இந்த ஆப்ரேஷனில் இன்னுயிரை ஈர்த்த, பொதுஜனத்துக்கும், வெளிநாட்டவருக்கும், போலீஸ், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இதில் ஈடுபட்டு உயிரை இழந்த தீவிரவாத ஆசாமிகளை எண்ணினால், மனதளவில் குழப்பமே மிஞ்சுகிறது. பாக்கிஸ்தான்லேருந்து, கப்பல்ல வந்து, நடுவுல ஒரு மீன் படகை கடத்தி, அதுல இருக்கரவங்க தலைய அறுத்து, மும்பாய்க்குள் புகுந்து, ஹோட்டல், ரயில் நிலையங்களுக்கெல்லாம், குழுவாக சென்று, பலரை கொன்று, 60 மணி நேரங்கள் போராடி தானும் மடிந்து போனானே. எதுக்காக இப்படியெல்லாம் செய்யறான்?
ரொம்ப சின்ன வயசுப் பசங்க. சொந்த ஊர்ல, வேலையே இல்லாதவங்களாம்.
பிடிபட்ட, அஜ்மல எடுத்துக்கோங்க. வேலை இல்லாமல், ரொம்ப ரொம்ப ரொம்ப ஏழ்மையில் வாழும் இளைஞன். இவனை 'வசியம்' செய்த தீவிரவாத அமைப்பு என்னா பண்ணாங்க?
இந்த ஆப்ரேஷனை, 'வெற்றி'கரமா முடிச்சா, இவன் குடும்பத்துக்கு 1 லட்சம் தரேன்னாங்களாம். அது மட்டுமில்லாது, இந்த மிஷன் முடிந்ததும், உயிருடன் திரும்பிவிடலாம்னு, பொய் சொல்லி தான், இந்த மிஷனுக்கே அனுப்பியிருக்காங்களாம்.
இவனும், குடும்பத்துக்காக, இதை ஏற்றெடுத்து, ரெண்டு மாசம், 'ட்ரெயினிங்' எல்லாம் எடுத்துக்கிட்டு, இந்தியெல்லாம் கத்துக்கிட்டு, இந்த காட்டு மிராண்டித்தனத்துல எறங்கியிருக்கான்.
ஒரு நிமிஷம், அஜ்மலின் பார்வையிலிருந்து, இவன் செய்ததை யோசித்துப் பாருங்கள்.
ஏழைகள் இருக்கும்வரை, கேடுகெட்ட தீவிரவாதிகளுக்கு, ஆட்களை வேலைக்கு சேர்ப்பது ஒன்றும் பெரிய மேட்டரே கிடையாது.
இந்தியாக்கும், பாக்கிஸ்தானுக்கும் இருப்பது ஒரு பொதுவான எதிரியோ?
ரெண்டு அரசும் இணைஞ்சு வேல செஞ்சாதான், இதையெல்லாம் கொஞ்சமாவது ஒடுக்க முடியும்.
இங்க வெடிச்சா உன் குத்தம், அங்க வெடிச்சா இவன் குத்தம்னு மாத்தி மாத்தி கை காமிச்சிக்கிட்டு இருந்தா, தீவிரவாதி, போட்லயும் வருவான், ரோட்லயும் வருவானோ?
CNN தொகுப்பாளினியின், கொமட்லயே குத்தலாம்னு பல தடவை தோணிச்சு. ஒரு விஷூவலில், ஒரு கமாண்டோ, ஜன்னலை பார்த்து குறி எல்லாம் பாக்காம, சும்மாக்காட்டி சுட்டுக்கினே இருந்தாரு. அவரு அப்படி சுடரதுக்கு, பல காரணம் இருந்திருக்கலாம். அதாவது, தீவிரவாதிகளின் கவனத்தை திருப்பவோ, இல்லை வேர ஏதாவது, pre-planned காரணம் கண்டிப்பா இருக்கும்.
ஆனா, இந்த தொகுப்பாளினி, நம் கமாண்டோக்கு மேட்டரே தெரியாதுன்ர மாதிரியும், இந்த மாதிரி irresponsibleஆ சுட்டதாலதான், உள்ள இருந்த, jew பாதிரியார் செத்துட்டாரோன்ர ரீதியில் வுளரிக் கொட்டிக்கொண்டு இருந்தாள்.
இந்த அமெரிக்க துரைகளுக்கு, இந்தியர்கள் என்றால் இன்னும் கிள்ளுகீரை, snake charmersங்கர எண்ணம்தான் அதிகமா இருக்கோ?
இதற்கு பெரும்பான்மையான காரணம், நம்ம ஊரு 'ஆங்கில' சினிமாக்கார்களாகக் கூட இருக்கும். ஷ்யாம் பெனிகல் போன்ற ஆளுங்க, இந்தியாவ காட்டினாலே, புழுதி பறக்கும் கொல்காத்தாவும், சாக்கடையையும், பிச்சைக்காரனையும் மட்டுமே ப்ரதானப் படுத்திக் காட்டறாங்களே, அதனால் தான் இப்படியோ?
மீண்டும் வென்றது, மும்பை!
Barely a mile away, the Leopold cafe, which was sprayed with gunfire by the terrorists, reopened briefly yesterday for a few minutes, with cheers greeting its owners serving beer.
"I want them [the attackers] to feel we have won, they have lost," its manager, Farzad Jehani, said of the symbolic opening. "We're back in action."
அடக் கொடுமையே, இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளிலும், மசூதியிலும், ஏற்றி வைத்துள்ள பச்சைக் கொடியை, பாக்கி கொடின்னு நெனச்சுக்கிட்டு, அந்த நடிகை லூஸ் மாதிரி பெனாத்துவதெல்லாம், டெலிகாஸ்ட் செய்யக் கூடாதோ?
இன்னொரு பக்கம், சங் பரிவாரும், இந்துத்வா தீவிரவாதமும் வளர்ந்து வருகிறது. இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியலன்னா, வருங்கால இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக முடியும் அபாயம் இருக்கு.
அரசியல் தலைகளே, எங்க பணத்தை கொள்ளை அடிங்க. நாட்டுக்கு ஒரு மண்ணாங்கட்டி நல்லதும் பெருசா செஞ்சு தியாகிகள் எல்லாம் ஆக வேணாம். ஆனா, இந்த விஷங்களை எல்லாம், இரு தரப்பிலும் வளர விடாமல், நசுக்கி மிதித்து பொசுக்கி விடுங்கள்.
'எதிர்கால' இந்தியா பத்தி, 'பகீர்'னு, நெஞ்சடைக்கும் பயம், அப்பப்ப வருதா உங்களுக்கும்?
India salutes its heroes.

பி.கு: இந்த குழப்பங்களுக்கு நடுவில், சென்னையின் அடைமழை, அதைத் தொடர்ந்த ப்ரச்சனைகள் எல்லாம் இருட்டித்து விட்டது. ஆனா, மும்பையினரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது, தண்ணிப் ப்ரச்சனை ஒரு மேட்டரே இல்லன்னும் தோணுது. சென்னை தெருக்களும் வீடுகளும், நீரில் மூழ்கி, கொஞ்ச நாள்ள காஞ்சுடும். நாமளும், அடுத்த மழை வரைக்கும், ப்ரச்சனையின் 'வேரை' ஆராயாமல், அடுத்த பொழப்ப பாக்க போயிடுவோம்.