recent posts...

Wednesday, June 03, 2009

படங்கள் வரும் முன்னே - ரோம்

பாரிஸில் பிக்பாக்கெட் ப்ரசித்தம் என்றும், லண்டனில் பூமிக்குள் இயங்கும் ரயில் மெட்ரோ ப்ரசித்தம் என்றும் என் பயண அனுபவம் தெளிவுபடுத்தியது.

இந்த பயணம் போலாம்னு ஆரம்ப கட்ட யோசனை வந்ததே, ரோம் நகரம் பாக்கணும் என்ற வெகுநாள் ஆசையினால்தான். ரோமின் 'gladiators புகழ்' கொலீசியம், Pantheon, பக்கத்துல இருக்கர வாட்டிக்கன் (போப் வீடு) சிஸ்டின் சர்ச்சில் இருக்கும் Michaelangeloவின் புகழ் பெற்ற 'Creation of Adam' எல்லாம் பாத்துடணும்னுதான் பயண ஏற்பாடு ஆரம்பிச்சேன். அப்பாலிக்கா, போறது போறோம், அப்படியே அத்த பாத்துடலாம்.
அத்த பாக்கறோமே, அப்படியே இத்தயும் பாத்டுடலாம்னு, பாரிஸும், லண்டனும் சேந்துக்கிச்சு.

கண்ட நகரங்களிலேயே வெகுவாய் கவர்ந்தது ரோம் தான்.
வித்யாசமான நகரம். மரங்களெல்லாம் சுத்தமா கண்ணுல படல. வெறும் கட்டிடங்கள், தீப்பெட்டி மாதிரி பக்கத்து பக்கத்துல அடுக்கி வச்சிருக்காங்க.
பெரிய நீண்ட தெருக்களுக்கு இரு பக்கமும் அழகான கட்டடங்கள். அஞ்சடி அகலமுள்ள அழகான குட்டித் தெரு. தெரு முழுவதும், 'டைல்ஸ்' கற்களால் ஆன ரோடு.
பல தெருக்களில், தெருவில் அமரும் டைப்பில் பலப் பல உணவகங்கள். செம ஜாலியான மக்கள்.
எல்லா தெருமுனையிலும், நமக்குப் பரிச்சயமான பங்களாதேஷ் மக்கள், கூலிங்கிளாஸ், வாட்ச் எல்லாம் வித்துக்கிட்டு இருக்காங்க.
மற்ற நகரங்கள் போலவே, இங்கேயும் ரயில் மெட்ரோ, பஸ் வசதியெல்லாம் அமக்களம். ஒரு யூரோ கொடுத்தா எங்கேயிருந்தும் எங்கேயும் போலாம்.
காட்ஃபாதர் ரேஞ்சுல Don Corleone யாரும் கண்ணுல படறாங்களான்னு தேடினே, யாரும் ஆப்புடல. :)

ஆச்சரியமான ஒரு விஷயம், நிறைய இடங்களில், குடிக்கர தண்ணி ஒரு குட்டி நீர்வீழ்ச்சி மாதிரி அநாமத்தா கொட்டிக்கிட்டே இருக்கு. அதுலதான் எல்லாரும், பாட்டில்ல புடிச்சு குடிக்கறாங்க. இப்படி வீணடிக்கறாங்களேன்னு, ஒரு ஏக்கப் பெருமூச்சே வந்துடுச்சு. (சென்னைல கெணத்துக்குள்ள பாய் விரிச்சு படுக்கறாங்களாமே?)

இனி படங்கள் சில:
Colosseum - மிருகங்களையும் மனிதர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க கட்டிய, 'விளையாட்டு' மைதானம். கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னாடி, Titus கட்டி முடித்தது. ஃபோட்டோலயும் வீடியோலையும் பாக்கும்போது இருந்த ஒரு 'இது' நேர்ல பாக்கும்போது இல்லை. ரொம்பவே கமர்ஷியல் ஆக்கிட்டாங்க இடத்தை. செயற்கைத்தனம் நிறைய இருக்கு இப்ப.


Pantheon - கிட்டத்தட்ட 1900 வருஷங்களுக்கு முன், ரோமன் கடவுள்களுக்காக கட்டப்பட்டது. Marcus என்ற ரோம அரசன் கட்டியது. இந்நாளில் இது 'சர்ச்சாக' உருவெடுத்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில், ரோம அரசன், அந்த கால போப்புக்கு பரிசாக கொடுத்தானாம். (Gengiskhanன் (Mongol) படத்தில் வரும் முதல் வாக்கியம் "History is written by Victors" என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது)
மிக அருமையான கட்டடம். பயங்கர 'லைவ்லியான' இடம்.
படம்தான், 'நச்'னு வராம இருந்தது. An& அண்ணாச்சி படத்தை, 'நச்' ஆக்கிக் கொடுத்துட்டாரு. விவரங்கள் இங்கே பாக்கலாம்.


