Sunday, November 09, 2008

ஏகன் = 2 x குருவி - திரைப் பார்வை

மொதல்லையே சொல்லிடறேன். என்னடா "2 x குருவி"ன்னு போட்டிருக்கானே, குருவிய விட ரெண்டு மடங்கு நல்லாருக்குன்றானான்னு நெனச்சுடாதீங்க.
'குருவி' எந்த அளவுக்கு மட்டமோ, அதைவிட இரண்டு மடங்கு மட்டமான படம் ஏகன்.
ஓசியில் கிடைத்தால், ஃபினாயிலையும் பாட்டம்ஸ்-அப் அடிக்கும் நம் பழக்கம், ஓசியில் தீயேட்டரில் படம் காட்டறாங்கன்னதும், விட மனசு வரல.
வெள்ளி முதல் ஞாயிறு வரை, மூணு படம் பாத்தாச்சு.

வெள்ளியன்று, 'ஏகன்' பாத்து, ஓசி திரைவிழாவுக்கு, பிள்ளையார் சுழி போட்டேன்.

ராஜு சுந்தரம் டைரக்ஷன் கத்துக்கரதுக்கு, யாராச்சும் புது முகத்தை வச்சு, பதம் பாத்திருக்கலாம். அநியாயத்துக்கு அஜித்தை காவு வாங்கியிருக்க வேண்டாம்.

அஜித்தும், லேசு பட்டவரில்லை. பிரபு வீட்டுக்கு கிட்ட இருக்காரான்னு சந்தேகம் வருது. பிரபு வாங்கர கடைலதான் இவரும் அரிசி வாங்கறாரு போலருக்கு.
சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையும், ஒடம்புல அப்படியே தெரியுது. மொத மொதன்னு இருக்காரு.
என்ன கொடுமை அஜித் இது?

'CB CID' ஆபீஸரா அறிமுகமாகறாரு, பெருத்த தாடியும், அதுக்கேத்த தொப்பையும் கூட.

சில பல காரணங்களால், வில்லனின் அப்ரூவரை பிடிக்க, அப்ரூவரின் பொண்ணு படிக்கும், காலேஜ்ல அஜித்தும், மாறு வேஷத்தில், ஸ்டூடண்ட்டா போய் படிக்கோணுமாம்.

சரி, ஸ்டூடண்ட் ஆகப் போறாரே, சிக்குனு எடைய கொறச்சிட்டு, நச்சுன்னு, சூர்யா மாதிரி வந்து நிப்பாருன்னு பாத்தா, தாடி மட்டும் மிஸ்ஸிங், தொப்பை இங்கையும் ப்ரசண்ட்.
லேசான தாடியில் வெள்ளை முடி வேர. கண்றாவியா இருக்காரு அஜித், படம் முழுக்க.
காலேஜ்ல மொத்த பசங்களும் சூப்பரா ட்ரஸ் பண்ணியிருப்பாங்க. அஜித்துக்கு மட்டும், பர்மா பஜார் ப்ளாட்ஃபாரம்ல கிடைக்கிர டைப்ல, டீ-ஷர்ட்டுகள். தொவைக்காம, இஸ்திரி பண்ணாம போட்டு, டோட்டல் வறட்சி, டோட்டல் இம்சை!

பாடல்களும் சகிக்கலை.
டான்ஸ் மட்டும் நல்லா ஆடறாரு.

நயன்தாரா, அந்த காலேஜ்ல ப்ரொஃபஸராமாம்.
மொத்த முதுகும் தெரியரமாதிரி ஒரு ஜாக்கெட்டு. வழுக்கி விழர மாதிரி ஒரு சேலை.
அஜித் படம் முழுக்க தொப்பையோட வர மாதிரி, நயன் தாரா, படம் முழுக்க, இதே ஜாக்கெட்/ஸாரி கெட்டப்போட வராங்க.
வர வர நயன்தாராவப் பாத்தா ஒரு கிளுகிளுப்பும் வர மாட்டேங்குது. WWF வீராங்கனை கணக்கா ஆயிட்டே போறாங்க. பயங்கர ட்ரைனஸ்.

ஜெயராமும் வீணடிக்கப்பட்டிருக்காரு.
வில்லனா வர சுமன், படு கேவலம். அவரும் அவரு விக்கும், அவரின் லூசுத்தனமும் சகிக்கலை.

ஒரே ஆறுதல், சுமனின் அள்ளக்கையாக வரும் ஆள் (ஸ்ரீமன்?) பண்ணும் சின்ன சின்ன காமடி.

