recent posts...

Monday, August 09, 2010

HollywoodBalaவை புறக்கணிப்போம்

Hollywood Bala என்ற பதிவரை அநேகம் பேருக்கும் தெரிந்திருக்கும். திரைப்படங்களுக்கு அருமையான விமர்சனங்களை முன்வைப்பதோடில்லாமல், பல திரைப்பட தொழில்நுட்ப விஷயங்களை பிரித்து மேய்பவர்.

எங்க வூட்டுக்காரரும் வேலைக்குப் போகறாருங்கர ரீதியா பலரும் திரை விமர்சனங்கள் எழுதிக்கிட்டு வரோம். அதில், தனித்தன்மையுடன் பளீர்னு எழுதரவரு இந்த பாலா.

இன்செப்ஷன் படத்துக்கு சினிமா ஆர்வலர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதி முடிச்சாச்சு. இன்னும் எழுதாதது, சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத ஜெயின் துறவிகள் மட்டுமே.
ஆனா பாருங்க, இந்த ஹா.பாலா இன்னும் இந்தப் படத்தைப் பத்தி ஒண்ணுமே எழுதலை.

இந்த படம் ஒரு கொழப்பமான படம். பலருக்கும் பல புரிதல்களை குடுத்திருக்கு. எல்லாரும் தப்பு தப்பா பல விஷயங்களை கவனிச்சிருக்காங்க, சாரு உட்பட.

இந்த மாதிரி க்ரூஷியல் தருணத்திலே, படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி குழப்பத்தை தீர்க்காம, காதல் கவுஜ எல்லாம் எழுதிக்கிட்டு டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு மனுஷன்.

புறக்கணிப்போம், இன்னும் 24மணி நேரத்தில், விமர்சனம் வந்து சேரலைன்னா.

;)

பி.கு: அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் திரில்லே திரில்லுதான் ;)

7 comments:

பாலா said...

அடப்பாவி...

பாலா said...

இப்பத்தான்... பப்ளிஷ் பட்டனை க்ளிக் பண்ணலாம்னு இருந்தேன்!! :)

பாலா said...

// அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் திரில்லே திரில்லுதான்//

அப்ப மட்டும்தாங்க எனக்கு டைம் இருக்கு!!! :( :(

பாலா said...

சரி ரொம்ப கேக்கறீங்க.

இந்தாங்கோவ்...

http://www.hollywoodbala.com/2010/08/inception-2010.html

SurveySan said...

ஹா.பாலா, அதென்ன முன்னோட்டப் பதிவா? சிக்கிரம் அடுத்தத ரெடி பண்ணுங்க. இல்லன்னா, அடுத்த பதிவை நான் ரெடி பண்ண வேண்டியது வரும் ;)

கா.கி said...

@surveysan
உங்க சந்தேகத்தையெல்லாம் தீர்க்கனும்னு தான் நான் கல்லாவ ஒபன் பண்ணி வெச்சிருக்கேன். அதயெல்லாம் கண்டுக்கமாடீங்களே... :(

கோபிநாத் said...

;-)))