பதிவுலகில் குப்பை கொட்டத் தொடங்கி 2 1/2 வருஷம் ஆச்சு. இந்த 2 1/2 வருஷத்துல, உபயோகமான, ரொம்ப நாள் மனசுல நிக்கப் போற விஷயம், பொன்னியின் செல்வன் பத்தி தெரிஞ்சுக்கிட்டதும், வந்த ஆர்வத்தால் புத்தகம் வாங்கிப் படிச்சதும் தான்.
சின்ன வயசுல, கல்கி எல்லாம் வீட்ல வாங்கிப் படிச்ச ஞாபகம் இல்லை. எதிர் வீட்ல வாங்கர குமுதமும் விகடனும் தான் நமக்கு எல்லாமாவும் இருந்தது.
ஐந்து வால்யூமில், கடைசி வால்யூமும் படிச்சு முடிச்சாச்சு. படிச்சு முடிச்சதும், ஆர்வக் கோளாறுல, சிவாஜியின் ராஜ ராஜ சோழன் படத்தை, தேடிப் பிடிச்சு இணையத்தில் பாத்தேன். பெரிய பல்புதான் கெடச்சுது. சொத்தலா எடுத்திருக்காங்க படத்தை.
ஒரு ப்ரமாண்ட படமா தயாரிக்க, சகல கருவும், பொன்னியின் செல்வனில் இருக்கு. யார் யார் எந்த வேடத்தில் நடிக்கணும், திரைக்கதை எப்படி இருக்கணும்ன்னெல்லாம், ஒவ்வொரு பதிவா,வருங்காலத்தில் எடுத்து வுடறேன். புடிச்சுக்கோங்க.
இப்போதைக்கு, ஐந்தாம் பாகத்தின், நட் ஷெல்லு பாப்போம்.
நான்காம் பாகத்தில், ஆதித்த கரிகாலர், கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்ததையும், நந்தினி பெரிய பழுவேட்டரையர், மற்ற 'சதி' கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கூட அங்கே குழுமியிருந்ததைப் பார்த்தோம்.
. அதாகப்பட்டது, ஆதித்தருக்கு, கடம்பூர் சம்புவரையரின் மகள் மணிமேகலையை கண்ணாளம் கட்டி வச்சிடணும், அப்பாலிக்கா, சோழ ராஜ்யத்தை ரெண்டா பிரிச்சடணும், பாதி ஆதித்தருக்கும், பாதி மதுராந்தகனுக்கும் கொடுத்துடணும்னு ப்ளான்.
ஆதித்தர் திடீர்னு, எல்லார் கிட்டையும், தனக்கு அரசாளும் எண்ணம் இல்லைன்னும், மதுராந்தகனே ஃபுள் சோழ ராஜ்யத்தையும் ஆளட்டும்னும், தனக்கு வெறும் துட்டும், கொஞ்சம் வீரர்களும் கொடுத்தா வடக்கே போய் பல இடங்களை போர் செய்து கைப்பற்ற ஆசைன்னும் சொல்றாரு.
இதக் கேட்டு எல்லா கன்ஃப்யூஸ் ஆகிடறாங்க. ஆதித்தர், பெரிய பழுவேட்டரையர் கிட்ட, சீக்கிரம் தஞ்சாவூர் போய், மதுராந்தகனைக் கூட்டிட்டு வரச் சொல்றாரு. அவர் வந்ததும், எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணிட்டு, அப்பரம் எல்லாருமா போய் சுந்தர சோழச் சக்ரவர்த்திகிட்ட இதான் மேட்டருன்னு சொல்லி பர்மிஷன் வாங்கிடலாங்கறாரு.
பழுவேட்டரையர் நந்தினியை கடம்பூரிலேயே விட்டு கெளம்பி போயிடறாரு.
இதற்கிடையில், தஞ்சையில், சுந்தர சோழரைப் போட்டுத் தள்ள, பாண்டிய அடிபொடி ஒருத்தன் அரண்மணைக்குள் மறஞ்சுகிட்டு காத்திருக்கான்.
நாகப்பட்டினத்தில் அடித்த சூறாவளியால், அருள்மொழிவர்மர், நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்திலிருந்து, வெளிவரும்படி ஆகிடுது. எல்லாரும் பாத்துடறாங்க. அவரு சாகலைன்னு தெரிஞ்சதும், ஊரே கூடி கொண்டாடுது. அருள்மொழி, அவசரமா தஞ்சாவூருக்கு போகணும்னு அங்கேருந்து கெளம்பறாரு. அங்க அவரை மர்டர் பண்ண, பாண்டிய அடிபொடி ரவிதாசன் செஞ்ச ப்ளான் வேலை செய்யலை.