வாட்டிக்கனில் உள்ள St.Peters தேவாலயத்தின் முகப்பு.
St.Peters michaelangeloவும் மற்ற பலரும் கட்டியது. ஆனா, மற்ற இடங்களில் உள்ள தேவாலயங்களை விட, 'கலை' அம்சம், இங்கக் கம்மியா இருந்ததா எனக்குப் பட்டது. உதாரணத்துக்கு, மற்ற சர்ச்சிலெல்லாம், stain glass வச்சு, செமையா ஜன்னல்கள் இருந்தது, இங்க எல்லாம், plain glass.


இது, ரோமா ஃபோரம் என்ற இடம். ரோம் நகரத்தின் ஆரம்ப கட்டம் உருவெடுத்தது, இந்த இடத்திலிருந்துதானாம். 2600 வருடங்களுக்கு முன்.

Trevi நீர்வீழ்ச்சி. ரம்யமான இடம்.


Sistin chapel, vaticanல் உள்ள மேற்கூரை.
michaelangelo மூணு வருஷமா, தலகீழத் தொங்கிக்கிட்டு வரஞ்சதாம் எல்லாம். பின்னியிருக்காரு.
ஆனா, எனக்கு என்ன புரியலன்னா, பல விஷயங்கள் போர் காட்சிகளா இருந்துச்சு. சர்ச்சில் ஏன் இந்த மாதிரி காட்சிகளெல்லாம் வரஞ்சு வெச்சாங்கன்ன தெரியல்ல.


Creation of Adam, by Michealangelo
கூரையிலுள்ள நடுப் படம் இதுதான்.
leonardo-da-vinciக்கு எப்படி மோனா-லிஸாவோ, இந்தப் படம், michaelangeloவுக்கு.
இடது பக்க adamஐ வலது பக்க, கடவுள், படைக்கும் காட்சி.
Adamன் விரல் தொய்வாக இருக்க, கடவுளின் விரல்கள், 'கிண்ணுனு' ஸ்ட்ராங்கா இருக்காம் படத்துல. பக்கத்து guide சொல்லிக்கிட்டிருந்தது காதுல கேட்டுது :)


Pantheonக்கு செல்லும் வழியில் இருந்த 'ஏதோ ஒரு' சர்ச். சும்மா எட்டிப் பாக்கலாம்னு போனேன். சூப்பரா இருந்தது. st.petersஐ விட பல மடங்கு அழகா இருந்தது இது.


பி.கு: ஏசுவையே சிலுவையில் ஏற்றிக் கொன்ற ரோம அரசர்கள் பின்னாளில், டகால்னு மொத்த ஊரையும் கிருஸ்தவ மதம் தழுவச் செய்து, ஊரில் உள்ள, 'ரோம் கடவுள்களின்' ஆலயங்களையெல்லாம் தேவாலயங்களாய் மாற்றியது எல்லாம் நெருடல்.
GengisKhan பட, 'history is written by Victors' உண்மைதான் போலும் :)
வெவரம் தெரிஞ்சவங்க மேல் விவ்ரங்கள் சொல்லிட்டுப் போங்க.

6 comments:

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. [ஹிஹி உங்களுக்கு மேகம் சேர்க்க வராதா?]

//ஃபோட்டோலயும் வீடியோலையும் பாக்கும்போது இருந்த ஒரு 'இது' நேர்ல பாக்கும்போது இல்லை. //

இது பல சமயங்களில் பல இடங்களுக்குப் பொருந்தும்.

//குடிக்கர தண்ணி ஒரு குட்டி நீர்வீழ்ச்சி மாதிரி அநாமத்தா கொட்டிக்கிட்டே இருக்கு. அதுலதான் எல்லாரும், பாட்டில்ல புடிச்சு குடிக்கறாங்க.//

கொடுத்து வச்சவங்கதான்.

குடிநீர் என்ற ஏற்பாட்டுடன் கொட்டுகிறதா அல்லது சுத்தமா கொட்டிக் கொண்டிருக்கும் நீரை பாட்டிலில் பிடித்துக் கொள்கிறார்களா, புரியலயே..?

//(சென்னைல கெணத்துக்குள்ள பாய் விரிச்சு படுக்கறாங்களாமே?)//

சொல்லியிருக்கும் விதம் புன்னகைக்க வைத்தாலும் நிலைமை கவலைக்கிடம்தான், போங்க :( !

கோபிநாத் said...

ம்ம்ம்..இப்போ ரோமையும் பார்தாச்சு ;)

SurveySan said...

Ramalakshmi,

//[ஹிஹி உங்களுக்கு மேகம் சேர்க்க வராதா?]//
naan konjam makku :)

///குடிநீர் என்ற ஏற்பாட்டுடன் கொட்டுகிறதா அல்லது சுத்தமா கொட்டிக் கொண்டிருக்கும் நீரை பாட்டிலில் பிடித்துக் கொள்கிறார்களா///

it is drinking water. most places it looks like our regular 'tap'. but the tap has no 'stopper', it freely flows out into the drainage like a fountain :)

SurveySan said...

Gopinath, varugaikku nanni :)

சசி ராஜா said...

superappu!

SurveySan said...

மனக்குதிரை, டாங்கஸப்பு:)