Thursday, November 19, 2009

பல்லாவரம் ஸீனரியும் ஒரு பெருமூச்சும்...

பல்லாவரத்திலிருந்து வேளச்சேரிக்கு செல்ல ஒரு 200அடிப் பாதை உருவாகிவருகிறது.
GSTயிலிருந்து, இந்த பாதைக்கு இணப்புத் தரவேண்டிய மேம்பால வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஸ்லோதான், ஆனா வேலை நடக்குது.

சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல்னு இருக்கும். மழை பெஞ்சா, தண்ணி நெரஞ்சு, பல்லாவர மலையின் பிம்பம் தெரிந்து, பாக்கவே ரம்யமா இருக்கும்.

சமீபத்தில் க்ளிக்கிய படம் இங்கே:


புதுக் கொடுமை என்னன்னா, சாலையின் அடுத்த பக்கம், இதே போல் ரம்யமாக இருந்து வந்த இடம், இப்போ குப்பைக் கொட்டும் இடமாக மாறிவிட்டிருப்பது.

கொக்கும் நாரைகளும் காகைகளும் கூடிக் குலாவிய இடம், இப்போ, ப்ளாஸ்டிக் குப்பைகளின் இருப்பிடமாகிப் போனது.

டூ-வீலரில் போனா, 'ஹோ என்னுயிரே, ஓஹோஹோ என்னுயிரே'ன்னு மாதவன் கணக்கா ஓட்டிக்கினு போன காலம் போயி, இப்ப, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹ்ம்!



இந்த மாதிரி தாழ்வான பகுதிகள், மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் இடமாக பராமரிக்காமல், இப்படி குப்பை போட்டு நாசம் செய்யப் படுவது, மிக வேதனையாக உள்ளது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிகாரிகள் யாராவது, இதை கரெக்ட் செய்ய வேண்டும்

சுதாரிப்பார்களா அதிகாரிகள், இல்லை பல்லாவரத்தை நாரடித்துத்தான் அடங்குவார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

19 comments:

ஆ! இதழ்கள் said...

படம் நன்னாயிருக்கு.

அப்புறம் ஒரு சின்ன சந்தேகம். பொருத்திருந்து சரியா? இல்லை பொறுத்திருந்தா? (பொறுமையில இருந்து வந்ததா?) குழம்பிட்டேன்.

SurveySan said...

ஆ! இதழ்கள்,

பொறுத்து பொறுத்து பாத்து பொங்கி எழுந்துட்டீங்க, என் எழுத்துப் பிழைகளை திரு(று)த்த :)

பொறுத்திருந்துதான் கரீட்டு. மாத்திட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

யாருக்குத் தெரியணுமோ அவங்களுக்கு தெரியலீங்க.

மேலும், இப்ப இருக்கின்ற கொஞ்ச இடத்திலேயும், எவ்வளவு சாக்கடை கலக்கின்றது.

இது போதாது என்று, செப்டிக் டாங்க் கீளீனிங் லாரி எல்லாம் அந்த பக்கத்தில் வந்து தான் கொட்டுவாங்க..

இராகவன் நைஜிரியா said...

http://paamaranpakkangal.blogspot.com/2009/11/blog-post_19.html

அண்ணே முடிஞ்சா இந்த இடுகையையும் பார்த்துட்டு வாங்க..

குப்பை கொட்டுவதன் மர்மம் புரியும்.

vasu balaji said...

அம்பத்தூர் ஏரில எம் எம் டி ஏ ப்ளாட் போட்டுட்டானே. தெரியாதா=))

SurveySan said...

இராகவன் நைஜிரியா, கொடுமை.
கேக்க ஆளில்லைன்னா கொட்டரவன் கொட்டிக்கிட்டேதான் இருப்பான்.
இந்த 'ஏர்ல' ஏதோ ப்ராப்ளம் இருக்கு. சோம்பேரித்தனம் எல்லாருக்கும் சுலபமா வந்துடுது :)

SurveySan said...

வானம்பாடிகள்,

MMDA என்னாத்த டெவலப் பண்ணி யாருகிட்ட கொடுத்துட்டு போகப் போறானோ?

இவனுங்க டெவலப் பண்ணி பண்ணிதான், இந்த லெவலுக்கு வந்து தொலச்சிருக்கோம். எங்க போய் முடியப் போவுதோ.

சங்கர் said...

//தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிகாரிகள் யாராவது, இதை கரெக்ட் செய்ய வேண்டும்//

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்

உண்மைத்தமிழன் said...

அப்ப நீங்க பல்லாவரமா..? சொல்லவே இல்லை..? எப்ப வந்தீங்க இங்க..?

SurveySan said...