தஞ்சை செல்ல கிளம்பி வந்த பழுவேட்டரையர், சூறாவளியில் சிக்கி, வழியில் ஒரு பாழடஞ்ச மண்டபத்துல, பாண்டிய அடிபொடிகளின், ப்ளான் டீட்டெயில் எல்லாம் கேட்டுடறாரு. சக்ரவர்த்தியை கொல்ல சதி செய்யப்பட்டுள்ளதும், கடம்பூரில் ஆதித்தரை நந்தினி கொல்ல இருப்பதும், அருள்மொழிவர்மரை நாகைப்பட்டினத்தில் போட்டு தள்ள இருப்பதும் தெரிய வருது. அவசர அவசரமா தஞ்சைக்கு கெளம்பறாரு.
வழியில் குந்தவை வானதி யைப் பாத்து மேட்டர சொல்லிட்டு, தான் நல்லவருன்னு ப்ரூவ் பண்ணிடறாரு. குந்தவை கிட்ட தஞ்சாவூர் போய் சக்ரவர்த்தியை காப்பாத்தச் சொல்லிட்டு, நாகைப் பட்டினத்துக்கு அருள்மொழிவர்மரை காப்பாத்த ஒருத்தர அனுப்பிட்டு, இவரு கெளம்பி கடம்பூர் போறாரு.
தஞ்சைக்கு சென்று கொண்டிருக்கும் அருள்மொழிவர்மன், வழியில் வானதி பூங்குழலியைப் பாத்து சக்ரவர்த்திக்கு இருக்கும் அபாயத்தை தெரிஞ்சுக்கறாரு. இவரும், வானதி, பூங்குழலியும் தஞ்சைக்கு போறாங்க. அரண்மணைக்குள்ள போய், சக்ரவர்த்தியை பாத்து பேசிக்கிட்டு இருக்காங்க. ஊமை ராணியும் (சக்ரவர்த்தியின் பழைய காதலி - நந்தினியின் தாய்), அங்க இருக்காங்க. அந்த நேரம் பாத்து, பாண்டிய வில்லன் ஒரு வேல எடுத்து சக்ரவர்த்தி மேல வுடறான். ஊமை ராணி நடுவுல பூந்து, தன் மேல் வேலை வாங்கிக்கறாங்க. அவங்க கதை முடிஞ்சுது அத்தோட.
இந்த குழப்பத்தில், சக்ரவர்த்தியும், பக்க வாதம் சரியாகி, டகால்னு எழுந்து ஓடி, ஊமை ராணியை மடியில் தூக்கிப் போட்டுக்கிட்டு சோகமாயிடறாரு.
ஸோ, இப்படியாக, சக்ரவர்த்தி தப்பிச்சுட்டாரு. அருள்மொழி வர்மரும், தப்பிச்சுட்டாரு.
வானத்துல, தூம கேது (வால் நட்சத்திரம்) கீழ விழுது. யாராவது ஒருத்தரு ராஜ குடும்பத்தில் மண்டையப் போடணுமாம். ஸோ, ஆதித்தர போட்டு தாங்கிடுவாங்கன்னு தெரிஞ்ச்சுடுது.
கடம்பூரில், வந்தியத் தேவன், நந்தினி கிட்ட போய் பேசிப் பாக்கறாரு. ஆதித்தரை நந்தினி கொல்ல இருப்பது வந்திக்கு புரிஞ்சுடுது. பழி வாங்கவெல்லாம் வேணாம், ஏக்சுவலா, ஆதித்தர் உங்க அண்ணன்னெல்லாம் சொல்லிப் பாக்கறாரு. அந்த நேரத்துல ஆதித்தர் அங்க எண்ட்ரி கொடுக்கறாரு. வந்தி பக்கத்து ரூமுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கறாரு.
நந்தினியும் ஆதித்தரும் எடக்கு மொடக்கா பேசிக்கறாங்க. நீ என் தங்கைன்னெல்லாம் சொல்லிக்கறாங்களே, உண்மையான்னு கேக்கறாரு. அவங்களும், இல்லை, என் அப்பா பேர் இதுதான்னு, ஆதித்தரு காதுல சொல்றாங்க. அதைக் கேட்டு ஆதித்தர் ஷாக்காகி சோகமாகிடறாரு. அப்பரம் கோபமாகறாரு, திரும்ப சோகமாகறாரு.
ஒரு கணம், நந்தினியை கொல்லப் போற அளவுக்கு கோபப் படறாரு, அடுத்த கணம், நந்தினி கிட்ட கத்தியை கொடுத்து, தன்னை கொன்றுவிடுமாறு சொல்றாரு. ஒன்னியும் பிரீல.
