recent posts...

Tuesday, March 27, 2007

சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல்

ஒவ்வொரு ரஜினி படம் வரும்போதும் ஒரு பெரிய திருவிழா வருவதை போன்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லைன்னாலும், ரஜினி படம் எல்லாத்தையும் பாத்துருவேன். சில படங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கவும் பிடிக்கும்.

ஆரம்ப காலங்களின் பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை அப்பறம் இந்தக் காலத்து பாட்சா வரை பல படங்கள் பிடிக்கும். ( பாட்சா படத்துல, 'டேய் அண்ணண்டா' என்று, கல்லூரி முதல்வர் கூறும் காட்சி மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறுதல் மிகையாகாது :) ).

சிவாஜி படம், தங்க மலை ரகசியம் லெவல்ல படப்பிடிப்பு நடக்குது, பாடல்கள் எல்லாம் சீக்ரெட்டா வச்சிருக்காங்க. எவ்ளோ மூடி மறச்சாலும், நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ் ஆளுங்க மேட்டர மோப்பம் பிடிச்சு லீக் பண்ணிடறாங்க.
எனக்குத் தெரிஞ்சு, எதுவுமே ஒரு படத்த பத்தி தெரியாம, கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி, தியேட்டர்ல கொண்டு போய் விட்டாதான், படத்தை நல்லா அனுபவிக்க முடியும்.

ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து படங்கள் லீக் ஆனதும் இல்லாம, 3 பாடல்களும் லீக் ஆயிடுச்சு.
பல கோடி போட்டு படம் எடுக்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய பாதிப்புதான்.

அது சரி, இப்ப என்ன சொல்லவர நீன்னு, நீங்க புருவத்த தூக்கரது தெரியுது.

நம்ம மக்கள்ஸுகிட்ட இருக்கர "ஓ.சி" ஆசைய பத்தி ஏற்கனவே ஒரு சர்வே போட்டிருந்தேன். மக்கள்ஸும், எதிர்பார்த்த படியே, ஓ.சி ல கிடைக்கும், எம்.பி.3, திருட்டு சி.டிக்கு அதிக வாரியான வாக்குகளை போட்டு திக்கு முக்காட வச்சாங்க.

இப்ப இங்க என்ன கேள்வின்னா, சிவாஜி படப்பாடல்கள், காசு கொடுத்து வாங்குவீங்களா?
இல்ல, அதுவும் ஓ.சி தானா?
வாக்கு போட கீழ உள்ள அனுமானங்களை வைத்துக் கொள்வோம்.
1) பாடல்கள் எல்லாம் சூப்பரா இருக்குன்னு வச்சுக்குவோம்.
2) சி.டி குறைந்த விலையில் கிடைக்குதுன்னும் வச்சுக்குவோம்.

நானும் பெரிய யோக்கியன் எல்லாம் இல்ல. ஆனா, வருஷத்துக்கு அஞ்சு, ஆறு சி.டி க்கள் spencers music worldக்கு காசு கொடுத்து வாங்குவதும் உண்டு.

இப்ப, யோசிச்சு வாக்குங்க!



(காசு கொடுத்து வாங்குவேன்னு சொன்னவங்க, பின்னூட்டி உங்க பேர சொன்னீங்கன்னா, இன்னும் ரெண்டு பேர inspire பண்ணும். சோ பின்னூடுங்க :) )

-> வேலு போய் டால்பின் வந்த படம்ஸ் பாத்தாச்சா?

-> க்ரிக்கெட்டு 2007 சர்வேக்கு ஓட்டு போட்டாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

-> என் மினி-கதை "சீனு" படிச்சீங்களா? (ஹிஹிஹி - படிச்சு அழூதுட்டேன்னு ரெண்டு ரசிகர்கள் சொல்லீயிருக்காங்க :) ))

-> அரட்டை அடிச்சீங்களா?

-> என் மறுபக்க அலசல் பாத்தீங்களா? (weirdity)

வாழ்க வளமுடன்!

13 comments:

SurveySan said...

மூணு பாட்டு லீக்காச்சே, யாராவது கேட்டீங்களா? நல்லா இருக்குதா?

Anonymous said...

1 in 3 was good.

didnt feel like Rajini songs.

குமார் வீரராகவன் said...

கண்டிப்பாக காசு கொடித்து தான் வாங்குவேன்.

ரஜினி பாட்டு என்றாலே ஒரு புத்துணர்ச்சி. அதை முழுமையாக அனுபவிக்க "ஒரிஜினல்" ஆல்பம் தான் சிறந்தது.

- குமார் வீரராகவன், பெங்களூரு

SurveySan said...

கும்மாங்கோ,

Romba sandhosham.

hats off to you :)

SurveySan said...

60 votes so far, and leading choice is 'MP3' :(

k4karthik said...