சங்கர், சரிதான் நீங்க சொல்றதும். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருக்கத்தான் செய்றாங்க. ஆனா, பரவலா இல்லை.
நம் தலைமுறைத் தலைகளும் இப்படித்தான் இருக்குங்கரது, கூடுதல் வேதனை.

SurveySan said...

உண்மைதமிழன்,

டெண்டுல்கர் பாணீல சொல்லணும்னா, ஐ ஆம் எ இந்தியன், பிஃபோர் ஐ ஆம் எ பல்லாவரியன் ஆர் குரோம்பேட்டையன்.

:)

வல்லிசிம்ஹன் said...

எப்ப வந்தீங்க சர்வேஸ்.
நல்ல மழைக்காலமாப் பார்த்து வந்து இருக்கீங்க.
பதிவர் மீட்டிங் உண்டா:)

எங்களுக்கெல்லாம் புலம்பறது மட்டுமே பழகி இருக்கு. இதை என்ன செய்யணும்னு நினைச்சுப் போனவங்களுக்கும் புலம்பல் பட்டமே கிடைச்சிருக்கு.

Jawahar said...

னங்க இங்கே குப்பை கொட்டக் கூடாதுன்னு போலிஸ் ப்ரொடக்ஷன் போடறது ஒரு டைப்பு. அப்படிப்பண்ணா போலிஸ் இல்லாதப்போ குப்பை கொட்டிடுவாங்க. இன்னொண்ணு குப்பை கொட்ட தயங்கற மாதிரி அந்த இடத்தை மைண்டைன் பண்றது. அதுவும் நம்ம ஆளுங்க கிட்டே ஒர்க் அவுட் ஆகாது. டிராபிக் தொந்தரவு இல்லைன்னா மவுன்ட் ரோடிலேயே ஆய் போகிற ஜாதி நாம. ஆகவே அங்கே ஒரு பெரிய்ய குப்பை கொட்டற டிரைலர் நிறுத்தி இதுல கொட்டுங்கடான்னு சொல்லலாம். நகராட்சி ஆளுங்க ரெகுலரா அதை அப்புறப் படுத்தலாம். எனக்குத் தெரிஞ்சி சிங்கப்பூர்ல இப்படித்தான் பண்றாங்க.

http://kgjawarlal.wordpress.com

SurveySan said...

வல்லி மேடம்,

வணக்கம். வந்து கொஞ்ச நாளாச்சு. அஃபீஷியல் ட்ரிப்பு, ஸோ பதிவர் சந்திப்ஸுக்கு நேரம் இருக்காது ;)

பத்து பேர் பொலம்பினா, ஒருத்தருக்காவது, அதைப் பாத்து ஏதாவது ஆவேசம் வரலாம். வரட்டும் :)

SurveySan said...

jawahar,

////ஆகவே அங்கே ஒரு பெரிய்ய குப்பை கொட்டற டிரைலர் நிறுத்தி இதுல கொட்டுங்கடான்னு சொல்லலாம்.//

ஹ்ம். நல்ல ஐடியாதான்.
அதிகாரிகள் முழுச் சோம்பேரிகளும் இல்லை. மெதுவாச் செய்யறாங்க.
எங்க தெருவில் இப்படிதான் குப்பையை கண்ட மேனிக்கு கொட்டிக்கிட்டு இருந்தாங்க, மூணு வருஷத்துக்கு முன், இப்ப ரூல் போட்டு, குப்பையை லாரி வரும்போது தான் கொடுக்கணும்னு செயல்படுத்தியிருக்காங்க.

Raja said...

நீங்களும் அங்க கொட்டலைல !


மனிதன் அடுத்தவரை பார்த்தே அனைத்தையும் இந்த உலகில் கத்துக் கிட்டான் !


அவனின் தவறும் அவ்வாரே தான் ! என்ன பார்த்து செய்த தவறு உங்கள பார்த்து திருத்தி கொள்ளலாம் !


அடடா , நீங்களும் செய்யாதீங்க யாராவது ஒருத்தர் மாற வாய்ப்பு இருக்கு ! இதைத் தான் சொல்ல முயன்றேன் ! ;)


நான் புதுசா ப்ளாக் பண்ண ஆரம்பிசிருக்கன்கோ !

Anonymous said...

....................................................................................................

Thamira said...

சுதாரிப்பார்களா அதிகாரிகள், இல்லை பல்லாவரத்தை நாரடித்துத்தான் அடங்குவார்களா?
//

உங்களுக்கு வெளியூரா?

ஏற்கனவே நாறிப்போயி ரொம்ப நாளாவுது தல..

SurveySan said...

ராஜா, நன்னி.

ஆதிமூலகிருஷ்ணன், நான் பல்லாவரம் இல்லை. ஆனா, அதுக்கிட்டதான்.
இதுவரைக்கும் நாறினது தெரியும். ஆனா, இந்த நாத்தம் பெருசு.