அந்த நேரம் பாத்து, வந்தியை ஒரு தாடிக்காரரு வந்து பின்னாலிருந்து மடக்கி, அடிச்சு போட்டுடறாரு. வந்தி கீழ மயங்கி விழுந்துடறாரு. முழிச்சு பாத்தா, ஆதித்தர் ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டுக் கெடக்கறாரு.
யாரு, மர்டர் பண்ணதுன்னு தெரியலை.
நந்தினி, பாண்டிய அடிப்பொடிகளுடன், எஸ்கேப் ஆயிடறா.
வந்தியை, அரெஸ்ட் பண்ணி பாதாள சிறையில் போட்டுடறாங்க. அவன் தான் ஆதித்தரை கொண்ணான்னு கதை கட்டி விட்டுடறாங்க.
பூங்குழலியும், ஆழ்வார்கடியானும், பாண்டிய அடிபொடிகளை விரட்டிக்கிட்டு போன எடத்துல, உண்மை தெரிய வருது. அதாகப் பட்டது, கடம்பூருக்கு திரும்பி வந்த பெரிய பழுவேட்டரையர்தான், வந்தியின் பின்னால் வந்து, அவனை மயங்க வெச்சது. நந்தினி ஆதித்தரை கொல்ல கத்தியுடன் நிக்கரத பாத்ததும், இவரு நந்தினியை கொல்ல கத்தி விடறாரு. அந்த நேரத்துல, இவரையும் யாரோ அடிச்சு மயங்க வெச்சுடறாங்க. இந்த கேப்ல யாரோதான் ஆதித்தரை போட்டுத் தாக்கியிருக்காங்க.
ஒண்ணு, பெரிய பழுவேட்டரையர், எறிந்த கத்தி, ஆதித்தர் மேல் விழுந்திருக்கணும்,
இல்ல, நந்தினி ஆதித்தரை போட்டுத் தாக்கியிருக்கணும்,
இல்ல, ஒளிந்திருந்த பாண்டிய அடிபொடிகள், உள்ள பூந்து மர்டர் பண்ணியிருக்கணும்.
பூங்குழலியும், ஆழ்வார்கடியானும், இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாலும், பாண்டிய அடிபொடிகளும், நந்தினியும் எஸ்கேப் ஆகிடறாங்க.
இவ்வளவும் நடந்ததும், அடுத்த சக்ரவர்த்தி யாரு, மதுராந்தகனா, அருள்மொழிவர்மனான்னு பேச்சு எழும்புது.
மதுராந்தகரோட அம்மா, அருள்மொழிக்குத்தான் கொடுக்கணும், ஏன்னா மதுராந்தகன், தன் வயிற்றில் பிறந்தவனல்லன்னு ஒரு ஃப்ளாஷ் பாக் சொல்றாங்க.
(
சாதிப் ப்ரச்சனை வருது. அரச குலத்தில் பிறந்தவன் தான் சக்ரவர்த்தி ஆகணுமாம். ஏய், அடங்குங்கடான்னு மனசுல தோணிச்சு)
அதாவது, செம்பியன் மாதேவி (மதுராந்தகனின் வளர்ப்புத் தாய், சக்ரவர்த்தியின் அண்ணன் பொண்டாட்டி), தனக்கு பிறந்த முதல் குழந்தை இறந்தே பிறந்ததுன்னு நெனச்சுக்கிட்டு, அதுக்கு பதிலா, தன் அரண்மணையில் இருந்த 'ஊமை ராணியின்' இரட்டை குழந்தையில் ஆண் குழந்தையை இவங்க எடுத்துக்கிட்டு வளக்கறாங்களாம்.
இறந்ததா நெனச்ச குழந்தையும், இறக்கலையாம். அந்தப் பிள்ளை, ஊமை ராணியின், தங்கை ஊமை ராணி II, வீட்டில் வளருதாம்.
ஊமை ராணியின், இரட்டைக் குழந்தையில், ரெண்டாவது பெண் குழந்தைதான் நந்தினியாம்.
ஊமைராணிக்கும், சுந்தரச் சோழச் சக்ரவர்த்திக்கும் பிறந்த குழந்தைகள்னு நெனச்சுக்கிட்டு இருந்தா, அதுவும் இல்லையாம். சுந்தர சோழருக்கு அப்பால, ஊமை ராணி, வீர பாண்டியனிடம் காதல் வயப்பட்டு, அவரு மூலமா பிறந்ததுதான் இந்த இரண்டு குழந்தைகளும். (நந்தினியின் அப்பா வீரபாண்டியன்னு தெரிஞ்சுதான் ஆதித்தர் ஷாக்காகிடறாரு).
(
சந்தேகம்: ஊமை ராணிதான் நந்தினியின் தாயா? இல்லை ஊமை ராணியின் தங்கையா? அவளும் ஊமைதான். ஒரு வேளை, அவங்க தான் வீரபாண்டியரின் காதலியா இருந்திருப்பாங்களோ? ஊமை ராணியே, சுந்தர சோழருக்கும், வீர பாண்டியருக்கும் காதலியா இருந்தது இடிக்குது).
