recent posts...

Thursday, November 26, 2009

நச் கதை போட்டி - சர்வே ஆரம்பம்

நச் போட்டிக்கு 70 கதைகள் வந்து, எழுபதில், சென்ஷி துணையுடன், டாப்20ஐ தேர்வும் செய்தாயிற்று.
எழுபது கதைகளின் குட்டி விமர்சனங்களையும் பாத்திருப்பீங்க.
கே.ரவிஷங்கரும், கதைகளுக்கான விமர்சனம் எழுதியிருக்காரு.

இனி, டாப்20லிருந்து, முதல் பரிசு (US$20), மற்றும் இரண்டாம் பரிசுக்கான (US$10) கதையை தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பம். பரிசு பணமாகவோ, வேறு மார்கமாகவோ, வென்றவர் விருப்பத்தின் படி பட்டுவாடா செய்யப்படும்.
ஏற்கனவே அறிவித்தபடி, பரிசுத் தொகையைத் தவிர, US$70, முதல் பரிசு வென்றவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும்.

(டாலர் வீக்காகிக் கொண்டு வருவதைப் பார்த்தால், பரிசுத் தொகைய வச்சுக்கிட்டு ஒரு குச்சி முட்டாய் தான் வாங்க முடியும் போலருக்கே :) )

கீழே, வாக்குப் பெட்டியில் இருபது கதைகள் கட்டம் கட்டப்பட்டுள்ளன.
உங்களுக்கு மிகவும் பிடித்த நச் கதைக்கு உங்கள் வாக்கை போடுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நச் கதைகள் சம அளவில் பிடித்திருந்தால், அனைத்துக்கும் உங்கள் வாக்கை போடும் வசதி உண்டு.
கதையை யார் எழுதியது என்பதை மனதில் கொள்ளாமல், கதையின் சிறப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு, உங்கள் வாக்கைப் போடவும்.

வெற்றிக் கதை, உங்கள் வாக்குகளையும், சென்ஷி, வெட்டிப்பயல், மற்றும் CVRன் மதிப்பெண்களையும் கலந்தடித்து, தேர்வு செய்யப்படும்.

சர்வே பொட்டி December 13ஆம் தேதி மூடப்படும்.

தயவு செய்து கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்கவும். சிறந்த கதை வெல்லட்டும்.



வாக்குப்பெட்டி தெரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்!
போட்டிக்கான கதையை வாசித்து போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் பஹூத் பஹூத் நன்றீஸ்!

நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்.
பிரியாணிக்காக வெயிட்டிங்!


பி.கு: இன்னோர் கதைப் போட்டி இங்க நடக்குது. - http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

26 comments:

கோவி.கண்ணன் said...

போட்டியில் என் பதிவை சேர்க்காமல் விட்டதற்கு கன்டனம்.

SurveySan said...

கோவி, என்ன கொடுமைங்க இது?
கதை எழுதினா 'சேக்க வேணாமா'?

நானும் கவனிக்கல்ல. மிஸ்ஸாயிடுத்து. ஐ ஆம் த சாரி.

கதையை படித்தேன், 'சத்' கம்மியான 'நச்'. உங்க கிட்டயிருந்து, இன்னும் பன்ச் கூட்டி வந்திருக்கலாம் ;)

in other words, டாப்20க்கான சாத்யக்கூறுகள் கம்மியாதான் இருக்கு, உங்க நச்க்கு.

சென்ஷி? ;)

thamizhparavai said...

வாழ்த்துக்கள்....
//இதுவரை வந்த வாக்குகளைப் பார்க்க, இங்கே சொடுக்கவும்.//
அங்க போய்ப் பார்த்தா ஓட்டு விபரம் தெரிய மாட்டேங்குது. சரி பண்ணுங்க சர்வேசன்...
நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ராம்குமார் - அமுதன் said...

/*வாழ்த்துக்கள்....
//இதுவரை வந்த வாக்குகளைப் பார்க்க, இங்கே சொடுக்கவும்.//
அங்க போய்ப் பார்த்தா ஓட்டு விபரம் தெரிய மாட்டேங்குது. சரி பண்ணுங்க சர்வேசன்...
நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்...*/

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.......

SurveySan said...

எனக்கும் தெரியலை, அதனால லிங்கை தூக்கிட்டேன். :)

SurveySan said...

90 வாக்குகளுக்கும் மேல் கள்ள வாக்குகள் வந்துள்ளன.

மீ, நாட் லைக்கிங் திஸ் :(

SurveySan said...

தயவு செய்து கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்கவும். சிறந்த கதை வெல்லட்டும்.

thamizhparavai said...

