recent posts...

Thursday, November 13, 2008

தமிழகத்தின் அவசர எண் 108! use it please!

விஜய் டிவில 'குற்றம் நடந்தது என்ன?"ன்னு ஒரு புரோக்ராம்ல, உருப்படியா ஒரு விஷயம் சொன்னாங்க.
அதாவது, ரோட்ல கார் ஓட்டிட்டுப் போறீங்க.
தெரியாத்தனமா, ரோட்ட கிராஸ் பண்றவன இடிச்சுட்டீங்க.
கீழ விழுந்தவன் ரத்தம் சொட்ட சொட்ட மயக்கமாயிட்டான்.

என்ன பண்ணுவீங்க? வேறென்ன? நம்ம இந்திய மனம் எப்படி யோசிக்கும்?
"மச்சி எஸ்கேப்!"ன்னு வண்டிய, டாப்‍கியர்ல போட்டு அந்த எடத்த விட்டு எஸ்கேப்பிடுவோம்.

இப்ப, வேர மாதிரி யோசிச்சுப் பாப்போம்.

நீங்க காரெல்லாம் ஓட்டல. பஸ் ஸ்டாண்டுல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
ரோட்ல போர காரு, பக்கத்துல நிக்கரவர இடிச்சுட்டு நிக்காம போயிடுச்சு.
இப்ப என்ன பண்ணுவீங்க? வேறென்ன? அதே இந்திய மனம்தான இப்பவும் யோசிக்குது.
கும்பலோட கும்பலா, கீழ விழுந்தவன சுத்தி நின்னு, அவன் ரத்தம் சொட்டரத வேடிக்கை பாக்கவேண்டியதுதான்.

சரிதானே?

இந்த இரண்டு சம்பவங்களிலும், நாம, குற்றவாளி இல்லன்னாலும், அடிபட்டு விழுந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போகவோ, போலீஸை/ஆம்புலன்ஸை அழைக்கவோ நமக்கு முதலில் வருவது, பெரும் தயக்கம்.
காரணம், பயம்.
என்னாத்துக்கு தேவையில்லாம, ஸ்டேஷன், அப்பரம் கேஸு, ஆஸ்பத்திரின்னெல்லாம் அலையணும்.
எவன் எப்படிப் போனா என்னன்னு தோணரதுதான் காரணம்.

இப்படிப் பேடிகளாய் இருக்கும் நம்மை வச்சுக்கிட்டு அரசாங்கம் என்னத்த கழட்ட முடியும்?
சரின்னு என்னா பண்ணிருக்காங்களாம், 108ன்னு ஒரு அவசர தொலைபேசி எண்ணை உருவாக்கி வச்சிருக்காங்களாம்.

இந்த மாதிரி, அவசர உதவி தேவைப் படும் நேரங்களில், அந்த எண்ணுக்கு தொலைபேசினால், உடனே ஆம்புலன்ஸ் வந்து சேருமாம்.

முக்கியமா, தொலைபேசும் ஆளுக்கு, எந்த போலீஸ் கெடுபிடியோ, மத்த கெடுபிடிகளோ இருக்காதாம்.

ஸோ, தெருவுல எங்கையாவது யாராவது அடிபட்டுக் கிடந்தா, மாட்டை பாக்கர மாதிரி பாத்து ரசிக்காம, உடனே 108ஐ அழையுங்கள்!

சென்னை சட்டக் கல்லூரியில் வூடு கட்டி ஒருத்தன அடிச்சு, ஒரு பையன் மயங்கி கெடந்தானாமே, அதுக்கெல்லாம் 108 கூப்பிட்டா ஒதவி கெடைக்குமான்னு நீங்க கேக்கலாம்?

அந்த கருமத்துக்கெல்லாம், 100000000008 அடிச்சாலும், ஒரு ஒதவியும் கிட்டாது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!



பி.கு: சட்டக்கல்லூரி மேட்டரின் புகைப்படம், வீடியோவெல்லாம் வெளியில் போடவேணாம்னு 'தடா' விதிச்சிருக்காங்க. தேவையில்லாம, அதைப் போட்டு பரப்பி சென்சேஷனலைஸ் செஞ்சு, இன்னும் பல பேரை பத்த வெக்க வேணாம்னு நீதிபதி சொல்லியிருக்காரு. மக்களே, உஷாரு.

7 comments:

ராமலக்ஷ்மி said...

//சென்னை சட்டக் கல்லூரியில் வூடு கட்டி ஒருத்தன அடிச்சு, ஒரு பையன் மயங்கி கெடந்தானாமே, அதுக்கெல்லாம் 108 கூப்பிட்டா ஒதவி கெடைக்குமான்னு நீங்க கேக்கலாம்?//

பின்னே வாசிக்கும் போதே அதைத்தான் பின்னூட்டமா கேட்கலாம்னு வந்தால் நீங்களே கேட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:(!

Thambiluvil said...

i heard a news.. loshan areested today. is it true?

we worried..

SurveySan said...

////i heard a news.. loshan Aareested today. is it true?

we worried..///

what? why?

SurveySan said...

ramalakshmi,

i didnt want to write about that initially, but in the end decided to mention it.

odhavakkara pasanga!

SSSSSS! :(

நானானி said...

மனம் பதைபதைக்க வைத்த காட்சி அது. நீங்கள், பொது மக்கள்தான் வேடிக்கை பார்ப்பார்கள் என்கிறீர்கள், ஆனால் அங்கே வேடிக்கை பார்த்தது 'போலீஸ்!'
மனிதாபிமானம் கொடிகட்டிப் பறந்த நேரம் அது.

புருனோ Bruno said...

http://www.payanangal.in/2008/09/108.html

புருனோ Bruno said...

http://3.bp.blogspot.com/_g7VZIe_ki7E/SS_XCJxlCyI/AAAAAAAAAy0/Va-2iEypD84/s1600-h/emri+dinamalar+27+nov+08.jpg