recent posts...

Monday, April 20, 2009

சென்னை விசிட் - Say No to மாமன் மகள் & அத்தை மகன்

மலையாளத் திரையில் என்னை கன்னாபின்னாவென்று கவர்ந்த படம் தனியாவர்தனம். சிபி மலையில் என்ற உன்னத இயக்குனரின் படைப்பு இது. ஸ்கூல் படித்த காலத்தில் பார்த்திருந்தாலும், இன்னும் அழுத்தமாய் நினைவில் இருக்கும் படம். படத்தை பற்றி ஒரு பெரிய பதிவு அப்பாலிக்கா போடணும். இப்போதைக்கு, படத்தின் கரு மட்டும் சொல்றேன்.
மம்முட்டி ஒரு ஸ்கூல் வாத்தியார். அழகான மனைவி சரிதா. ஒரு மகளும், குட்டி மகனும்.
ஒரு குடும்ப சாபம் காரணமாக, குடும்பத்தின் மூத்த மகனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு.

மம்முட்டியின் மாமனுக்கு பைத்தியம் பிடித்ததும், அவரை வீட்டில் ஒரு ரூமில் சங்கிளியால் கட்டி வைத்திருப்பார்கள். மாமன் இறந்ததும், எல்லோரும், சாபத்தின் அடுத்த தாக்கு மம்முட்டி மீதுதான் இருக்கும்னு சொல்லி சொல்லி, அவருக்கும் பைத்தியம் பிடிக்க வச்சு, சங்கிலியால் கட்டி வச்சிருவாங்க. ரொம்ப தத்ரூபமா, நம்மூரில் ஊறிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை எடுத்து சொல்லிருப்பாங்க. கலங்கிரும்!

இம்முறை சென்னைக்கு சென்றிருந்தபோது ( பார்ட்1, பார்ட்2 ) ஒரு பழைய நண்பனை சந்தித்தேன். ராஜன்.
ஸ்கூலுக்கு ஒண்ணா போகலன்னாலும், ஒண்ணா டயர் ஓட்டி, ஒண்ணா சைக்கிள் கத்துக்கிட்டு, ஒண்ணா காத்தாடி வுட்டதெல்லாம் இவனோடதான். அவங்க வீட்ல அவனை விட என்னை ரொம்ப பிடிக்கும். இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.
இந்தப் பயலின் அம்மா, கல்யாணம் பண்ணிக்கிட்டது, அவங்க சொந்த மாமனை.
ராஜனுக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன்.
சோகம் என்னன்னா, அக்காவும் அண்ணனும், வாய் பேச முடியாதவர்கள்.

மூன்றாவதாய் ராஜன் பிறந்ததும், மூன்று வருஷமாய் வாய் திறக்காமல் தான் இருந்திருக்கிறான். ராஜின் பெற்றோர் கதிகலங்கி போயிருந்தார்களாம்.
அப்பொழுதுதான் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியேறினார்களாம். நான் ராஜுடன் விளையாடத் தொடங்கியதும் தான், அவன் என்னைப் பார்த்து பேசப் பழகிக் கொண்டானாம்.

இரத்த பந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது, அப்படி செஞ்சுகிட்டா வாரிசுகளுக்கு நல்லதுல்லங்கரதெல்லாம் தெரியாம ராஜின் தாய் தன் சொந்த மாமனைத் திருமணம் செஞ்சுகிட்டிருப்பாங்க. இந்த பழக்கம் இன்னும் கூட சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மருத்துவ ரீதியாய், செய்ய வேண்டாம் என்று சொல்வதை, செய்யாமல் இருத்தல் நலம். ( Dr.Bruno or Dr.VSK, pls elaboarate on this, when time permits )

இதைப் படிக்கரவங்க யாராவது, அப்படியொரு திருமணம் செய்தவராயின் தயவு செய்து பதறாதீர்கள். எல்லாருக்கும் இப்படி ஆகரதெல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து சில பல குடும்பங்கள் சுபிட்சமாவே இருக்காங்க.

ஆனா, அப்படி சுபிட்சமா இருக்கர குடும்பங்களிலும் கூட சில நேரம், "தனியாவர்தன"த்தில் வரும் மூடநம்பிக்கைகள் போன்று, ஆட்டி வைக்கின்றன.

எனக்கு பல காலம் பழக்கமான நண்பர் ஒருவர், இப்படித்தான் அக்கா மகளை திருமணம் புரிந்தவர். இவருக்கு முத்தான இரண்டு பிள்ளைகள். இரண்டும் செம சூட்டி.

