recent posts...

Monday, September 13, 2010

ஏமாற்றிய ரஹ்மான்

ரஹ்மான் வராரு ரஹ்மான் வராருன்னு, தண்டோரா போட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு. அதுவும், ஆஸ்கார் வாங்கினப்பரம் நடத்தும், 'world' tour இது.
நிகழ்ச்சி, அருகாமையில் இருக்கும் Oakland Oracle Arenaவில்னு சொல்லியிருந்தாங்க.
டிக்கெட் விலை $50லிருந்து, $300 வரை இருந்தது.

ஏற்கனவே $50 சொச்சத்துக்கு Eaglesஐ பாக்கப் போய், Eagles எல்லாம் கொசுமாதிரி தெரிந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், இம்முறை பெரிய தொகை கொடுத்து, ரஹ்மானை கிட்டப் பாக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். $125 கொடுத்து, ஸ்டேடியத்தின் நல்ல பகுதியில், நேரெதிரே அமர்ந்து பார்க்கும்படி ஒரு ஆசனமும் புக் பண்ணியாச்சு.

இதோ வராரு, அதோ வராருன்னு, ஜூன் மாதமும் வந்தது. சிகாகோவில் நடந்த ஒத்திகையின் போது, ஏதோ லைட்டெல்லாம் கீழ விழுந்து ஒடஞ்சிடுச்சுன்னு, மத்த நகரங்களின் நிகழ்ச்சியெல்லாம் தள்ளி வச்சு, எங்க ஊரு நிகழ்ச்சி ஜூனிலிருந்து, செப்டம்பருக்கு தள்ளப்பட்டது. வாங்கியதும் வாங்கியாச்சு, பொறுமையா இருந்து, நிகழ்ச்சிய பாத்துத் தொலச்சிடலாம்னு காக்க ஆரம்பிச்சேன்.

சென்ற ஞாயிறன்று, அந்த சுபயோக சுபதினமும் வந்தது. நிகழ்ச்சிக்கு பயங்கர பில்ட்-அப்பும் இருந்தது, 'Jai Ho' வித்தகர், சர்க்கஸ் வகையராக்கள், புதுவிதமான அரங்க அமைப்பு, அது இதுன்னு. ஆனா, நிகழ்ச்சியன்றும் கூட, ரேடியோவில், டிக்கெட் வாங்கிக்கங்க வாங்கிக்கங்கன்னு கூவி கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க.
'ரஹ்மான்' ஈர்ப்புத் திறன் அம்புட்டுதான் போலருக்குன்னு நெனைச்சேன். இந்தி, தமிழ், தெலுகு, மூன்று மொழியிலும் பாடல்கள் இருக்குமே, எல்லா கும்பலையும் சேத்தாகூட, ஸ்டேடியத்தை ரொப்பியிருக்கலாமேன்னு தோணிச்சு. ஆனா, ஆளுங்க, விலை அதிகம்னு வராம இருந்திருப்பாங்கன்னு நெனைச்சேன்.

ஏழு மணிக்கு நிகழ்ச்சின்னு போட்டிருந்தது. நான், கும்பலை பாக்கலாம், ஜாலியா இருக்கும் ஆட்டமும் பாட்டமுமாய்னு நெனச்சுக்கிட்டு, ஆறு மணிக்கே போயிட்டேன்.
முதல் பல்பாக, வாசலிலே இருந்த ஜெக்கூரிட்டி, ஹலோ ப்ரதர், இம்மாம் பெரிய பை எல்லாம் உள்ள கொண்டு போவக் கூடாது, கேமரா ஸ்ட்ரிக்ட்லீ நோ நோன்னு சொல்லி, பையை வெளியிலியே வைக்கச் சொல்லிட்டாரு.
பேண்ட்டு போடாம கூட அவசரத்துல வெளீல போயிடுவேன், ஆனா, கேமரா இல்லாம எந்த எடத்துக்கும் போறதில்லை நான். இப்படி, வலுக்கட்டாயமா கேமெராவை புடுங்கி வச்சதும், கண் பார்வை போன மாதிரி, மங்கலாயிட்டேன். மெதுவா போயி $125 இருக்கையில் அமர்ந்தேன்.

