரும் யாருக்கும் தெரியாம காப்பி அடிக்க முடியவே முடியாது.
என் பெரிய வருத்தம், இப்படி ஒரு படைப்பை, உலகச் சந்தையில் கொண்டு போய், பல அவார்டு வாங்கிக் குவிக்கமுடியுமாங்கரதுதான். 'மூலக் கதை'ன்னு 'ஜப்பானிய கிராமியக் கதை'ன்னோ 'கிக்குஜீரா'ன்னோ போட்டிருந்திருக்கலாம். அட்லீஸ்ட், டைட்டிலில், கதை மிஸ்கின்னு போடாம விட்டிருந்திருக்கலாம் :|
மிஸ்கினுக்கு தண்டனையாக, நந்தலாலா படத்தில் வருவது போலவே தலையத் தொங்கப்போட்டுக்கிட்டு சில வாரம் இருக்கணும். அப்பாலிக்கா, 'அஞ்சாதே' போல், நெத்தியில் அடிச்ச மாதிரி, ராசா இசையுடனும், மகேஷ் ஒளிப்பதிவுடனும், நச்சுன்னு ஒரு படம் உடனே கொடுக்கவும். சைலண்ட்டாகிடறோம்.
13 comments:
Very nice boss. I enjoyed the way you presented this article.
I am planning to watch the moive this weekend and the "original" after that.
நன்றி வேழமுகன்.
கண்டிப்பா பாருங்க. தமிழில் முதலில் பார்ப்பது சாலச் சிறந்த செயல். originalஐ லூஸ்ல விட்டுடலாம். அவ்ளோ பெரிய தாக்கம் இல்லை அதிலே.
தலை,நம்மாளுங்க இந்த படத்துக்கு,google யை துவசம் பண்ணிட்டாங்க போல.
nandhalala ன்னு போட்டா nandalala japanese film ன்னு கூகுளே search suggestion சொல்லுது.
தலை, குஜராத் ல் இருப்பதால்,இதை பார்க்க முடியல..போன வருஷம் முழுக்க பாட்டுக்களை கேட்டுட்டு,கடைசியா படம் பார்க்க முடியல..so sad ..
ஒரு வண்டு கூட்டமே,,,என்னோட favourite ..
அருமையா ஒப்பிட்டிருக்கிங்க.. நல்லா இருக்கு.. இன்னும் ரெண்டு படமும் பார்க்கலை.. பொறுமையா பார்க்கணும்.
சுவாரஸ்யமான ஒப்பீடு.
//குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.//
அது சரி:))!
நல்ல ஒப்பீடு.
@Thirumalai Kandasami படத்தில் எல்லா பாட்டும் இல்லை. இந்த மாதிரி படத்துல பாட்டு இல்லாம இருப்பதே பலம்.
@கையேடு நன்றி. தியேட்டரில் பாருங்க. ரொம்ப பொறுத்தீங்கன்னா, தியேட்டரை விட்டுப் போயிடும் :)
@ராமலக்ஷ்மி நன்றி ராமலக்ஷ்மி. உங்க ரெவ்யூவை எதிர்பார்க்கும்,
-சர்வேசன் ;)
@பாலகுமார் நன்றி பாலகுமார்.
//தமிழில் முதலில் பார்ப்பது சாலச் சிறந்த செயல். originalஐ லூஸ்ல விட்டுடலாம். அவ்ளோ பெரிய தாக்கம் இல்லை அதிலே.//
எந்த இடத்துலையும் நாடகத்தன்மை வந்திடாம நகைச்சுவையைப் பிரதானப்படுத்தி இருந்தது கிகுஜிரோ.. ரொம்ப அழுத்தமான படமாத்தான் எனக்குத் தெரிஞ்சிது.. நம்ம தமிழ்நாட்டு இயல்புகளோட ஒத்துப்போற நந்தலாலா முக்கியமான படம்தான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா அதுக்காக கிகுஜிரோவுல தாக்கம் இல்லைங்கிறது பெரிய சோகம்..:-((((
@கார்த்திகைப் பாண்டியன் தாக்கம் இல்லைன்னு சொன்னது தப்புதான். 'கனமான' தாக்கம் இல்லை. நீங்க சொல்ற மாதிரி ரொம்ப லைட்டா கொண்டு போயிருந்தாங்க படத்தை. நந்தலாலாவின் ஒருஜினல் இதுன்னு தெரியாம இருந்திருந்தா, ஜப்பானியப் படத்தை முழுசாப் பாத்திருப்பேனான்னு தெரியலை. அந்த ஹீரோவைப் பிடிக்கலை எனக்கு. :)
Post a Comment