ஓசியில் பாத்தே இவ்ளோ பொகைச்சலா இருக்கே, இதையெல்லாம் காசு கொடுத்து பாக்கரவங்க நெலம ரொம்பவே கொடுமையா இருக்கும்.

ஐயோ பாவம்!

பி.கு: இத்த mein hoon na வோட ரீ-மேக்னு சொல்றாங்க. ஷாருக்கோட, எனர்ஜியெல்லாம் அஜித்தோட கம்பேர் பண்ணா, இன்னும் நமக்கு பொகைச்சல்தான் ஏறும்.
அஜித், தொப்பையக் கொறைங்க! ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்!

15 comments:

SurveySan said...

மற்றவர்களின் பார்வையில்:

லக்கி

கேபிள் சங்கர்

கோவி

Sathiya said...

படம் கேவலம்னு நானும் கேள்வி பட்டேன். இவ்வளோ கேவலம்னு நெனச்சு பார்க்கலை. அஜித்தோட குறையே அவருக்கு தனக்கு ஒத்து வர மாதிரி சரியா கதையை தேர்வு செய்ய தெரியாது.

மற்றபடி ஷாருக் ஒன்னும் அவ்வளோ பெரிய ஆள் இல்லை. ஷாருக் நடிச்ச பில்லா(அதான் டான் ரீமேக்) பார்க்கும் போது, நான் தூங்கிட்டேன். அவ்வளோ கேவலமா இருந்துச்சு. ஆனா அஜித் பில்லா ரீமேக் சூப்பர். எல்லாம் கதையை பொறுத்து தான். அதே போல் ஷாருக் ஓம் சாந்தி ஓம் பட சிக்ஸ் பேக்(Six Pack) பார்க்கும் போது ஏதோ நோய் வந்த கோழி மாதிரி இருந்துச்சு. இப்போ கஜினி ரீமேக்'ல அமீர்கான் பாருங்க, சும்மா பாடி பில்டர் கணக்கா இருக்கார்.

SurveySan said...

Sathiya, பில்லால அஜித், கலக்கியிருப்பாரு.
அதுல இன்னும் ஃபிட்டா இருந்தாரு.

இப்ப, பயங்கர கவனக்குறையோட இருக்காரூ.
ஃபிட் ஆகணும்.

ஷாருக், நல்ல எனர்ஜடிக் நடிகர்.
'டான்'ல சிவாஜி மாதிரி, ஓவர் ஏக்டிங் பண்ணிட்டாரு.

Unknown said...

சர்வேசன்....
என்னங்க இது மனச தொட்டு சொல்லுங்க இந்த படம் குருவிய விட குப்பை ன்னு???
ராசு சுந்தரம் நல்லா சொதப்பிருக்காரு கிளைமாக்ஸ் ல...மத்தபடி எனக்கு இந்த படம் ஒ.கே தான்...அஜித் குண்டா இருந்தாலும் அது அசிங்கமா தெரியல சிட்டிசன் படத்துல இருந்தமாதிரி...
என்னவோ போங்க :(((((((

கா.கி said...

என்ன சார் நீங்க, குருவிய விட கேவலமா இருந்துச்சுனு சொல்லிட்டீங்க. குருவியைப் பாத்து நொந்த நாள நான் இன்னும் மறக்கல. படம் சுமார்தான் ஆனா ரொம்ப மொக்கையா இல்ல. குருவியோட compare பண்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல (உங்களுக்கு அஜித் புடிக்காதோ??? ) இருக்கட்டும், அப்படியே முடிஞ்சா நான் ரெண்டு வாரம் முன்ன எழுதுன சின்ன review படிங்க...

http://creativetty.blogspot.com/2008/10/blog-post_28.html

rapp said...

ஹா ஹா ஹா, படிச்சதிலேயே உங்க ஏகன் விமர்சனம்தான் டாப்:):):)

Truth said...

ஏகன நானும் பாத்தேன்.
குரிவியோட கம்பேர் பண்ணமுடியுமானு தெரில, ஆனா சத்தியமா, என்னால முழு படத்த பாக்க முடியலா. ஏகன் படத்தோட கதை என்னானு கேட்ட, எனக்கு சொல்ல தெரில. என்ன பிரச்சனனும் தெரியல.
சுமன் அதுக்கு மேல. வில்லனா இல்ல காமெடியனானும் தெரில. ஒரு சீன்ல சுமன் "நான் யாரு"னு கேக்றாரு. பதிலுக்கு "கவுண்டமனி"னு சொல்லத் தோனுது. ஒரு வில்லனிஸமே இல்ல.