//90 வாக்குகளுக்கும் மேல் கள்ள வாக்குகள் வந்துள்ளன. //
நமக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது எனப் பார்ப்பதற்குக்கூட ஓட்டுப் போட்டுப் போக வேண்டியிருக்கிறது.
அதுபோக இந்த வாசகர் வாக்கு முறை சரியான தீர்ப்பைத் தரும் எனத் தெரியவில்லை..
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகர்களுக்கு சரியான டெஃபனைசன் இல்லை.
ஜட்ஜஸ் எல்லாக் கதைகளையும் படித்து சிறந்ததைச் சொல்வர்.
ஆனால் வாசகர்களில் 20 கதைகளையும் படித்தவர்கள் 10 பேருக்கு மேல் தாண்டாது.
போட்டியில் இருப்பதால் அதுவும் டாப் 20 வந்த பின்புதான் நானே 20 கதைகளையும் படித்தேன். அங்கு பின்னூட்டினேன்.
ஆனால் இங்கு வாக்களிக்கும் வாசகர்கள் அவர்களுக்குத் தெரிந்த பதிவர்களுக்கு வாக்களிப்பதில் அதிக வாய்ப்புகள் உள்ளது...
இம்முறை சிறந்ததாக இருக்கலாம்...ஆனால் கதைகளைப் பற்றிய மதிப்பீட்டிற்கு ஒவ்வாது.(நானொன்றும் சிறந்த கதை எழுதவில்லை).. ஆனால் உண்மையில் என் கதை எந்தத் தரத்தில் அது பத்தாமிடமா அல்லது பத்தொன்பதாவது இடமா எனத் தெரிந்து கொள்வதற்க்குக் கூட இம்முறை சரியான வாய்ப்பளிக்காது என்பது என் எண்ணம்.
இரண்டு நடுவர்கள், இன்னும் இரண்டு நடுவர்கள் கூடப் போட்டு தேர்ந்தெடுத்தால் அவர்களின் கூட்டு ரசனையில் கதையின் உண்மையான தரம் தெரியவரும்..
இது என் எண்ணம் மட்டுமே...மற்றவை தங்கள் பரிசீலனைக்கு...

SurveySan said...

தமிழ்ப்பறவை,

////நமக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது எனப் பார்ப்பதற்குக்கூட ஓட்டுப் போட்டுப் போக வேண்டியிருக்கிறது.////

அப்படி பாக்கும்போது, உங்க வாக்கு திரும்ப கூட்டப் பட மாட்டாது.
ஒன்றுக்கு மேற்பட்டமுறை க்ளிக்கும்போது, விடைகள் மட்டுமே காட்டப்படும்.

/////இது என் எண்ணம் மட்டுமே...மற்றவை தங்கள் பரிசீலனைக்கு../////

ஜனநாகயக முறைப்படி தேர்தல் நடக்குது. எல்லா யோசனைகலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள படும்.

வெறும் வாக்கை மட்டும் வைத்து வெற்றிக் கதை தீர்மானிக்கப் படமாட்டாது. பதிவில் சொன்னது போல், நடுவர்ஸின் பங்களிப்பும் இருக்கும்.

கள்ள வாக்குகள் கொம்பேனியர் உதவியுடன் கண்டறிந்து களையப்படும்.

thamizhparavai said...

//அப்படி பாக்கும்போது, உங்க வாக்கு திரும்ப கூட்டப் பட மாட்டாது.
ஒன்றுக்கு மேற்பட்டமுறை க்ளிக்கும்போது, விடைகள் மட்டுமே காட்டப்படும்//
ஒரு முறை பிரௌசர் க்ளோஸ் ஆகி, மீண்டும் வந்தால் கூட்டிக்காண்பிக்கிறது...சோதனை செய்து பாருங்கள்

SurveySan said...

தமிழ்ப்பறவை, எனக்கு அப்படிக் காட்டவில்லை.
ஆனா, இது ஒவ்வொரு ப்ரௌவ்ஸர் செட்டிங்கின் படி மாறி செயல்படலாம்.

இப்போதைக்கு, திரும்ப போய் வாக்க முடியாத மாதிரி மாத்திட்டேன்.

ஆனா, இணைய வழி சர்வேக்கள் எல்லாம், இந்தளவுக்குத்தான் 'திடமா' இருக்கும்.
டெக்னாலஜியை விடுங்க, மக்கள்ஸை நம்புவோம்.
எப்படிப் போவுதுன்னு பாப்போம் :)

thamizhparavai said...

மிக்க நன்றி சர்வேசன்...
நம்புவோமாக....

மணிகண்டன் said...

சர்வேசன் மாமா - என்னோட கதை பச்சையா இருந்தது - அதை மஞ்சளா மாத்திட்டீங்க. அது கூட பரவாயில்லை. ஆனா எனக்கு மட்டும் அந்த பொட்டில வோட்டு போடவே விடமாட்டேங்குது. ஏன் ? பொறுமையா டைம் கிடைக்கும்போது சரி படுத்துங்க. அதே மாதிரி என்னோட கதைக்கு விமர்சனம் எழுதாத சென்ஷிக்கு என்னோட கண்டனம் தெரிவிச்சிக்கறேன்.