நம்மூர் நிகழ்ச்சி, சொன்ன நேரத்துக்கு என்னிக்கு நடந்திருக்கு? அதை முன்னமே உணர்ந்த மக்கள்ஸ், யாரும் ஏழு மணி வரை வரவே இல்லை. ஆறு மணிக்கு 10% ஆளுங்க வந்திருப்போம். ஏழு மணிக்கு, 30% அரங்கம் ரொம்பியிருந்தது. இதோ ஆரம்பிப்பாங்க, அதோ ஆரம்பிப்பாங்கன்னு பாத்தா, பாங்க்ரா கும்பல் ஒண்ணு ஸ்டேஜில் ரஹ்மான் பாட்டை சிடியில் போட்டுவிட்டு ஆடிக்கிட்டிருந்தது. ஏழே முக்காலுக்கு, 60% அரங்க ரொம்பியதும், மெதுவா பாட்டை ஆரம்பிச்சாங்க.

Slumdogலிருந்து ஒரு பாட்டு, Swades பாட்டு, அது இதுன்னு நேரம் நகர்ந்தது.
ஆனா, ஒரு 'பன்ச்' மிஸ்ஸிங் எல்லாத்திலையும்.
இம்புட்டு காசு கொடுத்து ஒரு மைக்கேல் ஜாக்ஸன் ஷோவோ, ஷக்கீரா ஷோவோ போயிருந்தா, முதல் ரெண்டு மூணு பாட்டுலையே, மெய் சிலிர்த்து, 'ஐக்கியம்' ஆகியிருப்போம். ஆனா, இங்க, வாத்தியக்காரர்கள் எல்லாம் 'outsourced' வகையராக்கள்.
மிகவும் எதிர்பார்த்த ட்ரம்ஸ் சிவமணி மிஸ்ஸிங். பெரிய ட்ரம்ஸ் சவுண்ட் வந்தது, முக்கால் வாசி, 'சிடியிலிருந்து' ட்ராக் ஓட விட்ட மாதிரி.
மத்த வாத்தியங்களும் பெருசா இல்லை. நம்ம ஊரு கல்யாணத்துல வாசிக்கரவங்களே, இதை விட, நிறைய வாத்தியங்களை கொண்டு வருவாங்க.
'சிடி'யில் DJ போட்டு மிக்ஸ் பண்ணி கேக்கவா, இம்புட்டு கொடுத்து எல்லாரும் நிகழ்ச்சிக்கு வரோம்?

பாடகர்களும் மிஸ்ஸிங். ஹரிஹரன், விஜய் ப்ரகாஷ், ப்ளேசி, பென்னி தயால் இருந்தாங்க.
அவங்களும் நிறைய பாடலை. முக்கால் வாசி, ரஹ்மானே பாடினார்.
சில பாடல்கள், 'சிடியில்' போட்டு வாயசைக்கவும் செய்தார். (Jai ho was certainly a lip sync). ஹரிஹரன், ரெண்டோ மூணோ பாட்டு பாடினார் அம்புடுதேன்.

எந்திரன் பாட்டு ரெண்டு பாடினாங்க. நல்லா இருந்தது.

எல்லா பாடலையும், முழுசா பாடித் தொலைக்காம, மணிரத்னம் எடிட் செய்ர மாதிரி, வெட்டி வெட்டி பாடினாங்க. விண்ணைத் தாண்டி வருவாயா, தெலுங்கு பாட்டுக்கு பெரிய ஆரவாரம், அதை அடுத்த ஆரவாரம், எந்திரன் பாட்டுக்கு. இந்திப் பாட்டுக்கு பெரிய வரவேற்பெல்லாம் இல்லை. இதிலிருந்தே, வந்தவர்களின் கூட்டம் மனவாடும், டமிலர்களும்னு புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி பாடல்களை பாடியிருந்திருக்கலாம். இதுவரை கேள்வியே படாத சில இந்திப் பாடல்கள் பாடினாரு. அப்படி இப்படின்னு ரெண்டு மணி நேரம் ஆனதும், நிகழ்ச்சியை வணக்கம் சொல்லி முடிச்சுட்டாரு.

