recent posts...

Tuesday, January 08, 2008

பிடிச்சதில் பிடிச்சதாம் - விளையாட்டு புதுசு

அங்க தொட்டு, இங்க தொட்டு அப்பரம் இங்கயும் தொட்டு இப்ப நம்மளயும் தொட்டுட்டாங்க.

என்ன எழுதரதுன்னு தெரியாம கலக்கத்துல இருந்த நமக்கு இந்த மாதிரி கூப்பிட்டது சந்தோஷமா போயிடுச்சு.

ஆட்டையில நம்ம கிட்ட பந்த போட்ட சக போட்டோ வாத்தி CVRக்கு ஒரு டாங்க்ஸ்.

வெளையாட்டு என்னன்னா, 2007ல் நான் புடிச்ச படத்துல எனக்கு பிடிச்சது ஏதாவது ஒண்ண எடுத்து போட்டு, அத பத்தி ரெண்டு வரி சொல்லணுமாம்.
சொல்லிப்புட்டு, இன்னும் மூணு பேர இந்த மாதிரி சொல்லச் சொல்லி வம்புக்கு இழுக்கணுமாம்.

நல்லா இருக்கே. யாருங்க ரூம் போட்டு யோசிக்கரது இப்படியெல்லாம் வெளையாடலாம்னு?

சரி வெளையாடலாம்னு நானும் MyPics/2007/ல இருக்கர படங்கள மேய ஆரம்பிச்சேன்.
அடா அடா அடா எவ்ளோ படங்கள் எவ்ளோ படங்கள். எடுத்துத் தள்ளியிருந்திருக்கேன். வாழ்நாள்ள 20% க்ளிக்கரதுக்கே செலவு செய்றேன் போல.
ஆனா பாருங்க, க்ளிக்கின ஆயிரமாயிரம் படத்துல, 2% தான் சுமாரா வருது :)

ஓரளவுக்கு சுமாரா வர படமெல்லாம் ஏற்கனவே நம்ம ஆல்பத்துல போட்டுட்டதால, இப்படி டகால்னு கேட்டதும் எத போடரதுன்னு தெரியாம ஒரு மணி நேரம் கொழம்பிட்டேன்.

இவ்ளோ ஆயிரம் படங்கள் க்ளிக்கின எனக்கே இந்த நெலமையான்னு நெனச்சு எங்க வீட்டு ஸீலிங்க பாத்தேன்.
"சர்வேசா என்ன கொடுமைய்யா இது"ங்கர மாதிரி.

டகால்னு சொவத்துலேருந்து அசரீரி கத்திச்சு

"
சர்வேசா. என்ன தயக்கம் உனக்கு?
பார் போற்றும்
PITன் உறுப்பினன் நீ.

Yashica, Nikon, Canon என்று தயங்காமல் புதிய புதிய கேமராக்கள் வாங்கிய கலைஞன் நீ.
எடுப்பதில் 98% நேர தண்டம் என்று தெரிந்தும், க்ளிக்கிக் கழித்த காலங்களை நினை.

ஒன்றுமே தெரியாவிட்டாலும், நானும் படம் எடுக்க சொல்லித் தருவேன் என்று தயங்காமல் களம் இறங்கிய உன் வீரத்தை எண்ணிப் பார்.

சொத்தையான உன் படங்களை Gimp கொண்டு மெருகேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றும் ஜெகத்ஜாலக் கில்லாடி நீ.

மறந்துவிட்டாயா கடந்த பெப்ரவரி மாதத்தை?

16 குடும்பங்களில் பெரும் குழப்பம் விளைவித்தாயே நினைவில்லையா?

தேமே என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்த 16 பதிவர்களை வம்புக்கிழுத்து ஒரு புகைப்படப் போட்டி வைத்தாயே மறந்துவிட்டதா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு என்று ஐன்ஸ்டீன் போல் யோசித்து ஒரு தலைப்பு வைத்தாயே.

விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, இந்தக் காய்கறிகளின் விலை உயர நீ செய்த கபட நாடகம் அது என்று எவ்வளவு பேருக்குப் புரிந்திருக்கும்?
பேதைகள்.

ஆட்டையில் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு விழுந்தார்களே.
கிலோக் கணக்கில் காய்கறி வாங்கி, ரிச்சாக க்ளிக்கிய அந்த பதிவர்கள் வாழ்க. அதை ஏற்பாடு செய்த நீயும் வாழ்க.

ஃப்ரிட்ஜில் இருந்த பழைய வெங்காயத்தையும், காய்ந்து போன கால்வாசி உருளையையும், குப்பையில் போட்ட தக்காளியை மட்டும் வைத்துக் கொண்டு படம் அனுப்பினார்களே சிலர்.
அதையெல்லாம் மறந்துவிட்டாயா?

சின்ன வெங்காயம் சீப்பாய் கிடைக்கிறதென்று அதை தரையில் கொட்டி படம் எடுத்து சிலர் அனுப்ப்பினார்களே. எப்படியப்பா மறந்தாய் அந்த ஆணவத்தை?
புகைப்படப் போட்டிக்கு, உருளைக்கு மேக்கப் போட்டு ஒரு படம் வந்ததே. அந்த கர்வத்தை எப்படி புறம் தள்ளினாய் நீ?

தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டி அல்லவா அது.

2007ல்
த.வெ.உ வை விட சிறந்த படம் ஏது சர்வேசா?

