recent posts...

Tuesday, August 18, 2009

ஸ,ப,ஸ வை தேடி

நானும் ரொம்ப நாளைக்குப்பரம் என்னுள் பொங்கி எழுந்த இசை ப்ராவகத்தை, 'சின்னக் கண்ணனை' அழைத்து தீத்துக்கிட்டேன்.
எனது ஆஸ்தான இணைய குருநாதர்கள் வந்து, இசையை ஆராய்ந்து, பிரிச்சு மேஞ்சாங்க.

குறிப்பாக, நண்பர் VSK வந்து, என் ப்ரசித்தி பெற்ற 'நேசல்' வாய்ஸை திருத்துவது எப்படின்னு கருத்து சொல்லியிருந்தாரு.

ஏதோ, 'ஸ,ப,ஸ' பயிற்சி பண்ணணுமாம்.

அட, இவ்ளோ சிம்பிளா இருக்கே மேட்டருன்னு, கூகிளைத் தேடி, யூட்யூபில் ஏதாவது சங்கதி ஆப்டுமான்னு பாக்க ஆரம்பிச்சேன்.

ஒன்னியும் ஆப்டல. ஆனா, ஒரு அருமையான பதிவு மாட்டிச்சு.

யாரோ அகிலன்னு ஒருத்தரு, தன் அம்மா எப்படி ஹார்மோனியப் பெட்டியில், ஸ,ப,ஸ பாடி சுருதி பிடிப்பாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சு, அப்பரம், அப்படியே யதார்தத்தைப் பகிர்ந்து சோகமாக்கிட்டாரு. நீங்களும் படிச்சுப் பாருங்க - அம்மாவின் சுருதிப் பெட்டி.

ஈழத்து வாழ்க்கை ரொம்பக் கொடுமைங்கோ.
திகிலாவுது.
ஏதோ, உப்பு சக்கரை வாங்க மளிகைக் கடைக்கு கெளம்பர மாதிரி, குண்டு போடும்போது, வீட்டை விட்டு வெளீல போயிடுவோம்னு சொல்றாங்க. யம்மாடி!

அன்னையை விடச் சிறந்த சென்னையில், உண்டு கொழுத்து, மென்று களித்து, வளர்ந்த அறியாப் பிள்ளை நானு. படிச்சு மெரண்டு போயிட்டேன்.

என்னைப் போல், உண்டு கொழுத்து, மென்று களித்து, வெத்தா, கம்மியான கவலைகளுடன், வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பெரூந்தகைகள், கஷ்டப் படறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம ஒதுவுங்க.

PiTன் இம்மாத போட்டி முடிவுகள் பதிவில், சிங்கை நாதன் என்ற அன்பர், மருத்துவ உதவிக்காக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.

அதைப் படித்த Sathiyaவின் பின்னூட்டம் கீழே:
*சிங்கைநாதனின் இதய மாற்று அறுவைச் சிகிச்சை பற்றி படித்ததும் மிக வருத்தமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனது பிறந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை(open-heart bypass) நடந்தது. பல நண்பர்கள் இது போல் உதவினார்கள். என் மகள் இப்போது நன்கு தேறி வருகிறாள். நண்பர் சிங்கை நாதன் உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு என் பங்கிற்கும் ஆவன செய்கின்றேன். எனது பரிசு பணத்தையும் அவருக்கே கொடுத்து விடுங்கள்.*

மக்களே, வாழ்க்கை பல திருப்புமுனைகள் கொண்டது. நாம, எவ்ளோ பெரிய ஜாம்பவனா இருந்தாலும், சில சமயங்களில், தூக்கி விட ஆள் தேவைப் படலாம்.
இன்ஷா அல்லா, உங்க யாருக்கும், எந்த இக்கட்டும் வராமல் இருக்கட்டும்.
ஆனால், இக்கட்டில் இருப்பவர்களுக்கு, உங்களால் இயன்றதை உதவ, சிறிதும் யோசிக்காதீர்கள்.

நன்றி!

4 comments:

SurveySan said...

seriousness apart, ஸ ப ஸ, எப்படி ப்ராக்டீஸ் பண்றதுன்னு சொல்லுங்க யாராச்சும். லிங்க் கொடுங்க. :)

SurveySan said...

anyone?

எம்.எம்.அப்துல்லா said...

//seriousness apart, ஸ ப ஸ, எப்படி ப்ராக்டீஸ் பண்றதுன்னு சொல்லுங்க யாராச்சும். லிங்க் கொடுங்க. :)

11:25 PM, August 18, 2009

//

அண்ணாத்த ஊரு முச்சூடும் லிங்க் தேடிகினேன்.ஒன்னியும் ஆப்புடல :)

பட் டோண்ட் ஓர்ரி. ஜேசுதாஸ் சார்,அப்துல்லா போன்ற சிங்கர்களுக்கும் நாசல் வாய்ஸ்தான்

இஃகிஃகி

Ananya Mahadevan said...

web learning wont help. find a Guru. Good Luck. Within 3 months, you will see that your vocals are getting more and more better! Trust me.