சாதாரணமா, இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் போனா, குறைந்த்து மூன்றிலிருந்து நாலு மணி நேரம் வரைக்கும் நடக்கும். இடையில் ஒரு இடைவேளையெல்லாம் கூட விடுவாங்க. நிகழ்ச்சியெல்லாம் முடிச்சுட்டு வெளீல வரும்போது, லேசா ஒரு கிறக்கத்தோட வருவோம். இங்க என்னடான்னா, உள்ள போனதும் தெரீல, வெளீல வந்ததும் தெரீல. அப்படி ஒரு 'சப்'னு முடிஞ்சிருச்சு.

நேரடி நிகழ்ச்சிக்கு ரசிகன் எதுக்கு வரான்? தன் அபிமான ஸ்டாரை கிட்டத்தில் பார்க்கவும், 'சிடி'யில் பாட்டுக் கேட்டால் கிட்டாத ஒரு பரிமாணத்தை அனுபவிக்கவும். அது தெரியாதா இந்த ஆளுகளுக்கு? நிகழ்ச்சியை நடத்திச் செல்ல ஒரு Anchor இல்லை. ஒரு பாட்டு முடிஞ்சதும், அடுத்த பாட்டு ஆரம்பிக்குது, ஒளியும் ஒலியும் கணக்கா.
யாராவது, பேசி, எதையாவது பகிரிந்துக்கிட்டாதானே, ஒரு நேரடி நிகழ்ச்சி, மனசுல பதியும்?

நிகழ்ச்சி houseful ஆகாததால், cost cuttingஆ? இல்லை, தன்னை michael jackson போல் வளர்த்துக் கொள்ளும் நினைப்பில், இந்த மாதிரி ஒரு 'சுய' முயற்சியா? ஒன்னியும் புரியல்ல. குறைந்த பட்சம் ஒரு ஷ்ரெயா கோஷல், ட்ரம்ஸ் சிவமணி, கார்த்திக், சித்ரா, உதித் நாராயண்/சுக்வீந்தர் இல்லாம இனி கிளம்பி வராதிங்கப்பூ.

பிடிச்ச விஷயங்கள்னு பாத்தா:
அரங்கத்திற்குள் அடிக்கப்பட்ட ப்ரொஜெக்ஷன் லைட்டு. கலர் கலரா அழகா இருந்தது.
ஒரு பாட்டுக்கு லதா மங்கேஷ்கரின் வீடியோவை பெருசா ப்ரொஜெக்ட் பண்ணி அதுகூட டூயட் பாடினாரு.
ஏதோ ஒரு அல்லா பாட்டு, ஹார்மோனியத்துடன் பாடினாரு. ரம்யமா இருந்தது.
இரும்பிலே ஒரு இதயம் துடித்ததோ எந்திரன் பாட்டு, கலக்கலா இருந்தது, மக்களின் ஆரவாரம்.
ஸ்வர்ணலதாவுக்காக ஒரு குட்டி பியானோ பிட்டு வாசித்தது.

பிடிக்காத விஷயங்கள்:
Vintage classics பாடறேன்னு, துளிகூட ஒத்திகை பாக்காமல், எத்தையோ ஆரம்பிச்சு, 'காதல் அணுக்கள்' அது இதுன்னு பாடி திராபையாக்கியது.
இசை நிகழ்ச்சியில் சர்க்கஸ் வகையராக்கள் இன்னாத்துக்கு?
வாத்தியக்காரர்களின் வரட்சி.
lip sync/ட்ராக் போட்டு ரசிகனை ஏமாற்றும் ஜாலம்.
இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்த நிகழ்ச்சியின் அளவு.
கொஞ்சம் கூட ரசிகனோடு சம்பாஷனைகள் செய்யாமல், பாட்டை மட்டுமே பாடும், 'சப்பெ'ன்ற நிகழ்ச்சி வடிவம்.
அடுக்கிக்கிட்டே போவலாம்.
'இந்திய' வாசம் கொஞ்சம் கூடம் இல்லாமல், ரொம்பவே Western மயமாக்கி இயங்கும் ரஹ்மானின் ஸ்டைலு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ($125 x 2 ) + $40 + $15 + 5 மணி நேரம் ஸ்வாஹா :|

ஜூலை 2007ல், SPB, யேசுதாஸ், சித்ரா $50க்கு சொர்கம் காட்டியது இன்றும் நினைவில் நிக்குது.