பச்சை கதைல மூணு / நாலு கதை படிச்சி பார்த்தேன். அப்படின்னா மஞ்ச கதையெல்லாம் எப்படி இருந்திருக்கும் ? ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு :)-

SurveySan said...

மணிகண்டன் சாரே,

////சர்வேசன் மாமா - என்னோட கதை பச்சையா இருந்தது - அதை மஞ்சளா மாத்திட்டீங்க////

ஸ்மைலி போடாம இப்படி கலரு ஜங்குனு மாறிடுச்சுன்னு சொன்னீங்கன்னா, எல்லாரும் என் integrityயில் சந்தேகப் படப் போறாங்க :)

Anonymous said...

//நமக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது எனப் பார்ப்பதற்குக்கூட ஓட்டுப் போட்டுப் போக வேண்டியிருக்கிறது.//

ஆமாம். சர்வேசன். எனக்கு எத்தனை ஓட்டு விழுந்துருக்குன்னு தெரியலை. சர்வே ரிசல்ட் என்னான்னு மட்டுமாவது வெளியிடலாம்.

நீச்சல்காரன் said...

எங்கோ எதிலோ கதைகளை படித்து கதைகளை வெறுத்து போன எனக்கு நல்ல கதைகளை படிக்க ஒரு வாய்ப்பு கிட்டியதற்கு மகிழ்ச்சி.

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். ஓட்டை குத்தியாச்சு.

SurveySan said...

//// சர்வேசன். எனக்கு எத்தனை ஓட்டு விழுந்துருக்குன்னு தெரியலை. //////

ஜனநாயக முறைப்படி, தேர்தலுக்குப் பிறகு கடைசியில் வாக்கெண்ணிக்கை தெரிய வரும் :)

Cable சங்கர் said...

intha oottu podura aattam veenaamee.. paathikku paathi kalla oottuthaan. nichayam oottu poota kathaikal listla seekkaama unga naduvar moolamave select pannunkalen.

ஸ்வர்ணரேக்கா said...

நானும் வோட்டு போட்டாச்சு...

Prathap Kumar S. said...

ம்ம்ம்.. இந்தவாட்டியும் காலி சட்டிதானா.... சென்ஷீஷீஷீஷீஷீஷீஷீஷீ....
ஒண்ணுமில்ல.. அடுத்தவாட்டி முயற்சி பண்ணுறேன்னு சொல்லவந்தேன்... அவ்வ்வ்வ்வ்

Prathap Kumar S. said...

அய்யோ என் ஒட்டைக் காணலை.. கொஞசம் லேட்டா வந்தா வேறயாரோ போட்டுட்டுபோய்ட்டாங்கய்யா.. இங்கேயுமாய்யா கள்ள ஓட்டு...

எங்கவிட்டுல 4 ஒட்டு இருக்கு தலைக்கு எவ்வளவு கிடைக்கும்...? ஹீஹீஹீ...பழக்கதோஷம்...

SurveySan said...

யம்மாடியோவ். இன்னும் பத்து நாள் இருக்கு.
பெரீய்ய்ய தேர்தல் ஆயிடுச்சோ? :)

இதுவரை 400+ வாக்குகள் வந்திருக்கு.

நடுவர்களாக நாலு பேர் உள்ளனர். நாலாவது ஆள் யாருன்னு, முடிவு அறிவிக்கும்போது சொல்றேன்.

நான் அவனில்லை :)

mee-and-mine said...

Hi Surveysan, I read all the stories in ur survey the year before last.. u write nice stories.. and the participating stories were too good too.. was busy with family(kid) last year.. Indha varusham, wanted to chumma send a story to know ur comments... I know, these mite not be categorized as 'nach' kadhaigal. But wanted to know ur comments on my stories.. if u have time, plz visit my blog..
sample stories r below.

http://mee-and-mine.blogspot.com/2008/05/blog-post.html (my first attempt)

http://mee-and-mine.blogspot.com/2008/09/blog-post.html

http://mee-and-mine.blogspot.com/2008/10/blog-post.html


(tamil kadhaigal dhaanga..)

Vidhoosh said...

சும்மா என்ன நடக்குதுன்னு பாக்க வந்தேன்.

இன்னும் வாயில் இருந்து மண் போகவில்லை. அதுனால நொம்ப பேஸ முடீல..
:))
-வித்யா

SurveySan said...

results will be announced on dec 14th Monday.

500+ votes
4 judges.

SurveySan said...

a day delay in announcing resultsy.
jorrrry..

will announce on tuesday.