அதாவது, சாப்பிட்டு முடிச்ச சில மணி நேரங்களுக்குப் பின்னும், கைமணமும், வாயில் சுவையும் விட்டு வைக்கணும்.
அந்த மாதிரியே, நல்ல படங்கள், நம்மை கொஞ்ச நேரமாவது யோசிக்க வைக்கணும்.
"மும்பை மேரி ஜான்" என்ற ஹிந்திப் படம், இந்த வகையைச் சேர்ந்தது.
மும்பையில் 2006ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்புகளால் சிலரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டது என்ற அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் வசீகரித்த விஷயம், எல்லாமே யதார்த்தமாக சொல்லப்பட்ட விதம். எந்த ஹீரோவும் தீவிரவாதியை விரட்டிப் பிடிக்க எல்லாம் முயற்சிக்கலை.
சாமான்ய மனிதன், சாமான்ய மனதுடன் இந்தப் ப்ரச்சனைகளை எப்படி கையாள்கிறான்னு மட்டும் அழகா சொல்லியிருந்தாங்க.
இதன் அடுத்த ப்ளஸ் பாயிண்ட்டு, படத்தின் ஆறு சாமான்யர்களின், கதையும் தனித்தனியா சொல்லப்பட்டாலும், குழப்பமோ அயற்சியோ தராமல் சொல்லப்பட்ட விதம்.
ரிட்டையர் ஆகப் போகும் ஒரு போலீஸ் ஏட்டு,
ஏட்டுடன் பணிபுரியும் பொறுப்பான கான்ஸ்டபில்,
ஒரு நல்ல பொறுப்பான தேசபக்தியுள்ள பணக்கார குடிமகன் (மாதவன்),
இஸ்லாமியரை வெறுக்கும் ஒரு 'இந்துத்வா' இளைஞன்,
சைக்கிளில் டீ விற்கும் ஒரு ஏழைத் தமிழன்,
சென்சேஷனல் செய்திகளைத் தொகுக்கும் தொலைக்காட்சி பெண் நிருபர்,
இவர்கள் ஒவ்வொருவரும் மும்பையில் அன்றாடம் எப்படி வலம்வருகிறார்கள்?
2006ன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி மாற்றி அமைக்கப் படுகிறது?.
ஒட்டு மொத்த மும்பை மக்களும், குண்டு வெடிப்பை எப்படி எதிர்கொண்டு, தீவிரவாதம் தங்களை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்? இதெல்லாம் ரொம்ப சீரா சொல்லியிருக்காங்க.
படத்தின் முடிவில், ஒரு 'ஃபீல் குட்' நெகிழ்வை நமக்குள் புகுத்தி, எவ்ளோ குண்டு வேணா வைங்கடா, நாங்க லேசுல, அதிர மாட்டோம். உங்களால சில உயிர்களையும், சில உடமைகளையும் மட்டுமே தகர்க்க முடியும். மும்பைவாசிகளின் மன திடத்தை, இம்மியளவும் அசைக்க முடியாதுங்கர மெசேஜ், நச்னு சொல்லியிருக்காங்க.
ஆறு கதாபாத்திரங்களைக் கொண்டு, மேலும் பல, சமுதாயத்துக்குத் தேவையான குட்டி குட்டி மெசேஜும் சொல்லியிருக்காங்க.
ரிட்டையர் ஆகப் போகும் ஏட்டு, அலுவலக கடைசி நாட்களில், 35 வருஷம், வெறும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை ஓட்டிட்டமே. உருப்படியா, ஒரு திருடனையோ, தீவிரவாதியையோ கூட பிடிக்கலையே, வாழ்க்கையை இப்படி வீணாக்கிட்டமேன்னு கவலைப் படறாரு.புதிதாய் தொழிலில் சேர்ந்த, கான்ஸ்டபில், நேர்மையா வேலை செய்ய முடியலையேன்னு வருத்தப் படறாரு. ஏட்டையாவால், கட்டாய லஞ்சம் வாங்க வைக்கப்படறாரு. கடைசியில பொங்கி எழுந்து, நல்லவரா ஆகறாரு.