ஆனால், இம்முறை அவரைக் கண்டபோது ரொம்பவே புலம்பினார்.
"ரெண்டு பேருக்கும் படிப்புல அக்கரையே இல்லைங்க. சொந்தத்துலையே கல்யாணம் பண்ணதால இப்படி ஆயிடுச்சு. பையனுக்கு படிப்பு ஏரல, பேசாம மூத்தவனை கடைய பாத்துக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்"னு சொன்னாரு.

"என்ன கொடுமைங்க இது? பையன் சரியா படிக்கலன்னா, ஸ்கூல்ல டீச்சர் கிட்ட சொல்லுங்க, ட்யூஷன் வைங்க, இல்லன்னா அன்பா பேசி படிக்க சொல்லுங்க. அதுவும் இல்லன்னா முதுகுல ரெண்டு போட்டு படிக்க சொல்லுங்க. அத்த விட்டுட்டு எதை எதையோ காரணமா சொல்லி பையன் ஃப்யூச்சரை கெடுத்துடாதீங்க" இது நானு.

ஒழுங்கா இருக்கர குடும்பங்களிலும் கூட, சுத்தி இருப்பவர்களின், மூட நம்பிக்கைகள் சார்ந்த அலப்பரையால், பல குடும்பங்கள் அமைதி இழந்து சுத்திக்கிட்டு இருக்காங்க.

மெத்தப் படித்தவராய் இருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களில், அக்கம் பக்க வாசிகளின் தொடர்ந்த நச்சரிப்பால், குழம்பித்தான் போகிறார்கள்.

அடுத்த வருஷ விசிட்டில், மூத்தவன், "வாங்க்ணா, இன்னா வேணும்?"னு கல்லாவுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு கேட்காமல் இருக்க, எல்லாம் வல்ல ம.நெ.நாதன் அருள் புரியட்டும்!

25 comments:

SurveySan said...

human inbreeding - what are the consequences? http://nepaliaashish.wordpress.com/2007/05/30/human-inbreeding-what-are-the-consequences/

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. இதைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது எல்லோருக்குமே ஓரளவு இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி ஏற்கனவே செய்து விட்டவர்கள் பதறவும் வேண்டாம். அதற்காக செய்ய நினைப்பு இருக்கிறவர்கள் இதை சீரியஸா எடுக்காம விட்டிட வேண்டாம்.

SurveySan said...

நன்றி ராமலக்ஷ்மி.

////நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி ஏற்கனவே செய்து விட்டவர்கள் பதறவும் வேண்டாம். அதற்காக செய்ய நினைப்பு இருக்கிறவர்கள் இதை சீரியஸா எடுக்காம விட்டிட வேண்டாம்.///

அதே அதே! :)

அறிவன்#11802717200764379909 said...

//ல்லாவுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு கேட்காமல் இருக்க, எல்லாம் வல்ல ம.நெ.நாதன் அருள் புரியட்டும்!//

இந்த ம.நெ.நாதனை விட்டுறுங்கப்பா..கதற்றாரு அவரு..

SurveySan said...

அறிவன்,

////இந்த ம.நெ.நாதனை விட்டுறுங்கப்பா..கதற்றாரு அவரு..//

இதெல்லாம் தானா வந்து விழுதுங்க. எல்லாம் ம.நெ.நாதனின் செயல் ;)

Suresh said...

Suresh said...

@ SurveySan

உங்க வருகைக்கும் கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி

அவரது கருத்துகளை கேட்டு பதிவில் சொல்கிறேன்

Suresh said...

i have become ur follower thalaiva

Suresh said...

நல்ல பதிவு

புருனோ Bruno said...

//. ( Dr.Bruno or Dr.VSK, pls elaboarate on this, when time permits )/

தலைவரே

இது குறித்து எழுதுவதற்கு முன்னர் நிறைய (அடிப்படை) விஷயங்கள் குறித்து பதிவு எழுத வேண்டும்.

எனவே நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

Poornima Saravana kumar said...

ஒழுங்கா இருக்கர குடும்பங்களிலும் கூட, சுத்தி இருப்பவர்களின், மூட நம்பிக்கைகள் சார்ந்த அலப்பரையால், பல குடும்பங்கள் அமைதி இழந்து சுத்திக்கிட்டு இருக்காங்க.
//

உண்மைதாங்க:(

VSK said...

இதைப் பற்றி விரிவாக எழுதத் தொடங்கி இருக்கிறேன். அதைச் சரி செய்து விரைவில் இங்கும், என் வலையேட்டிலும் எழுதுகிறேன் சர்வேசன்!

