recent posts...

Wednesday, August 25, 2010

உமாசங்கர் IAS - ஹம் ஹோங்கே காம்யாப்!

லஞ்சம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். சிலருக்கு, அப்படின்னா என்னான்னே தெரியாம இருக்கவும் வாய்ப்பிருக்கு. கேட்பதர்க்கு முன்னரே கொடுத்து பழக்கப்பட்டவர்களா இருப்பாங்க அவங்க.

லஞ்சத்தை பொறுத்தவரை, உலகில் மூன்று வகையான ஆசாமிகள் இருக்கோம்.
அ. லஞ்சம் வாங்குபவர்கள்.
ஆ. லஞ்சம் வாங்க வாய்ப்பில்லாததால் லஞ்சம் வாங்காதவர்கள்.
இ. லஞ்சம் வாங்க வாய்ப்பிருந்தும் லஞ்சம் வாங்காதவர்கள்.

முதல் பிரிவு, எல்லாருக்கும் தெரிந்த கழிசடைகள், சமுதாயத்தின் சாபம், Parasites, etc.. etc.. நம்மெல்லாருக்கும் ரொம்பவே பழக்கப்பட்ட ஜந்துக்கள் இவை. லூஸ்ல விடுவோம் இப்போதைக்கு இவங்களை.

இரண்டாம் பிரிவில்தான், லஞ்சத்துக்கு எதிரா பதிவு போடும், நம்மில் பலரும் இருக்கோம் என்பது என் எண்ணம். நான் லஞ்சம் வாங்குவதில்லை, ஏன்னா, லஞ்சம் வாங்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதில்லை. அந்த வாய்ப்பிருந்தா நான் எப்படி மாறுவேன்னு எனக்குத் தெரியாது.
லஞ்சம் வெறும் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பென்ச்சுக்கு அடியில் வாங்குவதல்ல. தனியார் நிறுவனங்களில் ஒரு purchase order 'அப்ரூவ்' பண்ண வாங்கும் கமிஷன் எல்லாம் கூட லஞ்ச வகைதான்.
இரண்டாம் பிரிவில் இருக்கும் பெருவாரி ஜனங்களுக்கு நமோஷ்கார். இவிகளையும் லூஸ்ல விட்ருவோம் இப்போதைக்கு. நல்லவங்க இவங்க, சான்ஸ் கெடைக்கர வரைக்கும்.

இந்த மூணாவது பிரிவு இருக்கே, இவிகதான், அதிசயப் பிறவிகள். இவங்க மட்டும் மனசு வச்சு, பென்ச்சுக்கு கீழ கைய நீட்டிட்டா, லட்சம் லட்சமா லஞ்சப் பணம் இவர்களால் அள்ளிக் குவிக்க முடியும். ஆனா பாருங்க, இவங்க வளஞ்சு கொடுக்க மாட்டாங்க.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நாணயம், கொள்கை, நாட்டுப் பற்று, மனிதப் பற்று, இப்படி நல்ல நல்ல விஷயங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மிக முக்கியமாய், மானம், ரோஷம் உள்ளவர்கள்.
இந்த வகை மனிதர்கள், நம்ம ஊர்ல, விரலை விட்டு எண்ணிடலாங்கர அளவுக்குத் தான் இருக்காங்க.
லஞ்சம் குடுக்காம நம்மூர்ல இருக்கரது சுலபமாக சாதிக்கக் கூடிய விஷயம். ஆனா, லஞ்சம் வாங்காம, சுத்தி இருக்கும் ஆயிரமாயிரம் முதலைகளை சமாளிக்கக் கூடியது, அசாத்தியமான ஹெர்கூலியன் தவம்!
உமா சங்கர் IAS அப்படிப்பட்ட மூன்றாவது பிரிவை சேர்ந்த மனிதர் மாதிரி தெரியுது.

இவரைப் பற்றி சமீபத்திய செய்திகளில் படிச்சிருப்பீங்க.

மனுஷன், IAS ஆனதும் ஆனாரு, அரசாங்க எந்திரத்தில் இருக்கும், அழுக்கு ஒவ்வொண்ணா எதிர்த்து போராடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நிக்கறாரு.

லஞ்சம் வாங்குவது கூச்சமே இல்லாம, சம்பளம் வாங்கர மாதிரி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க நம்மூர்ல. அந்த கழிசடைகளுக்கு நடூல, இந்த மனுஷன் முட்டி மோதிக்கிட்டு இருக்காரு.
சினிமா வில்லன் கணக்கா, மொத்த அரசும் அரசாங்கமும், இவரை பழி தீர்க்க என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.

இரண்டாம் பிரிவாகிய நாம், இந்த மூன்றாம் பிரிவில் இருக்கும் உமாசங்கருக்கு, பெருசா ஒன்னியும் செய்ய முடியாது, நம்ம கையாலாகாத்தனத்தை பதிவாகவோ, ஈ.மடலாகவோ, பதிவதைத் தவிர.
பதிவோம். மேல் விவரங்கள் இங்கே

வாழ்க பாரதம்!

ஹம் ஹோங்கே காம்யாப்! ஏக்கு தின்!
உஹூ ஹூ ஹூம்!
ஓ ஹோ மன் மே ஹே விஷ்வாஸ்!
பூரா ஹே விஷ்வாஸ்!
ஹம் ஹோங்கே காம்யாப்! ஏக்கு தின்!

லஞ்சமில்லா சமுதாயம் கண்டிப்பாய் ஓர் நாள் ஏற்படும்.
எப்பன்னு தெரியல்ல.
ஆனா, கண்டிப்பா நடக்கும்.
முதல் பிரிவில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்கும்போது, புழுவை பாக்கர மாதிரி அவங்களப் பாக்க ஆரம்பிங்க.
அதுதான் முதல் படி.

Uma Shankar, keep fighting! we support you!

5 comments:

SurveySan said...

"Umashankar had raised questions about the disappearance of a subsidiary of ELCOT from its records altogether along with Rs.700 crore assets, she said."

இப்படி பலப் பல விஷயங்கள். மயக்கமே வரும் போலருக்கே, இவரு எதிர்த்து நிற்கும் முதலைகளை நெனச்சா.
700கோடியெல்லாம் ஒரு மேட்டரே இல்லாம லவுட்டி இருக்காங்களே.

SurveySan said...

ஹிந்தி ஏன்னு சாட்ல ஒருத்தர் கேட்டாரு.
நேத்துதான், My name is Khan பாத்தேன். அதில் இந்த பாட்டு வரும். அதன் தாக்கம். இத்தினி வருஷமா இதம் பொருள் தெரியாம இருந்தது.

We shall Overcomeனு அர்த்தமாம். இதுவும் கடந்து போகுங்கர மாதிரி. அதான், இதுல நொழச்சேன்.

SurveySan said...

http://jerryeshananda.blogspot.com/2010/08/blog-post_25.html


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?


தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

@SurveySan
கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு

..

அவரு குடும்பத்து ஆள்தான் நான்னு டில்லியிலேயே சொன்னதை டேப் எடுத்து டைம்ஸ் ஆன் லைன்ல போட்டதை நீங்க பாத்து கேக்கலையா?

என்ன சர்வேஸ்??????

hariharan said...

நல்லா சொல்லியிருக்கீங்க...

எல்லார்கிட்டயும் உள்மனிதர்கள் உறங்கிகிடக்கிறார்கள். வலைபதிவர்கள் உள்மனிதனை வெளிப்படுத்துகிறார்கள்.

வாழ்த்துக்கள்.