வருஷங்கள் ஓடுது. கண்ணு மூடி தொறக்கரதுக்குள்ள ஒரு வருஷம் முடிஞ்சுடுது.
ஊரு விட்டு ஊரு வந்து சில பல வருஷங்கள் பறந்தே போச்சு.
வாழ்க்கையில் சாதிச்சது என்னன்னு இது வரை புலப்படலை.
இனி என்ன இருக்குங்கரதும், தெளிவா இல்லை.
உங்களில் பலரைப் போலவே, எனக்கும் ஓரளவுக்கு சமூக சிந்தனை உண்டு.
ஆனா, உங்களில் பலரைப் போலவே, வெறும் சிந்தனையோட நின்னு போயிடர விஷயமா இருக்கு இது. களமிறங்கி ஒண்ணும் கழட்ட முடியாது போலருக்கு.
சில வருஷம் ஆணி புடுங்கி முடிச்சதும், சேத்த துட்டை பானைல கொட்டி, ஷமூக ஷேவா செய்யணும்னு ஒரு அரிப்பு இருந்துக்கிட்டே இருந்தது.
ஆனா, நாட்டை திருத்தர அளவுக்கு அறிவு கிடையாது;
ஸ்டேட்டை திருத்தர அளவுக்கு வெவரம் பத்தாது;
சிட்டியை திருத்தர அளவுக்கு தெறம கெடையாது;
அட்லீஸ்ட் தெருவையாவது திருத்தலாம்னு ஐடியா இருந்துச்சு. அதுக்கு ஒரு கவுன்ஸிலரா ஆயிடணும்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுலையும் மண்ணு.
இந்த வருஷ விடுமுறைக்கு சென்னை போயிருந்தபோது, ரெண்டு நாளு கொழால தண்ணி வரல.
வெயில் வேர சுள்ளுனு அடிச்சுதா, அதான் என்ன ஏதுன்னு வெளீல போயி விசாரிக்க முடியல்ல. நான் பாட்டுக்கினு, ஸ்ப்ளிட் ஏசியை ஆன் பண்ணிட்டு, தேமேன்னு மானாட மயிலாட ரீ-டெலிகாஸ்ட் பாத்துக்கிட்டு சுகமா இருந்தேன்.
திடீர்னு வெளீல பயங்கர சத்தம்.
டிங் டிங் டிங்னு மணி சத்தம். "சர்வேசன் வெளீல வாய்யா"ன்னு ஒரு பரிச்சயமான குரல்.
வெளீல வந்து பாத்தா, எங்க ஊரு கவுன்சிலரு, லுங்கிய மடிச்சு கட்டிக்கிட்டு, ஒரு பெரிய மணியை கையில வச்சுக்கிட்டு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் போய், வேகாத வெயில்ல, "தண்ணி லாரி வருது, வந்து தண்ணி புடிச்சுக்கங்கன்னு" காட்டு கத்து கத்துக்கிட்டு இருந்தாரு. லாரி வந்து எல்லாரும் தண்ணி புடிச்சதும், லாரி பின்னாடியே ஓடிக்கிட்டு அடுத்த தெருவ கவனிக்கப் போயிட்டாரு.
இத்தப் பாத்ததும், என்னோட கவுன்சிலர் கனவு தவிடு பொடியாயிடுச்சு. நான் எங்கேருந்து, இந்த வெயில்ல, தண்ணி லாரி பின்னாடி ஓடரது? சுத்தி யாராவது அடி பொடிகள் இருந்தாங்கன்னா அவங்கள ஏவி வேலைய வாங்கிக்கர மாதிரி இருக்கும்னு நெனச்ச அரசியல் கனவு புஸ்னு எறங்கிடுச்சு. :)
கவுன்சிலர் வேலையே செய்ய முடியாது, நாம எங்க பொது வாழ்க்கைல டங்குவார கிழிக்கரது?
இதுலேருந்து இன்னா தெரியுது?
யாரும், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே!
நாம நம்ம வேலையப் பாப்போம்.
பொது வாழ்க்கைக்குன்னு வாழ்க்கையை அற்பணம் பண்ணிக்கரவங்க, அந்த வேலையப் பாக்கட்டும்.
அப்ப, நாம என்ன தான் செய்யரது இந்த ஷமூகத்துக்குங்கர யோசன வருதா?
வரும். வரணும்.
சும்மா, அது சரியில்ல, இது சரியல்லன்னு, நொட்ட சொல்ரதுக்கும், ஒரு தகுதி வேணும்.
அது என்ன தகுதி?
ஊர்ல இருக்கர நொட்டை நொடிசலை சரி செய்யரேன்னு தெருத் தெருவா கூவிக்கிட்டு, தேர்தல்ல நிக்கர வருங்காலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு. அந்த வேலையை சரியாச் செஞ்சாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரி.
நீங்க வோட்டு போட்டுட்டு, உங்க கடமைய முடிச்சுட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவங்க கடமை தவறும்போது நீங்க குட்டலாம்.
நீங்க வோட்டும் போட மாட்டீங்க, லாரி பின்னாடி ஓடவும் மாட்டீங்க, மானாட மயிலாட மட்டும் தொடர்ந்து பாத்துக்கிட்டு இந்த அவதாரத்தை முடிச்சுக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணியிருந்தா, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஒரு நொட்டையும் சொல்லாம வாய மூடிக்கிட்டு சைலண்டா இருங்க.