கானா பிரபா said...

நான் தேடிக்கொண்டிருக்கும் படம், இதை ரீமேக்க ஆசைப்பட்டதாக கமல் தசாவதாரம் இசை வெளியீட்டில் மம்முட்டி முன் சொன்னார், நல்லவேளை அது இன்னும் கைகூடவே இல்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மெட்ராஸுக்கு வந்துட்டு எங்களையெல்லாம் பார்க்காம போனா எப்படி..?

ஆள் கருப்பா, சிவப்பா, குட்டையா, நெட்டையான்னு யாருக்குத் தெரியும்..?

முகத்தைக் காட்ட வேணாம்.. எத்தனி நாளைக்கு இப்படி ஓடி ஒளிவீங்க..?!!

இங்கன வந்தும் என்னைப் பார்க்காம போனதுக்காக உங்களோட கா.. பேச மாட்டேன் போங்க..

ஒரு மாசத்துக்கு உங்க பதிவுக்கு கமெண்ட்டு போட மாட்டேன்..

தமிழன்-கறுப்பி... said...

கானா பிரபா said...
\\
நான் தேடிக்கொண்டிருக்கும் படம், இதை ரீமேக்க ஆசைப்பட்டதாக கமல் தசாவதாரம் இசை வெளியீட்டில் மம்முட்டி முன் சொன்னார், நல்லவேளை அது இன்னும் கைகூடவே இல்லை.
\\

இதை நீங்க ரஜனி கிட்ட சொல்ல மாட்டிங்களா அண்ணன்.. :)

கோபிநாத் said...

ஆகா..இந்த படத்தை பத்தி கமல் கூட சொல்லியிருப்பாரு...தேடி பார்க்கனும் ;)

நல்ல விஷயம்....பூ படம் பார்த்திங்களா!!? அதுல இந்த விஷயமும் இருக்கும்

லவ்டேல் மேடி said...

நெம்ப நல்லதுங்கோ நண்பரே.....!!! நானுமும் இந்த படத்த வாங்கி பாக்குறேன்......!!!!

SurveySan said...

கானா,

VCD just 45rs.
http://www.maebag.com/details.php?ItemCode=849&&ItemName=Thaniyavarthanam

SurveySan said...

Suresh, நன்றி. பதில் காண ஆவலாய் காத்திருக்கிறேன் ;)

SurveySan said...

புருனோ,

//எனவே நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்//

நன்னி!

SurveySan said...

Poornima saravana kumar,

வருகைக்கு நன்றி!

SurveySan said...

VSK,

//இதைப் பற்றி விரிவாக எழுதத் தொடங்கி இருக்கிறேன். அதைச் சரி செய்து விரைவில் இங்கும், என் வலையேட்டிலும் எழுதுகிறேன் சர்வேசன்!//

தூள். ரொம்ப நன்றி! :)

SurveySan said...

உண்மைத் தமிழன்,

///இங்கன வந்தும் என்னைப் பார்க்காம போனதுக்காக உங்களோட கா.. பேச மாட்டேன் போங்க..///

தலைவரே, இந்த ட்ரிப்பு செம பிஜியாய் போச்சு. அடுத்த வருஷம், உங்கள மட்டும் கண்டிப்பா வந்து பாக்கறேன் ;)

///ஒரு மாசத்துக்கு உங்க பதிவுக்கு கமெண்ட்டு போட மாட்டேன்..///

ஆஹா, எனக்கு வர ஒண்ணு ரெண்டுலயும் கை வச்சுடாதீங்க ப்ளீஸ் ;)

SurveySan said...

தமிழன் - கறுப்பி,

வருகைக்கு நன்னி.

கமல் ரீமேக்கே கஷ்டம்னு சொல்றாரு. ரஜினி கிட்ட சொல்ல ஏன் தயங்கப் போறாரு :)

SurveySan said...

கோபிநாத்,

///நல்ல விஷயம்....பூ படம் பார்த்திங்களா!!? அதுல இந்த விஷயமும் இருக்கும்////

நீங்க சொன்னப்பரம்தான் ஞாபகம் வருது. பூவிலும் இதை எடுத்து சொல்லியிருப்பாங்க. நல்ல படம்.

SurveySan said...

லவ்டேல் மேடி,

////நானுமும் இந்த படத்த வாங்கி பாக்குறேன்......!!!!////

கண்டிப்பா பாக்கவேண்டிய படம்.