recent posts...

Saturday, January 26, 2008

காளை - திரை விமர்சனம்

கதை, திரைக்கதை எழுதரவங்க ரூம் போட்டு, கன்னா பின்னான்னு யோசிச்சு, ஜிலேபி மாதிரி சிக்கிச் சிலாகித்து ஒரு சினிமாக் கதைய உருவாக்கினாலும், துட்டு போட்டு படத்த தயாரிக்கர தயாரிப்பாளராவது கொஞ்சம் யோசிச்சு ஜிலேபிய நூடுல்ஸாவாவது மாத்தணும்.
சிக்கல்கள் இருக்கலாம், ஆனா, அவுத்தா அவுந்துடணும்.

விஷயத்துக்கு வரேன்.

படம் ஆரம்பம்.

சீன்1: மூணு பேர போட்டுத் தள்றாரு லால், அப்பரம் ஃபோன்ல 'ஜீவா உனக்கு ப்ரச்சன குடுத்த மூணு பேர போட்டுத் தள்ளிட்டேன்'னு கூவுறாரு.
சீன்2: சங்கிதா, நிமிஷத்துக்கு ஒரு தரம்,செல்போன்ல சில குண்டாஸ் கிட்ட, 'டேய் எனக்கு என் ஜீவா வேணும்'னு அலறராங்க.
சீன்3: ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேஷன்ல 'சார், ஜீவா பேர்ல ஒரு கம்ப்ளெயிண்ட்'ன்றாங்க. இனிஸிபெக்டர் ஐயா, வயித்த வலி வந்த மாதிரி 'ஐயோ, ஜீவா பேர்ல எல்லாம் கம்ப்ளெயிண்ட் எடுக்க முடியாதும்மா' ன்னு அலறராங்க.
சீன்4: 'டேய், அந்த ஜீவாவ காத்தால கொளத்துல குளிக்கும்போது போட்டுத் தள்ளுங்கடா'ன்னு இன்னொருத்தர் கத்தறாரு.
சீன்5: சிம்பு, கொளத்துலேருந்து குளிச்சிட்டு எழுந்து வருவாரு. அப்பரம் என்ன? கயிறு கட்டி தொங்கிக்கிட்டே ஒரு பத்து நிமிஷத்துக்கு சண்டதான். (Crouching tiger and hidden dragon வந்தப்பரம் இந்த கயித்துல தொங்கர கொடுமை ரொம்பவே கொடுமை அதிகமாயிடுச்சு).

மேல இருக்கர அஞ்சு சீனும், ஒண்ணு மாத்தி ஒண்ணு கலந்து கலந்து வருது. எடிட்டிங் டெக்னிக்ல கலக்கராங்களாமா. (இல்ல, ரூம் போட்டு யோசிச்ச திரைக்கதை டெக்னிக்கா?)

அஞ்சு சீன்லயும், ஒருத்தர மாத்தி ஒருத்தர் சொல்ற அந்த ஜீவா, ஒரே ஜீவா இல்லியாம்.
இது அடுத்த சிக்கல்.
சிம்பு ஒரு ஜீவா, லால் போலீஸு ஒரு ஜீவா, இன்னொரு முடிவளத்த ரௌடி ஒருத்தனும் ஜீவா.

இந்த மூணு ஜீவாவ வச்சுக்கிட்டு முதல் 1 மணி நேரம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாபா.

அப்பரம், போலீஸ் லாலை, முடிவளத்த ரௌடி ப்ளாக் மெயில் பண்றான்னு புரிஞ்சுது. அதனால, லால் ரௌடிய போட்டுத் தள்ளி, கொஞ்சம் சிக்கல கொறைக்கறாரு.

மேட்டர் இன்னான்னா, சிம்புவோட பாட்டி (சீமா) தேனீ மாவட்ட நாட்டாமை மாதிரி. ஊர்ல சாராயம், கஞ்சா எல்லாம் இல்லாம நல்ல ஊரா மெயிண்டெயின் பண்ணி பாத்துக்கராங்க.

லால் அந்த ஊருக்கு போயி ப்ரச்சன பண்ணி, பாட்டிய சாவடிச்சிடறாரு.

அப்பரம், சிம்பு பழிவாங்கல்.

படத்துல ஒரே ஆறுதல், இந்த லவ்-கிவ் எல்லாம் ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு புதுசா கத சொல்றோம்னு கிளம்பி இவங்க முயற்சி பண்ணதுதான்.

ஒளிப்பதிவு நல்லா இருந்தது. சண்டைகள், பாடல்களும் ஓ.கே.
ஹீரோயின் வேதிகா? பரவால்ல. ரொம்பவே தாராளம். பென்ஸில் மாதிரி இருந்தாங்க சில பாட்டுல.

இடைவேளைக்கு முன் வரை, செம டார்ச்சர்.
இடைவேளைக்கு பின் ஓ.கே. ஆனா, சொறத்தே இல்லாத மாதிரி இருந்துது.