ரஹ்மான், புல்லரிக்க வைக்கணும் ஐயா. டீம் சேத்து நல்லா யோசிச்சு அடுத்த வாட்டியாவது கலக்குங்க. 'இசையில்' இந்தியம் வேணும் ஐயா. 'வந்தே மாதரம்' பாடினா மட்டும் போதாது. ப்ளீஸ், நம்ம நேட்டிவிட்டி பாடலிலும், நிகழ்ச்சியிலும் விட்டுத் தொலையாதீர்கள்.

ஜெய்ஹோ!

ஆறு மணிக்கு:


ஏழு மணிக்கு:


எட்டு மணிக்கு:


24 comments:

SurveySan said...

http://latimesblogs.latimes.com/music_blog/2010/09/live-review-ar-rahman-at-the-forum.html

good one:

"There were shades of rock, hip-hop, reggae and pop, even including a piece of Michael Jackson’s “Black or White.” Rahman showed a strong ambition to please on a grand scale, though the more he sweetened his sound with the lightest Western pop formulas, the thinner his own music became. He was best served when tapping the deeper emotions of his own work and culture."

சசிகுமார் said...

good

ஜெய் said...

// ஏதோ ஒரு அல்லா பாட்டு, ஹார்மோனியத்துடன் பாடினாரு. ரம்யமா இருந்தது. //

இதுவா?
http://www.youtube.com/watch?v=nt93yH689Dg

எஸ்.கே said...

//($125 x 2 ) + $40 + $15 + 5 மணி நேரம் ஸ்வாஹா//
ஆழ்ந்த அனுதாபங்கள். :-(

Unknown said...

buildup like m.j ?

Unknown said...

நம்ம சவுண்டு எஞ்சினியர் ஒப்பெத்தறதே அங்கேருந்து காபி அடிச்சிதானே, அப்புறம் எங்கிருந்து நேட்டிவிட்டி வரது..

Venkat said...

Hello ARR -

I am a BIG fan of you but Shame on you that to give a very shabby show. If you can't produce quality show you better stay away from it. I have seen many TV shows where Kids give better performance. That little boy was so irritating. Don't say that he has extraordinary talents. Don't you know that that there are talents available in India and the 100% of Indian crowd showed up will love that more.

With Love,
Venkat

bandhu said...

I never go to such shows! glad to know it is better to stay like that!

SurveySan said...

சசிகுமார், நன்றி.

ஜெய், அதேதான். Kwaja. தூளா இருந்தது.

எஸ்.கே, நன்றீஸ்.

SurveySan said...

ஆகாயமனிதன்,

m.j. மாதிரி, தனி ஆளா, மொத்த ஷோவையும் நடத்திப் பாக்கணும்னு ஆசப் பட்டோ என்னவோ, பெரிய பட்டாளத்தை கூட்டிக்கிட்டு வரலை.
விபரீதமான எண்ணம் அது.

SurveySan said...

kudakku,

காப்பி அடிச்சாலும் presentableஆ கொடுத்திடறாரு. அதனால மன்னிச்சு விட்டுடலாம். சில பாடல்கள் (லகான், Taal மாதிரி) நல்லாவே பண்னறாரு.

மேடை நிகழ்ச்சியிலெல்லாம் கூட westernஐ ப்ரதானப் படுத்தி, நம்மள டார்ச்சர் பண்றதுதான் தாங்க முடியல்ல.

baru baru hoன்னு மேளம் அடிச்சு, அந்த லகான் பாட்டை மேடையில் அரங்கேத்தியிருந்தா, கால்ல விழுந்து பொரண்டிருப்பேன் :)

SurveySan said...

Venkat, same blood. :)

bandhu, good decision :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சும்மா பாட்டா போட்டுக்கிட்டே
இருப்பாங்களா?
அது என்ன சிடிப்ளெயர்ல வரமாதிரி வரிசையாவா ..?
அடக்கொடுமையே..

அட்லீச்ட் ஒரு ஒளரல் தொகுப்பாளராவது வேணாமா//

SurveySan said...

முத்துலெட்சுமி, நேரம் கடத்தவாவது யாரையாவது பேச விட்டிருக்கலாம் நடூ நடூல. :(

SurveySan said...

ஜெய், here is another beautiful rendition of that sufi song.
http://www.youtube.com/watch?v=Wu_x4N1rzww&feature=related

ஜெய் said...