(மாதவன்) பணக்காரரா இருந்தாலும், சிம்ப்பிளான வாழ்க்கை வாழ ஆசைப்படறாரு. அமெரிக்கா செல்லும் வாய்ப்பிருந்தும், நாட்டுக்காக உழைக்கணும்னு நெனைக்கறாரு. கார் வாங்கும் வசதி இருந்தும், ரயிலில் போவதை விரும்பறாரு. சில பல நச் வசனங்கள் பேசறாரு.'இந்துத்வா' இளைஞன் ஆரம்பத்தில் இருந்தே எல்லா இஸ்லாமியரையும் வெறுக்கறாரு. குண்டு வெடிப்புக்குப் பின் அது இன்னும் இரட்டிப்பாகுது. ஆனா, இவர் வெறுக்கும் இஸ்லாமிய இளைஞனே இவரிடம் நட்பு பாராட்டி, ரெண்டு பேரும் ஃப்ரெண்டாகராங்க.
மும்பை வீதிகளில் டீ விற்கும் தமிழன், வளர்ந்து வரும் பொருளாதார 'வீக்கத்தை' காட்டறாரு. மும்பை மாலில், தன் மனைவி குழந்தையுடன் சென்று, அங்கிருக்கும் பர்ஃப்யூமின் விலை 10,000ரூவாய்னு கேட்டதும் ஆதங்கப்படுவதும், சேம்பிளுக்கு வைத்திருக்கும் பர்ஃப்யூமை மனைவி குழந்தைகளுக்கு அடித்து மகிழ்வதும், செக்யூரிட்டியால் விரட்டப் படுவதும் வேதனையான காட்சிகள். ஷாப்பிங் மால் ஆட்களை பழிவாங்குவதாய் நினைத்து இவர், குண்டு வெடிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு மாலாக தொலைபேசி, உங்க மால்ல குண்டு வெச்சிருக்காங்கன்னு மிரட்டுவது சிரிப்பை வரவழைத்தது. கடைசியில் இவர் விடுத்த தொலைபேசி மிரட்டலால் எல்லோரும் ஓடிவரும்போது ஒரு வயதான மனிதருக்கு ஹார்ட்-அட்டேக் வருவதை பார்த்ததும், தான் செய்த தவரை உணர்ந்து திருந்துகிறார்.
முக்கிய கதாபாத்திரமாய் வரும் தொலைக்காட்சி பெண் நிருபர், ஊரில் நடக்கும் கொலை கொள்ளைகளை, தேடித் தேடி படம் பிடித்து, டிவியில் போட்டுக் காண்பிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் வலி தெரியாததால் மற்றவரின் ப்ரைவஸியெல்லாம் பற்றி கவலைப் படாத யதார்த்த ஊடக ப்ரதிநிதி. குண்டு வெடிப்பில் தன் காதலன் இறந்ததும், தொலைக்காட்சி நிறுவனம், இவரையே, சென்சேஷனல் நியூஸுக்காக பயன்படுத்தும்போது, தவறுகள் புரியவருகிறது இவருக்கு.
குண்டுவெடிப்பைக் காட்டிவிட்டு, அதற்கு தீர்வு என்னன்னு தேடாம, இந்த மாதிரி எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும், சமாளிச்சு மேலெழ, ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றுமைதான் முக்கியம்னு நெத்தீல அடிச்ச மாதிரி சொல்றாரு டைரக்டர்.
ஒரு மாதம் முடிந்து, குண்டு வெடித்த நேரத்தில், மொத்த மும்பையும், தாங்கள் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவது, படத்தின் க்ளைமாக்ஸ்.
நெஞ்சத் தொட்டுட்டாங்க!
மும்பைக்கு ஒரு சல்யூட்!
படத்தை, கண்டிப்பா பாருங்க! உங்க கருத்தும் சொல்லுங்க!
அப்பப்ப, நாட்டுக்கு தேவையான, மெசேஜைத் தாங்கிக் கொண்டும் சில நல்ல படங்கள், இந்த மாதிரி வரணும்.
பொழுது போக்குடன் சேர்த்து, ஒரு 'நல்ல' உணர்வை அப்பப்ப எல்லோருக்கும் ஊட்டினாலே, தீவிரவாதம் எல்லாம் சில வருஷங்களில், இந்தியாவை விட்டு, தலை தெறிக்க ஓடிவிடும்.