எது எப்படியோ, டூப்பு மதுராந்தகர், தனக்கு ராஜ்யம் கெடைக்காதுன்னு தெரிஞ்சுக்கறாரு. அப்பாலிக்கா, தான் பாண்டிய மன்னனின் வாரிசுன்னும் தெரிஞ்சுக்கறாரு. அவரு, அப்படியே குதிரைல போயி, பாண்டிய அடிபொடிகளிடம் சேந்துக்கறாரு.
உண்மையான மதுராந்தகர், ( முதல் பாகத்தில் வந்த சேந்தன் அமுதன் இவருதான் ), பூங்குழலியை கண்ணாளம் கட்டிக்கிட்டு, உண்மையும் தெரிஞ்சுக்கறாரு. தான் தான், பட்டத்து உரியவர்னு தெரிஞ்சுக்கறாரு. ஆனா, தனக்கு, சிவ பக்தி தான் முக்கியம், ராஜ்ஜியம் எல்லாம் ஆள வேணாங்கறாரு.
அருள்மொழிவர்மரும், கெடச்சுது சான்சு, தானே ராஜா ஆயிடறேங்கறாரு.
பட்டாபிஷேகம் அன்னிக்கு, டகாலடியா, கிரீடத்தை, மதுராந்தகர் தலைல வச்சு, நீங்க தான் ராஜா, நான் உங்க கீழ வேலை செய்யறேன்னு சொல்லிடறாரு.
அரசாளும் உரிமை மதுராந்தகருக்குத்தான் ஞாயப்படியா கெடைக்கணும்னு அருள்மொழிவர்மர், தனக்குக் கெடச்ச ராஜாங்கத்தை, தியாகம் செய்யறாரு.
எல்லாரும், நல்லா இருக்காங்க.
ட்ரிரிரிரிரிரிரிங்ங்ங்ங்....
சுபம்!
அப்பாடி. ஒரே மூச்சுல எழுதி முடிச்சாச்சு. இனி உங்க பாடு ;)
இதுவரை வந்த நட்ஷெல்லை படித்து, திருத்தி, ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்னி.
தமிழ் படிக்கத் தெரிஞ்சவங்க, பொ.செ படிக்கலன்னா, தவறாம படிங்க. வரலாற்றறிவு அவசியம். :)
பி.கு1: பின்னாளில், மதுராந்தகர், உத்தம சோழன் என்ற பெயரில், பதினைந்து வருஷம் ஆண்ட பிறகு, அருள்மொழி வர்மர், ராஜ ராஜ சோழனாய், கலக்கறாரு. அதுக்கப்பால, அவருக்கும் வானதிக்கும் பிறந்த, ராஜெந்திர சோழன், கலக்கோ கலக்குன்னு கலக்கறாரு. கலக்கரதெல்லாம் கதைல இல்லை. வேர யாராச்சும் இதையெல்லாம் கதையா எழுதியிருக்காங்களா?
அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, தஞ்சாவூருக்கு நண்பனின் திருமணத்துக்கு போயிருந்தேன். கோபுர உச்சியின் நிழல் விழா பெரிய கோயிலை பார்த்தேன். ஆனா, வரலாற்றறிவு இல்லாததால், பெரிய ஈடுபாட்டோட பாக்கலை. கல்வெட்டெல்லாம் பாக்கல. சமீபத்தில் இன்னொரு ராஜ ராஜ சோழனின் விசிறியாகிய நண்பன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தப்போ,
"
மச்சி இன்னொரு தபா போய் பாரு. நந்தி கிட்ட நின்னுக்கோ. கோயில் பெரிய வாசல் வழியா, ராஜ ராஜனும், அவன் ராணிமார்களும், குந்தவையும், மந்திரிகளும், வந்தியத் தேவனும் யானை மேலும், குதிரை மேலும், வர சீனை கற்பனை பண்ணிப் பாரு. அப்பத் தெரியும், அந்த எடத்தோட அருமை"ன்னு சொன்னான்.
இப்ப யோசிச்சுப் பாக்கறேன். சொக்கித் தான் போவுது.
இன்னொரு தபா பாக்க வேண்டிய கோயில்.
அடுத்த முறை, ஆர அமர ஒக்காந்து நிமிந்து படுத்து நின்னு பாக்கணும். ஹ்ம்!!!
pic source:
hindudevotionalblog.com
பி.கு2: பாகம்1 ~
பாகம்2 ~
பாகம்3 ~
பாகம்4 ~
பாகம்5(இது) ~
wikisourceல் மொத்த நாவலையும் படிக்க
if you are in Chennai,