சர்வேசன்,
அந்த Indian idol ரொம்ப நல்ல attempt.. இந்த அளவு பாடறதே பெரிய விஷயம்தான்...
ஆனாலும் பாட்டு ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டுங்கிறதால, ஒரிஜினலுக்கு பக்கத்துல கூட வரலைன்னுதான் நினைக்கிறேன்... ஒரிஜினலை பலமுறை கேட்டப்பறம் இதைக்கேட்டா நல்லா தெரியும்...
In fact, ரஹ்மானே மேடையில எப்படி பாடி இருப்பாருன்னு கேக்க ஆசைதான்.. நீங்க வீடியோ எடுத்தீங்களா?

ஜெய் said...

முக்கியமா அந்த வீடியோல 1:17 ல இருந்து 1:27 வரை கேட்டுப்பாருங்க... கொஞ்ச சொதப்பல்தான் அந்த இடம்..

நான் ரஹ்மான்தான் இசைக்கடவுள்னு நினைக்கிறவன்... நான் biased-ஆ பேசுனாலும் பேசுவேன்... :) கண்டுக்காதீங்க... ;)

ஜெய் said...

அப்படியே இதையும் கேளுங்க... அந்த பாட்டோட instrumental...

ஜெய் said...

லின்க் மிஸ் பண்ணிட்டேனோ... :)
http://www.esnips.com/doc/783009a2-f79d-4029-ae89-2ce5ec9a51b1

ராமலக்ஷ்மி said...

ரஹ்மான் உங்களை ஏமாற்றினாலும் நிகழ்ச்சி அனுபவத்தை நொந்து விவரித்திருக்கும் விதம் அருமை(என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க):)! ஏமாற்றவில்லை உங்கள் எழுத்து. சுவாரஸ்யமான பதிவொன்று கிடைத்தது எங்களுக்கு!

ஆ! இதழ்கள் said...

rahman கலக்கிக்கிட்டுருக்காருனுல நினைச்சேன். ஆனா இது இந்திய ஆடியன்ஸ்கு இல்லை அமெரிக்க ஆடியன்ஸ இழுக்கனு சொன்னாங்க அந்த குரூப்... ரொம்ப அநியாயம். உண்மைய சொல்லனும்னா, ரஹ்மான் ஸ்டேஜ்ல பாடுனா எனக்கு பிடிக்கவே பிடிக்காது, சும்மா சிங்க் குடுத்து ஏமாத்துவாரு. ரஹ்மானின் தரத்திற்கு உகந்ததல்ல, அதுவே ஃபுல்லா பாக்கணும்னா வெறுப்புதான் வரும். சும்மா கைய கால நீட்டிகிட்டு 6மாதக் குழந்தை மாதி மேலும் கீழும் ஆடிகிட்டிருப்பாரு. ரஹ்மானின் சிட்னி பெர்ஃபோர்மன்ஸ் ஃபுல்லா youtubla பாத்தேன், அது நல்லா இருக்கும்.

SurveySan said...

ஜெய்,

நானும் இன்னும் முழுசா கேக்கலை, ஒரிஜினலையும், IDOLஐயும். கேட்டுட்டு சொல்றேன்.

மொத்தத்தில், அருமையான பாட்டு. இந்த மாதிரி 'மண் வாசம்' வீசும் பாடல்களை இசைப்பதுதான் ரஹ்மானுக்கு அழகு. சொல்லி வைங்க :)

SurveySan said...

ராமலக்ஷ்மி, எனக்கு ஒரு பதிவு போட்டா வர வருமானம் $0.05 காசு. அதை சம்பாதிக்க, $300 செலவு செய்யச் சொல்றது ரொம்பவே வில்லத்தனம் ;)

SurveySan said...

ஆ! ரஹ்மான் கலக்கிக்கிட்டுதான் இருக்காரு. slumdog பாட்டெல்லாம் பின்னித்தான் எடுத்திருக்காரு. ஆனா, நேரடி நிகழ்ச்சில டார்ச்சர் பண்றதுதான் சகிக்க முடியல்ல.

நீங்க சொன்னமாதிரியேதான், குழந்தை மாதிரி, கைய ஆட்டிக்கிட்டு, 'ஜெய் ஹோ'ன்னு சிடி அலரும்போது, மைக்கை வாய் கிட்ட அவசரமா கொண்டு போயி sync பண்றது ரொம்பவே கேவலம். shame on him!