போட்டி முடிந்ததும், அடுத்த பத்து நாட்களுக்கு வெறும் வெங்காய தோசையும், வெங்காய பஜ்ஜியும், வெங்காய ஊத்தமும், வெங்காய ரைஸும், வெங்காய பக்கோடாவுமாய் சாப்பிட்டு வாய் கப்பெடுத்து அலைந்தாயே? மறந்ததெப்படி அதை?

அந்த பந்தயத்தை விளம்பரப் படுத்த, நீயும் சில படங்கள் வெட்கம் இல்லாமல் எடுத்து அங்கங்கு போட்டாயே, நினைவில் இல்லையா?

அறிவியலில் (சீ இல்ல இல்ல வரலாறில்) இடம் பிடித்த படங்கள் அல்லவா அவை.

அதில் ஒன்றை உருவி விடப்பா.
"

இப்படி கன்னா பின்னான்னு சொல்லிட்டு, அசரீரி லைட் ஆப் பண்ணிட்டு போயிடுச்சு.

அடடா, த.வெ.உ எப்படி மறக்க முடியும். நான் மட்டுமே ஒரு 50 படம் விதவிதமா க்ளிக்கி பாத்தேனே, தக்காளி , வெங்காயம் உருளை வச்சு :)

கறுப்பு லெதர் ஸோஃபாவுல, காய்கறியெல்லாம் போட்டு, ஒரு கறுப்பு பின்னணியில படம் எடுத்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு.
காயெல்லாம் கொட்டி எடுத்துப் பாத்தா, ஏதோ கொறஞ்ச மாதிரி பீலிங்.
வீட்ல இருக்கரவங்களெல்லாம், ஏதோ மற கழண்டுடுச்சுன்னு முடிவே பண்ணியிருந்த சமயம் அது.
சட்னு போய், கப்ல தண்ணி பிடிச்சுட்டு வந்து, காய்கறிமேலயும், லெதர் ஸோபா மேலயும் தெளிச்சு (effect சேக்கராராமா:) ), டேபிள் லேம்ப்ப ஒருத்தர் கிட்ட கொடுத்து, எல்லார் கிட்டையும் திட்டு வாங்கி, எடுத்த ஒரு படம் இது.



நல்லாயிருக்கா?

இனி மூணு பேர நான் ஆட்டைக்கு சேக்கணுமாமே?

ம்ம்ம்ம்மாட்டிவிட்டுட்டேன், இவங்கள:
நீங்க செய்யவேண்டியது: 2007ல் நீங்க எடுத்த படத்தில் பிடிச்சத பதிவாக்கி, ரெண்டு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போங்க.

1) நம்ம த.வெ.உ வெற்றியாளர் நெல்லை சிவா (condition: நீங்க த.வெ.உ படம் போடப்படாது :) )

2) நச் வெற்றியாளர் அருட்பெருங்கோ (நச்னு இருக்கணும் படம்)

3) இதுவரை எந்த படமும் (எனக்குத் தெரிஞ்சு) வலையில் ஏற்றாத லக்கி லுக் (கலைஞர் படம் போடப் படாது. நீங்க எடுத்த படமா போடணும். மகரநெடுங்குழைநாதன் படம் ஓ.கே. ஆனா, கிராபிக்ஸ் பண்ணியிருக்கக் கூடாது :) )

;)

10 comments:

Anand V said...

ஒன்னு டேபிள் லேம்ப், மற்ற இரண்டும் கூரை விளக்கா ? கூசுதே கண்ணு :-)

SurveySan said...

ஸீலிங்கல ட்யூப்லைட் இருந்தது :)

Unknown said...

என்னையும் இழுத்து விட்டதுக்கு நன்றி தல.

காய்கறி கோபுரம் நல்லாருக்கு ;-)

CVR said...

///எடுப்பதில் 98% நேர தண்டம் என்று தெரிந்தும், க்ளிக்கிக் கழித்த காலங்களை நினை.

ஒன்றுமே தெரியாவிட்டாலும், நானும் படம் எடுக்க சொல்லித் தருவேன் என்று தயங்காமல் களம் இறங்கிய உன் வீரத்தை எண்ணிப் பார்.

சொத்தையான உன் படங்களை Gimp கொண்டு மெருகேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றும் ஜெகத்ஜாலக் கில்லாடி நீ.//////

அச்சு அசல் என்னை பத்தியே சொல்லுறா மாதிரி இருந்துச்சு அண்ணாச்சி!! :-P

படம் சூப்பரு! அதை விட நீங்க எழுதின விதம் படா சூப்பரு!!
உங்க வீட்டுல அசரீரி எல்லாம் வருமோ???
நடத்துங்க!! :-D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல் அசரீரி.

SurveySan said...

அருட்பெருங்கோ, CVR, முத்துலெட்சுமி,

நன்றீஸ்! :)

Boston Bala said...

போட்டோ நன்று என்றாலும் அசரீரி தூள்!!

SurveySan said...

பா.பாலா, நன்னி.
அசரீரீ மெய்யாலுமே வந்துதுங்க :)

லக்கிலுக் said...

கும்மி அடிச்சாச்சி!!!

SurveySan said...

நன்றி லக்கி.

கிராபிக்ஸ் நல்லாவேயிருக்கு. நல்லவேள டெண்டுலகர் படம் போடாம விட்டீங்களே :)