இதை கொஞ்சம் சீரியசா பாக்கலாம்...
பல கோடி குடுத்து பாட்டு அமைச்சிருக்காங்க... பல கோடி குடுத்து படம் எடுக்குறாங்க... அதனால, திருட்டு வி.சி.டி , mp3 எல்லாம் தப்பு மாதிரி சொல்றீங்க.. தப்பு தான்... ஒகே..
matrix படத்துல பல r&d செஞ்சி time freeze techiqக்க கொண்டு வந்தாங்க... அதை மறுபடியும் எத்தனை ஆங்கில படத்துல பாத்துறுப்பீங்க?? இல்லையே... ஏன் யூஸ் பண்ணாலேனா அது ஒரு unique techniq... அதை அப்படியே boys படத்துல சங்கர் யூஸ் பண்ணலயா?? அது ரைட்டா? அதே boys படத்த திருட்டு வி.சி.டி.ல பாத்தா தப்பா??

எந்த புது பாட்டா இருந்தாலும் நான் முதல்ல தேடுவது mp3 தான்.. ஆனா, திருவாசகம் மாதிரி எல்லாம் only originals.. என் friendsக்கும் original-e வாங்கி குடுத்தேன்...

SurveySan said...

அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன் டெக்னிக்கா? :)

'கான்ஸெப்ட்' அப்படியே உபயோகிப்பது பேர் காப்பி இல்ல. பாய்ஸ்ல ஷங்கர் அந்த டைம் ப்ரீஸ் டெக்னிக் உபயோகிச்சதால, மேட்ரிக்ஸ் படத்துக்கு ஒரு பாதிப்பும் வரல.

அடுத்தவன் உழைப்புக்கு தகுந்த கூலி கொடுக்காமல், ஓ.சியில் உபயோகிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்குது.

இந்த திருவாசகம் மட்டும், எனக்குத் தெரிஞ்ச எல்லா பயலும், காசு கொடுத்து வாங்கி இருக்கான் (நானும் தான்). சாமி கண்ண குத்திடும்னு பயமா?
இல்ல 'நல்ல விஷயம்' பண்றோம்னு ஓவரா பப்ளிஸிட்டி பண்ணி ஏமாத்திட்டாங்களா?
இளையராஜா அதுக்கு சம்பளம் வாங்கலியா என்ன? வந்த லாபம் என்ன ஆச்சு? அரக்கட்டளை வச்சு தமிழ் காப்பாத்தப் போறேன்னாங்க. பண்றாங்களா?

k4karthik said...

boys படத்துனால matrixக்கு எந்த பாதிப்பும் இல்லனு நீங்க சொல்றது... அடுத்தவன் பொருளை அவனுக்கு பாதிப்பு வராத வரைக்கும் சுடலாம்-ங்கற மாதிரி இருக்கு...
சுடுறதே தப்பு இல்லையா?

SurveySan said...

மேட்ரிக்ஸ், 'டைம் ப்ரீஸ்' கான்ஸெப்ட் காபிரைட் பண்ணியிருந்தாங்கன்னா அவங்களுக்கு மட்டும் சொந்தம். அப்போ சுடரது தப்புதான்.
ஆனா அது ஜஸ்ட் அனதர் டெக்னிக் என்னும் போது, அத சுடரது பெரிய தப்பா தெரியல.

இன்ஸ்பைய‌ர்ட் பைனு ந‌ம்ம‌ ரெஹ்மானும், ராஜாவும், தேவாவும் சில‌ ச‌ம‌ய‌ம் சொல்லுவாங்க‌ளே. அதே போல் தான் இது.

அடுத்த‌வ‌ர் பொருளை சுடும்போது, அவ‌ருக்கு அதனால் direct or indirect ந‌ஷ்ட‌ம் வ‌ருமானால், சுட‌ர‌து கண்டிப்பா த‌ப்பு.


more examples:
Kamal can immitate Mel Gibson or Brando - No loss for Mel or Brando in this regard. So nothing wrong about it.
but, when Kamal re-makes Mrs.Doubtfire, he ought to pay a 'fee' for the Doubtfire team. Its stealing, otherwise. :)

SurveySan said...

78 votes, #2 in the lead with 61% votes :(

k4karthik said...

//Kamal can immitate Mel Gibson or Brando - No loss for Mel or Brando in this regard. So nothing wrong about it.
but, when Kamal re-makes Mrs.Doubtfire, he ought to pay a 'fee' for the Doubtfire team. Its stealing, otherwise. :)//

thats very much true....

Anonymous said...

திருட்டு சீ.டி யில் சிவாஜி படம் பார்ப்பதில் உள்ள சுகமே தனி தான் சார்.
அதுவும் பத்துப் பேருக்கு சீ.டி காப்பி எடுத்துக் கொடுத்து பெறும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாதப்பா!

Anonymous said...

திருட்டு சீ.டி யில் சிவாஜி படம் பார்ப்பதில் உள்ள சுகமே தனி தான் சார்.
அதுவும் பத்துப் பேருக்கு சீ.டி காப்பி எடுத்துக் கொடுத்து பெறும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாதப்பா!