இந்த படம் எதுக்கு எடுத்தானுங்கனும் தெரியல. எங்க போயி முடியப்போகுதோ தெரில...
ஸ்ஸ் அபா....

SurveySan said...

Kamal,

////சர்வேசன்....
என்னங்க இது மனச தொட்டு சொல்லுங்க இந்த படம் குருவிய விட குப்பை ன்னு???///

கமல், நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது. எப்போமே, மனசுல தோணறது, தட்டச்சி வெளீல வுடறேன். அம்புடுதேன் ;)

குருவி தியேட்டர்ல பாக்கல. ஸோ, வயித்தெரிச்சல் கம்மியானதான்னு தெரியல.
ஆனாலும், குருவி, கதையைத் தவிர, படம் ஆக்கியவிதம் நல்லாவே இருந்தது. குறிப்பா, அந்த வில்லன் இருக்கும் ஆந்திரா ஊரு. செம செட்டும், செம ஃபோட்டோகிராபியும் இருந்துது.

அது தவிர, விஜய், 'ஃபிட்டா' இருந்தாரு.

அஜித்தை எனக்கு பிடிக்காம இல்லை. ஆனா, ஒரு ஹீரோவா இருந்துகிட்டு, தான் எடுத்திருக்கும் வேடத்துக்கு தன்னை பொறுத்திக் கொள்லாமல் இருப்பது, highly irresponsible!

SurveySan said...

karthick,

///குருவியைப் பாத்து நொந்த நாள நான் இன்னும் மறக்கல. படம் சுமார்தான் ஆனா ரொம்ப மொக்கையா இல்ல. குருவியோட compare பண்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல (உங்களுக்கு அஜித் புடிக்காதோ??? ) ////

குருவியின், மத்த டெக்னிக்கல் மேட்டர்ஸ் வச்சு பாக்கும்போது, ஏகன்தான் செம குப்பை.

குருவியில், சொதப்பல் கதையைத் தவிர, மற்றபடி, விஜயின் ரசிகர்களுக்கான படம் அது.

விஜய், ஓப்பனா சொல்லிட்டாரே, இதுதான் என் தரம்னு.

சிட்டிசனுக்கெல்லாம் மெனக்கெட்ட அஜித்துக்கிட்டயிருந்து இப்படி ஒரு குப்பையை எதிர்பாக்கல. அதுவும், பில்லாக்கு அப்பரம்.
;)))

SurveySan said...

rapp,

நன்னி! :)))))

SurveySan said...

truth,

////ஒரு சீன்ல சுமன் "நான் யாரு"னு கேக்றாரு. பதிலுக்கு "கவுண்டமனி"னு சொல்லத் தோனுது. ஒரு வில்லனிஸமே இல்ல.
////

அப்படியா கேட்டாரு? நான் சுமன் பாத்த ஃபர்ஸ்ட் சீன்லயே, அவரை 'mute' பண்ணிட்டேன். அடுத்தடுத்த சீன்ல கவனிக்கக் கூட இல்லை ;)

SurveySan said...

//விஜய்யை வைத்து கில்லி, குருவி ஆகிய படங்களைக் கொடுத்தவர் தரணி. இதைத் தொடர்ந்து தற்போது அஜீத்திடம் வந்துள்ளார் தரணி. கெளதம் சொல்லியிருந்த கதையை விட்டு விட்டு புதிதாக ஒரு கதையை செய்யச் சொல்லியுள்ளனராம் தரணியிடம். அஜீத் ரசிகர்களுக்கேற்றார் போல தற்போது கதையை உருவாக்கி வருகிறாராம் தரணி.
////

அஜித்துக்கு நேரம் சரியில்ல போல.
கௌதம் மேனனுக்கு பதிலா, குருவி தந்த தரணியாம்! ஹ்ம்!

Madhavan said...

I think u don't like Ajit or fan of Vijay. Ur review is not upto the standard. Because of u got the rights to write anything in the blog, such a bad comments came out. FYI, I am not fan of Ajit/Vijay. And even I am not saying this film as good one. But while reviewing a film, please take care of some responsibilities as the blog would be read by so many people.

SurveySan said...

madhu,
that is why i started calling my posts as 'paarvai' and not 'vimarsanam'.
This was a honest opinion of an unbiased writer.;)

ஷண்முகா said...

hello sir kuruvi kooda compare panra alavukku aegan onnum avlo mosama illa....ungalukku ajith pudikathu pola athan....padathuleyethan ajith othukiurare avarukku thopai irrukku nu...