recent posts...

Sunday, July 18, 2010

Alaska in HDR

'சாதா படங்களை' ஸூடோ HDR படங்களாக மாற்ற, Dynamic Photo HDR என்ற செயலி (software) அற்புதமாக செயல்படுகிறது.
DPHன் கைவண்ணத்தில், சமீபத்திய அலாஸ்கா பயணத்தின் போது எடுத்த சில படங்கள், பார்வைக்கு.

Glacier Bay


கப்பல் அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜில் இருந்த, குட்டி சரக்கு பாட்டில்கள். (கு.கு.கெ)





எங்க கப்பல்.


ஓ.சி பஃபே, காலை, மதியம், மாலை, பொழுதன்னைக்கும். ஓசிதானேன்னு, ஒவ்வொருதபாவும், எல்லா ஃப்ளேவரையும் மூக்கு முட்ட பிடிச்சு தள்ளாடி தள்ளாடிதான் மிச்ச நாள் நகரும்.


Skagwayயில் ஒரு சலூன்.


ஏதோ ஒரு பூ.

வாடகை சைக்கிள். அலாஸ்காவில், பல தீவுகளில், மக்கள் தொகையே 1000த்துக்கும் கீழ்தான். இந்த மாதிரி சைக்கிள் கடை வச்சிருக்கவங்க, வருஷத்துல நாலு மாசம் மட்டும் வியாபாரம் பாத்துட்டு, மிச்ச சீசன் இல்லா மாதங்களில் வேற ஊருக்கு எஸ்கேப் ஆகிடறாங்க.


Ketcihkanன் குட்டி துறைமுகத்தின், குட்டி கப்பல்.


சால்மன் மீன். கடலிலிருந்து, நதிக்குள் எதிர்நீச்சல் போட்டு உட்புகும் சீசன் இது. இயற்கையின் மிகப் பெரிய அதிசயங்களில் இந்த மீனின் செயல்பாடும் அடங்கும். அலாஸ்காவின் காடுகளுக்கு நடுவில் இருக்கும் ஏரிகளில், முட்டை போடும். முட்டையிலிருந்து வந்ததும், நதியில் கலந்து, நீந்தி கடலை அடைந்து, வளர்ந்து வயதானதும், மீண்டும் நதியில், தான் சிறு வயதில் வந்த அதே வழியில் எதிர்நீச்சல் போட்டு ஏரியை அடையும். முட்டை போட்டதும், உயிரிழக்கும்.
எப்படிதான் ரூட்டை ஞாபகம் வச்சுக்குதோ, எப்படிதான் அம்புட்டு தூரம் எதிர்நீச்சல் போடுதோ. ஆச்சரியம். இப்படியெல்லாம் கடின உழைப்பு செய்வதால் தான், சால்மனின் ருசி அமோகமா இருக்கோ? ;)


ஈகிள்ஸ். (my personal favorite among this trip pics)


சண்டை போடும் காட்சி, சரியான ஃபோக்கஸில் கிளிக்காகதால், இப்படி வலை போட்டு, டச்சப் பண்ணியாக வேண்டிய நிர்பந்தம் :(


Ketchikan, வானவில் அருவி.


Juneau அருவி

Victoria, British Columbia Butchet Gardensல் நடந்த வானவேடிக்கை


இன்னும் வரும்...

5 comments:

சரவணகுமரன் said...

பட்டையை கிளப்புறீங்க... படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

SurveySan said...

நன்றீஸ் சரவணகுமரன்.

பட்டையை கிளப்புவது DPHன் தொழில் நுட்பம். என் பங்கு ரொம்ப கம்மி இந்த படங்களில் :)

Anonymous said...

padangal ellam super :)

Aruvi padangal ellam wallpaper maari irukku :)

Andha meenoda clickum super :)

ஆ! இதழ்கள் said...

சர்வே,

படங்கள் எல்லாம் தூ.....ள். எல்லா படங்களும் DPH பண்ணியதா இல்லை சிலது மட்டுமா? எது எதுனு சொன்னா ஜம்முனு இருக்கும். ஏதோ ஒரு பூவும், ஈகிள்ஸும் DPH பண்ணியிருக்கீங்களா?

என்னுடைய P&Sல எடுத்த படம் ஒண்ணு இங்கே போட்டிருக்கேன். photomatixல பண்ணது.

SurveySan said...

ஆ! எல்லாமே DPH'd.
இல்லாத மேகத்தையும் எப்படியோ DPH கொண்டு வந்துடுது, அமோகமான சாஃப்ட்வேர்.