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், வோட்டு போட்டு, நல்ல ப்ரஜையின் கடமையை நிறைவேத்தினீங்கன்னா, தினம் ஒரு 'நொட்டை' சொல்லும் பதிவு போட்டு எனக்கு மடல் அனுப்பினா, தவறாமல் வந்து ஒரு பின்னூட்டத்தை அளிப்பேன் என்று, வாக்குறுதி அளித்து உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்! டமில் வாழ்க! அவர் நாமம் வாழ்க! இவர் பட்டை வாழ்க! ஜெய் ஹிந்த்!
பி.கு1: ஐ-ஃபோன் இனாம் தரும் கட்சி ஏதாச்சும் இருந்தா ஈமடலில் தொடர்பு கொள்ளவும். வாக்கிடுவோம்ல ;)
பி.கு2: சந்தோஷின் 'ஓட்டு போடுங்க ப்ளீஸ்' அழைப்புக்காக போட்ட பதிவு இது.
பி.கு3: தென் சென்னை வாக்காளர்கள் இவருக்கு வாக்களிக்கலாமோ?
22 comments:
// ஸ்ப்ளிட் ஏசியை ஆன் பண்ணிட்டு, தேமேன்னு மானாட மயிலாட ரீ-டெலிகாஸ்ட் பாத்துக்கிட்டு சுகமா இருந்தேன்.
//
ஆர்காட்டாருக்கு நன்றி சொன்னிங்களா ?
இந்தப்படத்தில் மைக்ரோ அரசியல் எதுவும் இருக்கா ?
படத்தைப் பார்த்தால் 'கை'க்கு வாக்களிக்கச் சொல்வது போல் கும்பிட்டு கேட்பதாக தெரிகிறதே :)
:))!
ஒரு தேர்தலையும் விடாம இதுவரை 4 முறை ஓட்டுப் போட்டிருக்கேன்ல. இந்த முறையும் போடுவேன். ‘நொட்டை’ பாடும் கவிதைகளும் போடுவேன்:)!
ரொம்ப ரொம்ப நல்ல போஸ்ட்.
:))
கோவி, ஆர்காட்டார், ஆடி அடங்கியிருந்தார், நான் சென்னையில் இருந்த நேரம். பவர் கட் கம்மியாதான் இருந்துச்சு :)
கோவி, கை ஃபோட்டோ, வெறும் அரசியல் கும்பிடு மட்டுமே.
இதை அரசியல் ஆக்குவதை வன்மையாக கண்டித்து, பின்னூட்டத்துக்கான மறு பின்னூட்டத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம். :)
பி.கு: ரெண்டு கையும் அழுத்திப் படாம, கும்பிடு போடரதே பெரிய டெக்னிக்காமே :)
ராமலக்ஷ்மி,
/////இந்த முறையும் போடுவேன். ‘நொட்டை’ பாடும் கவிதைகளும் போடுவேன்:)!/////
சூப்பர். வந்து தவறாம பின்னூட்டிடறேன் ;)
ஆ!,
ரொம்ப ரொம்ப நன்றி! :)
தட்டிச் சொல்லி உங்க கடமையை ஆற்றிட்டீங்க, இனி எங்க கடமையை ஆற்றிடுவோம்...இங்கே அக்னி, ஜாகோரே என்று மற்றவர்களும் பிடித்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..ஏப்.30 நம்ம கடமை முடிஞ்சுடுங்க :)
மணியன், நன்றி :) கண்டிப்பா போடுங்க.
வோட்டு போட்டுட்டு, அனுபவத்தை பகிருங்க.
மை டியர் ஃபாலோயர் #50, திடீர்னு என்னன ஃபாலோ பண்றதை விட்டுட்டீங்களே, யாருங்க நீங்க? ஏன்? ஏன்? ஏன்? அப்படி என்ன தப்பு நடந்தது இங்க?
:(
இதெல்லாம் நெம்போ டூ மச் ......!!! எல்லாருக்கும் ஒரு டாட்டா நேனோ கார் தரதா இருந்தா பரவால்ல.....!!!!
வெளியூர்ல இருக்கும் பொது கூட flight புடிச்சு வோட்டு போட்ருக்கேன். இந்த முறையும் போட முயற்சிப்பேன். சோ நொட்டையும் போடுவேன் :-) வந்துட்டு போங்க எங்க கடை பக்கம் :-)
வாக்களிப்பது கடமை, ஓட்டு இல்லாவிட்டாலும் கள்ள ஓட்டாவது போட்டுவிடனும் !
:)
பி.கு3: தென் சென்னை வாக்காளர்கள் இவருக்கு வாக்களிக்கலாமோ?
Sarathbabus page
http://sarathbabu.co.in/in/
கட்டாயம்!
ஓட்டு போட்டாச்சில்ல.. இனி நம்ம தலைவர் ஜெயிக்கிற நாளை எதிர் பார்த்து .. இன்னும் ஒரு மாதம் .. ம்ம்
ரொம்ப கிறுகிறுன்னு சுத்துது..
அண்ணாச்சி உங்கிட்ட இருந்து பதிவை எதிர்பார்த்தேன்..நல்ல பதிவு ;)
Vetrimaga, yaarunga andha thalaivar? :)
Amazing photos? why why why?
Gopinath, Danks! :)
ஐ ஃபோனா.... எனக்கு டூப்ளிகேட் mp3 ப்லயெர் கொடுத்தா கூட போதும்.
ஜெயிச்சப்புறம் தானே சொல்ல முடியும் .Secret Ballot ஆச்சே!
Post a Comment