காதல், வெயில், கல்லூரி, சிவாஜி(?), 9 rs. நோட்டு, இந்த மாதிரியான வித்யாங்கள் தேவைதான்.
ஆனா, ரொம்ப ரூம் போட்டு யோசிச்சு, மூணு ஜீவா, ஆறு சண்டை, செல்ஃபோனில் காட்டுக் கத்தல், இந்த மாதிரி ரேஞ்சுக்கு வித்யாசங்கள் வேண்டாமய்யா வேண்டவே வேண்டாம்.

பி.கு: எனக்குத்தான் இப்படியெல்லாம் தெரீதா? படம் மெய்யாலுமே சில பேருக்கு புடிச்சிருக்குமோ? நீங்க பாத்திட்டீங்களா? உங்க திங்கிங் என்ன?

12 comments:

வவ்வால் said...

ஓய் உம்மை மொக்கை பதிவு போட சொல்லி யாராவது அழைத்தார்களா என்ன? ;-))

SurveySan said...

யாருமே கூப்பிடர அளவுக்கு வச்சாதான.

ஆரம்பம் முதல் இந்த நாள் வரை, வெறும் மொக்கைதான போடறேன் :)

நல்லா எழுதரவங்களுக்குத்தான் அந்த மொக்கை அழைப்பெல்லாம் தேவை.
:)

Anonymous said...

சர்வேசன் இந்த படத்துக்கெல்லாம் ரிவ்யூ எழுதின உங்க மேல நான் கேஸ் போட போறேன்...ரெண்டு நிமிஷம் படம் பார்த்தேன்.தாங்க முடியல சாமி....:(((

கானா பிரபா said...

கூடவே மற்றைய பொங்கல் ரிலீசையும் தியாக மனப்பான்மையோடு பார்த்து விமர்சித்துப் பதிவு போட்டு எங்களைக் காக்க எல்லாம் வல்ல சர்வேசனி இறைஞ்சுகின்றேன்.

Anonymous said...

ஒருவர்: என்னங்க ஏதாவது படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு?

மற்றவர்: பீமா பார்த்தேன்க. படம் நல்லாவே இல்லைங்க. என்னங்க படம் எடுத்திருக்கானுவோ? ஒரே சண்டைங்க, அதுவும் நல்லாவே இல்லைங்க. ஆனா, செரீனின் டான்ஸ் சூப்பருங்க. சீலுங்கு மாதிரி உட்காந்து எழுந்திரிப்பாங்க பாருங்க அதுக்கே நாம கொடுத்த காசு போதுங்க. என்னத்த சொல்றது இப்ப வர்ர படமெல்லாம் நல்லாவே இல்லைங்க. ஆனா, காளை சூப்பருங்க. என்னா பைட்டு. கலக்கிட்டாருங்க சிம்பு.

ஒருவர்: ஆமாங்க காளை சூப்பருங்க.

நான்: ?!?!

Anonymous said...

I didn't see the movie yet. Your review itself confused me so much... :))

Anonymous said...

சன் டி வி பாணியில் ஒரு விமர்சனம்
-----------------------------------
காளை, மொத்தத்தில் காய் அடிக்கப்பட்ட காளை.

SurveySan said...

////I didn't see the movie yet. Your review itself confused me so much... :))

///


I posted this immediately after seeing the movie... effect of the movie, i guesss :)

SurveySan said...

///கூடவே மற்றைய பொங்கல் ரிலீசையும் தியாக மனப்பான்மையோடு பார்த்து விமர்சித்துப் பதிவு போட்டு எங்களைக் காக்க எல்லாம் வல்ல சர்வேசனி இறைஞ்சுகின்றேன்.////

:) ஆள வுடுங்க. இனி அடுத்த படம் தசாவதாரம் இல்லன்னா அக்பர். எது மொதல்ல வருதோ அது :)

Sridhar Narayanan said...

//இனி அடுத்த படம் தசாவதாரம் இல்லன்னா அக்பர்//

அவ்ளோ எல்லாம் வெயிட் பண்ண வேணாம். வடிவேலு வர்றாராம் பிப்ரவரிலேயே :-)

TBCD said...

"சர்"வே"சர்" (இரண்டு சர்ரா...ஒரு சர்ருக்கு தாவு தீருது என்று சச்சின் சொல்லுறாராமாம்..)

படம் பாக்கிற வரைக்கும் ரிவியூ படிக்காம தப்பிச்சி, அப்படி படம் பார்த்தா...

கொலை கொத்து கொத்திட்டான்ய்யா..

மன்மதன் படத்திற்கு முன்னாடி வரை, சிம்பு படமா அது ஆய்...என்று விட்டுவிடுவேன்.

ஆனா, அதற்கப்பறம், திறமை கையிருப்பில் இருப்பவர் என்ற ஒரு எண்ணத்தில், அடுத்தடுத்த படம் பார்த்திட்டு வந்தேன். ஆனா, அந்த தப்பை பண்ணுவீய, பண்ணுவீயா, என்று தருண் கோபியயை வைச்சு அடிச்சு துவம்சம் பண்ணிட்டான்.

இந்த சூப்பர் ஹீரோ ஆசை என்னைக்கு விடுதோ அன்னைக்குத் தான் நிம்மதியா படம் பார்க்கலாம்.

உதயம் said...

இந்த மாதிரி விமர்சனம் போட்டால் கருப்புசாமியின் அருள் உனக்கும் உண்டு , சர்வேசா.