recent posts...

Sunday, August 23, 2009

TheHinduவின் கொழுப்பா? நமது கையாலாகாத்தனமா?

hinduonnet.com, இந்து நாளிதழின் இணையதளம். அச்சில் வரும் நாளிதழ் எந்தளவுக்கு, குவாலிட்டியா இருக்குமோ, அதுக்கு தலைகீழாக அதன் இணைய தளம் இருந்து வந்தது.
மொக்கையான கலரும், கண்ட இடத்தில் விளம்பரமும், காண சகிக்காமல் இருக்கும்.

யாரோ நல்லா திட்டியிருப்பாங்க போல, இணையதளத்தை மெருகேத்திக்கிட்டு இருக்காங்க. புதிய பேட்டா தளம், கண்ணுக்கு இதமாய் இருக்கிறது.

புதிய தளத்தை விமர்சிப்பதற்கு அல்ல இந்த பதிவு.

புதிய தளம் பற்றிய விவரங்களை அலசும்போது, இது கண்ணில் பட்டது.
The design is by Mario Garcia Jr., of Garcia Media, Tampa. Florida, USA. The workflow solution is by CCI Europe A/S, Denmark.The web publishing system is from Escenic A/S, Norway.

என்ன கொடுமைங்க இது?

ஏழு கடல், எட்டு மலையெல்லாம் தாண்டி, ஊரு விட்டு ஊரு போயி, பரதேசிகளாகிய நாம், உலகில் இருக்கும் மொத்த இணையதளங்களையும், கட்டிக் காத்துக்கிட்டு இருக்கோம், ஆனா, உள்ளூர்ல இருக்கர இந்துக்கு கைகொடுக்க, ஒரு இந்தியக் குடிமகனுக்கும் வக்கில்லாமல் போனது ஞாயமா?

Denkarkலும், Norwayயிலும் உள்ள உபகரணிகளை உபயோகிச்சதை மன்னிச்சாலும், எங்கோ Floridaவில் இருக்கும் Mario Garcia Jrஐ டிசைன் செய்யச் சொன்னது பெருங்குற்றம்.

கேக்க ஆளில்லையா?

12 comments:

இலவசக்கொத்தனார் said...

http://garciamedia.com/about

நாளிதழ்களின் வடிவமைப்புக்குப் பெயர் போனவராகத் தெரிகின்றார். அதனால் பயன்படுத்தி இருக்கிறார்கள். தப்பாக ஒன்றும் தெரியவில்லை.

இதில் என்ன குற்றம் கண்டீர்கள்?

கானா பிரபா said...

இதேமாதிரி ஐரோப்பா, அமெரிக்க நாடுகளின் ரயில்வேயில் இருந்து பெரும்பாலான‌ சேவைகளை இந்தியாவில் outsource இருந்து பண்ணும்போதும் இதேமாதிரி அங்கிருந்து கேட்கிறாங்களே?

ஆக, உலகமயமாக்கலில் ஒரு கூறு இது என்று எடுத்துக்கொண்டே நகருங்க பாஸ்

Bleachingpowder said...

இதே மாதிரி ஒவ்வொரு அமெரிக்கா காரனும் நினைக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாமளும் இந்தியாவுக்கு வண்டி ஏற வேண்டியது தான் ;)

SurveySan said...

///நாளிதழ்களின் வடிவமைப்புக்குப் பெயர் போனவராகத் தெரிகின்றார்///

எல்லா 'about us' பக்கங்களும் நல்லாதான் இருக்கும் பாஸு.

நான் கேக்கரது இன்னான்னா, இந்த மேட்டரை செய்ய இந்திய கொம்பேனிகள் ஒண்ணு கூடவா இல்லாம போயிருக்கும்?

SurveySan said...

கானா,

///இதேமாதிரி ஐரோப்பா, அமெரிக்க நாடுகளின் ரயில்வேயில் இருந்து பெரும்பாலான‌ சேவைகளை இந்தியாவில் outsource இருந்து பண்ணும்போதும் இதேமாதிரி அங்கிருந்து கேட்கிறாங்களே?
////

அது சரி. ஆனா, அங்க 1000த்துக்கு முடியரது, நாம 10க்கு முடிக்கரதாலதான இங்க நமக்கு கொடுக்கறான்.
Garcia, 10க்கு பதிலா 10000000 கறந்துல்ல இருப்பாரு.

SurveySan said...

Bleachingpowder,

///இதே மாதிரி ஒவ்வொரு அமெரிக்கா காரனும் நினைக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாமளும் இந்தியாவுக்கு வண்டி ஏற வேண்டியது தான் ;)///

அவன் கவலையே படப் போரதில்லை. நாமதான், இங்க புடிக்கரத, கார்சியாக்களுக்கு திருப்பி கொடுத்துடரமே ;)

இலவசக்கொத்தனார் said...

யோவ் WSJ மாதிரி பெரிய பெரிய கொம்பன் எல்லாம் போன ஆளுடே!! நம்ம ஊரில் இருந்தா நாலு பேர் தேடிப் போடும். உம்ம போஸ்டைப் படிச்சுட்டாவது வேற யாராவது காண்ட்ராக்ட் தரட்டும்.

நீரும் வர வர நாபிமுமூகா கேஸாத்தான் இருக்கீரு!

SurveySan said...

அவசரத்துக்கு, ஒரு சர்வே போட முடியாத பாவி ஆனேனே?

ஒண்ணு கூகிள சர்வே பொட்டீல போட்டுடலாமா? :)

ஆயில்யன் said...

ஏதோ ஒரு நல்ல நாள்ல இண்ட்ரோ கொடுத்தீங்க

முகப்புலயே
வெனிசுலா அழகி
கத்ரீனா அப்புறம் ப்யூட்டீஸ் ப்ரம் லத்தீன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))

SurveySan said...

கொத்ஸு, மிஸ் யூனிவர்ஸு பாத்துண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதீரும்.

கூகிள் ஆண்டவரா கேட்டா கொடுக்கப் போறான்?
இதோ ஒண்ணு
http://www.platoon.in/overview.php

SurveySan said...

ஆயில்யன்,

////முகப்புலயே
வெனிசுலா அழகி
கத்ரீனா அப்புறம் ப்யூட்டீஸ் ப்ரம் லத்தீன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))////

லைஃப்ல எல்லா மேட்டரையும், இப்படி பாஸிட்டிவ்வா யூஸ் பண்ற உங்க மேட்டரு, எனக்கு புடிச்சுருக்கு ;)

எனக்கும், அதப் பாத்ததும்தான், இன்னிக்கு டிவில காட்டறான்னு ஞாபகம் வந்துது.

ஈவினிங் கவுன் ஓடிக்கிட்டு இருக்கு. =)
வாழ்க் இந்து பேட்டா,
வாழ்க கார்சியா! :)

SurveySan said...

///ஆக, உலகமயமாக்கலில் ஒரு கூறு இது என்று எடுத்துக்கொண்டே நகருங்க பாஸ்///

நகர வேண்டியதுதான் போலருக்கு ;)

குட்.நைட்டு!